வணக்கம்! இந்த வாரம் அமெரிக்காவுக்கு புது அதிபர் கிடைச்சிருக்காரு. நிறைய சவால்களோட, துணிவா இருக்காரு! அவருக்கு வாழ்த்துகள்!! இன்னைக்கு நம்ம வலைஞர் தளபதி அவிங்க, நான் கடவுள் விமர்சனம்ங்ற தலைப்புல ஒரு பதிவு, வெகு அழகா எழுதிப் பதிவிட்டிருக்காரு. அவருக்கும் வாழ்த்துகள்!
எனக்கு இந்த தலைப்பைப் பாத்தவுடனே தூக்கிவாரிப் போட்டுச்சு. எப்படி ஒருத்தர், நான் கடவுள்னு சொல்ல முடியும்? இந்த தலைப்புல இருக்குற இரண்டு சொல்லுமே, முரணான சொற்கள். 'நான்', அப்பிடின்னு சொன்னா, ஒருவர் தன்னையும், தன் மனதையும் குறிப்பிட்டுச் சொல்லுறது. அதப் பத்தி, நாம பெருசா பேசத் தேவை இல்லை.
அடுத்த சொல்லான கடவுள், இதுக்கு என்ன பொருள்? தன்னையும், இல்லஇல்ல, எதையும் கடந்த ஒரு உள்தான் (கட + உள்) சுருங்கிக் கடவுள்ன்னு ஆச்சு.
கடவுள் (p. 177) [ kaṭavuḷ ] , s. (கட, surpassing + உள்) God, the Supreme Being;
அப்ப, யாராலும், நான் கடவுள்ன்னு சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஒருத்தர் சொன்னா, உண்மையிலேயே, அவரு இன்னும் தன்னைவிட்டு கடக்கலைன்னுதானே அர்த்தம்?! அவுரு சொல்லுறது ஒரு உடான்சு!!
சரியுற அரசாட்சி மாதிரி, வீழ்ச்சி அடையுற, எதிர்மறையா நடக்குற எதையும் ஐரோப்பிய ஆங்கிலேயர்கள் சொல்லுறது, going westன்னு. அதாவது, கதிரவன் மேற்கால போயி மறையுற மாதிரி, இதுவும் மறையுதுன்னு சொல்லுறது.
இதையே, அமெரிக்க ஆங்கிலேயர்கள் சொல்லுறது heading southன்னு. அதாவது, பங்குச் சந்தையில நிலவரம் காண்பிக்குற வரைபடத்துல இருக்குற வீழ்ச்சி, கீழ்நோக்கிப் போறது, தென்புறத்தைத்தான காண்பிக்குது, அதனால இந்த வழக்கு வந்துச்சாம்.
அந்த மாதிரி நம்ம ஊர்ல சொல்லுறது, கீழ்வரம் போகுதுன்னு. அதாவது, கீழ்ப்புறம்ங்றது, கீழ்ப்பொறமாயி, அப்புறமா அது கீழ்வரமாவும் ஆயிடுச்சி. கூடவே, வடக்குமின்னா போகுதுன்னும் சொல்வாங்க. வடக்கு நோக்கி உண்ணாநிலை இருந்து சாகுறதுல இருந்து வந்த சொல்லாம் இது. ஆக, இருக்குற திசையில நல்ல திசை, கிழக்கு! ஆமுங்க, நாமும் விடியலை நோக்கி கிழக்குப் பாத்து இருப்போம். நல்லதே நடக்கட்டும்!
ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
கடவுளின் என்னிடம் பேசினார் என்று சொல்வதை நான் கடவுள் என்று எந்த வகையில் தவறு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நீங்க ரெம்ப பெரிய ஆளுண்ணா, எவ்வளவு விஷயம் தெரியுது உங்களுக்கு
//டுப்பை said...
கடவுளின் என்னிடம் பேசினார் என்று சொல்வதை நான் கடவுள் என்று எந்த வகையில் தவறு.
//
என்ன? சீசா தொறந்தாச்சு போல இருக்கு?! ஊறுகாய் தொட்டுக்கங்ண்ணே!!
//நசரேயன் said...
நீங்க ரெம்ப பெரிய ஆளுண்ணா, எவ்வளவு விஷயம் தெரியுது உங்களுக்கு
//
உங்களை விடவா தளபதி??
//என்ன? சீசா தொறந்தாச்சு போல இருக்கு?! ஊறுகாய் தொட்டுக்கங்ண்ணே!!//
என்னா நக்கலு?
கடவுள் - கடந்து உள்ள போனப்பறம் பேச்சே கிடையாது. அப்பறம் என்ன 'நான் கடவுள்'? அகங்காரத்தின் உச்சம் அல்லாமல் வேற என்ன?
"கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் "
சுவாரசியமா எழுதறீங்க...
//Mahesh said...
கடவுள் - கடந்து உள்ள போனப்பறம் பேச்சே கிடையாது. அப்பறம் என்ன 'நான் கடவுள்'? அகங்காரத்தின் உச்சம் அல்லாமல் வேற என்ன?
"கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர் "
//
அதேதாண்ணே....சரியாச் சொன்னீங்க...
துணிச்சலான எழுத்துக்கள் பிடிச்சிருக்கு.I Mean Bold Letters.
//அமுதா said...
சுவாரசியமா எழுதறீங்க...
//
நன்றிங்க, வணக்கம்!!
//ராஜ நடராஜன் said...
துணிச்சலான எழுத்துக்கள் பிடிச்சிருக்கு.I Mean Bold Letters.
//
வாங்ண்ணா! வணக்கம்!! பின்னாடி வாறவிங்க, தடித்த எழுத்துன்னு சொல்லப் போறாங்க?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
கடவுள்=உள்+கட மனதை உள் நோக்கி கடப்பது
godliness(or God) is the other end of mind.
இப்படின்னு ஒரு பெரியவர் சொல்லியிருக்கார்.
படைப்பவர் தான் கடவுள் எனக்கொண்டால்
நான் செய்த இட்லிக்கு நான் கடவுள் :-):-)
அப்படின்ற பொருள்ல இப்படி நீங்க நோண்டி நொங்கெடுப்பீங்கன்னு தெரியாம அப்படி தலைப்பு வச்சிட்டாங்க. பாவம் மன்னிச்சி விட்டுடுங்க
//கபீஷ் said...
கடவுள்=உள்+கட மனதை உள் நோக்கி கடப்பது
godliness(or God) is the other end of mind.
//
அது எந்த பெரியவர்ங்க? அவர் சொன்னதுதான் என்னோட புரிதலும்... உள் கடந்து ஒருத்தர் போயாச்சுன்னா, வெளில இருக்குறவிங்ககிட்ட நான்னு சொல்ல வராது பாருங்க.... இஃகிஃகி!
//கபீஷ் said...
பாவம் மன்னிச்சி விட்டுடுங்க
//
நான் படு சாமன்யங்க.... இப்பிடியெல்லாம் சொல்லி, சிக்கல்ல உட்டுடாதீங்க... இஃகிஃகி!
//எதையும் கடந்த ஒரு உள்தான் (கட + உள்) சுருங்கிக் கடவுள்ன்னு ஆச்சு.//
இதுவும் மிகச்சரி. நான் சொன்னது(அதாவது,அவர் சொன்னதாக) இதோட subset.
அதாவது static energy filed பத்தி சொல்லியிருக்கீங்க
உங்களுக்கு அவரை நல்லாத் தெரியுங்க.
நான் உளர்ற மாதிரி சொல்லியிருந்தா வீணா அவர் பேரைக் கெடுக்க முயற்சி பண்ற மாதிரி இருக்கும் :-):-)
//நான் படு சாமன்யங்க.... இப்பிடியெல்லாம் சொல்லி, சிக்கல்ல உட்டுடாதீங்க... இஃகிஃகி!//
இவ்வளவு உஷாரா என்னோட சதியை கண்டுபிடிச்சிட்டீங்களே:-):-)
(இனிமே இவ்வளவு நேரிடையா சொல்லாம உள்குத்தோட சொல்றேன். சரியா :-)
அட என்னங்கய்யா ஆச்சு எல்லாருக்கும்? "கடவுள்" கோச்சுக்கப் போறார்.பழமைபேசி நீங்க சொல்ற விளக்கமெல்லாம் பார்த்தா நீங்க பெரிய அறிவாளியா இருப்பீங்க போல இருக்கே!!! அப்படியா? நிஜமாவா?
// கபீஷ் said...
உங்களுக்கு அவரை நல்லாத் தெரியுங்க.
//
ஓ, அவிங்களா? அவிங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்...என்ன? அப்பப்ப குசும்புத்தனமா மாட்டுவுட்டுடுவாங்க....
//கபீஷ் said...
இவ்வளவு உஷாரா என்னோட சதியை கண்டுபிடிச்சிட்டீங்களே:-):-)
//
சூதானமா இருக்கணும்....இல்லாட்டி, மாடுமேய்ப்பர், உங்ககிட்டெல்லாம் எப்பிடி காலம் போட முடியும்? இஃகிஃகி! சும்மா, அவரையும் கோர்த்து வுட்டுட்டேன்... இஃகிஃகி!!
//மிஸஸ்.டவுட் said...
பழமைபேசி நீங்க சொல்ற விளக்கமெல்லாம் பார்த்தா நீங்க பெரிய அறிவாளியா இருப்பீங்க போல இருக்கே!!! அப்படியா? நிஜமாவா?
//
வாங்க, வணக்கம்! ஐயோ, எத்தினி பேருங்க இந்த மாதிரி கிளம்பி இருக்கீங்க? ஒரு வழியா, என்னை தொவச்சிக் காயப்போடுறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
//பழமைபேசி நீங்க சொல்ற விளக்கமெல்லாம் பார்த்தா நீங்க பெரிய அறிவாளியா இருப்பீங்க போல இருக்கே!!! அப்படியா? நிஜமாவா?//
மிஸஸ். டவுட், இப்படி சொல்றதுக்கு நேரடியா திட்டியிருக்கலாம்.
பழமைபேசி சார்பாக
கபீஷ்
//கடவுளின் என்னிடம் பேசினார் என்று சொல்வதை நான் கடவுள் என்று எந்த வகையில் தவறு.
//
என்ன? சீசா தொறந்தாச்சு போல இருக்கு?! ஊறுகாய் தொட்டுக்கங்ண்ணே!!//
குகு, என்ன கேட்டார்னு புரிஞ்சி பதில் சொல்லாம, அவர குடிகாரர் மாதிரி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கிட்டீங்களே. பதில் தெரியலன்னு தோல்விய ஒத்துக்கிட்டுருந்துருக்கலாம் :-):-)
இப்படிக்கு
குகு ரசிகர் மன்றம்.
//கபீஷ் said...
குகு, என்ன கேட்டார்னு புரிஞ்சி பதில் சொல்லாம, அவர குடிகாரர் மாதிரி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கிட்டீங்களே.
//
எதுக்கு இந்த முயற்சி? சீசாவைத் தொறந்து மாந்து மாந்துனதுல வலைப்பக்கமே அவரை காணோம்... இரசிகர்ங்க பேர்ல நீங்க வந்து, அப்பிடி ஒன்னு நடக்காத மாதிரி மாயத்தோற்றத்தை உண்டு பண்ணப் பாக்குறீங்க?!
//சீசாவைத் தொறந்து மாந்து மாந்துனதுல வலைப்பக்கமே அவரை காணோம்//
அப்படி நீங்க தப்பா புரிஞ்சுண்டேள். அவரு மானஸ்தர், நீங்க அப்படி சொன்னதால மனசு உடைஞ்சு போய் இருக்கார். நீங்க பகிரங்க மன்னிப்பு கேக்கற வரை அவரு பதிவு கூட எழுதமாட்டாராம் (ப்ரைவேட்டா கூட மன்னிப்பு கேட்டுராதீங்க :-):-) )
//நீங்க பகிரங்க மன்னிப்பு கேக்கற வரை அவரு பதிவு கூட எழுதமாட்டாராம் (ப்ரைவேட்டா கூட மன்னிப்பு கேட்டுராதீங்க :-):-) )//
அஃகஃகா! இப்பிடியெல்லாங்கூட ஒர்த்தரை முடிச்சிக் கட்டலாமா? இப்பிடியெல்லாம் செய்யப் போயித்தான், மானம்ங்ற சொல்லுக்கே மானம் போயிடுச்சி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
Mr.Kudukuduppai, wish you all the bestu!!! இஃகிஃகி!!!!
நான் கடவுள் அப்படின்னு சொன்னவங்க எல்லோருமே கொலை பன்னபட்டாங்க அப்படின்னு பெரியவர் ஒருத்தர் சொன்னார் இது உண்மையா?
புலியா இப்டி தூக்கு தூக்குரிங்க்களே .. நீங்க என்ன புலி ஆதரவளர? கலைஞர் காதுக்கு போச்சுனா ஒபாமா கிட்ட சொல்லி உங்கள "கிட்மோ" ல போட்ருவாங்க.. ;-)
//வாங்ண்ணா! வணக்கம்!! பின்னாடி வாறவிங்க, தடித்த எழுத்துன்னு சொல்லப் போறாங்க?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...//
அது எங்க தடிச்சிருக்குது?முகப்பூச்சு பூசியிருக்குதுன்னு சொன்னாக்கூட சரியின்னு சொல்லுவேன்:)தடிச்சிருக்கு,குண்டாயிடுச்சுன்னு சொல்றீங்களே!
//S.R.ராஜசேகரன் said...
நான் கடவுள் அப்படின்னு சொன்னவங்க எல்லோருமே கொலை பன்னபட்டாங்க அப்படின்னு பெரியவர் ஒருத்தர் சொன்னார் இது உண்மையா?
//
புளியங்குடியார்...அதெனக்குத்தெரியாதுங்களே...
//முருகேசன் said...
புலியா இப்டி தூக்கு தூக்குரிங்க்களே .. நீங்க என்ன புலி ஆதரவளர? கலைஞர் காதுக்கு போச்சுனா ஒபாமா கிட்ட சொல்லி உங்கள "கிட்மோ" ல போட்ருவாங்க.. ;-)
//
அப்பிடியெல்லாம் இல்லீங்க...நான் அமைதிக்கு ஆதரவாளர்!
//ராஜ நடராஜன் said...
அது எங்க தடிச்சிருக்குது?முகப்பூச்சு பூசியிருக்குதுன்னு சொன்னாக்கூட சரியின்னு சொல்லுவேன்:)தடிச்சிருக்கு,குண்டாயிடுச்சுன்னு சொல்றீங்களே!
//
நீங்க சொன்னாச் சரியாத்தானிருக்கும்...
மாறுபட்ட பார்வையில் சொல்லும்போதே எனக்கு டவுட்டு...ஏதோ ஏடாகூடமா புரியாத மாதிரி இருக்கும்னு...அது சரியாப்போச்சு.
ஏனுங்கணா...நல்லா தானே இருந்தீங்கோ...
ஆமா அது ஏன் ஆளுயர போட்டோ போட்டிருக்கீங்க...யாராவது மாலை போடப்போடாறங்கன்னா...????
//நாஞ்சில் பிரதாப் said...
ஆமா அது ஏன் ஆளுயர போட்டோ போட்டிருக்கீங்க...யாராவது மாலை போடப்போடாறங்கன்னா...????
//
இஃகிஃகி!!
Post a Comment