'கூப்பிடு தூரம்' என்றால் என்ன?
"கடுதாசி"ன்னா என்ன?
"சத்தக்கூலி"ன்னா என்ன?
"ஒறம்பு"ன்னா என்ன?
"இம்மி"ன்னா என்ன?
"மாமாங்கம்"னா என்ன?
"முக்கோடி", "யுகம்"ன்னா என்ன?
இன்னைக்கு நாம பாக்கப் போறது வந்துங்க, தம்பிடி, சல்லி இந்த மாதிரியான நாணய வகையறாக்கள். நீங்க பேச்சு வழக்குல, சொல்லக் கேட்டு இருப்பீங்க, ஒரு தம்பிடி கூடத் தர மாட்டேன், அவன் ஒரு சல்லிப் பய மவன் இப்படின்னு எல்லாம். அதுகளுக்கு ஒரு விளக்கம். அவ்வளவுதேன்!
'சல்லிப் பய', 'சல்லித்தனம்'ங்றது எல்லாம், சின்னத்தனம் அல்லது சில்லறைத் தனத்தைக் குறிக்குது. இதுல இருந்தே நாம தெரிஞ்சிகிடலாம் 'சல்லி'ங்றது ஒரு சிறு நாணயம்ன்னு.
ஒரு தம்பிடி கூடக் குடுக்க மாட்டேன்னா, ஒரு கைப்பிடி அல்லது கொஞ்சமும் தர மாட்டேன்னு அர்த்தம் எடுத்துக்குவோம். ஆனா, தம்பிடிங்றதும் ஒரு சிறு நாணயம் பாருங்க.
பரங்கியருங்க வர ஆரம்பிச்சதும், ரூப்யா, அந்த ரூப்யாங்றது மாறி, அதாவது இன்னைக்கு நாம சொல்லுற ரூபாய் வந்துச்சு. ரூப்யான்னா, அழகான வெள்ளை நிறம், அப்படிப்பட்ட வெள்ளின்னு அர்த்தமாம் அவிங்க மொழில.
இதுவே, பழங்காலத்துல நம்ம பெரியவங்க செப்புக் காசு, வெள்ளிக்காசு, பொற்க் காசுன்னும் பொழங்கிட்டு வந்து இருக்காங்க. வராகன், மோஹர்ங்ற மொஹரா, பகோடா எல்லாம் தங்கக் காசுக தான். இதுல வராகங்றது தமிழ் மொழில, மத்தது வட மொழில. ஆயிரம் வராகன்ன்னு சொன்னா, ஆயிரம் தங்கக் காசுக அப்ப, இல்லீங்ளா!
பல பேரரசு, சிற்றரசு கொண்டது தானே இந்தியா. அங்கங்க ஒவ்வொரு வகையான நாணயப் பொழக்கம் இருந்து இருக்கு. பின்னாடி வந்தவங்க, அதை எல்லாம் ஒருங்கிணைச்சாங்க. அப்படித்தான், செப்புக் காசை, டப்பு (dubbu)ன்னு சொன்னான் டச்சுக்காரன், அவன் வந்து ஆண்ட இடத்துல. இப்படி ஏற்கனவே புழங்கிட்டு இருந்த 'பணம்', 'துட்டு', 'காசு', 'தம்பிடி', 'சல்லி' ங்ற சிறு நாணயங்களை ரூபாயோட இணைச்சாங்க.
ஒரு ரூபாய் - பதினாறு அணா
ஒரு அணா - ஆறு பைசா
ஒரு பணம் - ரெண்டு அணா
ஒரு அணா - மூனு துட்டு
ஒரு துட்டு - ரெண்டு பைசா
பனிரெண்டு தம்பிடி - ஒரு அணா
ஒரு சல்லி - கால்துட்டு
காலணா - முக்கால் துட்டு
அரையணா - ஒன்றரைத் துட்டு
ஒரு அணா - நான்கு காலணா (அ) மாகாணி ரூபாய்
இரண்டு அணா - அரைக்கால் ரூபாய்
நாலணா - கால் ரூபாய்
எட்டு அணா - அரை ரூபாய்
கழஞ்சு - ஒரு பொற்காசு (வராகன்)
வராகன் எடை - 3.63 கிராம்
சக்கரம் - ஒரு வெள்ளிக் காசு
பதினாறு சக்கரம் - ஒரு வராகன்
சக்கரம் - பதினாறு காசு (செப்பு)
---------------வராகன்-----------------------
“சல்லிக்கட்டு” என்பதுதான் சரியான வார்த்தை. சல்லிக்கட்டு = சல்லி+கட்டு. சல்லி என்பது காசு என்று பொருள்படும். கட்டு என்பது பொட்டளம் அல்லது பை என்று பொருள்படும். சல்லிக்கட்டு என்பதன் பொருள் காசு பை என்பதாகும். கொம்பில் இருக்கும் சல்லிப் பையை எடுக்கும் விளையாட்டு என்பதால், அது சல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு என்பது அல்ல.
பணத்தை எண்ணி வை! காசைத் தெரிஞ்சி வை!!
மக்களே, அந்த ஓட்டு?! பாத்துப் போடுங்க மக்களே...!!
28 comments:
நல்ல பதிவு பழைய காசெல்லாம் ஏது, தாத்தா கொடுத்த சொத்தா?
//வருங்கால முதல்வர் said...
நல்ல பதிவு பழைய காசெல்லாம் ஏது, தாத்தா கொடுத்த சொத்தா?
//
ஆமாங்கண்ணே, அந்த ஓட்டு? :-o)
ஆமாங்கண்ணே, அந்த ஓட்டு? :-o)
போட்டாச்சுண்ணே.
செப்பு மிச்சம் இருந்தா அனுப்பி விடுங்க
செப்பு மிச்சம் இருந்தா அனுப்பி விடுங்க
//வருங்கால முதல்வர் said...
நல்ல பதிவு பழைய காசெல்லாம் ஏது, தாத்தா கொடுத்த சொத்தா?
//
தங்கக் காசும் குடுத்தாருண்ணே, அதை வித்து இங்க வந்தது தப்பாப் போச்சுண்ணே! உங்க ஓட்டுக்கு நன்றிங்கண்ணே!!
//
நசரேயன் said...
செப்பு மிச்சம் இருந்தா அனுப்பி விடுங்க
//
வாங்க நசரேயன்! கையில காசு வாயில தோசை!! இல்ல, அந்தக் கையில ஓட்டு, இந்தக் கையில செப்புக் காசு!!
தங்கக் காசும் குடுத்தாருண்ணே, அதை வித்து இங்க வந்தது தப்பாப் போச்சுண்ணே! உங்க ஓட்டுக்கு நன்றிங்கண்ணே!!
நன்றி மட்டும் பத்தாது, கொஞ்சம் கள்ள வோட்டு போடுங்க.
//குடுகுடுப்பை said...
தங்கக் காசும் குடுத்தாருண்ணே, அதை வித்து இங்க வந்தது தப்பாப் போச்சுண்ணே! உங்க ஓட்டுக்கு நன்றிங்கண்ணே!!
நன்றி மட்டும் பத்தாது, கொஞ்சம் கள்ள வோட்டு போடுங்க.
//
ஆமாங்கண்ணே, அந்த நெளிவு சுழிவு?
ஒரு ரூபாய் - பதினாறு அணா
ஒரு அணா - பனிரெண்டு பைசா
நாலணா - கால் ரூபாய்
நண்பரே ஒரு ரூபாக்கு 16 அணா என்றால் 1 அணாவுக்கு 6 பைசா கணக்கு. மேலும் இப்போதும் வழக்கில் உள்ள 8 அணாவுக்கு 50 பைசா தான் 4 அணாவுக்கு 25 பைசா தான். தவறு இருந்தால் திருத்தவும். இராகவன், நைஜிரியா
//இராகவன், நைஜிரியா//
வாங்க இராகவன், நன்றி! நானும் இந்த மாதிரிப் பதிவுக போடுவேன், பின்னாடியே நண்பர் மகேசு வந்து திருத்துவாரு. இன்னைக்கு, நீங்க முந்திகிட்டீங்க.... நன்றி!
யாருகிட்டயாவது மேலதிகத் தகவல் இருந்தா சொல்லுங்க சாமியோவ்....
“சல்லிக்கட்டு” என்பதுதான் சரியான வார்த்தை. சல்லிக்கட்டு = சல்லி+கட்டு சல்லி என்பது காசு என்று பொருள்படும். கட்டு என்பது பொட்டளம் அல்லது பை என்று பொருள்படும். சல்லிக்கட்டு என்பதன் பொருள் காசு பை என்பதாகும். கொம்பில் இருக்கும் சல்லிப் பையை எடுக்கும் விளையாட்டு என்பதால், அது சல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு என்பது அல்ல.
இந்த மாதிரி வாய்ப்படெல்லாம் உங்க பதிவுல பாத்து கொள்ளை நாளாச்சு !!
//ஒரு அணா - ஆறு பைசா
ஒரு அணா - மூனு துட்டு
ஒரு துட்டு - நாலு பைசா//
அப்பிடின்னா ஒரு துட்டு = 2 பைசா தானே வரணும் !!
அதே மாதிரி 16அணா ஒரு ரூபான்னு தசமப்புள்ளிய விட்டுட்டு சொல்லலாம். ஆனா 1 ரூபா = 16 2/3 அணா (அந்த மிச்ச 4 பைசா)
// Mahesh said...
அப்பிடின்னா ஒரு துட்டு = 2 பைசா தானே வரணும் !!//
பிழை திருத்தினதுக்கு ஒரு வராகன்!
//அதே மாதிரி 16அணா ஒரு ரூபான்னு தசமப்புள்ளிய விட்டுட்டு சொல்லலாம். ஆனா 1 ரூபா = 16 2/3 அணா (அந்த மிச்ச 4 பைசா)//
காசு மாத்திக் கல்லாவுல போட்டவனத்தான் கேக்கனும். இந்த ஒருங்கிணைப்பு 1950 ல நடந்துச்சாம். யாரு, எப்படி கணக்கு பாத்தாங்களோ?
ஒரு துட்டு ரெண்டு துட்டுன்னு ரௌண்டிங் (இதுக்கு தமிழ்?) ல முழுங்கறது அப்பலேந்தே இருந்துருக்கு !!! :)))))))))))))
//
Mahesh said...
ஒரு துட்டு ரெண்டு துட்டுன்னு ரௌண்டிங் (இதுக்கு தமிழ்?) ல முழுங்கறது அப்பலேந்தே இருந்துருக்கு !!! :)))))))))))))
//
நல்லா யோசிச்சுப் பாத்தேன்... ஊழல் இருக்குற மாதிரித் தெரியலை.
ஏன்னா, அரசாங்கம் புதுசா ஒரு ரூபாய, ஒரு அணாவுக்குத் தரும்போது ஒரு இழப்போ, லாபமோ இல்ல பாருங்க. அது ஒரு மாத்தம் அவ்வளவு தான்.
அந்த தசமக் கோசாரமும்(rounding) நாலணாவுக்கு ஒரு பைசான்னு சீரா பகிர்ந்துகிடுது பாருங்க.
ரூபாவும் அணாவும் சம காலத்துல புழக்கத்துல இருந்து இருந்தா, நாம நினைக்குறது சரி. ஆனா, அணாவுக்கு மாற்றுதான் ரூபாய்.
ஆஹா... உங்களிடமிருந்து இந்த அணா கணக்கை கண்டுகொண்டேன்...நன்றி..
பின்நவினத்துவம் இல்லாத பதிவு....ஹி ஹீ...
நல்ல விஷயம்.தொடர்ந்து செயல்படுக.
சங்கர்லால்
//கூடுதுறை said...
ஆஹா... உங்களிடமிருந்து இந்த அணா கணக்கை கண்டுகொண்டேன்...நன்றி..
பின்நவினத்துவம் இல்லாத பதிவு....ஹி ஹீ...
//
வாங்க கூடுதுறை!
//Anonymous said...
நல்ல விஷயம்.தொடர்ந்து செயல்படுக.
சங்கர்லால்
//
வாங்க சங்கர்லால்! நன்றிங்க, முயச்சி செய்யுறேன்!!
பாதி சல்லி பாத்த மாதிரித்தான் இருக்கு.வராகன் யாருக்குத் தெரியும்?காளமேகப் புலவர் பாட்டுல கேட்டதோட சரி.
சும்மா சொல்லக்கூடாது.சல்லியும் பதிவும் பொக்கிசம்தான்.
வாங்க ராஜ நடராஜன்!நன்றிங்க!!
Good One....
நன்றி
நன்றி
நன்றி
1 அணா = 12 காசு
Post a Comment