4/11/2009

வேட்பாளரை மாத்திப் போட்டாங்களாம்டா, இராசூ...

”டேய் இராசூ, உனக்கொரு விசியந் தெரியுமாடா? வேட்பாளரை மாத்திப் போட்டாங்களாமாடா!”

“யாரு, நம்ம பெரிய பள்ளிக்கூடத்து வாத்தியாரையா சொல்லுற?”

“மம்ட்டி, மம்ட்டி, நீ இந்த அறுகெடுக்குறதுலயே இரு. எப்பத்தான் வெளியுலகந் தெரிஞ்சுக்கப் போறயோ என்னமோ?”

”இப்பத்தான் தோண்டுன அறுகை, குமுஞ்சு வழிக்க ஆரமிச்சு இருக்குறன், இன்னம் ஒரு எட்டுக்கூட நவுருல, இப்பவே திட்ட ஆரமிச்சுட்டியா நீயி?”

“பின்ன என்னடா, இனியுமு ரெண்டு மூனு வாரத்துல பெரிய எலெக்சன் வரப் போகுதுல்லோ?”

“அப்ப, அம்மா மறுக்காவும் ஆச்சிக்கி வந்துருவாங்களாக்கூ?”

“ஐயோ, உன்னோட பெரிய்ய இமிசியாப் போச்சுடா. இது பெரிய எலெகசனுடா... டில்லிக்கு யாரு போறதுன்னு முடுவு பண்ணுற எலெக்சன்!”

“அப்பிடியா? செரி, சூரியன்ல ஆரு, எலைல ஆரு நிக்கிறாங்க நம்மூர்ல?”

“அதாண்டா, நிக்கிற ஆளை மாத்திப் போட்டாங்களாம்... இன்னிக்கி டீவீப் பொட்டியில சொன்னாங்க.”

“க்கும்... யாரு நிக்கிறாங்கங்றது நெம்ப முக்கியமாக்கூ? காசு நெம்ப யாரு நம்பளுக்கு தர்றாங்களோ, அவிங்களுக்கு போட்டுட்டு, டவுன்ல போயி கொழந்தைகளுக்கு துணிமணி எடுத்து தரோணும். சீக்கிரம் லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் தொறக்கறாங்கல்லோ?”

“ஆமாமா... யாரு செயிச்சு நம்முளுக்கென்னாவுது... நாம பாடுபழமயப் பாக்குலாம்!”


=========================================

என்ன எல்லாரும் பிரச்சாரத்துக்கு வெளில போய்ட்டாங்களாக்கூ? சரி, ஒரு கதை சொல்றேன் கேட்டுகுங்க....

நான் பள்ளிக்கூடம் போய்ட்டு, பைக்கட்டைத் தோள்ல போட்டுட்டு பொடி நடையா வந்துட்டு இருந்தேன்.நல்ல தண்ணிக் கெணத்துல இருந்த பொன்னம்மக்கா அவங்க சொன்னாங்க, டேய் இராசு, போயி உங்கம்மாவை பாதாள சோதியோட வரச் சொல்லுன்னு. எங்க தோட்டத்துக்கு சோதிமணி, சோதிமணின்னு ஒரு புள்ளை களை எடுக்க வரும். அதுமாதர, இதுவும் யாரோவாக்கும்ன்னு நினைச்சிட்டு நான் எங்கூட்டுக்குப் போனேன்.

அங்க எங்கம்மா, பக்கத்து ஊட்டு அமுச்சிகோட எதோ தூத்துக்கூடை வாங்கிட்டு இருந்தாங்க. நான் போயி,பொன்னம்மக்கா பாதாள சோதியக் கூட்டிட்டு உன்னிய நல்ல தண்ணிக் கெணத்துக்கு வரச் சொல்லுச்சுன்னு சொன்னேன். அதைக் கேட்டதும் அந்த அமுச்சியும், கூடை விக்கிறவனும், எங்கம்மாவும் உழுந்து உழுந்து சிரிச்சாங்க. ஏன்னு உங்களுக்குத் தெரியுமாங்க?

23 comments:

அது சரி(18185106603874041862) said...

//
ஆமாமா... யாரு செயிச்சு நம்முளுக்கென்னாவுது... நாம பாடுபழமயப் பாக்குலாம்!
//

இது உண்மை...மாஃபியா கும்பல்ல எந்த கும்பல் வந்தா என்ன?? எல்லாம் ஒண்ணு தான்!

பழமைபேசி said...

//அது சரி said...
//
ஆமாமா... யாரு செயிச்சு நம்முளுக்கென்னாவுது... நாம பாடுபழமயப் பாக்குலாம்!
//

இது உண்மை...மாஃபியா கும்பல்ல எந்த கும்பல் வந்தா என்ன?? எல்லாம் ஒண்ணு தான்!
//

வாங்க அது சரி அண்ணாச்சி...

ஆமா, என்னோட கேள்விக்கு பதில் சொல்லலைங்களே?

vasu balaji said...

இந்த கிணத்துல சுருக்கு நழுவி குடம், பக்கெட்லாம் விழுந்த்தா எடுக்குறதுக்கு கொக்கி மாதிரி இருக்குமே அதுங்களா. இங்க பாதாள கொலுசுன்னு சொல்லுவம். அப்புறம் இந்த அறுகைக்கு அர்த்தம் ஆருட்ட கேக்க. நீங்கதான் சொல்லோணும்.

கபீஷ் said...

பாதாள கரண்டி

பழமைபேசி said...

// பாலா... said...
இந்த கிணத்துல சுருக்கு நழுவி குடம், பக்கெட்லாம் விழுந்த்தா எடுக்குறதுக்கு கொக்கி மாதிரி இருக்குமே அதுங்களா. இங்க பாதாள கொலுசுன்னு சொல்லுவம்.
//

வாங்க பாலாண்ணே, ஆமாங்க, பாதாள சுதி, பாதாள சோதி ஆயிடுச்சி.
சுதின்னா, கூர்மையான, அல்லது ஊசிங்க. அதாங்க, பாதாள சோதி!

//அப்புறம் இந்த அறுகைக்கு அர்த்தம் ஆருட்ட கேக்க. நீங்கதான் சொல்லோணும்.//

வேலியில இருக்குற அறுகம்புல், தோட்டங்காட்டுகுள்ள வராம இருக்க அறுகு தோண்டுவாங்க... அந்த அறுகைத்தான் இங்க சொல்லுறாங்க இராசுவும், பொன்னானும்.... இஃகிஃகி! அருகம்புல்ன்னா அது தவறு!

அருகி வர்ற புல் அருகம்புல்.... பெயர்ச்சொல்லா சொல்லும் போது அறுகம்புல்!

பழமைபேசி said...

//கபீஷ் said...
பாதாள கரண்டி
//

வாங்க இலண்டன் மாநகர் திருவாட்டியாரே! நல்லா இருக்கீகளா??

கபீஷ் said...

ஹி ஹி நல்லா இருக்கோமுங்க. பதில் சரின்னு சொல்லுங்க. எங்க ஊர்ல இப்படித்தான் சொல்லுவோம்

vasu balaji said...

அப்பாடா. ஒரு விடை முதல்ல சரியா சொல்லி போட்டேன். அருகம்புல்லுன்னு தான் படிச்சி படிச்சி அதானோன்னு நினைச்சன். அப்புறம் அறுகுனு இருக்கவே கேட்டது. நல்லதாப் போச்சு. தென்கச்சி இன்று ஒரு தகவல் தான் தருவாரு. உங்கள்ட நிறைய சேருது. நன்றி.

பழமைபேசி said...

//கபீஷ் said...
ஹி ஹி நல்லா இருக்கோமுங்க. பதில் சரின்னு சொல்லுங்க. எங்க ஊர்ல இப்படித்தான் சொல்லுவோம்
//

பதில் சரி!

இஃகிஃகி!!

Mahesh said...

வேட்பாளரை மாத்திட்டாங்களா... வெளங்கிரும் !!

அறுகு வயல் பூரா வேரோடி அதப் புடுங்கறதுக்குள்ள உம்பாடு எம்பாடு ஆயிருமே !!

"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி..."

ஆ.ஞானசேகரன் said...

//“ஆமாமா... யாரு செயிச்சு நம்முளுக்கென்னாவுது... நாம பாடுபழமயப் பாக்குலாம்!” //

எதார்தமான உண்மை

கயல் said...

எங்க ஊர்ல அத பாதள கரண்டின்னு சொல்லுவோம். எது சரி?

இராகவன் நைஜிரியா said...

தஞ்சைப் பக்கங்களில் அதை பாதள கரண்டி என்று சொல்லுவார்கள். சில பாதள கொலுசு என்றும் சொல்லுவார்கள்.

// ”டேய் இராசூ, உனக்கொரு விசியந் தெரியுமாடா? வேட்பாளரை மாத்திப் போட்டாங்களாமாடா!” //

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..

இராகவன் நைஜிரியா said...

// பொன்னம்மக்கா பாதாள சோதியக் கூட்டிட்டு //

அது சரி... சோதிய கூட்டிகிட்டு போகணுமாக்கும்.

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
தஞ்சைப் பக்கங்களில் அதை பாதள கரண்டி என்று சொல்லுவார்கள். சில பாதள கொலுசு என்றும் சொல்லுவார்கள்.
//

இராகவன் ஐயா, வாங்க, வணக்கம்! ஆமாங்க, பாதாள கொலுசு, பாதாள கரண்டி, பாதாள சங்கிலி, பாதாள சு(சோ)தி எல்லாம் ஒன்னுதாங்க ஐயா. எங்க ஊர், பாதாள சோதிக்கு ஒரு விளக்கம்...அவ்வளவுதான்! இஃகிஃகி!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கிணத்துள் விழுந்த குடம்,வாளி போன்றவற்றை (கயிற்றுடன்) கிணற்றுள் இறங்காமல் எடுக்க இலகுவானது.
இதை ஈழத்தில் பாதாள விறாண்டி (பிறாண்டி)
எனக் கூறுவோம்

பழமைபேசி said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
கிணத்துள் விழுந்த குடம்,வாளி போன்றவற்றை (கயிற்றுடன்) கிணற்றுள் இறங்காமல் எடுக்க இலகுவானது.
இதை ஈழத்தில் பாதாள விறாண்டி (பிறாண்டி)
எனக் கூறுவோம்
//

நன்றிங்க, யோகன் அண்ணே! நல்லா இருக்கீங்களா? உங்களைக் கண நாளாக் காணவே இல்லை நம்ம பக்கத்துல?!

பழமைபேசி said...

@@Mahesh said...

@@ஆ.ஞானசேகரன் said...

சிங்கப்பூர்வாசிக ரெண்டு பேர்த்துக்கும் நன்றிங்க...

அப்பாவி முரு said...

//நான் பள்ளிக்கூடம் போய்ட்டு, பைக்கட்டைத் தோள்ல போட்டுட்டு பொடி நடையா வந்துட்டு இருந்தேன்//


ஆங்க், உங்களை பைக்கட்டோட கற்பனைப்பண்ணி பாக்குறேன்....

Muniappan Pakkangal said...

Nice post,i am first time hearing a word new to me- Paathala sothi.

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
ஆங்க், உங்களை பைக்கட்டோட கற்பனைப்பண்ணி பாக்குறேன்....
//

படம் அனுப்பி வைக்கவா? இஃகிஃகி!!

பழமைபேசி said...

//Muniappan Pakkangal said...
Nice post,i am first time hearing a word new to me- Paathala sothi.
//

அதுக்குத்தான் இந்த இடுகை...நன்றிங்க!!

பழமைபேசி said...

இராசூ... வாடா, நாம ஊட்டுக்குப் போலாம்...