3/14/2009

அந்த பதிவர் அயோக்கியன் இல்லை! இந்த பதிவரின் ஞே முழிப்பு?

வாழ்க்கையில எப்பவும் நல்லதே நடக்குமா? நடக்காது! அப்பப்ப மனம் வருந்தும் படியான தருணங்களும் வந்து போகும். இப்ப நீங்க, இந்த பதிவைப் படிக்கிற தருணங்கூட அப்படியான ஒரு தருணம்ங்றது உங்களுக்கு சொல்லித் தெரியணுமா, என்ன?? நீங்க இப்படியொரு பதிவுக்கு வந்து தொலைச்சிட்டமேன்னு ஞேன்னு முழிக்கிறீங்க?! இஃகிஃகி!!

சில நாட்களுக்கு முன்னாடி, பல
விதமான சிரிப்புகள், அதற்குப் பின்னாடி பல விதமான முழிப்புகள் பார்த்தோம். முழிப்புகள்ல, மலங்க மலங்க முழிக்கிறது, பேந்த பேந்த முழிக்கிறது, திருதிருன்னு முழிக்கிறது, துறுதுறுன்னு முழிக்கிறது பார்த்தாச்சு. அதுகளை நீங்க இன்னும் படிக்கலையின்னா, மேல குடுத்த சுட்டிகளைச் சொடுக்கிப் படிச்சிட்டு வாங்க சித்த!

பப்பரப்பே முழிப்பு: நீங்க ஒரு தடவை நிலைக்கண்ணாடி முன்னாடி போயி, முழு கதியில ‘பே”ன்னு வாய் விட்டு சொல்லிப் பாருங்க. உங்களையே அறியாம, கண்ணுக ரெண்டும் நாலா பக்கமும் நல்லா விரிஞ்சி, வெளியில வர்ற மாதிரியே இருக்கும். ஒரு வியப்பான காரியம் நடந்தாலோ, திடுக்கிடும் காரியம் நடந்தாலோ நாம இந்த மாதிரிதான் முழிப்போம். கோவணமே கட்டிட்டு இருக்குற ஒரு பதிவர், திடீர்னு மேனாட்டு நடை, உடை, பாவனையில வந்தா நாம, “பே”ன்னுதான் முழிக்க வேண்டி இருக்கும். அதேதாங்க, இந்த பப்பரப்பே முழிப்பும்.

ததும்பத் ததும்ப முழிப்பு: மலங்கன்னா, சாயுறது. அதே நேரத்துல கலங்குதல்ங்ற பொருளும் இருக்கு. அதை வெச்சிட்டு, கண்கள் கலங்கின முழிப்புதான் மலங்க மலங்க முழிப்புன்னு சொல்லுறதும் இருக்கு. ஆனா பாருங்க, இந்த taperஆப் பாக்குறான்னு சொல்லுறாங்க பாருங்க, அதான் மலங்க மலங்க முழிக்கிறது. கண்கள் கலங்கின முழிப்பைச் சொல்லுறது, ததும்பத் ததும்ப முழிக்கிறதுன்னு.

ஞே முழிப்பு: மேல சொன்னா மாதிரியே, நிலைக்கண்ணாடி முன்னாடி போயி ”ஞே”ன்னு வலுவா ஒரு தடவை சொல்லிப் பாருங்க. கண்களோட ரெண்டு புருவங்களும் அந்த “ஏ’ங்ற ஒலிக்குத் தகுந்த மாதிரி மேல மேல விட்டத்தப் பாத்தா மாதிரியே சொருகும். இப்பெல்லாம் ஏது விட்டம்? இஃகிஃகி! அதை விடுங்க, இது எப்ப நடக்குமின்னா, வாத்தியார் எதனாக் கேள்வி கேக்கும் போது பதில் ஒன்னுந் தெரியாம, நம்ம கண்ணுக ரெண்டும் அவரோட பார்வையிலிருந்து விலகி, மேல மேல பாக்கும். அதாங்க, ஞேன்னு முழிக்கிறது. அப்ப வாத்தி சொல்லுவாரு, ஏண்டா கேள்வி கேட்டா விட்டத்தைப் பாக்குறேன்ன்னு?

தேமே முழிப்பு: ’தேமே’ன்னாங்க, தேன் போன்ற மா. அதே நேரத்துல கள், மதுங்ற அர்த்தமும் இருக்கு. கள்ளுண்ட ஒருத்தன் எப்படி ஒரு விதமான கதியில, எதுலயும் பற்றில்லாம திரியும் போது, நாம, “ஏண்டா இவன் தேமேன்னு திரியறான்?”ன்னு கேக்குறோம் பாருங்க, அந்த மாதிரி, எதுலயும் மனங்கொள்ளாம முழிக்கிறதுதாங்க, தேமேன்னு முழிக்கிறது.

திருட்டு முழிப்பு: மேல சொன்ன எதுலயும் பற்றுக் கொள்ளாம, ச்சும்மா வெத்து வேட்டா முழிக்கிற தேமே முழிப்புக்கு நேர் மாறான முழிப்புதாங்க திருட்டு முழிப்பு. மனசு பூராவும் கிடந்து தவிக்கும். அந்தத் தவிப்புல, முழியும் சேந்து தவிப்பாத் தவிக்கும். அப்படி இருக்கும் போது வர்ற, விறுவிறு முழிப்புதாங்க திருட்டு முழிப்பு.

குறுகுறு முழிப்பு: குறுகுறுத்தல்ன்னா, மனம் சின்னப்படுதல். அதாவது, உவகையற்ற நேரத்துல சொல்லுறது, மனசு குறுகுறுத்துப் போச்சுன்னு. அந்த மாதிரி, மகிழ்ச்சியில்லா மனசு கண்கள்ல வெளிப்படும் முழிப்புதாங்க, குறுகுறு முழிப்பு! பொச்சிறுப்பு புடிச்சவன், எப்படிக் குறுகுறுன்னு பாக்குறாம்பாரு?!

இப்படி செம்மொழியான தமிழ்ல, எந்த உணர்வையும் துல்லியமா எழுத்து வடிவில உணர்த்த முடியுமுங்க. நாம சிரிப்பு, முழிப்புகளைப் பார்த்தாச்சு இல்லீங்களா? இன்னொரு நாளைக்கு, இந்த மனுசன் எப்படியெல்லாம் அழறாங்றதப் பத்தியும் வெவரமாப் பாக்கலாமுங்க! தலைப்புல, அயோக்கியன்னெல்லாம் போட்டுக் காரம் கூட்டினாப்புல இருக்கே, அதென்னன்னு முழிக்கிறீங்க?! அதையும் பாக்கலாம் வாங்க. இஃகிஃகி!!

அவன் அயோக்கியன் இல்லை! இந்த வாக்கியம் சரியா? தவறா?? தவறுன்னு சொல்லுதுங்க, போப் அடிகளோட தமிழ்க் கையேடு! ஆமுங்க, அவன் அயோக்கியன் அல்ல அப்படீங்றதுதான் சரி! எங்கயெல்லாம் இருக்கு அல்லது உண்டுன்னு சொல்ல முடியுமோ, அங்க மட்டுந்தான் இல்லைங்றதும் வரும். அவன் அயோக்கியன் உண்டுன்னு எழுத முடியுமா? முடியாது அல்ல?? அப்ப, அவன் அயோக்கியன் இல்லைங்றதும் முடியாது. அவன் அயோக்கியன் அல்ல என்பதே சரி! என்னிடம் அறிவு இல்லைங்றது சரி, ஏன்னா என்னிடம் அறிவு உண்டுன்னு சொல்ல முடியுமே?? இஃகிஃகி!!

’Hello’ ங்றதுக்கு தமிழ்ல என்னன்னு தெரியுமாங்க? இஃகிஃகி! எல்லாம் ஒரே நாள்ல சொல்லிட்டா, நாங்க இன்னொரு நாளைக்கு என்ன பதிவு எழுதறது? இன்னைக்குப் போய்ட்டு நாளைக்கு வாங்க போங்க! இஃகிஃகி!! என்னா வில்லத்தனம்??


தரணியில தமிழ் ஆளும்!

46 comments:

  1. தரணியில தமிழ் ஆளும்!//

    வாழ வழி சொல்லுங்க பக்ஷே

    ReplyDelete
  2. //குடுகுடுப்பை said...
    தரணியில தமிழ் ஆளும்!//

    வாழ வழி சொல்லுங்க பக்ஷே
    //

    அவ்வ்வ்வ்... என்ன வில்லனாக்கிட்டீங்களே???

    எல்லாம் நல்லபடியாத்தான் முடியும்... அங்க பக்ஷே, தேன்கூட்டுல கைய விட்டுட்டமேன்னு ததும்பத் ததும்ப முழிக்கிறதா ஊர்க் குருவி சொல்லுதுங்க அண்ணே!!!

    ReplyDelete
  3. கிளி அம்மா நல்லா சேதி சொல்லனும்

    ReplyDelete
  4. //குடுகுடுப்பை said...
    கிளி அம்மா நல்லா சேதி சொல்லனும்
    //

    ஏற்கனவே எதோ சொல்லியிருக்குற மாதிரித் தெரியுது? பாப்போம்...

    ReplyDelete
  5. அப்ப சரி அப்பு..

    நான் அயோக்கியன் அல்ல...

    நான் அறிவாலி இல்லை.. தப்பு.. அறிவாலி அல்ல..

    அப்ப நான் யாரு.. புரியலயே..

    (அப்பாடா பழமைபேசி அய்யா இன்னிக்கு கணக்கு ஒன்னும் கேட்கல.. நாம தப்பிச்சுட்டோம்..)

    ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் இல்லைங்களா? இப்படி குழப்பறீங்களே?

    ReplyDelete
  6. ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் இல்லைங்களா?

    எப்ப இருந்து ஆங்கிலத்துக்கு மாத்தினாங்க..

    என்கிட்ட யாருமே சொல்லவேயில்லையே..

    இப்படி என்ன பேந்த பேந்த முழிக்க வச்சுட்டாங்களே !!!

    ReplyDelete
  7. //ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் இல்லைங்களா?
    யோவ்.. அந்த மனுஷன் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ் கத்து கொடுத்தப்புறமுமா?
    ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் "அல்லீ" ங்களா? அப்படின்னு கேட்கணும்
    //என்கிட்ட யாருமே சொல்லவேயில்லையே..
    என்கிட்ட யாருமே சொல்லவே "அல்ல"வே? அப்படின்னு வரணும் இல்லையா.. சாரி அல்லவா சார்? :)

    Jokes apart that was really good piece of information on Tamil Language.

    ReplyDelete
  8. ’Halo’ ங்றதுக்கு தமிழ்ல என்னன்னு தெரியுமாங்க? இஃகிஃகி! எல்லாம் ஒரே நாள்ல சொல்லிட்டா, நாங்க இன்னொரு நாளைக்கு என்ன பதிவு எழுதறது? இன்னைக்குப் போய்ட்டு நாளைக்கு வாங்க போங்க! இஃகிஃகி!! என்னா வில்லத்தனம்??
    ///

    அய்யா! தலைப்பில் தூண்டில் போட்டு உள்ள இழுக்கிறீயளே!! உள்ள வச்சு கும்மிட்டீக அப்பு!!!
    சும்மா டமாசு!!!இஃகி!!இஃகி!!!

    ReplyDelete
  9. ஆத்தாடி...இதெல்லாம் தமிழா? சொல்லவேயில்லை!!

    இத்தனை நல்ல விடயங்களை தொலைச்சிட்டு இன்னைக்கு திரு திருன்னு முழிக்கறோம் !!

    ReplyDelete
  10. //அவன் அயோக்கியன் இல்லை! இந்த வாக்கியம் சரியா? தவறா??//

    அவன் யாருன்னு எனக்கு தெரியாது. அதனால் இதற்கு பதில் என்னிடம் இல்லை.

    அனா நான் அயோக்கியன் அல்ல என்பது உண்மையிலும் உண்மை (எல்லாம் ஒரு விளம்பரம்..)

    ReplyDelete
  11. //’Halo’ ங்றதுக்கு தமிழ்ல என்னன்னு தெரியுமாங்க?
    //

    ஒளிவட்டம்

    சரியா?

    ReplyDelete
  12. அய்யோ - இவ்ளோ முழிப்பு இருக்கா - அது சரி - ஏதாவது முனைவர் பட்டத்திற்குத் தயார் செய்கிறாயா தம்பி - நல்லாவே இருக்கு - இஃகீஃகீஃகி

    ஹல்லோ - அடுத்து எப்பப்பா

    ReplyDelete
  13. //இராகவன் நைஜிரியா said...
    ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் இல்லைங்களா?
    //

    வாங்க இராகவன் ஐயா, பின்னாடி வந்த கிச்சா ஐயா சொன்ன மாதிரி, தமிழ் சொல் அல்லங்களா?ன்னு கேட்கணும். அது தமிழ் சொல் அல்ல.

    ReplyDelete
  14. // kichaa said...

    என்கிட்ட யாருமே சொல்லவே "அல்ல"வே? அப்படின்னு வரணும் இல்லையா.. சாரி அல்லவா சார்? :)//

    வாங்க கிச்சா ஐயா! நீங்க வந்த பாதை சரி, கொஞ்சமா பிறழ்து போச்சுங்க. என்கிட்ட யாரும் சொல்லலையே? இதான் சரி.

    அல்ல, அன்று, அல்லன், அல்லேன், அல்லவே, +அலையே...இதுகளை இடத்துக்கு தகுந்த மாதிரிப் பாவிக்கணும்! இஃகிஃகி!!

    //Jokes apart that was really good piece of information on Tamil Language.
    //

    Thank you buddy!!!

    ReplyDelete
  15. //thevanmayam said...
    அய்யா! தலைப்பில் தூண்டில் போட்டு உள்ள இழுக்கிறீயளே!! உள்ள வச்சு கும்மிட்டீக அப்பு!!!
    சும்மா டமாசு!!!இஃகி!!இஃகி!!!
    //

    மருத்துவர் ஐயா, வாங்க! தூண்டில் போட்டாத்தானே நீங்க நம்ம பக்கம் வர்றீங்க? இப்பச் சொல்லுங்க, தூண்டிலுக்கு யார் காரணம்? இஃகிஃகி!!

    ReplyDelete
  16. // கணினி தேசம் said...
    //’Halo’ ங்றதுக்கு தமிழ்ல என்னன்னு தெரியுமாங்க?
    //

    ஒளிவட்டம்

    சரியா?
    //

    வாங்க நண்பரே, வணக்கம்! இஃகிஃகி, அது இல்லீங்களே!!

    ReplyDelete
  17. //cheena (சீனா) said...
    அய்யோ - இவ்ளோ முழிப்பு இருக்கா - அது சரி - ஏதாவது முனைவர் பட்டத்திற்குத் தயார் செய்கிறாயா தம்பி - நல்லாவே இருக்கு - இஃகீஃகீஃகி

    ஹல்லோ - அடுத்து எப்பப்பா
    //

    வாங்க ஐயா, வணக்கம்! நாளைக்கே!! இஃகிஃகி!!

    ReplyDelete
  18. அட...
    ஏதோ புரிஞ்சா மாத்ரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு...
    ஒரே கன்பியூஷன்...
    :-)

    அது சரி, ஒரு நல்ல ஃபிகரை பாத்தா சற்றி வழிதலோட ஒரு முழி முழிப்பாங்களே, அது என்ன முழிப்பு???
    :-)))

    ReplyDelete
  19. இது போக ஊருகள்ள வீட்டுக்கு பெருசு ஒண்ணு மாலை சாய ஏதோ ஒரு சாக்குக்கு சுத்தி போடுரேன் பேர்வழின்னு "பாவி கண்ணு பரப்பா கண்ணு..."ன்னு வகை சொல்லி சுத்திப்போடும். அது உங்க ஊர்ல உண்டுமா? தெரிஞ்சா போடுங்க பழமை.

    ReplyDelete
  20. திருட்டு முழியே எனக்குப் புடிச்சது.(இஃகி!இஃகி)

    ReplyDelete
  21. நல்லா இருக்கு... ஆனா தலைப்புல இருக்கற 'அந்த' பதிவரும் 'இந்த' பதிவரும் யாரு? எதோ கிசு கிசு மாதிரி இருக்கே.... :)

    ReplyDelete
  22. //வேத்தியன் said...
    அட...
    ஏதோ புரிஞ்சா மாத்ரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு...
    ஒரே கன்பியூஷன்...
    //

    என்னங்க குழப்பம்? இன்னைக்குதான் கணக்கு எதும் கேட்கலையே?!

    ReplyDelete
  23. intha pathiva padichitu ippa naanenna muzi muzikurenu enake theriyalaye

    ReplyDelete
  24. // gayathri said...
    intha pathiva padichitu ippa naanenna muzi muzikurenu enake theriyalaye
    //

    வாங்க காயத்ரி! இஃகிஃகி!!

    ReplyDelete
  25. //
    பப்பரப்பே முழிப்பு: நீங்க ஒரு தடவை நிலைக்கண்ணாடி முன்னாடி போயி, முழு கதியில ‘பே”ன்னு வாய் விட்டு சொல்லிப் பாருங்க.
    //

    பேன்னு சொல்லாமயே என்னோட முழி எப்பவும் இப்பிடித் தான் இருக்கு :0))

    ReplyDelete
  26. பழமைபேசி said...

    // கணினி தேசம் said...
    //’Halo’ ங்றதுக்கு தமிழ்ல என்னன்னு தெரியுமாங்க?
    //

    ஒளிவட்டம்

    சரியா?
    //

    வாங்க நண்பரே, வணக்கம்! இஃகிஃகி, அது இல்லீங்களே!!
    //

    Halo னு தான் டைப் செஞ்சு இருக்கீங்க Hello அல்லவே :??

    ReplyDelete
  27. //கணினி தேசம் said...

    Halo னு தான் டைப் செஞ்சு இருக்கீங்க Hello அல்லவே :??
    //

    அவ்வ்வ்...இது வேறயா? தொலைபேசில பேச ஆரம்பிக்கும் போது சொல்லுறதுங்க...

    ReplyDelete
  28. ///
    இந்த பதிவைப் படிக்கிற தருணங்கூட அப்படியான ஒரு தருணம்ங்றது உங்களுக்கு சொல்லித் தெரியணுமா, என்ன??
    ///

    தெரிஞ்சு போச்சா ?!?!?

    ReplyDelete
  29. ////
    நாங்க இன்னொரு நாளைக்கு என்ன பதிவு எழுதறது?
    ///


    ஹி ஹி ஹி

    ReplyDelete
  30. அலோ! நான் கூட ஒளிவட்டம், பரிவட்டம் அப்டின்னுதான் நினைச்சேன்.. இப்போ பார்த்த ஹலோ வாம் .. ஹ்ம்ம்.. எப்டியோ.. இந்த கிரகாம் பெல், டெலிபோன் கண்டு பிடிச்சிட்டு.. அத காதில வச்சி.. டெஸ்ட் பண்ணாரம்.. அப்போ அவரோட உதவியாளர் ஹுலோ பேர சொல்லி கூப்டு பார்த்தாராம்.. இது அப்புறம் சும்மாடு சும்மா ஆடு ஆன மாதிரி.. ஹலோ ஆயடுத்தாம்.. இதுக்கு தமிழ் பேரு சொல்றதுன்னா ரொம்ப வில்லங்கமா இருக்கே..! இந்த மணி (அட இங்கயும் பெல் :P ) பழமைபேசிக்குப் பதிலா தொலைபேசிய கண்டுபிடிசிருந்தா "அலமேலூ" இல்லைனா "அப்பிச்சீ" நு கூப்டிருக்கலாம்.. இதெல்லாம் தமிழ்ல சொல்ல முடியுமாங்க..! அலோ கு வணக்கம் நு அர்த்தம் சொன்னா அது அனர்த்தம் ஆய்டும்! இப்போல்லாம் "ஹலோ வணக்கம்" அப்டின்னு சேர்த்தே சொல்றாங்க! நான் சிங்களத்த சேர்ந்த சில லூசுங்கள "ஹெல் ஒ" நு சொல்லிப்பேன்.. அத மொழிபெயர்த்தா நரகமோ நு வரும்.. ஹிஹி..!

    ஹ்ம்ம்.. நீர் எங்க என்ன பார்த்து வச்சிருக்கீர் நு சொல்லும் ஐயா.. அப்புறம் மீதிக்கதை பார்க்கலாம்..

    ReplyDelete
  31. //Eezhapriya said...
    ஹ்ம்ம்.. நீர் எங்க என்ன பார்த்து வச்சிருக்கீர் நு சொல்லும் ஐயா.. அப்புறம் மீதிக்கதை பார்க்கலாம்..
    //

    கலகலப்ரியா வந்தாதான், பதிவு களை கட்டும்! அஃகஃகா!! மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க... சீக்கிரத்துல நான் எங்கதையையும் எடுத்து உடுறேன்... இஃகிஃகி!!

    ReplyDelete
  32. //Bala said...
    இது போக ஊருகள்ள வீட்டுக்கு பெருசு ஒண்ணு மாலை சாய ஏதோ ஒரு சாக்குக்கு சுத்தி போடுரேன் பேர்வழின்னு "பாவி கண்ணு பரப்பா கண்ணு..."ன்னு வகை சொல்லி சுத்திப்போடும். அது உங்க ஊர்ல உண்டுமா? தெரிஞ்சா போடுங்க பழமை.
    //

    பாலா அண்ணே, எங்க ஊர்ல சொல்லுறது என்னன்னா, ‘நொல்லைக் கண்ணூ, நோஞ்சான் கண்ணூ.....’ இப்படிப் போகும்...இருங்க எங்கம்மாகிட்ட கேட்டு எழுதறேன்... இஃகிஃகி!

    ReplyDelete
  33. //ராஜ நடராஜன் said...
    திருட்டு முழியே எனக்குப் புடிச்சது.(இஃகி!இஃகி)
    //


    அண்ணே வாங்க, வேலைல படு முசுவாட்ட இருக்கு?!

    ReplyDelete
  34. //Mahesh said...
    நல்லா இருக்கு... ஆனா தலைப்புல இருக்கற 'அந்த' பதிவரும் 'இந்த' பதிவரும் யாரு? எதோ கிசு கிசு மாதிரி இருக்கே.... :)
    //

    அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க மகேசு அண்ணே! அது சும்மா தலைப்புங்க!! ஊர்ல இருந்து வந்தாச்சா????

    ReplyDelete
  35. // gayathri said...
    intha pathiva padichitu ippa naanenna muzi muzikurenu enake theriyalaye
    //

    இஃகிஃகி! நீங்க முழிக்கிறது தேமேன்னு இருக்குற மாதிரி இருக்கு?!

    ReplyDelete
  36. //அது சரி said...

    பேன்னு சொல்லாமயே என்னோட முழி எப்பவும் இப்பிடித் தான் இருக்கு :0))
    //

    அது சரி அண்ணாச்சி வாங்க! இஃகிஃகி!! அப்ப உங்களைக் கண்டு எல்லார்த்துக்கும் ஒரு பயம்ன்னு சொல்லுங்க!!!

    ReplyDelete
  37. //பிரியமுடன் பிரபு said...
    ////
    நாங்க இன்னொரு நாளைக்கு என்ன பதிவு எழுதறது?
    ///


    ஹி ஹி ஹி
    //

    அதான பிரபு, நீங்களே சொல்லுங்க!!!

    ReplyDelete
  38. //kichaa said...
    //ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் இல்லைங்களா?
    யோவ்.. அந்த மனுஷன் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ் கத்து கொடுத்தப்புறமுமா?
    ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் "அல்லீ" ங்களா? அப்படின்னு கேட்கணும்
    //என்கிட்ட யாருமே சொல்லவேயில்லையே..
    என்கிட்ட யாருமே சொல்லவே "அல்ல"வே? அப்படின்னு வரணும் இல்லையா.. சாரி அல்லவா சார்? :)
    //

    கிச்சா அண்ணே, உங்க மறுமொழி குறிச்ச மேலதிகத் தகவல்.

    உண்டுங்ற இடத்துல மட்டும்தான் இல்லைன்னு வரும்னு சொல்லி இருந்தேன். கூடவே, அதுக்கு இணைச் சொல்லான ‘இருக்கு’ங்றதையும் சேத்துகிடுங்க!

    ReplyDelete
  39. சரிங்க அண்ணாச்சி..
    அடடா.. உங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்குது

    ReplyDelete
  40. //கோவணமே கட்டிட்டு இருக்குற ஒரு பதிவர், திடீர்னு மேனாட்டு நடை, உடை, பாவனையில வந்தா நாம, “பே”ன்னுதான் முழிக்க வேண்டி இருக்கும். அதேதாங்க, இந்த பப்பரப்பே முழிப்பும்.
    //

    என்ன ஒரு எடுத்துக்காட்டு:)))

    ReplyDelete
  41. எப்படி முழிக்கன்னு மறந்து போச்சு

    ReplyDelete
  42. //நசரேயன் said...

    எப்படி முழிக்கன்னு மறந்து போச்சு///


    நாம எல்லாம் இஞ்சி தின்ன “ “ மாதிரி தானே முழிப்போம்..

    ReplyDelete
  43. புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாத மாதிரியும் இருக்கு...


    ( இனிமே இந்த கடை பக்கம் வருவியா?? வருவியா??_)

    ReplyDelete
  44. //"அந்த பதிவர் அயோக்கியன் இல்லை! ////


    நானா?? இல்ல அவரா??

    ReplyDelete
  45. ///பப்பரப்பே முழிப்பு:////

    என்னை பற்றி என் முழிப்பு பற்றி என்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி பதிவிடலாம்..

    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  46. @@உருப்புடாதது_அணிமா said...

    இது ஒரு அறதப் பழசு... புது இடுகைக்கு வந்து ஓட்டுப் போடுங்க

    ReplyDelete