3/22/2009

ஞாயிறு போற்றுதல்!

உஷாவுக்கு அமெரிக்கர்களுடன் அளவளாவும் அளவுக்கு ஆங்கில புலமையும் இல்லை. பொதுவான விசயங்களும் இல்லை. அதனால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். தொழில்கூடம் விட்டால் வீடு என்ற நிலையில் அமெரிக்கர்களுடன் பழக வாய்ப்பே இல்லை. தொழிற் கூடத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு அதுவும் அமெரிக்க கருப்பு பெண்களுக்கு சற்று உரக்கவே பேசுவதும் சிரிப்பதும் இயல்பான வழக்கம். உஷாவுக்கு இது தெரியாததால் அவர்கள் சிரிக்கும் போது, ஒருகால் தன்னைத்தான் கிண்டலாக சிரிக்கிறார்களோ என்று மெல்ல மெல்ல நினைக்கத் தொடங்கினாள்.

அதை ஜெயராமனிடமும் சொன்னாள். ஜெயராமன் அப்படி யாரும் அமெரிக்காவில் பிறரைக் கிண்டல் செய்வது, பணி இடத்தில் தடை செய்யப்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் சிரிப்பது உன்னைப் பார்த்து அல்ல. அவர்களுக்குள் நகைகச் சுவையாக பேசிக் கொள்வார்கள் நீ கவலைப்படாமல் உன் வேலையில் கவனம் செலுத்து என்றார்.

உஷா கணவன் சொல்லுவதை நம்பினாலும் பணி இடம் சென்றால் அந்த சந்தேகம் வலுத்து கொண்டே வந்தது. அது உண்மையே என்றும் சொல்லத் தொடங்கினாள். "அவர்கள் அடிககடி "Quit" என்று சொல்லி என்னை வேலை விட்டு போக சொல்லுகிறார்கள்" என்றும் சொன்னாள். ஜெயராமன், "அப்படி நீ நினைத்தால் மேலாளரிடம் புகார் செய்யலாமே" எனச் சொல்ல, "அவரிடம் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது", என்றாள் இவள்.

உஷா தொடந்து பணிக்கு போய்க் கொண்டுதான் இருந்தாள். ஆனால், ஒரு நாள் விடிகாலை எழுந்ததும், "உங்களுக்கு தெரியுமா? GE நிறுவனத்தில் ஆயுதங்கள் செய்கிறார்கள். சதாம் உசேன் அமெரிக்கருக்கு எதிராக சதி செய்கிறான், எங்கள் நிறுவனத்தில் திரைச்சீலை தொங்கவிடும் குழாய்களில் ஆயுதங்களை ஒளித்து வைக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது. நாம் இந்தியாவுக்கே திரும்பிப் போய்விடலாம்", என்று தொடர்பு இல்லாதவற்றை சொல்லத் தொடங்கினாள். ஜெயராமன் அதிர்ந்து போனான்.

தன் மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது உறுதியாகிவிட்டது. எனவே, "சரி நாம் ஊருக்கு போயிடலாம். நீ இனிமேல் வேலைக்கு போகவேண்டாம். வீட்டிலேயே இரு. நாம் மருத்துவரை போய் பார்க்கலாம், உனக்கு உடம்புக்கு சரியில்லாமல் இருக்கலாம்." என்றான். உஷாவும் அன்று முதல் பணிக்குப் போகவில்லை. "எனக்கு அந்த அமெரிக்க டாக்டர் வேண்டாம். இந்திய பெண் டாக்டர்கிட்டதான் போவேன்" என்றாள்.

அடுத்த நாள் ஒரு இந்திய பெண் மருத்துவரிடம் அழைத்து சென்றான். அவரோ எல்லாவற்றையும் கேட்டு விட்டு, " நம் நாட்டில் இருந்து வந்த பலர் இந்த மாதிரி ஆகி இருக்கிறார்கள். இது பண்பாட்டு வேறுபாட்டால் வருவதுதான். நான் ’புரொசாக்’ என்ற மருந்து கொடுக்கிறேன். அதை சாப்பிட்டால் உடம்பில் உற்சாகம் இருக்கும், ஆனால் தொடர்ந்து பல நாள் சாப்பிட வேண்டும் " என்றார்.

ஜெயராமன் அவர் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்கி உஷாவுக்கு தினமும் சாப்பிட கொடுத்தான், இந்த காலத்தில் உஷா அதிகமாக யாருடனும் பேசுவது இல்லை. ஏதோ சிந்தனையில் இருப்பவள் போல் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பாள். ஜெயராமனோ தன் மனைவிக்கு நேர்ந்ததை நினைத்து மிக கவலையுற்றான். இந்த அயல் நாட்டில் எத்தனை நாட்களுக்கு இந்த மாதிரி மனநிலமையில் இவள் இருப்பாளோ? எப்படி இவளை குணப்படுத்துவது?

அந்த குளிர்காலம் முழுமையும் உஷாவின் மனநிலமை ’புரோசாக்'கின் தயவால் கட்டுக்குள் இருந்தது. ஒரு அடக்கமான பெண்ணைப் போல் யாருடனும் அதிகம் பேசாமல் தான் உண்டு தன் வீட்டுப்பணி உண்டு என்று இருந்தாள். குளிர்காலம் முடிந்து இளவேனில் தொடக்கத்தில் ஒருநாள் ஜெயராமன் அலுவலகத்தில் அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்தான். அதில் நலவாழ்வு பற்றிய பகுதியில் கண்ட ஒரு கட்டுரை அவனை ஆர்வமுடன் வாசிக்க செய்தது.

அந்த கட்டுரையின் சுருக்கம் இதுதான். "சூரிய ஒளிக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் சூரிய ஒளிக்கும் மனநிலைக்கும் தொடர்பு உள்ளது என ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பல மக்களின் மன நிலை பாதிக்கப்பட்டு ஒரு மனநிலை சுணக்கம் (depression) உண்டாகிறது. கோடையில் அது நீங்கி புத்துணர்வு பெறுகிறார்கள்"

அடுத்த குளிர் காலத்தில் உஷாவின் மனநிலை எப்படி இருக்குமோ என ஜெயராமன் தயங்கிக் கொண்டுதான் இருந்தான். அதே நேரத்தில் வீட்டுக்குள் சன்னல்கள் வழியே சூரிய வெளிச்சம் நன்கு பாயும் வண்ணம் பார்த்துக் கொண்டான். உஷாவும் தன் சூரிய வழிபாட்டை தொடர்ந்தாள்.

அவன் அஞ்சியதற்கு மாறாகவே உஷாவுக்கு மனநிலை சுணக்கம் என்பது ஒரு முடிந்து போன பழம்கதை ஆகிவிட்டது. அவளும் வழக்கம் போல கலகலப்பான ஒரு இல்லத்தரசியாக மிளிர்ந்தாள்..

http://www.usatoday.com/weather/resources/safety/2005-02-21-health-mental-health_x.htm


வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

23 comments:

  1. கதை கொஞ்சம் நீஈஈஈஈளமாயிடுச்சு..,., இருந்தாலும் செய்தி நல்ல செய்தி... நன்றி,

    ReplyDelete
  2. நல்ல தகவல்...
    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. //Mahesh said...
    கதை கொஞ்சம் நீஈஈஈஈளமாயிடுச்சு..,., இருந்தாலும் செய்தி நல்ல செய்தி... நன்றி,
    //

    நீங்க போட்ட உடனே உடனே வந்துடறீங்க அண்ணே! இஃகிஃகி!! வெட்டித் தவுக்கார் பண்ணிட்டேன் இப்ப!!!

    ReplyDelete
  4. இது சேரன் ஐயா படத்தோட சம்சாரம்.. ஓ சாரி.. சாராம்சம் மாதிரி இல்ல இருக்கு.. ஹிஹி.. நல்ல தகவலுங்க.. அந்த நாட்டு மக்களுக்கே இருக்குங்க.. so called SAD: seasonal affective disorder..or winter blues..

    ReplyDelete
  5. முன்பெல்லாம் வெயில் காயறதுன்னு ஒரு பழக்கம் இருந்தது.அது ஒண்ணுமில்ல.தூங்கி எந்திரிச்சு அப்புறம் திண்ணையில உட்கார்ந்து பொம்பளைங்கன்னா பேன் பார்க்கிறது.ஆம்பிளைகன்னா வெட்டிக்கதை பேசறதுன்னு.

    (பேன் பார்க்கிறது எப்படின்னு ஒரு மொக்கைக்கான சரக்கு பின்னூட்டமா போச்சே)

    ReplyDelete
  6. அதனால தான் அந்தகாலத்தில் எல்லொரும் சூரிய வந்தனம் செய்தார்கள்.

    இப்ப இதெல்லாம் செய்ய நமக்குத்தான் நேரமில்லையே.

    சூரிய சக்தியக்கூட சுருட்டி ஒரு மாத்திரை வடிவில் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  7. சொல்ல வந்தது ஞாயிறு போற்றுதல் புதுசுங்கண்ணா புதுசு!

    ReplyDelete
  8. "தவுக்கார்" தமிழா? சௌராஷ்ட்ரம் மாதிரி இருக்கே?

    ReplyDelete
  9. //வேத்தியன் said...
    நல்ல தகவல்...
    தகவலுக்கு நன்றி...
    //

    நீங்க வர்றப்பவெல்லாம் கடன் கொடுத்தவன் வசூலுக்கு வர்ற மாதிரியே இருக்குங்க... நீங்க கொக்கி போட்ட பதிவுகளுக்கு இன்னும் பதிவு போடலை...போடுறேன், போடுறேன்...

    உங்களுக்கு பயப்படுறேனோ இல்லையோ, இராகவன் ஐயாவுக்கு பதில் சொல்லி ஆகணுமே?!

    ReplyDelete
  10. //கலகலப்ரியா said...
    இது சேரன் ஐயா படத்தோட சம்சாரம்.. ஓ சாரி.. சாராம்சம் மாதிரி இல்ல இருக்கு.. ஹிஹி.. நல்ல தகவலுங்க.. அந்த நாட்டு மக்களுக்கே இருக்குங்க.. so called SAD: seasonal affective disorder..or winter blues..

    //

    வாங்க கலக்கற கலக்கல்ப்ரியா, மேலதிகத் தகவலுக்கு நன்றிங்கோ!!

    ReplyDelete
  11. மெய்யாளுமாப்பா..இப்படி எல்லாம் வியாதி இருக்கா இன்னா?.....ஆனா இந்த குளிர் காலத்துல மனச் சோர்வு இருக்குறது உண்மை தான்...நீங்க தெற்கு கரோலினால இருக்கீங்கன்னு நினைக்குறேன்....உங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை....நியு யார்க்ல இருக்குற எங்களுக்கு குளிர் காலம் வந்தால் மதியம் 3 மணிக்கெல்லாம் இருட்டி, ஊரெல்லாம் விளக்கு போட்ருக்குறது பார்த்தாலே depression தான்

    நல்ல செய்தி

    ReplyDelete
  12. உங்களோட தலைப்பும் "நச்"

    ReplyDelete
  13. //Mahesh said...
    "தவுக்கார்" தமிழா? சௌராஷ்ட்ரம் மாதிரி இருக்கே?
    //



    தவுக்கார்பண்(ணு)-தல் tavukkār-paṇ-
    , v. tr. < தவுக்கார் +. To plaster roughly; மட்டிக் காரை பூசித்தேய்த்தல். Loc.

    ReplyDelete
  14. ஞாயிறு போற்றுதல் அப்படின்னதும் நீங்க ஏதோ ஞாயிற்றுக் கிழமையை எப்படி யூஸ் பண்ணலாம்னு சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்....

    ஆனா உங்க பதிவு அதைவிட யூஸ் ஃபுல்லா இருக்கு...

    ReplyDelete
  15. எனக்கு பிடிக்காதது சன் லைட்..ரொம்ப பிடிச்சது மழைக்காலம்..அப்புறம் வின்டர்... இருட்டானா தான் என் மூளையே சுறுசுறுப்பாவுது...:0))

    ReplyDelete
  16. சூரிய யோகி என்கிற மகாசூர்ய தேஜஸ்வி சுவாமிகள் சூர்யனை வழிபடும் முறையை தவமுறையாக
    அமைத்து தொண்டாற்றி வருகிறார்

    சக்தி களஞ்சியமான சூரியனை உதயத்தின் போது இருபது நிமிட தரிசனம் செய்து பலன் அடையலாம்

    ReplyDelete
  17. பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  18. நல்ல பயனுள்ள பதிவு ,
    "திங்களைப் போற்றுதும் ...மாமழை போற்றுதும்!!! "
    சிலப்பதிகாரம் ஞாபகம் வருது,ஞாயிற்றைப் போற்றுவோம் ,ஆனா இங்க நான் ஒரு விஷயம் சொல்லனுமே ,"எட்டு மணிக்கு எழுந்தா ஞாயிறு கொச்சிட்டு சுட்டெரிக்க மாட்டாரா? என்ன?உதயத்தில் போற்றலாம் ,நீங்க உதயம் பார்க்கற வழக்கம் உண்டோ?!

    ReplyDelete
  19. //ராஜ நடராஜன் said...
    முன்பெல்லாம் வெயில் காயறதுன்னு ஒரு பழக்கம் இருந்தது.அது ஒண்ணுமில்ல.தூங்கி எந்திரிச்சு அப்புறம் திண்ணையில உட்கார்ந்து பொம்பளைங்கன்னா பேன் பார்க்கிறது.ஆம்பிளைகன்னா வெட்டிக்கதை பேசறதுன்னு.

    (பேன் பார்க்கிறது எப்படின்னு ஒரு மொக்கைக்கான சரக்கு பின்னூட்டமா போச்சே)
    //

    அக்ஃகா! நல்ல பழைய சமாச்சாரங்களை ஞாவகப் படுத்தி இருக்கீங்க... இஃகிஃகி!

    ReplyDelete
  20. //மிஸஸ்.டவுட் said...
    எட்டு மணிக்கு எழுந்தா ஞாயிறு கொச்சிட்டு சுட்டெரிக்க மாட்டாரா? என்ன?உதயத்தில் போற்றலாம் ,நீங்க உதயம் பார்க்கற வழக்கம் உண்டோ?!
    //

    சகோதரி, எதோ ஒரு நேரம் குறைந்தது அஞ்சு நிமிசம் சூரிய வெளிச்சம் போதுமானதாம்! இஃகிஃகி!!

    ReplyDelete
  21. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  22. நல்ல பயனுள்ள கதை

    ReplyDelete