எப்பவுமே, தரை தொட்டவுடனே அடிக்கிறதுதான். ஆனா, இன்னைக்கு விநோதமா இருந்துச்சு. மொத்த விமானத்துல இருக்குறவிங்களோட அலைபேசி எல்லாமே, கீகீ, கூகூன்னு ஒரே அலறல். அப்புறந்தான் தெரிஞ்சது, அதே நேரத்துல நியூயார்க் - சார்லட் விமானம் தரை தட்டிருச்சுன்னு. தங்கமணியோட புலம்பல், கூட வேலை செய்யுறவிங்ககிட்ட இருந்து விசாரிப்புன்னு, ஒரே பரபரப்பு. இன்னும் சார்லட்ல பரபரப்பு அடங்கினபாடு இல்லங்க. அந்த விமான ஓட்டிக்கு ஒரு சபாசு!
சரி, விசயத்துக்கு வருவோம். படிக்காதவனை தற்குறின்னும், கல்லாதவன்னும், இன்னும் என்னவெல்லாமோ சொல்லி தாழ்வாப் பேசுறது உண்டு. படிக்காதவன்னா, அவனுக்கு அறிவு இல்லைன்னு ஆயிடுமா? இல்ல, அவங்கிட்ட மனிதத்தன்மை இல்லாம ஆயிடுமா?? இன்னும் சொல்லப் போனா, படிச்சவந்தானுங்ளே நூதனமா ஊழல் செய்யுறதும், பொய், பித்தலாட்டம், மோசடின்னு எல்லாமே?!
பொதுவாப் பாருங்க, அந்த காலத்துல படிக்காதவங்க சட்ட திட்டங்களுக்கும், சமுதாயத்துக்கும் பயந்தவிங்களா இருந்தாங்கன்னு சொல்லக் கேள்விப்பட்டு இருக்கேன். ஏன், இப்பவும் அப்படித்தான்! கொஞ்ச பேர், படிச்சவிங்களோட சூழ்ச்சியாலயும், அவிங்களோட போதனையாலுந்தான் சட்ட திட்டத்தை மீறுறது. அவிங்களை, படிச்சவிங்க பகடைக்காயா பயன்படுத்திகிறாங்க.
அதான், அந்தக் காலத்துல, கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்) கணவன்; புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்) புருசன்னு பெரியவிங்க சொல்லி வெச்சாங்க. இதாங்க கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு ஆயிடுச்சு.
கல்லும், புல்லும், கொண்டவன் ஆக முடியுமா? ஆகக்கூடி, அது அப்படி இல்லையாமுங்க. கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி இருக்கு, அவன் கள்வனா இல்லாம இருந்தா சரி. புல்லன், அதாவது அறிவு குறைந்தவனாயிருந்தாலும் அவனுக்கு புருசன் ஆகுற தகுதி இருக்கு, அவன் பலவீனமானவனா இல்லாம இருந்தா சரி. அதனால பெரியவிங்க பெண்களுக்குச் சொன்னது, கல்லானானாலும் கணவன்; புல்லனானாலும் புருசன்!
அங்க இங்க எதுக்குங்க? நம்மளுக்குள்ளயே பாப்போமே?! படிப்பு குறைஞ்சவிங்க, நம்ம ஊர்லயே, விவசாயம், தொழில்ன்னு பெரிய அளவுல இருக்காங்க. சமுதாயத்துல நாலு பேர், தன்னை அண்டிப் பொழப்பு நடத்துற அளவுக்கு இருக்காங்க. படிச்சவிங்க, அமெரிக்காவுல, குளிருல கூலிக்கு பொட்டி (கணனிப் பொட்டி) தூக்கி, பொட்டி அடிச்சு, பங்குச் சந்தை தரை தட்டுச்சா, விமானந் தரை தட்டுச்சான்னு, புலம்பல்ல, ரெண்டுங் கெட்டுத் திரியறம்?! இதுல, படிச்சவனாவது? படிக்காதவனாவது?? கெட்டவனா இல்லாம, நல்லவனா இருக்கோனும்ன்னு அப்பிச்சி சொன்னதுதான் ஞாவகத்துக்கு வருது!
நல்லது செஞ்சு நடுவழியப் போனா,
பொல்லாதது போற வழியில!
42 comments:
//அதான், அந்தக் காலத்துல, கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்) கணவன்; புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்) புருசன்னு பெரியவிங்க சொல்லி வெச்சாங்க. இதாங்க கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு ஆயிடுச்சு.
கல்லும், புல்லும், கொண்டவன் ஆக முடியுமா? ஆகக்கூடி, அது அப்படி இல்லையாமுங்க. கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி இருக்கு, அவன் கள்வனா இல்லாம இருந்தா சரி. புல்லன், அதாவது அறிவு குறைந்தவனாயிருந்தாலும் அவனுக்கு புருசன் ஆகுற தகுதி இருக்கு, அவன் பலவீனமானவனா இல்லாம இருந்தா சரி. அதனால பெரியவிங்க பெண்களுக்குச் சொன்னது, கல்லானானாலும் கணவன்; புல்லனானாலும் புருசன்!//
அருமையான விளக்கமா இருக்கே பழமைபேசி.தகவலுக்கு நன்றி.
//அங்க இங்க எதுக்குங்க? நம்மளுக்குள்ளயே பாப்போமே?! படிப்பு குறைஞ்சவிங்க, நம்ம ஊர்லயே, விவசாயம், தொழில்ன்னு பெரிய அளவுல இருக்காங்க. சமுதாயத்துல நாலு பேர், தன்னை அண்டிப் பொழப்பு நடத்துற அளவுக்கு இருக்காங்க. படிச்சவிங்க, அமெரிக்காவுல, குளிருல கூலிக்கு பொட்டி தூக்கி, பொட்டி அடிச்சு, பங்குச் சந்தை தரை தட்டுச்சா, விமானந் தரை தட்டுச்சான்னு, புலம்பல்ல, ரெண்டுங் கெட்டுத் திரியறம்?! இதுல, படிச்சவனாவது? படிக்காதவனாவது?? கெட்டவனா இல்லாம, நல்லவனா இருக்கோனும்ன்னு அப்பிச்சி சொன்னதுதான் ஞாவகத்துக்கு வருது!
நல்லது செஞ்சு நடுவழியப் போனா,
பொல்லாதது போற வழியில!//
வாஸ்த்தவம் தான்!
அட நான்தான் இங்க ஃபஸ்டா!!!
கள்ளானாலும் கணவன் fஉல்லானாலும் புருசன் இல்லையா?
இதுல ஏதோ சதி இருக்கு
மிஸஸ்.டவுட் said...
அட நான்தான் இங்க ஃபஸ்டா!!!//
தேவ் இன் கூற்றுப்படி நீங்கதான் பஸ்ட்
நல்லாயிருக்கு மேட்டரு...
இப்பல்லாம் அடிக்கடி பார்வை ரொம்ப மாறுது... என்ன விஷயம்?
கள்ளு புள்ளு இல்லையா அது, நான் அப்படித்தான் நினைச்சு கிட்டு இருந்தேன்
/*அமெரிக்காவுல, குளிருல கூலிக்கு பொட்டி தூக்கி, பொட்டி அடிச்சு, பங்குச் சந்தை தரை தட்டுச்சா, விமானந் தரை தட்டுச்சான்னு, புலம்பல்ல, ரெண்டுங் கெட்டுத் திரியறம்?! */
உண்மைதான்
அப்படியே எந்திரன் மாறு பட்ட பார்வையில்ன்னு ஒன்னு போடுங்க அண்ணே
நல்ல பதிவுங்க...
'படிக்காதவ'னுக்கு நல்ல விளக்கம்...
:)))
//
அதே நேரத்துல நியூயார்க் - சார்லட் விமானம் தரை தட்டிருச்சுன்னு.
//
என்னது தரை தட்டிருச்சா? தண்ணி தட்டிருச்சின்னு சொல்லுங்க... :)))
படிப்பிற்கும், அனுபவ அறிவிற்கும் சம்பந்தம் இல்லை. பல சமயங்களில் படிகாதவர்களுக்கு தெரிந்தது, படித்தவர்களுக்கு தெரியாது.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது இதுதானோ!
அடுத்து "காதல்னா சும்மா இல்ல: ஒரு மாறுபட்ட பார்வையில்!" , "அ ஆ இ ஈ: ஒரு மாறுபட்ட பார்வையில்!", "நான் கடவுள்: ஒரு மாறுபட்ட பார்வையில்!" -எதிர்பார்க்கலாமா சாமியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//Mahesh said...
இப்பல்லாம் அடிக்கடி பார்வை ரொம்ப மாறுது... என்ன விஷயம்?
//
அண்ணே, நல்லாப் பாருங்க! மாறின பார்வைன்னோ, மாறிய பார்வைன்னோ இல்லை. மாற்றப்பட்ட பார்வைன்னல்ல இருக்கு?! அதனால, இதுக்கு அடுத்தவிங்கதான் பதில் சொல்லணும்! அஃக! அஃகஃ! கஃகா!!! அஃக! அஃகஃ! கஃகா!!!
////என்னா வில்லத்தனம்???\\\\
//மிஸஸ்.டவுட் said...
அட நான்தான் இங்க ஃபஸ்டா!!!
//
நீங்களேதான்......வருகைக்கு நன்றிங்க!
\\\குளிருல கூலிக்கு பொட்டி தூக்கி, பொட்டி அடிச்சு\\\
பொட்டி தூக்கி, பொட்டி அடிச்சு, அப்படின்னா என்ன அண்ணாச்சி
கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்)
வீட்டு காரி (தங்கமணி) எது பேசினாலும்,எத்தன அடி அடிச்சாலும் கல்லு மாதிரி தாங்குதனால அவன கல்லான் ஆனாலும் கணவன் அப்படின்னு சொல்றாங்க
புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்)
அப்ப,அப்ப புல் அடிச்சிட்டு பிளாட் ஆகாம இருக்கிறதால புல் 'ஆனாலும்' புருஷன் அப்படின்னு சொல்ராங்க
\\\படிக்காதவன்: ஒரு மாறுபட்ட பார்வையில்!\\\
ஒருவேளை படம் பாக்கும் போது திரைக்கு பின்னாடி உக்காந்து யோசிப்பாங்களோ .அடடடே இதுதான் மாறுபட்ட பார்வையோ
//கல்லானானாலும் கணவன்; புல்லனானாலும் புருசன்!//
விளக்கம் அருமை !!
//ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது இதுதானோ!
//
:)
//S.R.ராஜசேகரன் said...
\\\குளிருல கூலிக்கு பொட்டி தூக்கி, பொட்டி அடிச்சு\\\
பொட்டி தூக்கி, பொட்டி அடிச்சு, அப்படின்னா என்ன அண்ணாச்சி//
புளியங்குடியாருக்கு கணனிப் பொட்டியத் தெரியாதோ?
வேணாம் அழுதுருவோம் விட்டுடுங்க.
முதல்ல வில்லு
அப்புறம் படிக்காதவன்
இப்படியே போனாஆஆஆஆஆஆஆஆஆஆஅ
\\\பொட்டி தூக்கி, பொட்டி அடிச்சு, அப்படின்னா என்ன அண்ணாச்சி//
புளியங்குடியாருக்கு கணனிப் பொட்டியத் தெரியாதோ?\\\
ஆகா அது தானா இது !
//மிஸஸ்.டவுட் said...
// கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி இருக்கு, அவன் கள்வனா இல்லாம இருந்தா சரி. புல்லன், அதாவது அறிவு குறைந்தவனாயிருந்தாலும் அவனுக்கு புருசன் ஆகுற தகுதி இருக்கு, அவன் பலவீனமானவனா இல்லாம இருந்தா சரி. அதனால பெரியவிங்க பெண்களுக்குச் சொன்னது, கல்லானானாலும் கணவன்; புல்லனானாலும் புருசன்!//
அருமையான விளக்கமா இருக்கே பழமைபேசி.தகவலுக்கு நன்றி.
//
காடு சுத்தமான மாதரயும் ஆச்சு, எருமைக்குப் புல்லுப் புடுங்குன மாதரயும் ஆச்சு பாருங்க! இஃகிஃகி!!
//குடுகுடுப்பை said...
கள்ளானாலும் கணவன் fஉல்லானாலும் புருசன் இல்லையா?
இதுல ஏதோ சதி இருக்கு
//
பூரிக்கட்டை எடுத்தாலும் பொண்டாட்டி!
உருட்டுக்கட்டை எடுத்தாலும் அவ உறவாட்டி!!
இதான் நான் கேள்விப்பட்டது.
//நசரேயன் said...
கள்ளு புள்ளு இல்லையா அது, நான் அப்படித்தான் நினைச்சு கிட்டு இருந்தேன்
//
அப்பிடியா இராசா? பாத்து சூதானமா இருங்க இராசா, குளுரு காலத்துல கையு காலு முறிஞ்சுதுன்னா கொஞ்ச நஞ்சமா வலிக்கும்??
//நசரேயன் said...
அப்படியே எந்திரன் மாறு பட்ட பார்வையில்ன்னு ஒன்னு போடுங்க அண்ணே
//
ஃகா! க்ஃகா!! இது! இதுக்குத்தான காத்துட்டு இருக்கோம்...அடுத்த தடவை தளபதியின் விருப்பதின் பேரில்ன்னு பதிவுல போட்டுருவம்ல. வாறவிங்க, என்னை மொறச்சுப் பாக்க மாட்டாகல்ல?!
ஃகா!கஃகா!!ஃகா! க்ஃகா!!
////////என்னா எக்காளம்?!\\\\\\\
// வேத்தியன் said...
நல்ல பதிவுங்க...
'படிக்காதவ'னுக்கு நல்ல விளக்கம்...
:)))
//
நன்றிங்க வேத்தியன்!
//வெண்பூ said...
என்னது தரை தட்டிருச்சா? தண்ணி தட்டிருச்சின்னு சொல்லுங்க... :)))
//
வாங்க வெண்பூ! நீங்க சொல்லுறதுதான் சரி!!
தங்கமணி குறித்த பழமொழிகளை விளக்குமாறு தாறுமாறாக கேட்டுக்கொள்கிறேன் ;)
//காடு சுத்தமான மாதரயும் ஆச்சு, எருமைக்குப் புல்லுப் புடுங்குன மாதரயும் ஆச்சு பாருங்க! இஃகிஃகி!!//
மாடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு.
(நானும் பழமொழி சொல்லிட்டேன்.:-) )
//இராகவன் நைஜிரியா said...
படிப்பிற்கும், அனுபவ அறிவிற்கும் சம்பந்தம் இல்லை. பல சமயங்களில் படிகாதவர்களுக்கு தெரிந்தது, படித்தவர்களுக்கு தெரியாது.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது இதுதானோ!
//
ஐயா, வணக்கம்! நன்றி!! நீங்க அடுத்த பதிவுக்கான துப்பு குடுத்திட்டீங்க....இஃகிஃகி!
//ஷாஜி said...
அடுத்து "காதல்னா சும்மா இல்ல: ஒரு மாறுபட்ட பார்வையில்!" , "அ ஆ இ ஈ: ஒரு மாறுபட்ட பார்வையில்!", "நான் கடவுள்: ஒரு மாறுபட்ட பார்வையில்!" -எதிர்பார்க்கலாமா சாமியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//
நன்றிங்க ஷாஜி!
ஃகா! க்ஃகா!! இது! இதுக்குத்தான காத்துட்டு இருக்கோம்...அடுத்த தடவை தளபதியின் விருப்பதின் பேரில்ன்னு பதிவுல போட்டுருவம்ல. வாறவிங்க, என்னை மொறச்சுப் பாக்க மாட்டாகல்ல?!
//PoornimaSaran said...
//கல்லானானாலும் கணவன்; புல்லனானாலும் புருசன்!//
விளக்கம் அருமை !!
//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க நம்மூர் அம்மினி!
//அமிர்தவர்ஷினி அம்மா said...
வேணாம் அழுதுருவோம் விட்டுடுங்க.
முதல்ல வில்லு
அப்புறம் படிக்காதவன்
இப்படியே போனாஆஆஆஆஆஆஆஆஆஆஅ
//
வருகைக்கு நன்றிங்க!
வாசகர்கள் இன்னும் இன்னும்ன்னு சொல்லுறாங்க பாருங்க... சித்த மேல படிச்சுப் பாருங்கோ!!!
//Natty said...
தங்கமணி குறித்த பழமொழிகளை விளக்குமாறு தாறுமாறாக கேட்டுக்கொள்கிறேன் ;)
//
என்ன சிக்க வெக்குறதுல உங்களுக்கு அப்பிடி ஒரு சந்தோசம்! நல்லா இருங்க இராசா!! நல்லா இருங்க!!!
//கபீஷ் said...
மாடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு.
(நானும் பழமொழி சொல்லிட்டேன்.:-) )
//
அருமைங்க...
//நிலா பிரியன் said...
Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com
//
உடனேங்க...
//கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்) கணவன்; புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்) புருசன்னு பெரியவிங்க சொல்லி வெச்சாங்க//
இத்தன நாளா இது தெரியாதுங்க... என்னக் கேனத்தனமான பழமொழின்னுதான் நெனச்சிட்டிருந்தேன்... இப்பதான தெரியுது... எவ்வளவு அழகான பழமொழியிதுன்னு..
//சூர்யா said...
//கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்) கணவன்; புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்) புருசன்னு பெரியவிங்க சொல்லி வெச்சாங்க//
இத்தன நாளா இது தெரியாதுங்க... என்னக் கேனத்தனமான பழமொழின்னுதான் நெனச்சிட்டிருந்தேன்... இப்பதான தெரியுது... எவ்வளவு அழகான பழமொழியிதுன்னு..
//
ஆமுங்க, வருகைக்கு நன்றிங்க...
கெட்டவனா இல்லாம, நல்லவனா இருக்கோனும்ன்னு அப்பிச்சி சொன்னதுதான் ஞாவகத்துக்கு வருது!
எங்க அப்பிச்சியும் இதையே தானுங்க சொன்னாரு :)
எனது தேடலுக்கு புது விளக்கமாக இது இருந்தது. ஆனாலும் கல்லான் என்பதன் எதிர்சொல்லாகவே புல்லன் இருக்கவேண்டும். புல் எனில் கல்வி எனவும் பொருள் உண்டு. புல்லன் கல்வி கற்றவன் என பொருள் கொண்டால் சரியாக இருக்கும். படிக்காதவன் என்றாலும் படித்தவன் என்றாலும் வாழ்க்கைத் துணைவன் என இதற்கு பொருள் கொள்ளலாம்.
Post a Comment