4/04/2009

”49-O"

எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே!

ஊடகங்கள் பொதுவாகவே, ஏதோ ஒரு அரசியல் சார்புடனே இருக்கும். முதலாவது வகை ஊடகங்கள், நேரிடையாகவே ஒரு அரசியல் கட்சிக்கு உட்பட்டதாக இருக்கும். அடுத்த வகை ஊடகங்கள், தற்காலிகமாக, மறைமுகமாக எதோ ஒரு கட்சிக்கு ஆதரவாக இருக்கும். நடுநிலை என்று வேசமிடும் பெரும்பாலான ஊடகங்கள் இந்த இரண்டாம் வகை ஊடகங்கள். இதற்கு அப்பாற்பட்டு, ஊடகங்களில் பணி ஆற்றும் ஊழியர்களின் மனோநிலையும் பெரும்பங்கு வகிக்கும்.

மேற்கூறிய ஊடகங்களின் நிலைப்பாடே, ஈழத்தமிழ் ஆதரவாளர் அல்லது அபிமானிகள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பாலானவர்கள். இதைப் பலர் மறுத்தாலும், ஆட்சேபித்தாலும், கூற்று மாற்றுவதற்கு இல்லை. கூப்பாடு போடுவார்கள், விளம்பரம் தேடிக் கொள்வார்கள். ஈழ ஆதரவாளர், ஈழ அவலத்திற்கு எதிர்ப்பாளர், தமிழின ஆதரவாளர், தமிழின விரோதப் போக்கு எதிர்ப்பாளர் என்றெல்லாம் எண்ணற்ற பெயர்களைத் தாங்கி வருவார்கள். அகரமுதலியில், அடுத்து வைப்பதற்கு ஏற்ற பெயர் என்னவாக இருக்கும் என்று தேடித் திரிவோர் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.

இத்தகையவர்களால், இனமான உணர்வு நீர்த்துப் போனதே தமிழன் கண்ட பலன். செய்திகளை தமக்கேற்றாற்போல் ஆக்குவதும், செய்தியின் வீரியம் குறையுமுன் தமக்கு வேண்டியனவற்றை செய்துகொள்வதுமாய், எத்துனை எத்துனை நாடகங்கள்? 1980 தொடக்கம், எவ்வளவு மாறுதல்கள்?? எல்லையின் விளிம்பில் தமிழன் ஒடுங்கிச் சிக்கித் தவிக்கையில், ஆறுதல் வார்த்தைகள், “நாங்கள் கையறு நிலையில் இருக்கிறோம்!”.

இந்நிலையில், தமிழனுக்கு வாய்த்திருக்கும் காண்டீபம், ”49-O". ”அம்மா ஆதரவில்லை, அய்யா ஆதரவில்லை, அண்ணன் செய்வார், போர்வாள் செய்வார், அவர் துரோகம், இவர் முதுகில் குத்தினார்” என்று சொல்லிப் புலம்புவதும், அவரவர் விருப்புக்குத் தக்கவாறு எதோ ஒருவரின் முதுகில் சவாரி செய்வதுமாய்த்தான் இருக்கப் போகிறோமா தமிழின அபிமானிகளே?!

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், நாங்கள் தமிழ் ஈழ மக்களின் அபிமானிகள் என்று உணர்த்தக் கூடிய வகையிலே, குறைந்தது பத்தாயிரம் ஒப்பமுக்கு(vote)களை பதிய வைத்துப் பாருங்கள். மந்தையாடுகள் போல, அந்தக் கட்சி, இந்தக் கட்சி, அம்மா, அய்யா, தலைவர், தலைவி, புரட்சி, புழுதி என்று இருக்கிற அனைவரும் பதை பதைத்து ஓடி வருவர். பாராளுமன்றத் தொகுதிக்கு, ஐம்பதினாயிரம் ஒப்பமுக்குகள் என்பது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவை.

இவ்வகை ஒப்பமுக்குகளை அளிப்பதின் மூலம், நாம் இன்ன தீர்வு என்று சொல்ல வரவில்லை. அதை ஈழ மக்களும், அது தொடர்புடையோரும் முடிவு செய்து கொள்ளட்டும். தனித் தமிழீழம், ஒட்டுத் தமிழீழம், ஒட்டாத ஈழம் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், தமிழினப் படுகொலைக்கு எதிர்ப்பாளர் என்று சொல்வதற்கு, இதைவிட வேறென்ன சிறந்த வழி இவ்வுலகில் இருக்க முடியும்?

எந்த அபிமானியும், சென்னை ஊர்வலம், இராமேசுவரம் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, வெற்றுச் சங்கிலி, உண்ணாவிரதம், உண்ணும் விரதம் என்றிருக்கத் தேவை இல்லை. கையறு நிலை அவர்களுக்கு உள்ளபடியே இருக்கலாம், ஆனால் உங்களுக்கு அல்ல, ”49-O”, உங்களை நாடி, நீங்கள் இருக்கும் இடம் தேடி வருகிறது. இறையாண்மைக்கு குந்தகம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்! என்று எவரும் சொல்ல முடியாது.

வெவ்வேறு திருநாமங்களில் உலாவரும் ஈழ ஆதரவு அமைப்பினரே, நீங்கள் உங்கள் விருப்பம் போலவே, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டு பிரிவுகளாவே இருந்து கொள்ளுங்கள். ஆனால், மக்களிடம் கோரும் ஆதரவு மட்டும் ஒன்றாக இருக்கட்டும். ஆம், “இனப் படுகொலையை எதிர்ப்போர் 49-Oவில் ஒப்பமுக்குங்கள்!” என்ற கோரிக்கையாக இருக்கட்டும்.

இந்த ஒற்றைச் சொற்றொடரையும், இந்த அமைப்பைச் சார்ந்தவர்களான நீவிர் விவாதம் செய்ய விழைவீர்களா? அப்படியெனில், எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரையும் விமர்சிக்கும் முகாந்திரம் உங்களுக்கு உளதா என்பதனை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்!

--பணிவுடன் பழமைபேசி

30 comments:

ச.பிரேம்குமார் said...

“இனப் படுகொலையை எதிர்ப்போர் 49-Oவில் ஒப்பமுக்குங்கள்

இந்தியாவின் எதிர்காலத்தின் மேல் அக்கறை உள்ளவர்களும் இதையே தான் செய்ய வேண்டும் போல

வஜ்ரா said...

http://www.srilankaguardian.org/2009/04/catholic-church-ally-of-tamil-tiger.html

பழமைபேசி said...

//Vajra said...
http://www.srilankaguardian.org/2009/04/catholic-church-ally-of-tamil-tiger.html
//

நண்பா, ஊடகங்களின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியா இருக்குங்ற உவமைதானே, இடுகையின் முன்னுரை?!

Mahesh said...

49-O க்கு ஒரு "ஓ" போடுங்க !!

தமிழர் நேசன் said...

வணக்கம் நண்பரே! தங்கள் பதிவு மிகவும் பயனுள்ள ஒன்று. இந்த பதிவை படித்தவுடன், சிலவேறு இணையங்களில் "49-o" பற்றி படித்து தெரிந்து கொண்டேன். நன்றி.

இதை பற்றி பிறரும் அறிந்து கொள்ள சில சுட்டிகளை தந்துள்ளேன்.

இன நலனுக்கும நாட்டு நலனுக்கும் உகந்த ஒரு பதிவிட்டமைக்கு பிரத்யேக நன்றி.

http://49-o.org/
http://en.wikipedia.org/wiki/49-O

vasu balaji said...

பண்ண முடிஞ்சா நல்லாதான் இருக்கும். ஆனா இது அவ்ளோ செலவு பண்ணி தேர்தல்ல நிக்கிறவங்களுக்கு தெரியாமலா இருக்கு. தகுந்த முறிவு வெச்சுருக்காய்ங்க. சும்மா எல்லாத்துக்கும் மறுப்பு சொல்லணும்னு சொல்லல. பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

தமிழர் நேசன் தந்த இணைப்பின் படி விக்கிபீடியா சொல்வது கீழே.49-0 சட்டப் பிரிவின் படி வாக்களிப்பவர் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றே பொருள்படும்.எனவே இது ஈழம் குறித்த தங்களது எதிர்ப்பானது என்ற நேரடி பொருள் கொள்ள இயலாது.எனவே 49.0 பிரிவின் படி விழும் ஓட்டுக்கள் ஈழம் குறித்த தங்களது கோபங்களை வெளிப்படுத்தும் எண்ணிக்கை என்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய குறுகிய கால கட்டம் உள்ளது.வீட்டில் உட்கார்ந்து கொண்டு வாக்குரிமை களவு போவதை விட 49-0 பயன் தரலாம்.மற்றபடி உள்ள திருடர்களில் குறைவாய் திருடுபவன் யார்,முதுகில் குத்தியதில் சிறு கீறல்களுடன் விட்டது யார் என்ற நோக்கிலும் யாருக்காவது வாக்களிக்க வேண்டிய நிலை தமிழனுக்கு.

வாக்காளரின் நிலை தர்மசங்கடத்துக்குள்ள ஒரு தேர்தல் களம் இது.குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் தெரிந்தவனே புத்திசாலி அரசியல்வாதியாகப் போகிறான்:(

Rule 49-O is a rule in The Conduct of Elections Rules, 1961[1] of India, which governs elections in the country. It describes the procedure to be followed when a valid voter decides not to cast his vote, and decides to record this fact. The apparent purpose of this section is to prevent the election fraud or the misuse of votes.

பழமைபேசி said...

//பிரேம்குமார் said...
“இனப் படுகொலையை எதிர்ப்போர் 49-Oவில் ஒப்பமுக்குங்கள்

இந்தியாவின் எதிர்காலத்தின் மேல் அக்கறை உள்ளவர்களும் இதையே தான் செய்ய வேண்டும் போல
//

வாங்க பிரேம்! ஆமாங்க...

பழமைபேசி said...

//Mahesh said...
49-O க்கு ஒரு "ஓ" போடுங்க !!
//

வாங்க மகேசு அண்ணே!

பழமைபேசி said...

”இரண்டில் ஒன்றையும் செய்யாமல் கடைசித்தமிழனும் செத்து மடிந்து அநாகரிக தர்மபாலன் என்ற சிங்களத் தலைவன் என்ற சிங்களத் தலைவன் கண்ட கனவின்படி இலங்கை முழுவதும் சிங்களர் நாடாய் மாறுவதற்கு, மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறதா?

இந்தக் கேள்விகளோடு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தால், யாருக்குத்தான் வாக்களிக்க முடியும்? நான் யாருக்கும் வாக்களிப்பதாக இல்லை.”

--தமிழருவி மணியன்”

இதுக்கு 49-O எவ்வளவோ மேல்! இவ்வளவு பேர், இதற்கான அபிமானிகள் இருக்கிறார்கள்ன்னு காண்பிக்க முடியுமே?

vasu balaji said...

கள நிலவரம் இருக்கே. தனிமை இல்ல. அங்கன நின்னு விரல்ல மை வெச்சு ஓட்டு மிசினுக்குள்ள போகாம போனாலே பார்வையாளர் பார்வை ஒரு மாதிரியா இருக்கும். பத்தம்பதுனு கொஞ்சபேரு அப்பிடி போராடி 49-o கு ஓட்டுப் பதிய முடிஞ்சா? ஒரு சில தொகுதில நடக்குமோ தெரியாது. மத்த தொகுதிகள்ள களப்பலி நடந்தே தீரும். எனக்கில்லன்னா எவனுக்குமில்லனு இருக்கிற ஆளுகள்ட என்ன பண்ண முடியும்.

பழமைபேசி said...

// தமிழர் நேசன் said...
இன நலனுக்கும நாட்டு நலனுக்கும் உகந்த ஒரு பதிவிட்டமைக்கு பிரத்யேக நன்றி.//

நமது கடமையன்றோ நண்பா?!

பழமைபேசி said...

//பாலா... said...
பண்ண முடிஞ்சா நல்லாதான் இருக்கும். ஆனா இது அவ்ளோ செலவு பண்ணி தேர்தல்ல நிக்கிறவங்களுக்கு தெரியாமலா இருக்கு. தகுந்த முறிவு வெச்சுருக்காய்ங்க.
//

பாலா அண்ணன் மேல இந்த தம்பிக்கு கோபம்... :-0(

முறிவுக்கு வளையறது நம்ம தப்பு அல்லங்களாண்ணே?!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
வாக்காளரின் நிலை தர்மசங்கடத்துக்குள்ள ஒரு தேர்தல் களம் இது.குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கத் தெரிந்தவனே புத்திசாலி அரசியல்வாதியாகப் போகிறான்:(
//

வாங்கண்ணே, வாங்க! 49-O போட்ட ஓட்டெல்லாம் அபிமானிக போட்ட ஓட்டா, இல்லையான்னு கவலைப்பட வேண்டியது ஓட்டுக்காக ஏங்குறவன் வேலை. பெருவாரியான அபிமானிகள், 49-Oக்கு வாக்களிக்கும் போது அது முகில் மறைத்த ஆதவனுக்கு ஒப்பு. ஆதவனின் ஒளிக் கீற்று வெளில வரத்தான செய்யும்?!

பழமைபேசி said...

//பாலா... said...
கள நிலவரம் இருக்கே. தனிமை இல்ல. அங்கன நின்னு விரல்ல மை வெச்சு ஓட்டு மிசினுக்குள்ள போகாம போனாலே பார்வையாளர் பார்வை ஒரு மாதிரியா இருக்கும். பத்தம்பதுனு கொஞ்சபேரு அப்பிடி போராடி 49-o கு ஓட்டுப் பதிய முடிஞ்சா? ஒரு சில தொகுதில நடக்குமோ தெரியாது. மத்த தொகுதிகள்ள களப்பலி நடந்தே தீரும். எனக்கில்லன்னா எவனுக்குமில்லனு இருக்கிற ஆளுகள்ட என்ன பண்ண முடியும்.
//

ஆக, அவிங்களுக்கு அஞ்சி, எதோ ஒருத்தருக்கு ஓட்டுப் போடணும்? மத்தவங்க எதும் செய்ய மாட்டாங்கன்னு என்ன நிச்சம்??

வீட்லயே ஒப்பாரி வெச்சி ஒக்காந்துகிட்டா, ஒக்காந்தவன் ஓட்டு பதியாதுன்னு என்ன நிச்சம்??

இத்தனைக்கு மேல அந்தளவுக்கு, சட்டம் ஒழுங்கு நாட்டுல இல்லையா என்ன?

உண்மையிலேயே அபிமானம் இருக்குறவங்க, போயி 49-Oக்கு ஓட்டுப் போடுவாங்க. போடணும்!!!

49-Oக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேட்கிறது சுலபம். மத்த எது செய்யுறதும், தனக்குத் தானே ஆப்பு வெக்கிற வேலை!!!

vasu balaji said...

அய்யோ தம்பி. நான் முறிவுக்கு வளையணும்னு சொல்ல வரல. எனக்குத் தெரியும் உங்களுக்கு உடன்பாடிருக்காதுன்னு. அதனால தான் இலைமறைவு காயா நான் இடுகை போட்டது. கொஞ்சம் சீரியசா படிச்சா சொல்ல வந்தது விளங்கும். புரியும்னு நினைக்கிறேன்.49‍ஒ வில வாக்களிக்க முடியற பட்சத்தில அதத்தான் செய்யோணும்.

பழமைபேசி said...

//பாலா... said...
அய்யோ தம்பி. நான் முறிவுக்கு வளையணும்னு சொல்ல வரல. எனக்குத் தெரியும் உங்களுக்கு உடன்பாடிருக்காதுன்னு. அதனால தான் இலைமறைவு காயா நான் இடுகை போட்டது. கொஞ்சம் சீரியசா படிச்சா சொல்ல வந்தது விளங்கும். புரியும்னு நினைக்கிறேன்.49‍ஒ வில வாக்களிக்க முடியற பட்சத்தில அதத்தான் செய்யோணும்.
//

அண்ணே, உங்களோட இந்த மறுமொழியப் பார்த்ததுக்கு அப்புறந்தான் உங்க இடுகையப் பார்த்தேன்.

அனாமதேய அன்பர்கள் மறுமொழியுற ஆக்கினைய எடுத்து விடுங்க! என்னைப் பொறுத்த வரைக்கும், அது ஒரு தொல்லை!!

கலகலப்ரியா said...

:-)

ஆ.ஞானசேகரன் said...

//, ”49-O”, உங்களை நாடி, நீங்கள் இருக்கும் இடம் தேடி வருகிறது. இறையாண்மைக்கு குந்தகம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்! என்று எவரும் சொல்ல முடியாது.//

நானும் ஆதரிக்கின்றேன்.. ஆனால் ஒன்று இது ரகசியமாக அழிக்க முடியாது என்பது ஒரு பெரும் குறை... இதனால் பெரும்பாலும் 49ஓ தேர்வு செய்ய முடியாமல் போகலாம்...

ஆ.ஞானசேகரன் said...

உங்களின் இயற்பெயர் தெரிந்து கொள்ளலாமா?.....

பழமைபேசி said...

// ஆ.ஞானசேகரன் said...
உங்களின் இயற்பெயர் தெரிந்து கொள்ளலாமா?.....
//

வாங்க ஞானசேகரன்! இஃகிஃகி!!

மெளன. மணிவாசகம்.

தமிழ்மண நட்சத்திர வார பதிவர் பக்கத்துக்கு போங்க... என்னோட வரலாறே இருக்கும்.

பழமைபேசி said...

//நானும் ஆதரிக்கின்றேன்.. ஆனால் ஒன்று இது ரகசியமாக அழிக்க முடியாது என்பது ஒரு பெரும் குறை... //

இதைத்தான் நம்ம பாலா அண்ணன் சொல்லிகிட்டு இருக்காரு. அவர் சொல்வதிலும் நியாயம் இருக்குங்க...

ஆனா, உரிமைய நிலைநாட்ட முடியாத நாடு என்ன நாடு?!

Unknown said...

//இறையாண்மைக்கு குந்தகம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்! என்று எவரும் சொல்ல முடியாது.

முத்தாய்ப்பான ஒண்ணு!

ஜோசப் பால்ராஜ் said...

49-ஓ போட்டுட்டா அங்க இருக்க பார்வையாளர்கள் பார்த்துடுவாங்க, களப்பலி நடக்கும்னு சொல்லுறீங்க, ஆனா இன்னைக்கு ஊடகங்களோட வளர்சி இருக்கே அது ரொம்ப அதிகம். ஓட்டுப்போட்டுட்டு வெளிய வந்து நீங்க எந்த கட்சிக்கு ஓட்டுபோட்டீங்கன்னு சொல்றதுதான் சட்டப்படி தப்பு. ஆனா எந்தக்கட்சிக்கும் ஓட்டுப்போடல, 49-ஓ தான் போட்டேன்னு சொல்றது தப்பு இல்ல. வெளிய ஊடகத்த சேர்ந்தவங்க இருந்தா அவங்ககிட்ட நான் 49-ஓ தான் போட்டேன்னு சொல்லிடலாம். அப்டி சொன்னதுக்கு அப்றம் அவங்க மேல கைய வைச்சா ஊடகங்கள் சும்மா விடாது.

ஆனா ஓட்டு வேணும்ங்கிறதுக்காக இப்ப எல்லா அரசியல் கட்சிகளும் அவங்களோட சித்து விளையாட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்கண்ணே.
இன்னைக்கி சோனியா காந்தி சொல்லியிருக்காங்க, போர் நிறுத்தம் அவசியம்னு
வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி என்ன சொல்லியிருக்காருன்னா, இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவதை பொறுத்துக்கொள்ள முடியாதுன்னு சொல்லியிருக்காரு.

இவ்ளோ நாள் போர் நிறுத்தத்தப் பத்தி யோசிக்காத சோனியாவுக்கு இப்பதான் அதன் அவசியம் புரிஞ்சுருக்கு. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது இப்பத்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தெரிஞ்சுருக்கு. இம்புட்டு நாளு அவர்கிட்ட சொல்லாம மறைச்சுட்டாங்களாம்ணே.

தேர்தல் வந்ததும் எப்டி மக்கள் மேல பாசம் வருதுன்னு பார்த்தீங்களா?
இந்தக் கொடுமைக்கு வருசம் வருசம் தேர்தல் வந்தா தேவலாம்னு இருக்குண்ணே. எப்டியும் ஓட்டுக்கு காசுன்னு ஆயிப் போச்சு, வருச வருசம் நம்ம மக்களுக்கு காசு வரட்டுமே. இவிங்களும் வருசாவருசம் மக்கள சந்திக்கணுமேன்னாவது பயந்துகிட்டு இருப்பாங்கள்ல?

பழமைபேசி said...

//ஜோசப் பால்ராஜ் said... //

வாங்க ஜோசப் பால்ராஜ்! வணக்கம்!!

நான் 49-O க்குதான் ஆதரவு. ஆனா, இந்த அரசியல்வாதிகளை நம்பக் கூடாது. மக்கள், தங்களோட இனமான உணர்வைக் காமிக்க 49-O நல்ல ஆயுதம். தொகுதிக்கு 50000 வாக்கு 49-Oக்கு போனாப் போதும். தமிழனுக்கு நிச்சயம் விடிவு பிறக்கும்!!

கயல் said...

இந்த இடுக்கை ரொம்பவே பயனுள்ளது! ஆனா இந்த விழிப்புணர்வு எல்லா தரப்புலயும் இருக்கணும் இல்ல? ஒரு அரசியல்வாதி படிச்ச, விபரம் தெரிஞ்ச மக்கள வச்சா அரசியல் பண்ணுறான்? இல்ல நம்பகிட்ட அவன் நடிப்பு தான் செல்லுபடியாகுமா(!)? ஜனநாயகத்துல பெரும்பான்மை முக்கியமில்லையா பழமைபேசி! பெரும்பாண்மை தமிழர்களுக்கு 49-O பத்தின அடிப்படை தாக்கமாவது இந்த தேர்தலின் மூலம் கிடைக்கனும் அதுதான் என்னோட வேண்டுதல். அரசியல் சாராத ஊடகங்களின் பங்களிப்பு இதுக்கு ரொம்ப அவசியம் !

ஊர்சுற்றி said...

நீங்க சொல்ற மாதிரி அவ்வளவு சுலபமா 49 'O' போட்டுவிட முடியாது. முதலில் தேர்தல் மைய அதிகாரிக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு இருக்கவேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து இது சம்பந்தமாக பயிற்சிகள் அவர்களுக்கு அரிதாகவே கொடுக்கப்படுகின்றன. இதைத் தாண்டி தேர்தல் மையத்தில் உட்கார்ந்திருக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள்,இவர்களால் பல பிரச்சினைகள் வரும். கிராமப்புரங்களில் சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு. என் அனுபவத்தில் நான் இதை மிகப்பெரிய சிக்கலாகவே பார்க்கிறேன். இதைப்பற்றிய நீதிமன்றத்தின் கருத்துகளைக் கொண்ட எனது பழைய இடுகை ஒன்று இங்கே.

எனவே ஒரு பரவலான விழிப்புணர்வு வேண்டுமெனில், பெரிய ஊடகங்கள் வாயிலாகத்தான் நடக்க முடியும்.

வில்லன் said...

//ஊடகங்கள் பொதுவாகவே, ஏதோ ஒரு அரசியல் சார்புடனே இருக்கும். முதலாவது வகை ஊடகங்கள், நேரிடையாகவே ஒரு அரசியல் கட்சிக்கு உட்பட்டதாக இருக்கும். அடுத்த வகை ஊடகங்கள், தற்காலிகமாக, மறைமுகமாக எதோ ஒரு கட்சிக்கு ஆதரவாக இருக்கும். //

ஆமா நீங்க எந்த வகை ஊடகம்

வில்லன் said...

//“சரி விடு, நீ கேளு, நான் கிளத்துறேன்! கேட்டலும் கிளத்தலும்ன்னு இருக்கட்டும்”//

அதென்ன கிளத்துறேன்!!!!!!!!!!!. கெலப்புரெனு சொலுங்க.... இக்கி இக்கி

ers said...

பயனுள்ள பதிவு. இந்த விபரம் எனக்கு இப்போது தான் தெரியும்.