அது சரீ, ஏன் கொஞ்ச பேரு உப்புக்குச் சப்பாணின்னு சொல்லுறாங்க? அது ஒப்புக்குச் சப்பாணிதானே? நாங்கெல்லாம் சின்ன வயசுல நொண்டி விளையாடுவோம். யாராவது ஒருத்தர் நொண்டி அடிச்சி, மத்தவிங்களைத் தொரத்திப் பிடிக்கணும். அப்ப, யார் அந்த ஒருத்தர்? அதை முடிவு செய்யுறதுக்கு, சா..பூ...த்ரீ.... மாதிரி கைய ஆட்டிட்டி, அப்புறமா சப்பாணி கொட்டணும். சப்பாணின்னா, ஒரு கையோட உள்ளங்கையில, அடுத்த கையோட உள்ளங்கையை மேல பாத்தோ, இல்ல அடுத்த உள்ளங்கையோட பொருந்துற மாதிரியோ கொட்டுறது.
அப்படிக் கொட்டும் போது, கருப்பு(வெளிப்புறம்), வெள்ளை(உள்ப்புறம்)இதுல ஒத்தையா இருக்குறவிங்களை நீக்கி, நீக்கிக் கடைசியா ரெண்டு பேர்ல வந்து நிக்கும். இப்ப, ரெண்டு பேர்ல ஒருத்தரை முடிவு செய்யுறதுக்கு, மூனாவதா ஒரு ஆள் தற்காலிகமா(ஒப்பு) அந்த ரெண்டு பேரோடச் சேந்து சப்பாணி கொட்டுறார் பாருங்க, அதாங்க ஒப்புக்குச் சப்பாணி.
சப்பாணின்னா, உடல் ஊனமுற்றவரைச் சொல்லுறோம். குழந்தைகள் மழலையோட சேந்து ரெண்டு கைகளையும் தட்டிச் தட்டிச் சிரிக்குற பருவம் இருக்கு பாருங்க, அதையுஞ் சொல்லுறது சப்பாணிப் பருவமுன்னு. ஒப்புங்றது, சாயலை தோற்றுவிக்கிறங்ற பொருள் கொண்டதுங்க. அதான், தற்காலிகமான ஒரு போலித் தோற்றத்தை உண்டு பண்ணுறது ஒப்பனை... உங்க தனித்தன்மையான எழுத்துக் கீறலைத் தோற்றுவிக்கிறது கையொப்பம். இஃகிஃகி!! இப்படி தற்காலிகமா சேந்து கை கொட்டுறது, ஒப்புக்குச் சப்பாணி. அதுவே, ஒப்புக்குச் சப்பா நீ போடுன்னும் ஆச்சுது.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழ முடியுமா?
37 comments:
///என்ன ஆமாவா இல்லையா? இஃகிஃகி, சிங்கப்பூர்ல இருந்தப்ப தொத்திகிட்டதுதான் இந்த ஆமாவா??///
சிப்க்கபூர்ல இருந்து தான் கேக்குரோம்,
ஆமாவா?
இஃகி., இஃகி
மீ த ஃபஸ்ட்?
உள்ளேன்...
படிச்சுட்டு வரேன்...
//muru said...
///என்ன ஆமாவா இல்லையா? இஃகிஃகி, சிங்கப்பூர்ல இருந்தப்ப தொத்திகிட்டதுதான் இந்த ஆமாவா??///
சிப்க்கபூர்ல இருந்து தான் கேக்குரோம்,
ஆமாவா?//
வாங்க முருகேசன்! நாங்க அந்த NTSC வானொலி நிலையத்துல இருக்குற சற்குணம்ங்றவர்கிட்ட பல இரகளை செய்திருக்கோம்... செமக் காட்டு காட்டிட்டோம்.... நல்ல மனிதர்...கொஞ்சம் உணர்ச்சி வசப்படுவாரு... இன்னும் இருக்காரா??
நல்ல பதிவு...
நமக்கு சப்பாணின்னதும் "16 வயதினிலே" கமல் தான் ஞாபகத்துக்கு வர்றாருங்க...
:-)
அப்பிடியே நம்ம கடைப் பக்கம் ஒருக்கா வந்துட்டு போறது...
:-)
//வேத்தியன் said...
உள்ளேன்...
படிச்சுட்டு வரேன்...
//
வாங்கோ, வாங்கோ!!
நல்லாத்தான் யோசிக்கறீங்க அண்ணே ! ஆமாவா ! இல்லையா ?
ஒப்புக்குச் சப்பானினாலும் அவிகளும் இருந்தா தானா ஆட்டம் சோபிக்கும்?! ஆமாவா ...இல்லையா?
வேத்தியன்..வந்தேன்...படித்தேன்...இரசித்தேன்...
நல்ல விளக்கம்ங்க. அதென்னங்க சிங்கப்பூர்ல ஆமாவா? பெங்களூரு தமிழ்லயும் ஆமாவா உண்டுங்க. அப்படியான்னு கேக்க மாட்டாங்க. ஆமாவா தான். ஒப்புன்னா சமம்னும் ஒரு பொருள் வருமில்லையா? ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், ஒப்பில்லா மணியன் (ஹி ஹி),ஒப்புயர்வற்றன்னு.
:)
நல்ல தகவல்
மட்டை ஆட்டத்திற்கு 4 பேரை ஒப்புக்கு சப்பாணியாக கூட்டிச் செல்வார்கள். வெளிநாட்டு ப(ய)ணம், படி கசக்குமா ?
அப்படி இருக்கவும் கொடுப்பினை இருக்கனும்.
உங்களை வச்சு ஒரு காமடி பதிவு போடனும் !
:)
ஒப்புக்கு சப்பா நீங்க வந்துட்டு போறிங்கன்னு சொல்லாம சொல்றிங்க
விளக்கம் ரெம்ப சூப்பேறு அப்பு .எப்படித்தான் இந்த மாப்புகளேல்லாம் இப்படி தினுசு தினுசா எழுதுராங்கன்னே தெரியலியே
\\அப்பிடியே நம்ம கடைப் பக்கம் ஒருக்கா வந்துட்டு போறது...\\
அட்ரஸ் சொல்லுங்க ஆட்டோவோட வாறோம்
முக்கியமான ஒன்னு காணோமே ,அது தான் ஆளுயர படம்
பழமைபேசியாரே
நாங்கள் பிள்ளைகாளக விளையாடிய காலத்தே அதற்கு வேறு பொருள்.
நாம் விளையாடுகையில் நம் நம் தம்பியர்களுக்கு விளையாடும் திஅன் இருக்காது என்றாலும் விளையாட வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்
அந்த நேரங்களில், தம்பிகளை ஒப்புக்கு சப்பாணியாக சேர்த்துக்கொள்வோம். அவர்கள் விளையாட்டில் இருந்தாலும் அவர்களை தொட்டு வெளியேற்றுவது இல்லை. வெளியேற்றினாலும் கணக்கில் கொள்ளேம்
இன்னும் சில.
கவலை பற்றிய உங்கள் மடலில் சால் என்று சொன்னீர்கள். சால் என்பது நிலத்தில் உழுவதுதானே? குறுக்குசால் என்ற சொல்லும் உண்டே?
கவலை இறைக்கையில் இன்னும் பல சொற்கள் உளவா? நீர் முகக்கும் தோல்பைக்கு என்ன பேர். எருதுகள் இறங்கும் போதும் பின்னோக்கி ஏறும்போதும் என்ன சொல்லுவார்கள். பெரிய கயுறும் சின்ன கயிறுக்கு சிறப்பு பேர்கள் உண்டா?
தொப்பரை என்ற சொல்லின் பொருள் யாது?
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
ஒப்புக்குச் சப்பா கதாநாயகியோட நாலு பேர் வந்து போவாங்க.... ஒப்புக்குச் சப்பா ஆட்டத்துலயும் சேத்துகிடுவாங்க... ஒப்புக்குச் சப்பா வணக்கமும் போடுவாங்க...இப்படி, ஒரு போலியாகவும், முக்கியத்துவம் இல்லாமலும் செய்விக்கிற செயலுகளுக்கு இந்த வழக்கைப் புழங்குறதுதானுங்க ஐயா! ஒப்புக்குச் சப்பாணி கொட்டுறதுல இருந்து இந்த வழக்கு வந்திருக்கும்ங்றது ஒரு யூகம்.
சால்ங்றது, நீங்க சொன்ன மாதிரி ஏருக்குப் பின்னாடி விதை போட்டுட்டுப் போறதும் சால்தானுங்க. அதே நேரத்துல மொடா, தண்ணீரைச் சேமிக்கும் பெரு பானையும் சாலுதானுங்க. தண்ணீர் இறைக்கும் தோல்பைக்கு தொம்பை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். அதே நேரத்தில், அது மெல்லிய தகடால் செய்யப்பட்ட ஒரு கொள்கலனாக இருந்தால், அது சால்.
எறக்கம் என்றால், இறங்கும் செய்கை அல்லது கீழோடிப் போவது. ஏத்தம் என்றால், மேலோடிப் போவது. பெரிய வடம், கமுத்து கயிறு, சின்னச் சூடி, கைக்கயிறு இப்படி நிறைய இருக்குங்க ஐயா. கவ்வையினூடாக (கவட்டி) இருக்கும் குறுக்குச் சட்டத்தின் மேலுள்ள கிடந்துருளி(கெடந்துருளி)யூடாக இழுபடும் செய்கை கவலை ஓட்டுவதுங்க ஐயா!
கொப்பரைங்றதும் கொள்கலந்தானுங்க..ஆனா, அது குமிஞ்ச வாக்குல இருக்காது. மேல திறந்த வாக்குல பெருசா இருக்கும். தொப்பரையான்னும் ஒரு சொல்லு இருக்கு. இப்பிடித் தொப்பரையா நெனஞ்சு வந்திருக்கியே, அறிவிருக்கா? அதாவது, துப்புரவா, முற்றிலுமா நனைஞ்சு வந்திருக்கியே, மேலுக்கு முடியாமப் போகாதா?
எனக்கு, இப்ப எங்க அப்பிச்சி வேணும்.... அவ்வ்வ்வ்வ்வ்....
\\\இப்பிடித் தொப்பரையா நெனஞ்சு வந்திருக்கியே\\\
இததான் எங்க ஊருல "தொப்பையான்னு" சொல்லுவோம் அப்ப அதுக்கு பேரு "தொப்பரையா"
//.R.Rajasekaran said...
\\\இப்பிடித் தொப்பரையா நெனஞ்சு வந்திருக்கியே\\\
இததான் எங்க ஊருல "தொப்பையான்னு" சொல்லுவோம் அப்ப அதுக்கு பேரு "தொப்பரையா"
//
புளியங்குடியார் வாங்க, வாங்க, வணக்கம்!
துப்புரவாங்றது நம்மகிட்ட என்ன பாடு படுது பாருங்க?! துப்புரவு தொப்புரவு ஆயி, அப்புறம் தொப்பரை ஆயி, இப்பத் தொப்பையும் ஆயிடுச்சா?! அவ்வ்வ்...
நசரேயனுக்கு இருக்குறதுதான் தொப்பைன்னு நெனச்சிட்டு இருந்தேன்....
// கோவி.கண்ணன் said...
:)
நல்ல தகவல்
மட்டை ஆட்டத்திற்கு 4 பேரை ஒப்புக்கு சப்பாணியாக கூட்டிச் செல்வார்கள். வெளிநாட்டு ப(ய)ணம், படி கசக்குமா ?
அப்படி இருக்கவும் கொடுப்பினை இருக்கனும்.
உங்களை வச்சு ஒரு காமடி பதிவு போடனும் !
:)
//
வாங்க ஐயா, வணக்கம்! தாராளமாப் போட்டுத் தாக்குங்க ஐயா!!
//Bala said...
நல்ல விளக்கம்ங்க. அதென்னங்க சிங்கப்பூர்ல ஆமாவா? பெங்களூரு தமிழ்லயும் ஆமாவா உண்டுங்க. அப்படியான்னு கேக்க மாட்டாங்க. ஆமாவா தான். //
ஆமாவா??
//ஒப்புன்னா சமம்னும் ஒரு பொருள் வருமில்லையா? ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன், ஒப்பில்லா மணியன் (ஹி ஹி),ஒப்புயர்வற்றன்னு.
//
பாலாண்ணே, இங்க நீங்க சொல்லுற ஒப்பு, நீங்க சொன்னா மாதிரி இணைங்ற பொருள்ல வர்றதுதான். ஒப்புன்னா, பல பொருள் இருக்கு.
1.ஒப்பு, Likeness, similitude, com parison, resemblance, ஒப்புமை.
2. Suitable ness, congruity, acceptableness, satisfac toriness, தகுதி.
3. Uniformity, similarity, conformity, oneness, harmony, concord, இசைவு.
4. Beauty, comeliness, graceful ness, அழகு. (பாரதி.)
5. Levelness, even ness, equality, equilibrium, சமம்.
6. A funeral elegy, ஒப்பாரி.
7. [in logic.] Com parison as one of the eight means of dis covering truth, உவமானப்பிரமாணம்.
8. Imi tation, சாயல்.
9. Acknowledgment, con cession, உடன்படுகை. ஒப்புத்தானோ. Do you agree to this? Is it valid? Are you in earnest? அதுஒப்பில்லை. I do not accept it.
// மிஸஸ்.டவுட் said...
நல்லாத்தான் யோசிக்கறீங்க...//
ஆமாவா?
//ஒப்புக்குச் சப்பானினாலும் அவிகளும் இருந்தா தானா ஆட்டம் சோபிக்கும்?! //
ஆமா இல்லை?
//S.R.Rajasekaran said...
\\அப்பிடியே நம்ம கடைப் பக்கம் ஒருக்கா வந்துட்டு போறது...\\
அட்ரஸ் சொல்லுங்க ஆட்டோவோட வாறோம்//
கொழும்புக்கு தலைவா...போறீகளா? சூதானமாப் போங்க...
சிங்கப்பூரில் எனக்கு பிடிக்காத வார்த்தை ‘ஆமாவா’
(வாழ்க கேப்டன்)
ஒப்புக்கு கொட்ற சப்பாணில இம்பூட்டு மேட்டர் கீதா
\\வேத்தியன் said...
நல்ல பதிவு...
நமக்கு சப்பாணின்னதும் "16 வயதினிலே" கமல் தான் ஞாபகத்துக்கு வர்றாருங்க...
:-)\\
நானும் ஒரு தபா கூவிக்கிறேன்.
\\
துப்புரவாங்றது நம்மகிட்ட என்ன பாடு படுது பாருங்க?! துப்புரவு தொப்புரவு ஆயி, அப்புறம் தொப்பரை ஆயி, இப்பத் தொப்பையும் ஆயிடுச்சா?! அவ்வ்வ்...\\
புச்சாக்கீது பா ...
//நட்புடன் ஜமால் said...
ஒப்புக்கு கொட்ற சப்பாணில இம்பூட்டு மேட்டர் கீதா
//
:-o))
சரி சரி!!!!!!!!!! உங்க பதிவ ஒப்புக்குச் சப்பாணியா எடுதுகறோம்
//வில்லன் said...
சரி சரி!!!!!!!!!! உங்க பதிவ ஒப்புக்குச் சப்பாணியா எடுதுகறோம்
//
வாங்க வில்லன் ஐயா, வணக்கம்!
//
துப்புரவாங்றது நம்மகிட்ட என்ன பாடு படுது பாருங்க?! துப்புரவு தொப்புரவு ஆயி, அப்புறம் தொப்பரை ஆயி, இப்பத் தொப்பையும் ஆயிடுச்சா?! அவ்வ்வ்...\\
புச்சாக்கீது பா ...//
repeat-eiii & can you give us more explanation please.
'thuppuravu' doesn't fit in here, kinda sticks out. also i guess it was " "THEPPALAGA" nanaithal. isn't it?
"is that your OWN explanantion / imagination for thuppuravu~thoppara~???
i didn't mean to hurt you anyway, just asking. sorry if i did. :)) better i put smiley for safer side.
ஒப்புக்கு சப்பாணின்னா நமக்கு தெரிஞ்சது பந்து விளையாட்டுல,கிரிக்கெட்டுல இருக்குற எக்ஸ்ட்ரா பிட்டிங் ஆளு.
// Desperado said...
//
repeat-eiii & can you give us more explanation please.
'thuppuravu' doesn't fit in here, kinda sticks out. also i guess it was " "THEPPALAGA" nanaithal. isn't it?
"is that your OWN explanantion / imagination for thuppuravu~thoppara~???
//
Ha! I just read it in the past, however here is reference from dictionary:
http://dsal.uchicago.edu/dictionaries/winslow/
துப்புரவு, (p. 603) [ tuppurvu, ] s. Entireness, முழுமை.
துப்புரவாயில்லை. None at all.
//Desperado said...
'thuppuravu' doesn't fit in here, kinda sticks out. also i guess it was " "THEPPALAGA" nanaithal. isn't it?
//
இது முற்றிலும் மாறுபட்ட இடம், ஆனால் கிட்டத்தட்ட ஒரே பொருள். தெப்பல் என்றால், திரவத்தில் மிதக்கும் மிதவை. மிதவை போல் நனைந்த என்பது, தெப்பலாக நனைந்த என்பது. துப்புரவா நனைந்த என்பது, முழுதுமாக நனைந்த என்பது.
http://arivhedeivam.blogspot.com/2009/03/blog-post.html
//ராஜ நடராஜன் said...
ஒப்புக்கு சப்பாணின்னா நமக்கு தெரிஞ்சது பந்து விளையாட்டுல,கிரிக்கெட்டுல இருக்குற எக்ஸ்ட்ரா பிட்டிங் ஆளு.
//
வாழ்க வளமுடன்...எங்க ரெண்டு மூனு நாளா ஆளே காணோம்??
ஒப்புக்கு சப்பாணி பற்றி நீங்க கொடுத்திருக்கிற விளக்கம் சுவாரசியமாகவே இருக்கிறது...
:-))
cool info. thanks
//ரெண்டு பேர்ல ஒருத்தரை முடிவு செய்யுறதுக்கு, மூனாவதா ஒரு ஆள் தற்காலிகமா(ஒப்பு) அந்த ரெண்டு பேரோடச் சேந்து சப்பாணி கொட்டுறார் பாருங்க, அதாங்க ஒப்புக்குச் சப்பாணி.
//
அண்ணே நம்ம பழைய நினைவுகளை கிளரி விட்டுடீங்க!!!
Post a Comment