3/15/2009

வந்து அழுதுட்டுப் போங்க மக்கா!!

மக்கா, அழுவுறது நல்லதுன்னு சொல்லுறாங்க. ஆமா, உணர்வுகள் அடங்கி இருந்தா உபாதைகள் பெருகுமாம். அந்த உணர்வுகள் வெளிப்பட்டு மனம் அடங்கும் போது, உடலும் அமைதிக்குத் திரும்பும்! ஆகவே, உணர்வுகளின் வெளிப்பாடுகள்ல ஒன்றான அழுகையும் மனிதனுக்கு நல்லதுன்னு சொல்றாங்க பெரியவங்க. அது சரி, வீடு தேடி வந்துட்டீங்க, இனி பதிவை மேல படிச்சுட்டு சித்த அழத்தான போறீங்க?! இஃகிஃகி!!

சிரிப்பு, விழிப்புல என்னென்ன வகையிருக்குன்னு விலேவாரியாப் பார்த்தாச்சு. நீங்க இன்னும் அதைப் படிக்கலையின்னா, ஒரு எட்டுப் போயி படிச்சுட்டு வாங்க. இப்ப, அழுகையப் பத்தி பாக்கலாம் வாங்க.

ஊமைக் கண்ணீர்: அழுகையின்னா, கண்ணுல தண்ணி வரும். கண்ணுல தண்ணி வராமலேக் கூட சில பல நேரங்கள்ல நாம அழுவோம். அது ஊமைக் கண்ணீர். ஊமைக் கண்ணீர் வடித்தான்னு சொன்னா, மனதளவுல அழுகிறான்னு நாம பொருள் கொள்ளலாம்.

அழைக் கண்ணீர்: பொதுவா, விருது வழங்குற இடங்கள்லயும், பொதுவான இடங்கள்லயும் பெருமைப் படுத்தும் போது, கண்களோட வால்ப் பகுதியில ஒரு சில திவலைகள் வெளிப்படும். அதைச் சொல்லுறது அழைக் கண்ணீர்.

இகுத்தல் கண்ணீர்: அவ்வளவு துயரமான ஒன்னாவே அது இருக்காது. ஆனாலும் மனசை வலிய வலிய உணர்வுக்கு உட்படுத்தி கண்ணீரைச் சொரியுறது, இகுத்தல்க் கண்ணீர். இந்த நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீரெல்லாம் இந்த வகையச் சேர்ந்ததுங்க.

உகுத்தல் கண்ணீர்: விமான நிலையத்துக்கு அவசர கதியில போறோம். அவங்க, நீங்க ரெண்டு மணித் துளிகள் தாமதம், இனி உங்களுக்கு காலையிலதான் அடுத்த விமானம்னு சொல்லும் போது, ஏன் இன்னும் விமானம் கிளம்பலைதானே? ஏன் நான் உள்ள போகக் கூடாதுன்னு வாதாடிட்டு இருக்கும் போது கண்ணீரும் வடியுது. சோகம், துயரம் இல்ல, இருந்தாலும் கண்ணீர்... இதுதாங்க உகுத்தல்க் கண்ணீர்.

உவகைக் கண்ணீர்: அளவு கடந்த மகிழ்ச்சியில, முழு கதியில வடிக்கிற கண்ணீர். ஆனந்தக் கண்ணீர்ன்னும் சொல்லலாம். சிரிக்கும் போதும் இது வெளிப்படும்.

கலுழிக் கண்ணீர்: ஒரு விதமான கலக்கம், உங்க வீட்டை இடிக்கப் போறாங்கன்னு ஒரு செய்தி. அது உண்மையான்னு கூடத் தெரியலை. அங்கயும் இங்கயும் போறீங்க, வர்றீங்க. எதேச்சையாப் பாத்தா, ஒன்னு ரெண்டு விரல் ஈரமா இருக்கு. அப்புறமாத்தான் தெரியுது, அது கண்ணீர்ன்னு. இதாங்க கலுழிக் கண்ணீர்.

சிந்து கண்ணீர்: தீராத சோகம், துயரம், பேரிழப்பு இந்த மாதிரியான சூழ்நிலையில மூக்கிலயும், கண்ணுலயுமா சிந்துறதுதாங்க, சிந்து கண்ணீர். நாட்கணக்குல கூட ஓடுமாமுங்க. இந்த சூழ்நிலையில யாராவது இருந்தா, அடிக்கடி தண்ணி குடுங்க அவங்களுக்கு. இல்லையின்னா, அவங்க உயிருக்கே கூட ஆபத்து வரலாம்.

நயனவாரிக் கண்ணீர்: இது கண்னுல இருக்குற கோளாறுனால வர்ற கண்ணீர். அவங்களுக்கே தெரியாம, அது தொடர்ந்து வந்திட்டு இருக்கும்.

புலம்பல் கண்ணீர்: இது உங்களுக்கு சுலுவுல தெரியும். அது நடந்து போச்சே, இது நடந்து போச்சேன்னு எப்பப் பார்த்தாலும் அழுவாங்க. இந்த மனநிலையில இருக்குறவங்க கூடக் குடித்தனம் நடத்துறவங்க கதி, அதோ கதிதான் பாவம்! எதோ ஒரு சூழ்நிலையில புலம்பற புலம்பலும் இருக்கு. புலம்பல்க் கண்ணீர்ன்னாப் பொதுவா, சொல்லி சொல்லி அழுகுறதுங்க.

வடு கண்ணீர்: ஏதாவது வலி வர்றப்ப அழுகுறப்ப வர்ற கண்ணீர். மனசுல சோகம், துயரம் இருக்காது. ஆனா, வலியைப் பொறுக்க முடியாம வர்ற கண்ணீர்.

இரங்கல் கண்ணீர்: மெல்லிய ஒலியோட, மூக்குறிஞ்சுற சத்தம் கேட்கும். கண்ல இருந்து பெருசா தண்ணீர் வரக் காணோம், ஆனாக் கலங்கி நிக்குது. அதாங்க இரங்கல்க் கண்ணீர்.

இராவணக் கண்ணீர்: உகுத்தலும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்னுதான். ஆனா, இதுல கொஞ்சம் அரட்டல் அதிகமா இருக்கும். ஒரே இரைச்சலும், கூச்சலுமுமா, வெறித்தனமாக் கத்திட்டே அழுகுறது. சிங்கப்பூர்ல Jalan Bezarங்ற இடத்துல, ஒரு பெண்மணியோட வாடிக்கையாளரை இன்னொருத்தி கூட்டிட்டுப் போய்ட்டான்னு சொல்லி அந்தப் பெண்மணி போட்ட ஆர்ப்பாட்டமும் அழுகையும் இருக்கு பாருங்க, அதாங்க இராவணக் கண்ணீர். அந்த இடத்துல உமக்கு என்ன வேலைன்னு எல்லாம் கேக்கப் படாது மக்கா!

இரியல் கண்ணீர்: நல்லாப் பேசிட்டு இருப்பாங்க. திடீர்னு பாத்தா, அழுவாங்க. என்னன்னு கேட்டா, அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் ரெண்டு நாள் நீங்க கூட இருக்க மாட்டீங்கன்னு சொன்னீங்கல்ல, அதான்னுவாங்க. இப்படி வர்ற திடீர்க் கண்ணீர்தாங்க இரியல்க் கண்ணீர்.

ஊளைக் கண்ணீர்: இதை பிடிவாதக் கண்ணீர்ன்னும் சொல்லலாம். கேட்டதைக் குடுக்கலைன்னாலோ, அல்லது அவங்க மனசைக் காயப்படுத்திட்டாலோ ஓன்னு ஊளையிட்டு அழும்போது வர்ற கண்ணீர்.

ஏங்கல் கண்ணீர்: மனசு எதுக்காவது ஏங்கும் போது வர்ற கண்ணீர். இழுத்து இழுத்து அழும்போது வர்ற கண்ணீர்.

கலங்கல் கண்ணீர்: ஒரு விதமான பயத்துல அழறது. வீல்ன்னு கத்தும் போது வர்ற கண்ணீர். மருட்கைக் கண்ணீர்ன்னும் சொல்லலாம் இதை.

சிணுங்கல் கண்ணீர்: இரங்கல்க் கண்ணீர்ல மூக்கும், கண்ணும் சேந்து அழும். இந்த சிணுங்கல்க் கண்ணீர்ல மூக்கு மாத்திரம் அழும். கண்ல சில நீர்த் திவலைகள் மாத்திரமே கட்டும். ஆனாக், கண்ணை மூடி மூடித் திறப்பாங்க.

நரிமிரட்டல் கண்ணீர்: தூக்கத்துல குழந்தைகள் சிரிச்சாலோ, அழுதாலோ வர்ற கண்ணீர் நரிமிரட்டல்க் கண்ணீர்.

ரோதனைக் கண்ணீர்: ஒருத்தர் உங்களைப் படுத்திகினே இருக்கார். அப்ப அவங்களோட தொந்தரவு தாங்கமாட்டாம அழறது ரோதனைக் கண்ணீர்.

விலாபக் கண்ணீர்: பெரியவங்க தூக்கத்துல அழும்போது வர்றது விலாபக் கண்ணீர்.



சரிங்க, கண்ணீர் வடிச்சது போதும்! இப்ப, விசயத்துக்கு வரலாம். இஃகிஃகி! Helloக்குத் தமிழ்ல என்ன? ஆங்கிலத்துல இந்த சொல் வந்ததுக்கு ஏகப்பட்ட காரணம் சொல்லுறாங்க. அதை இந்த சுட்டியில போயித் தெரிஞ்சிகிடுங்க. ஆனா, தமிழ்ல இதுக்கு இணையான சொல் சங்ககாலத்துல இருந்தே இருக்கு. அது என்ன? ‘அகோ’ங்றதுதாங்க அந்த சொல். வழியில நடையா போய்ட்டு இருக்குற ஒருத்தரைப் பார்த்து சொல்லுறது, ”அகோ! பெரியவரே!! வாங்க இங்க!!!” நீங்கெல்லாம் நம்ப மாட்டாம, மலங்கலாப் (taperஆப்) பாப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அதான், தமிழ்க் கையேடுல இருந்த குறிப்பை மேல குடுத்து இருக்கேன்! இஃகிஃகி!!


அழுத புள்ளைக்குத்தான் பால்!

52 comments:

  1. மக்கா, வழக்கம் போல திங்-வியாழன் பொட்டி அடிக்க வெளியூர்... இஃகிஃகி!! அதனால பின்னூட்டங்களும் பதிவும் வறட்சியாத்தான் இருக்கும்! தப்பிச்சம்டான்னு சொல்லுறீங்க... சொல்லிகிட்டே இருங்க...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //lavanya has left a new comment on your post "வந்து அழுதுட்டுப் போங்க மக்கா!!":

    பதிவு முழுக்க அழுதுகிட்டே வந்தா, பின்னூட்டத்தில் நல்ல விஷயம் ஒண்ணு சொல்லி, வயத்துலே பால் வார்த்தீங்க...

    அகோ பழமைபேசி... சென்று, வென்று வாங்க...

    ஹிஹி...//

    லாவண்யா, நான் ஒன்னும் தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்...இஃகிஃகி!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!!

    ReplyDelete
  4. ஏம்பா - இவ்ளோ அழுகையா - நம்ப முடிய வில்லை - நம்ப முடிய வில்லை - நீயா ஏதாச்சூம் பேர்ல கண்ணீர்னு போட்டு அழௌகைன்னு சொன்னா எப்படி - ஹால்மார்க் முத்திரை ஐஎஸை ஏதாச்சும் வேணும் - குச்சி ஐஸ் வேணும்னு தரைல பொரண்டு அழுவுற ( கண்ணீருடன் ) மழலையின் கண்ணீர் - என்ன பேர்

    அகோ வாரும் பிள்ளாய் - பதில் சொல்ல்லுமய்யா

    ReplyDelete
  5. இப்போ கொஞ்சம் வேலைங்கோ...
    அப்புரமா வந்து அழுறேன்...
    ஓகே...
    :-)

    ReplyDelete
  6. ////lavanya has left a new comment on your post "வந்து அழுதுட்டுப் போங்க மக்கா!!":

    பதிவு முழுக்க அழுதுகிட்டே வந்தா, பின்னூட்டத்தில் நல்ல விஷயம் ஒண்ணு சொல்லி, வயத்துலே பால் வார்த்தீங்க...

    அகோ பழமைபேசி... சென்று, வென்று வாங்க...

    ஹிஹி...//

    //

    ஹாஹா... ரிப்பீட்டேய்ய்....

    ReplyDelete
  7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

    இம்புட்டு சொன்னீங்க, இந்த அழுகை எந்த வகைன்னு சொல்லவேயில்லை?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

    ReplyDelete
  8. நல்லா அழ வெச்சீங்க !!

    //குச்சி ஐஸ் வேணும்னு தரைல பொரண்டு அழுவுற ( கண்ணீருடன் ) மழலையின் கண்ணீர் - என்ன பேர்//

    அது பிடிவாதக் கண்ணீர் ஹி ஹிஹிஹ்

    ReplyDelete
  9. அகோ மச்சி,
    அகோ பாஸ்,
    அகோ நண்பா,
    அகோ இந்தாப்பா,
    அகோ யார் பேசறது,

    அகோ, எப்படி இருக்கும்னு பேசிப்பார்த்தேன்.

    ReplyDelete
  10. நீலிக் கண்ணீர் ?

    ReplyDelete
  11. அண்ணே இத்தனை கண்ணீருக்கு விளக்கம் கொடுத்துபுட்டு ஆனந்தக் கண்ணீரை விட்டுடீங்களே..

    ReplyDelete
  12. ஒஹ்... மன்னிச்சுடுங்க அண்ணே அதைத் தான் நீங்க உவகைக் கண்ணீர்னு சொல்லி இருக்கீங்க....நான் தான் ஒழுங்கா படிக்காம பின்னூட்டம் போட்டுட்டேன்... ஹி ஹி...

    ReplyDelete
  13. //அகோ! உங்க பதிவை படிச்சிட்டு எனக்கு அழைக் கண்ணீரா வருதுங்க! ரொம் ப நல்லா இருக்கு...//

    ReplyDelete
  14. பழமை இப்படி கண்ணுல கண்ணீர வர வச்சுட்டீங்களே!!!

    ReplyDelete
  15. // பழமைபேசி said...
    மக்கா, வழக்கம் போல திங்-வியாழன் பொட்டி அடிக்க வெளியூர்... இஃகிஃகி!! அதனால பின்னூட்டங்களும் பதிவும் வறட்சியாத்தான் இருக்கும்! தப்பிச்சம்டான்னு சொல்லுறீங்க... சொல்லிகிட்டே இருங்க...

    //

    எல்லோரும் நிம்மதியா தூங்கலாம்:))))

    ReplyDelete
  16. முதலைக்கண்ணீரக் காணோமுங்க

    ReplyDelete
  17. //மக்கா, அழுவுறது நல்லதுன்னு சொல்லுறாங்க.//

    இனிமேல் தினமும் வெங்காயம் வெட்டிற வேண்டியதுதான்!

    ReplyDelete
  18. //நிலாவும் அம்மாவும் said...
    நீலிக் கண்ணீர் ?
    //

    // ராஜ நடராஜன் said...
    முதலைக்கண்ணீரக் காணோமுங்க
    //

    இதெல்லாம் நாங்க ஏர்கனவே பதிஞ்சுட்டம்ல....

    http://maniyinpakkam.blogspot.com/2009/01/blog-post_01.html

    ReplyDelete
  19. மறுமொழிந்த எல்லோருக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  20. //cheena (சீனா) said...
    ஏம்பா - இவ்ளோ அழுகையா - நம்ப முடிய வில்லை - நம்ப முடிய வில்லை - நீயா ஏதாச்சூம் பேர்ல கண்ணீர்னு போட்டு அழௌகைன்னு சொன்னா எப்படி - ஹால்மார்க் முத்திரை ஐஎஸை ஏதாச்சும் வேணும்//

    ஐயா வணக்கம்! எல்லா வகைக் கண்ணீரையும் சான்றுகளோட விளக்கணும்ன்னா, வெடிஞ்சிரும். ஆகவே, ஒன்னோ ரெண்டோ உங்க விருப்பத்துக்கு சொல்லுங்க...நான் அதுகளை மேலதிகத் தகவலோட சொல்லுறேன்.


    // - குச்சி ஐஸ் வேணும்னு தரைல பொரண்டு அழுவுற ( கண்ணீருடன் ) மழலையின் கண்ணீர் - என்ன பேர்
    //

    மகேசு அண்ணன் சொல்லிட்டாரே...இஃகிஃகி!

    ReplyDelete
  21. அகோ அண்ணே...பதிவு உச்சம்ணே :)

    ReplyDelete
  22. அட சை. இந்த கூத்தில ராசா வேசம் கட்டுறவரு அலம்பலா கூப்டுவாரு. " அகோ வாரும் பிள்ளாய் மதி மந்திரியாரேன்னு" அதான் இதுன்னு தெரியாம போச்சே! அதென்ன பழமை பேசி இப்படி ஒரு துரோகம். நாள பின்ன ஊரு பக்கம் வர நினைப்பிருக்கா இல்லையா? இருந்தா தலைவர் அப்பப்போ அழுவற இதய அழுகைக்கு விளக்கம் வேணும். சாதாரணமா, அழுறவங்கள எதுக்கு அழுவரது சொல்லிட்டு அழுன்னு சொல்றது. இனிமே ஒழுங்கு மரியாதையா இது என்ன அழுகை சொல்லுன்னு கேட்டா டக்னு நின்றுமில்ல.

    ReplyDelete
  23. எம்புட்டு கண்ணீர் .. ரத்த கண்ணீர் மட்டும் இல்லை

    ReplyDelete
  24. இல்லை...
    என்னால அழ முடியாது.
    அழறதுல இவ்ளோ வகைகளா ?
    முடியாது...முடியவே முடியாது.
    நான் இந்தப் பதிவிலிருந்து வெளி நடப்புச் செய்கிறேன்.
    யார்னாச்சும் சிரிக்கச் சொல்லிக் கொடுங்கப்பா!!!???
    புண்ணியமாப் போகும்

    ReplyDelete
  25. அகோ அண்ணாச்சி,
    உங்களுக்கு நம்ம உவகைக் கண்ணீர் :(

    விடுகதை எங்க காணும் ???

    ReplyDelete
  26. //நசரேயன் said...
    எம்புட்டு கண்ணீர் .. ரத்த கண்ணீர் மட்டும் இல்லை

    //

    இஃகிஃகி!

    ReplyDelete
  27. அகோ எல்லா அழுகையும் எங்கே கத்துக்கொண்டீர்.

    ReplyDelete
  28. ரெம்ப நாளைக்கு அப்புறம் கொமைக்கலாம்னு வந்தா கண்ணீர பத்தி பேசி இப்படி கண்ண கலங்க வச்சிட்டீரே

    ReplyDelete
  29. ”அகோ! பெரியவரே!! வாங்க இங்க!!!”


    எங்க ஊரு பெருசுக்கிட்ட இப்படி சொன்னேன்னு வச்சுகோங்க ,நேர வீட்டுக்கு வந்து "உன் புருசன சீக்கிரமே ஏர்வாடில கொண்டுபோய் சேரு தாயி அப்புறம் முத்திரிச்சின்னா ரெம்ப கஷ்டம்" அப்படின்னு சொல்லிட்டு போகும்

    ReplyDelete
  30. நேத்திக்கு முழி...இன்னிக்கு அழுகை..நாளைக்கு சிரிப்பா? :0))

    ReplyDelete
  31. இகுத்தல் கண்ணீர், உகுத்தல் கண்ணீர், புலம்பல் கண்ணீர், இரங்கல் கண்ணீர், இரியல் கண்ணீர், ஏங்கல் கண்ணீர், கலங்கல் கண்ணீர், சிணுங்கல் கண்ணீர், நரிமிரட்டல் கண்ணீர் - இதுக்கெல்லாம் கண்ணீருக்கு முன்னாடி ஒற்று மிகாது.

    இந்த 'அகோ'ங்கற சொல்லைத் தெருக்கூத்துல நிறைய கேட்டிருக்கேன்.

    அப்புறம் இந்தப் பதிவுத் தலைப்புல 'எழிலாய்'க்கு அப்புறம் ப் (ஒற்று) மிகாது.

    ReplyDelete
  32. //குமரன் (Kumaran) said...
    இந்த 'அகோ'ங்கற சொல்லைத் தெருக்கூத்துல நிறைய கேட்டிருக்கேன்.

    அப்புறம் இந்தப் பதிவுத் தலைப்புல 'எழிலாய்'க்கு அப்புறம் ப் (ஒற்று) மிகாது.
    //

    குமரா, சகோதரா, மிக்க நன்றி ஐயா! அப்பப்ப வந்திருந்து இது மாதிரி தப்பு தண்டா இருந்தா சொல்லிட்டுப் போங்க ஐயா!!

    ReplyDelete
  33. //அது சரி said...
    நேத்திக்கு முழி...இன்னிக்கு அழுகை..நாளைக்கு சிரிப்பா? :0))
    //

    அண்ணாச்சி, சிரிப்பு ரொம்ப நாளைக்கு முன்னாடியே போட்டாச்சுங்க! இஃகிஃகி!!

    ReplyDelete
  34. // S.R.Rajasekaran said...
    ”அகோ! பெரியவரே!! வாங்க இங்க!!!”
    //

    புளியங்குடியார் ரொம்ப நாளா நீங்க வரலை...அதனால் உங்ககூட டூ!!!

    ReplyDelete
  35. //குடுகுடுப்பை said...
    அகோ எல்லா அழுகையும் எங்கே கத்துக்கொண்டீர்.
    //

    நீங்க அழவெச்சதுலதான்.... அவ்வ்வ்....

    ReplyDelete
  36. //Ravee (இரவீ ) said...
    அகோ அண்ணாச்சி,
    உங்களுக்கு நம்ம உவகைக் கண்ணீர் :(

    விடுகதை எங்க காணும் ???
    //

    மக்கள் கடுப்பாகுறாங்க...அதான் கணக்கைக் கை விட்டாச்சி....இஃகிஃகி!!!

    ReplyDelete
  37. //மிஸஸ்.டவுட் said...
    இல்லை...
    என்னால அழ முடியாது.

    //

    அவ்வ்வ்வ்வ்வ்.......

    ReplyDelete
  38. வந்து அழுதுட்டு போங்கன்னு படிச்சவுடனே ஒண்ணுமே புரியலை.

    எனக்கு கொஞ்சம் தாமதமாத்தான் தெரிஞ்சுது.

    பயந்து போயி வந்து பார்த்தால் வழக்கமாக் கலக்குவது போல்
    கலக்கி இருக்கீங்க போங்க,

    அழுகையிலே இவ்வளவா??? ஆஆஆஆஆஆஆஆ!!!

    ReplyDelete
  39. முதல் பின்னூட்டம், முதல் சிரிப்பு
    அது எப்படிங்க இப்படி ஒரு சிரிப்பு இஃகிஃகி!! அசத்தறீங்க அண்ணா!!

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. RAMYA said...
    // பழமைபேசி said...
    மக்கா, வழக்கம் போல திங்-வியாழன் பொட்டி அடிக்க வெளியூர்... இஃகிஃகி!! அதனால பின்னூட்டங்களும் பதிவும் வறட்சியாத்தான் இருக்கும்! தப்பிச்சம்டான்னு சொல்லுறீங்க... சொல்லிகிட்டே இருங்க...
    //


    வறட்சியே இப்படின்னா!!

    நீங்க திங்-வியாழன் பொட்டி அடிக்க வெளியூர் போகாமல் இருந்தா!

    நாங்க எல்லாரும் உங்க பதிவுமுன்னே இருக்கணும்னு நினைக்கின்றேன்.

    ReplyDelete
  42. // கணினி தேசம் said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

    இம்புட்டு சொன்னீங்க, இந்த அழுகை எந்த வகைன்னு சொல்லவேயில்லை?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

    //


    கணினி தேசத்தோட சந்தேகத்தை தீர்த்துடுங்க.

    இல்லேன்னா அழுதுடுவாங்க :-)

    ReplyDelete
  43. //குச்சி ஐஸ் வேணும்னு தரைல பொரண்டு அழுவுற ( கண்ணீருடன் ) மழலையின் கண்ணீர் - என்ன பேர்//


    அதானே நான் இப்போ கூட அப்படி அழுவேன்.

    ஆனா அந்த அழுவாச்சி பேரு தெரியாது.:-)

    ReplyDelete
  44. //
    குடுகுடுப்பை said...
    அகோ எல்லா அழுகையும் எங்கே கத்துக்கொண்டீர்
    //

    குடு குடு என்னா சொல்ல வாராரு அண்ணா!!

    கொஞ்சம் கேட்டு சொல்லுங்க:-)

    ReplyDelete
  45. //RAMYA said...
    // கணினி தேசம் said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

    இம்புட்டு சொன்னீங்க, இந்த அழுகை எந்த வகைன்னு சொல்லவேயில்லை?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

    //


    கணினி தேசத்தோட சந்தேகத்தை தீர்த்துடுங்க.

    இல்லேன்னா அழுதுடுவாங்க :-)
    //

    வாங்க சகோதரி, வணக்கம்! இது இரியல்க் கண்ணீர்...இஃகிஃகி!!

    ReplyDelete
  46. அகோ!வந்த பதிவுதான்.வந்துட்டு வெங்காயம் வெட்டப் போயிட்டேன்.

    ReplyDelete