10/30/2008

தமிங்கில அகராதியிலிருந்து..... 3

வணக்கம். எல்லார்க்கும் வாசகர் விருப்பம் பழமைபேசி எழுதறாரு, நமக்கு ஒன்னும் எழுதலையேன்னு நண்பர் மகேசு நினைக்கலாம். நினைக்காமலும் இருக்கலாம். ஆனாலும் பாருங்க, நாம எழுதறதுக்கு அவர் பேரை இழுத்துதானே ஆகணும். அவர் சமீபத்துலதான் திட்ட மேலாண்மை(project management)ல பட்டையம் வாங்கிட்டு வந்து இருக்காரு. அதுக்கு வாழ்த்துக்களை சொல்லிட்டு, அது சம்பந்தமா எனக்கு மனசுல தோணினதை பட்டியலிட்டு இருக்குறேன்.

மேனேஜ்மென்ட் - மேலாண்மை
ஆபரேசன் - பணி
ப்ராஜெக்ட் - திட்ட‌ம், படைப்பு
போர்ட்ஃபோலியோ - ஆக்க‌த்தொகுப்பு
டாஸ்க் - செய‌ல்
இன்டெக்ரேசன் மேனேஜ்மென்ட் - தொகுப்பு மேலாண்மை
ஸ்கோப் மேனேஜ்மென்ட் - வரைவு மேலாண்மை
டைம் மேனேஜ்மென்ட் - நிரல் மேலாண்மை
காஸ்ட் மேனேஜ்மென்ட் - செல‌வு மேலாண்மை
குவாலிட்டி மேனேஜ்மென்ட் - த‌ர‌க்க‌ட்டுப்பாட்டு மேலாண்மை
ஹ்யூமன் ரிஸோர்சு மேனேஜ்மென்ட் - ப‌ணியாள‌ர் மேலாண்மை
கம்யூனிகேசன் மேனேஜ்மென்ட் - த‌க‌வ‌ல் ப‌ராம‌ரிப்பு மேலாண்மை
ரிஸ்க் மேனேஜ்மென்ட் - இன்ன‌ல் மேலாண்மை
ப்ரொக்யூர்மென்ட் மேனேஜ்மென்ட - கொள்முதல் மேலாண்மை
ப்ளேனிங் - திட்டமிடுதல்
ப்ளான் - திட்டம்
எஸ்டிமேசன் - மதிப்பீடு
கன்ட்ரோல் - சீரமைப்பு, கட்டுப்பாடு
ரிப்போர்ட் - தரவுப் பட்டியல்
அனாலஸிஸ் - ஆய்வு
ஆடிட் - தணிக்கை
ரெகுலேசன் - ஒழுங்குமுறை
ஸ்கில் - திறன்
நாலெட்ஜ் - அறிவு
ப்ராஸஸ் - செய்முறை, ஆட்படுத்து, தொகு


நண்பர் மகேசு ஒரு தேர்ந்த மேலாளர், ஆகவே மேலாண்மை குறிச்ச நெளிவு சுழிவுகளை பதிவாப் போட்டாலும் போடலாம், போடாமலும் இருக்கலாம். அதுக்கு இந்தப் பதிவு உதவிகரமா இருந்தாலும் இருக்கலாம். கண்டிப்பா, இல்லாமையும் போகலாம். எதுக்கும் நாம பதியறதைப் பதிஞ்சு விடுவோம்.

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -2

கோவணத்துல காசு இருந்தா கோழி கூப்பிடப் பாட்டு வரும்!
இல்லாட்டியும் வரும் எங்களுக்கு!!

15 comments:

நசரேயன் said...

நல்ல தகவல் .. இதே போன்று நிறைய உங்களிடம் இருந்து வரவேண்டும்

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்ல தகவல் .. இதே போன்று நிறைய உங்களிடம் இருந்து வரவேண்டும்
//

வரும், உங்க ஆதரவு இருக்கும் வரை! :-o)

குடுகுடுப்பை said...

வரும், உங்க ஆதரவு இருக்கும் வரை! :-o)

அண்ணன் கொங்கு சிங்கம் பழமைபேசி வாழ்க.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
வரும், உங்க ஆதரவு இருக்கும் வரை! :-o)

அண்ணன் கொங்கு சிங்கம் பழமைபேசி வாழ்க.
//

அண்ணாச்சி.... :-o)

வெண்பூ said...

நல்லா தொகுத்திருக்கீங்க பழமைபேசி.. ஒரு சில வார்த்தைகள் முற்றிலும் புதியதாக இருக்கின்றன!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே எப்படின்னே ??
பயன்னுள்ள அகராதி

பழமைபேசி said...

//வெண்பூ said...
நல்லா தொகுத்திருக்கீங்க பழமைபேசி.. ஒரு சில வார்த்தைகள் முற்றிலும் புதியதாக இருக்கின்றன!!!
//

வாங்க வெண்பூ! நன்றி!!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
அண்ணே எப்படின்னே ??
பயன்னுள்ள அகராதி
//
வாங்க மலைக்கோட்டையார்..........

Mahesh said...

ப்ராஜெக்ட் -‍ திட்டப்பணி
ப்ளான் - திட்டம்
கம்யூனிகேசன் மேனேஜ்மென்ட் - த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற மேலாண்மை

சரிதானுங்களே??

Mahesh said...

என்னண்ணே... எனக்காகப் போட்டேன்னீங்க? நான் சொன்னது சரிய தப்பானு சொல்லவே இல்ல :))))

பழமைபேசி said...

//Mahesh said...
என்னண்ணே... எனக்காகப் போட்டேன்னீங்க? நான் சொன்னது சரிய தப்பானு சொல்லவே இல்ல :))))

//

மகேசு, நேத்து இங்க பேய்த் திருவிழா(Haloween), மகளோட வெளில போய்ட்டேன்.... உங்களுக்கு மெதுவா பதில் சொல்லிக்லாம்னு விட்டுட்டேன்.... இப்பதான் எழுந்தேன்.... சீக்கிரமே பதில் வரும்ங்க....

பழமைபேசி said...

//ப்ராஜெக்ட் -‍ திட்டப்பணி//

நான் எட்டாவது படிக்கும் போதே இது குறிச்சுக் கேட்டனே?! இல்லடா பேராண்டி பல வேலைகளை உள்ளடக்குன ஒரு பெரிய வேலைய திட்டம்னுதான் சொல்லுவாங்கன்னு சொல்லிட்டாரு எங்கப்பா.... அதுவும் நெசமாத்தான் இருக்குது....

PAP - Parambikulam-Aliyar Project(பரம்பிக்குளம் ஆழியார் நீர்ப் பாசனத் திட்டம்), Sethu project etc, etc..,

அந்தத் திட்டத்துல நடக்குற உள் வேலைகள திட்டப் பணின்னு சொல்லி, திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிங்றாங்க.... ஆகவே நாமளும் பொழக்கத்துல இருக்குறதோடவே போயிரலாம்ன்னு.... ஹி! ஹி!!

ப்ளான் - திட்டம், சரிங்ண்ணா

//கம்யூனிகேசன் மேனேஜ்மென்ட் - த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற மேலாண்மை
//

விபரத்தப் பரிமாறுனா, அது தகவல்ங்ண்ணா.... அதான் தகவலைப் பராமரிக்குற மேலாண்மைன்னு சொல்ல வந்தேனுங்.....

Mahesh said...

ஓ.... அப்பிடியா... சரி சரி... (தில்லு முல்லு தேங்காய் பாணி ஹி ஹிஹி)

ராஜ நடராஜன் said...

தமிங்கில அகராதி இந்தக் கால கட்டத்துக்கு தேவையான ஒன்று.எனக்கே நீங்கள் சொல்லும் ஆங்கிலத்திற்கு தமிழ் தெரியாது.ஆனால் இரண்டையும் பக்கம் பக்கம் வைத்துப் பார்க்கும் போது ஆஹா போடச் சொல்கிறது கை.

கூடவே "கோவணத்துல காசு இருந்தா கோழி கூப்பிடப் பாட்டு வரும்!" கேட்டது

"இல்லாட்டியும் வரும் எங்களுக்கு!!"

இது பஞ்ச்.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...

கூடவே "கோவணத்துல காசு இருந்தா கோழி கூப்பிடப் பாட்டு வரும்!" கேட்டது

"இல்லாட்டியும் வரும் எங்களுக்கு!!"

இது பஞ்ச்.
//

:-O))