9/06/2008

"இம்மி"ன்னா என்ன?

இம்மி பிசகாமன்னு சொல்லக் கேட்டு இருப்பீங்க. அதுல இம்மின்னா என்ன? தெரிஞ்சுக்க ஆவலா இருப்பீங்க...... அப்படியானா, மேல படீங்க!

இன்னைய கால கட்டத்துல, உலக அளவுல 6000 மொழிகள் பேசுறாங்கன்னும் அதுல 3000த்துக்கு வரி அடையாளங்களும் இருக்குறதா சொல்லுறாங்க. அந்த 3000த்துல இலக்கணம், இலக்கியம், பண்பாடு, தோனின காலம் இதெல்லாத்தையும் வெச்சு ஒரு ஆறு மொழிகள், ஆதி மொழிகள்ன்னும் சொல்லுறாங்க. அதுக என்ன என்ன? சீனம், இலத்தீனம், கிரேக்கம், ஹிப்ரூ, தமிழ், சமசுகிருதம்.

இப்பேர்ப்பட்ட ஆதி மொழியான தமிழ்ல 3000 ஆண்டுகளுக்கு முன்னாடியே அறிவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்து இருக்குது. அதுக்கு கீழ குடுத்து இருக்குற பின்னங்களே சாட்சி.

பின்னங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

திங்கட் பெயர்கள்

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் தமிழ்க்கடல் மறையடிகள் தலைமையில் கூடினர். நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழராண்டு எனக்கொளவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் முடிவு செய்தனர். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் [தை] இறுதி மாதம் சிலை [மார்கழி] என்றும், புத்தாண்டு துவக்கம் சுறவம்[தை] முதல் நாளே என்றும் முடிவெடுத்தனர்.

வழக்கில் உள்ளவைதமிழ்ப்பெயர்கள்காலம்
தைசுறவம்முன் பனி
மாசிகும்பம்பின் பனி
பங்குனிமீனம்பின் பனி
சித்திரைமேழம்இளவேனில்
வைகாசிவிடைஇளவேனில்
ஆனிஆடவைமுதுவேனில்
ஆடிகடகம்முதுவேனில்
ஆவணிமடங்கல்கார்
புரட்டாசிகன்னிகார்
ஐப்பசிதுலைகூதிர்
கார்த்திகைநளிகூதிர்
மார்கழிசிலைமுன் பனி

தமிழ்க் கிழமைகள்

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
அறிவன்
வியாழன்
வெள்ளி
காரி

இது சம்பந்தமான முந்தைய பதிவுகளையும் படிச்சு பாருங்க. அந்த பதிவுகளுக்கான தொடுப்புக கீழ:

"மாமாங்கம்"னா என்ன?

கூப்பிடு தூரம் என்றால் என்ன?

முக்கோடி என்றால் என்ன?

நன்றி:

நம்ம பதிவுகளை தவறாமப் படிச்சு, பொருள் பிழையானாலும் எழுத்துப் பிழையானாலும் சரியாக் கண்டுபிடிச்சு திருத்துற சக பதிவர்கள் அன்பர் மகேசு, அன்பர் மதிவதனன் மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பழங்காலத்துத் தமிழ் முறைகள் பற்றிய விபரங்களை தேவநேயப் பாவாணரின் நூல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை நமக்களித்த சக பதிவர் தமிழ்நம்பி அவர்களுக்கும் நன்றி!

25 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இம்மி என்றால் சின்னது என்று தெரியும். ஆனால் இவ்வளவு நுணுக்கமாக அளவு தெரியாது.

1/2 என்பது அரையா அல்லது அரை காலா...

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
இம்மி என்றால் சின்னது என்று தெரியும். ஆனால் இவ்வளவு நுணுக்கமாக அளவு தெரியாது.

1/2 என்பது அரையா அல்லது அரை காலா...
//

ஆகா, பதிவு சூடாகக் குடுக்கணும்ங்ற அவசரம்... பிழை திருத்தப்பட்டு விட்டது. நன்றி!

Mahesh said...

ஆமா... தமிழ் மாசங்களை "தை"லேருந்து ஆரம்பிச்சுருக்கீங்களே... கலைஞர் சொன்னதனாலயா.... இல்ல ஆங்கில மாசத்துக்கு இணையா சொல்லணும்னா....இல்ல நெசமாவே 'தை'லதான் தொடங்குதா?

அதேமாதிரி வின்டர், சம்மர், ஆட்டம், ஸ்ப்ரிங் சரி... அதென்ன மீனம்? அது எப்பிடி காலமாகும்? அதுவும் ஒரு மாசத்தோட பெயர்தானே?

Mahesh said...

இன்னொரு சுவாரசியம் என்னன்னா, புதன் அறிவு சார்ந்தவன்..அதுனால புதன் கிழமை 'அறிவன்' கிழமையானது... அதே போல சனி கரு நிறமுடையவன்... ஆங்கிலத்துலயும் Black Planet அப்பிடின்னு குறிப்பிடுறாங்க... அதுனால 'காரி'.... ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்குது.

தமிழநம்பி said...

இவற்றைத் தேவநேயப் பாவாணரின் நூல்களிலிருந்து தொகுத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

அதையும் குறிப்பிட்டிருக்கலாமே!

பழமைபேசி said...

//
அதேமாதிரி வின்டர், சம்மர், ஆட்டம், ஸ்ப்ரிங் சரி... அதென்ன மீனம்? அது எப்பிடி காலமாகும்? அதுவும் ஒரு மாசத்தோட பெயர்தானே?
//
மகேசு, உங்களுக்கு நொம்ப நன்றிங்க! தட்டச்சு செய்யும் போது நிறைய பிழைகள்!! ஆனா, சரியா தப்பைக் கண்டு புடிச்சு, தவறாம உங்க கருத்துக்களை பதிய வெக்குறீங்க. தமிழ் வாசகர்கள் உங்களுக்கு மிகவும் நன்றிக் கடமைப் பட்டவர்கள். நானும் தான்! பிழை திருத்தப்பட்டு விட்டது.

Mahesh said...

அந்த தை, சித்திரை மேட்டர்?

பழமைபேசி said...

//ஆமா... தமிழ் மாசங்களை "தை"லேருந்து ஆரம்பிச்சுருக்கீங்களே... கலைஞர் சொன்னதனாலயா.... இல்ல ஆங்கில மாசத்துக்கு இணையா சொல்லணும்னா....இல்ல நெசமாவே 'தை'லதான் தொடங்குதா?
//
தமிழ் மாசங்க அப்படி! அதனால முத்தமிழ் அறிஞர் கலைஞர் அப்படி ஒரு அரசு ஆணைய வெளியிட்டு இருப்பார்னு நினைக்கிறேன்.

பழமைபேசி said...

//
Mahesh said...
இன்னொரு சுவாரசியம் என்னன்னா, புதன் அறிவு சார்ந்தவன்..அதுனால புதன் கிழமை 'அறிவன்' கிழமையானது... அதே போல சனி கரு நிறமுடையவன்... ஆங்கிலத்துலயும் Black Planet அப்பிடின்னு குறிப்பிடுறாங்க... அதுனால 'காரி'.... ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்குது.
//
தமிழ் ஆதி மொழிகள்ல ஒன்னு! ஆகவே, விசயம் இங்க இருந்து அங்க போயிருக்க நிறைய வாய்ப்புங்றது என்னோட தாழ்மையான எண்ணம்.

பழமைபேசி said...

//தமிழநம்பி said...
இவற்றைத் தேவநேயப் பாவாணரின் நூல்களிலிருந்து தொகுத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

அதையும் குறிப்பிட்டிருக்கலாமே!
//
இந்த விபரங்களை உடுமலை பழனி வேலனார் புத்தகத்தில் இருந்து படித்ததாக என் வீட்டார் சொல்லக் கேள்வி. நீங்கள் கூறிய பயனுள்ள தகவலையும் பதித்து விடுகிறேன். முடிந்தால் அது எங்கு கிடைக்கும் என்ற தகவலை தெரியப்
படுத்துங்கள். பிரதி ஒன்றைப் பெற மிகவும் ஆவல். மிக்க நன்றி!

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

//
Mahesh said...
அந்த தை, சித்திரை மேட்டர்?

//
1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் தமிழ்க்கடல் மறையடிகள் தலைமையில் கூடினர். நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழராண்டு எனக்கொளவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் முடிவு செய்தனர். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் [தை] இறுதி மாதம் சிலை [மார்கழி] என்றும், புத்தாண்டு துவக்கம் சுறவம்[தை] முதல் நாளே என்றும் முடிவெடுத்தனர்.

ஆகவே கலைஞரை விமர்சனம் செய்வது என்பது சரி அல்ல. அவருக்கு, தமிழ்ச் சான்றோரின் முடிவினை செயலாக்கியமைக்கு நன்றிகள் கூறலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

முரளிகண்ணன் said...

அண்ணா அசத்துறீங்கண்ணா. இப்பதான் உங்க மத்த பதிவுகளை படுச்சுக்கிட்டு இருக்கேன். உபயோகமான வலைப்பதிவு.

மிக்க நன்றி!
மத்த பதிவுகளையும் படிங்க! ஆதரவு குடுங்க!! விபரத்தை மத்தவங்களுக்கும் சொல்லுங்க. தமிழ் வாழ்க!!!!

துளசி கோபால் said...

இம்மின்னா ஒரு நுள்ளுன்னு மலையாளத்துலே சொல்வதுண்டு.

நீங்க சொன்ன தமிழ் மாதப்பெயர்கள் இப்பவும் மலையாள மாதங்களுக்கு அப்படியே இருக்கு.மேடம் முதல் மீனம் வரை.

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
இம்மின்னா ஒரு நுள்ளுன்னு மலையாளத்துலே சொல்வதுண்டு.

நீங்க சொன்ன தமிழ் மாதப்பெயர்கள் இப்பவும் மலையாள மாதங்களுக்கு அப்படியே இருக்கு.மேடம் முதல் மீனம் வரை.

//அப்பிடீங்ளா? மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!!

பழமைபேசி said...

//tamil cinema said...
தங்களின் இந்த படைப்பை நெல்லை தமிழில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.

வலை முகவரி
http://nellaitamil.com

September 7, 2008 2:19 AM
//
தங்களின் அங்கீகாரத்திற்கும் மறு பிரசுரிப்பிற்கும் நன்றி!

சுப.நற்குணன்,மலேசியா. said...

தமிழ் திங்கள்(மாத) பெயர்கள் தை அதாவது சுறவத்தில் தான் தொடங்க வேண்டும். இதுவே பழந்தமிழர் மரபு. 1921இல் மறைமலையடிகள் தலைமையில் கூடிய 500 தமிழ்ச் சான்றோர்கள் கண்ட முடிபும் அதுவே. அதே வேளையில் சித்திரையில் ஆண்டைத் தொடங்கிய ஒரு மரபும் தமிழ் மக்கள் கண்டதே. ஆயினும், சித்திரைக் கணக்கில் அளவுக்கு அதிகமான ஆரியமயக் கலப்புகள் நேர்ந்துவிட்டமையால், தமிழ் அறிஞர் பெருமக்கள் அதனை முதல் திங்களாக ஏற்பதில்லை.

எங்கள் மலேசியத் தமிழ்ப் பாட நூலில் புதனுக்கு அறிவன் என்றும் சனிக்குக் காரி என்றும்தான் பயன்படுத்துகிறோம்.

தங்கள் இடுகைகளை என்னுடைய வலைப்பதிவில் மறுஇடுகை செய்ய தங்கள் இசைவை வேண்டிகிறேன்.

பழமைபேசி said...

@@சுப.நற்குணன் - மலேசியா

தமிழ் வளர வேண்டும். புகழ் ஓங்க வேண்டுமென்பதே எம் ஆசை. ஆகவே தாங்கள் மறு இடுகை செய்வதில் எமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. மேலும் தாங்கள் அளித்த மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி!

குடுகுடுப்பை said...

உங்கள் தொண்டு தொடர்க.

பழமைபேசி said...

//
குடுகுடுப்பை said...
உங்கள் தொண்டு தொடர்க.

//மிக்க நன்றி!

குமரன் (Kumaran) said...

அளவுப்பெயர்களைப் பதித்த நல்லதொரு பதிவு. நன்றிகள்.

பழமைபேசி said...

//குமரன் (Kumaran) said...
அளவுப்பெயர்களைப் பதித்த நல்லதொரு பதிவு. நன்றிகள்.

October 6, 2008 10:05 PM
//

வாங்க குமரன்! நன்றி!!

நசரேயன் said...

நல்லா இம்மி குறையாம சொல்லி இருக்கீங்க