3/21/2009

வட்டத்திற்குள் பெண்!

நன்றி: ஷைலஜா அக்கா

ன்பு வட்டத்துள் பிரதானம் நீயாவாய் பெண்ணே!

லவட்டத்தில் அழகுற நிறைந்திருப்பாய் பெண்ணே!

ன்னிறவையால் வட்டம்மேல் ஏறிடுவாய் பெண்ணே!

டன்பாடு ஊக்க வட்டத்திலுள்ள உன்னாலே பெண்ணே!

மைக்கு வட்டமிட்டு சிவனுலாவ முடியாது பெண்ணே!

ர்கோழ்வட்டம் மதியை ஒழிக்கமுடியாது பெண்ணே!

ரிவட்டத்தில் மங்கையர்க்கு இடமில்லை பெண்ணே!

றுவட்டம் உம்மிடம் கொள்ளின் ஏற்றமில்லை பெண்ணே!

க்கிய வாழ்வுக்கு அன்புவட்டத்தில திகழ்வாய் பெண்ணே!

ளிவட்டத்தில் தாயெனுஞ் சுடராய் மிளிர்வாய் பெண்ணே!

லாட்டம் பாடுற உமக்கு வட்டம் இல்லை பெண்ணே!

ரிதத்துக்கு வட்டமிட்டு வாழ்க்கையில்லை பெண்ணே!

’தத்துக்கு வட்டம் போட்டு தமிழ் வாழாது பெண்ணே!

=============================================

ஆலவட்டம்: மயிற்தோகையால் சூழ்ந்த
இறைவை: ஏணி
ஈடன்பாடு: பெருமை
ஊர்கோழ்: நிலாவைச் சுற்றியுள்ள
எரிவட்டம்: ஏழு நரகத்தில் ஒன்று
ஏறுவட்டம்: கோளவியலில் வேறுபாடு என்பதைக் குறிப்பது
ஓலாட்டம்: தாலாட்டு
ஔரிதம்: தரும நூல்

அண்ணன் மகேசு, இந்த வலைத் தொடர் பதிவுக்கு அழைப்பு கொடுத்து இருந்தாரு. அண்ணன் சொன்னா, நாம செய்யணும் இல்ல? அதான்! வட்டத்தில் பெண்ங்ற தலைப்புல அவரோகணம் எதுக்குன்னு, ஆரோகணம் பாணியில, அதாங்க பெண்மைய உயர்த்தி எழுதி இருக்கேன். பெண்களே நாட்டின் கண்கள்! உயர்த்திப் பேசுவோம், நாமும் உயர்வோம்!!

நம் பக்கத்தில் இருந்து, சகோதரர் அப்பாவி முரு அவர்களைக் கோர்த்து விடுகிறேன்!


பெண்ணுக்கு மதிப்பளித்துப் பார்!
மூளைக்கு பணியளித்துப் பார்!!

28 comments:

  1. மணியாரே... "பூவையருக்கு புதி ஆத்திச்சூடி" படைச்சுட்டீங்களே. அட்டகாசம்.... கலக்கல்...

    ஆமா... "ஈடன்பாடு.." என்னா அர்த்தம்?

    ReplyDelete
  2. //Mahesh said...
    மணியாரே... "பூவையருக்கு புதி ஆத்திச்சூடி" படைச்சுட்டீங்களே. அட்டகாசம்.... கலக்கல்...

    ஆமா... "ஈடன்பாடு.." என்னா அர்த்தம்?
    //

    அவ்வ்வ்... அதுக்குள்ள வந்து பாத்துட்டீங்களா? நான் அருஞ்சொற் பொருட்பட்டியல் எழுதிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  3. இப்ப, தவுக்கார்(editing) எல்லாம் முடிஞ்சது அண்ணே!

    ReplyDelete
  4. \\அதாங்க பெண்மைய உயர்த்தி எழுதி இருக்கேன். பெண்களே நாட்டின் கண்கள்! உயர்த்திப் பேசுவோம், நாமும் உயர்வோம்!!\\

    உண்மைதான்.

    ReplyDelete
  5. // அதாங்க பெண்மைய உயர்த்தி எழுதி இருக்கேன். பெண்களே நாட்டின் கண்கள்! உயர்த்திப் பேசுவோம், நாமும் உயர்வோம்!!//

    அப்படி வாங்க வழிக்கு ,பெண்களை ஆண்கள் ரொம்ப ஒண்ணும் தாங்கி தடுக்க வேண்டாம் ,சும்மா பரஸ்பர மரியாதை அவங்க வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் கொடுத்தாலே போதும்,பெண்கள் ஆண்களுக்கு வழிகாட்டும் கண்களாகி விடுவார்கள் என்பது நிஜமே,

    இதுவே ஆண்களுக்கும் பொருந்தும்.அதனால வலது கண் ..இடது கண் ரெண்டு இருக்கு இல்ல ஒன்னு ஆண் ஒண்ணு பெண் அப்படின்னு வச்சுக்கலாம் தான்.

    நல்லா சொல்லி இருக்கீங்க பழமைபேசி அண்ணா .

    ReplyDelete
  6. பழமை, உண்மையாகவே அருமையான பதிவு:))

    ReplyDelete
  7. //ஆலவட்டம்: மயிற்தோகையால் சூழ்ந்த//

    எம்ஜியார் கூட பாடுவாரே தல..

    ReplyDelete
  8. முதல்ல சிலது விளங்கவே இல்லை.. நானும் தொடர்ந்து 4 வாட்டி படிச்சுப் பார்த்தேன்.. பிறகு தான் தெரிந்தது நீங்களே பொருள் விளக்கம் கொடுத்திருப்பது.. இஃகிஃகி!!

    ReplyDelete
  9. //அறிவே தெய்வம் said...
    \\அதாங்க பெண்மைய உயர்த்தி எழுதி இருக்கேன். பெண்களே நாட்டின் கண்கள்! உயர்த்திப் பேசுவோம், நாமும் உயர்வோம்!!\\

    உண்மைதான்.
    //

    வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  10. //மிஸஸ்.டவுட் said...
    நல்லா சொல்லி இருக்கீங்க பழமைபேசி அண்ணா .
    //

    நன்றிங்க சகோதரி!

    ReplyDelete
  11. //Poornima Saravana kumar said...
    பழமை, உண்மையாகவே அருமையான பதிவு:))
    //

    நன்றிங்க! அது என்ன உண்மையாவே? அப்ப, பொய்னாச்சிக்கும் அருமைன்னு சொல்வீங்களா??

    ReplyDelete
  12. அருமையான ஆத்தி சூடி

    ReplyDelete
  13. //SUREஷ் said...
    //ஆலவட்டம்: மயிற்தோகையால் சூழ்ந்த//

    எம்ஜியார் கூட பாடுவாரே தல..

    //

    வாங்க மருத்துவர் ஐயா!

    ReplyDelete
  14. //உமைக்கு வட்டமிட்டு சிவனுலாவ முடியாது பெண்ணே!//


    எனக்கு இது மட்டும் தான் புரிஞ்சது.

    ReplyDelete
  15. அடி ஆத்தீ! புது ஆத்திச்சூடி அள்ளுதுங்கோ!

    ReplyDelete
  16. க‌ல‌க்கீட்டிங்க‌

    ReplyDelete
  17. //பெண்களே நாட்டின் கண்கள்! உயர்த்திப் பேசுவோம், நாமும் உயர்வோம்!!//

    ஆமாங்கோ! சரிதானுங்கோ!

    ReplyDelete
  18. புதிய ஆத்திச்சூடி பட்டத்திருக்கு தகுங்க கவிதை.


    நன்றி.

    ReplyDelete
  19. நவீன ஆத்திசூடி. நல்லாருக்கு.

    ReplyDelete
  20. படம் போட்ட அக்காவுக்கு நன்றி.ஆமா!எனக்கு திடீர் திடீர்ன்னு இங்கிலிபீசுக்கு தமிழ்ல என்ன பொருள்ன்னு தெரியாம அப்படியே கலந்து அடிச்சு விட்டுடறேன்.எங்கிருந்து வார்த்தைகளுக்கு தூண்டில் போடறீங்க?

    ReplyDelete
  21. 'நல்லாயிருக்கு’ சொன்ன உங்க எல்லாருக்கும் நன்றிங்கோ!

    ReplyDelete
  22. //ராஜ நடராஜன் said...
    எங்கிருந்து வார்த்தைகளுக்கு தூண்டில் போடறீங்க?
    //

    அண்ணாச்சி வாங்க, எப்பவாச்சி நேரங்கிடைக்குறப்ப அப்படியே அகரமுதலில தலைய விடுவேன். இஃகிஃகி!

    ReplyDelete
  23. தமிழ்மழையே!
    உம்மால்
    அனைவரும்
    நனைந்தனர்!
    அடியேனும்!

    ReplyDelete
  24. அட! உயிர் எழுத்துக்கவிதை தந்து
    பெண்ணுக்கு உயிர் தந்துள்ள பழமை பேசியே! பாராட்டுக்கள்!

    ஊரில் இல்லாததால் தாமதமாய் பின்னுட்டமிடறேன் ,,,,நன்றி நான் போட்ட வட்டத்துக்குள் பெண் கோலத்திற்கு அழகிய கவிதைக்கோலம் அளித்தமைக்கு!

    ReplyDelete