3/20/2009

சக்களத்தியும், காவாலிப் பயலும்!!

ஒரு நாள் வழக்கம் போல எங்க தமிழ் ஆசிரியர் வகுப்பறைக்குள்ள வந்தப்ப, அவனவன் செய்யுளுகளை உறுத் தட்டு தட்டுன்னு தட்டிட்டு இருந்தோம். ஏன்னா, அன்னைக்கு எங்களுக்கு மாதாந்திரத் தேர்வு நடக்க வேண்டிய நாள். ஆனா, வந்த அவரு, ‘டேய், எல்லாரும் புத்தகத்தை மூடி வையுங்க’ன்னு சொல்லிட்டு, உலகத்துல நல்லது, கெட்டதுன்னு எதுவுமே இல்லடான்னாரு.

உடனே முன்னாடி வரிசை நல்ல பசங்கள்ல ஒருத்தன் எழுந்து, ’ஐயா, கொல்வது, அடிப்பது எல்லாம் கெட்டதுதானே?’ன்னான்.

அவரு, ’நல்ல கேள்வி! பின்னாடி வரிசைத் தண்டங்களுக்குக் கேள்வி கேட்கணும்ங்ற எண்ணம் எப்பவுமே வராதா?’ன்னு என்னைப் பாத்து கரிச்சுக் கொட்டிட்டு, சொல்ல ஆரம்பிச்சாரு, ‘எந்த வினை(காரியம்)யும் நடக்குற இடம், பொருள் ஏவலைப் பொறுத்துத்தான் நல்லதாவோ, கெட்டதாவோ இருக்கும். காரியம் மாத்திரமே கெட்டதாகவும் முடியாது, நல்லதாகவும் முடியாது! அந்த வகையில தீயவனைக் கொலவது நல்லது. சாமான்யனைக் கொல்வது கெட்டது!’ன்னாரு.

அதைக் கேட்ட நான், இவருக்கு நல்லா முத்திடுச்சி போல இருக்குன்னும், என்னை மக்குன்னு திட்டிட்டாரேன்னும் நினைச்சிட்டே எந்திரிச்சி, ‘ஐயா, அது எந்த இடம், பொருள், ஏவலா வேணாலும் இருக்கட்டும், கற்பழிப்புங்றது எப்படி ந்ல்லதாகும்?’ன்னு போட்டுத் தாக்கினேன். கூடக் கடைசி வரிசையில இருந்த என்னோட சிநேகிதனுக எல்லாம், பெருமிதத்தோட நிமிர்ந்து உக்காந்தாங்க.

சாவகாசமா எங்கபக்கம் திரும்பின அவரு, ‘உங்களை மாதிரித்தானடா இருக்கும், உங்க புத்தியும்?! டேய், கற்பழித்தல்ங்றது ஒரு அடிப்படைக் காரியம் கிடையாதுடா. இசைவின்றிப் புணர்தல்ங்றதனோட மறுசொல்தான் இது. இசைவின்றிங்ற இடம் பொருள் ஏவல் அதுல தொக்கி நிக்கிறதால, அது கெடுதல். இல்லாட்டா, அது நல்லது!’ன்னு விளக்கம் சொன்னாரு. அவர் அப்ப சொன்னது, இப்பதாங்க எனக்கு சரியாப்படுது. இஃகிஃகி!!

எதுக்கு இந்த நிகழ்வைச் சொல்லுறேன்னா, நிறையப் பேர் வலைப்பூ நடத்துவதும், வாசிப்பதும், கெடுதல் அல்லது நல்லதுன்னு விவாதம் செய்யுறாங்க. எங்க ஆசிரியர் சொன்னா மாதிரி, இடம் பொருள் ஏவலைப் பொறுத்ததுதான் இதுவும். நம்ம பக்கத்தோட வாசகர், அபிமானி தம்பி ஸ்ரீராம் வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்ன்னு ஒரு வலைத் தொடர் ஆரம்பிச்சி, நூறு பதிவுகளுக்கு மேல, இப்ப அந்தத் தொடர்ல இடம் புடிச்சி இருக்கு. கிட்டத்தட்ட மூனு மணி நேரம் இந்த வாரத்துல அதுகளைப் படிக்கிறதுல நேரம் செலவழிச்சதுல, நிறையத் தெரிஞ்சிக்க முடிஞ்சது. அவருக்கும், தொடர்ல கலந்துகிட்ட எல்லாருக்கும் நன்றி சொல்லியாகணும். இஃகிஃகி!!

நல்லது கெட்டது பாத்தம்ல? தலைப்புல இருக்குற சொற்கள் நல்லதா? கெட்டதா?? இஃகிஃகி! ‘டேய், அது இடம் பொருள் ஏவலைப் பொறுத்தது’ன்னு நீங்க சொல்லுறது கேக்குது, கேக்குது... சரி அப்ப, அதுகளோட அர்த்தத்தை அலசித் துவச்சிக் காயப் போடலாம் வாங்க.

மனையில் துணைவியாக வாழுறவ மனைவி! அதையே வீட்டுக்காரின்னும் சொல்லுறோம். வாழ்க்கைங்ற களத்துல துணையா இருக்குற அதே மகராசியக் களத்தின்னும் சொல்லுறது. களத்திரம்ன்னும் சொல்லுறாங்க. சக பதிவர்ங்ற மாதிரி, சக மனைவி, இஃகிஃகி, மனைவி மாதிரி, களத்தி மாதிரி இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி! சக களத்தி இருக்குறது நல்லதா, கெட்டதா இராசா? உங்க இடம் பொருள் ஏவல் என்னா சொல்லுது?? மனைவியே இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும் இராசா, கவலைய விடுங்க!

காவாலின்னா இளமை! இளங்கன்று பயமறியாதுங்ற மாதிரி, இள வயசுல இருக்குறவங்க விடலையா இருப்பாங்கன்னு ஒரு மனநிலை. அந்த இடம் பொருள் ஏவல்ல, ஊர்வழில சொல்லுறது, ’காவாலிக எல்லாம் கோயில்த் திண்ணையில இருப்பாங்க! அவன் ஒரு காவாலி!’, இப்படி பல வாக்குல காவலியப் பேசுறதுங்க.

அறிவால் உணரும்போது அனுமானம் எதற்கு?

58 comments:

  1. நல்லா புரிஞ்சு போச்சு..விளக்கத்துக்கு நன்றி

    ReplyDelete
  2. //நசரேயன் said...
    நல்லா புரிஞ்சு போச்சு..விளக்கத்துக்கு நன்றி
    //

    தளபதி, பதிவை முழுசாப் படிச்ச மாதிரித் தெரியலையே?!

    ReplyDelete
  3. //மனைவியே இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும் இராசா, கவலைய விடுங்க!//

    குடுகுடுப்புக்காரன் மாதிரி பேசுறீங்களேண்ணே...

    ஆனாலும் நீங்க சொல்லுறத கேக்க நல்லாதான் இருக்கு.

    இஃகி இஃகி

    ReplyDelete
  4. ////நசரேயன் said...
    நல்லா புரிஞ்சு போச்சு..விளக்கத்துக்கு நன்றி
    //

    தளபதி, பதிவை முழுசாப் படிச்ச மாதிரித் தெரியலையே?!//

    சத்தியமா google reader la படிச்சேன்

    ReplyDelete
  5. என்னா ஒரு தலைப்பு!!!

    ReplyDelete
  6. //பின்னாடி வரிசைத் தண்டங்களுக்குக் கேள்வி கேட்கணும்ங்ற எண்ணம் எப்பவுமே வராதா?’ன்னு என்னைப் பாத்து கரிச்சுக் கொட்டிட்டு//

    இஃகிஃகி இஃகிஃகி!!

    ReplyDelete
  7. // மனைவி மாதிரி, களத்தி மாதிரி இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி! //

    நல்ல விளக்கம் அண்ண்ச்சி:)))
    இப்போ புரியுது நல்லாவே!

    ReplyDelete
  8. //மனைவியே இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும் இராசா, கவலைய விடுங்க!
    //

    அட! அட! அட!

    எம்புட்டு நல்ல எண்ணம்!!!

    ReplyDelete
  9. // பழமைபேசி said...
    //நசரேயன் said...
    நல்லா புரிஞ்சு போச்சு..விளக்கத்துக்கு நன்றி
    //

    தளபதி, பதிவை முழுசாப் படிச்ச மாதிரித் தெரியலையே?!

    //

    :)))

    ReplyDelete
  10. நம்ம ஊரு பக்கம் சக்களத்திக்கு வேறல்ல அர்த்தம். இரண்டாவதா ஒருத்திய தேடினா அதுக்குத்தான் இப்படி கூறுவாக.

    ReplyDelete
  11. அஜால், குஜால் கேள்விப்படிருப்பீங்க... கஜல்...? நம்ம வலைக்கு வாங்க!

    ReplyDelete
  12. வணக்கமுங்க.. வாழ்க தமிழ் வாத்தியார், வளர்க பின்னாடி வரிசைத் தண்டச் சோறு..!

    ReplyDelete
  13. //அப்பாவி முரு said...
    குடுகுடுப்புக்காரன் மாதிரி பேசுறீங்களேண்ணே...ஆனாலும் நீங்க சொல்லுறத கேக்க நல்லாதான் இருக்கு.இஃகி இஃகி
    //

    நெசம் சொன்னா இப்பிடி சிரிக்கிறீகளே?! இஃகிஃகி!!

    ReplyDelete
  14. அந்த இடம் பொருள் ஏவல்ல, ஊர்வழில சொல்லுறது, ’காவாலிக எல்லாம் கோயில்த் திண்ணையில இருப்பாங்க! அவன் ஒரு காவாலி!’, இப்படி பல வாக்குல காவலியப் பேசுறதுங்க//


    ஆஹா...சின்ன வயசு நினைவுகளை எல்லாம் மீட்டிக் கலக்குறீங்களே....

    பதிவு சுவையும் சுவாரசியமும் நிறைந்தது....தொடருங்கோ நண்பரே...

    ReplyDelete
  15. //குடந்தைஅன்புமணி said...
    நம்ம ஊரு பக்கம் சக்களத்திக்கு வேறல்ல அர்த்தம். இரண்டாவதா ஒருத்திய தேடினா அதுக்குத்தான் இப்படி கூறுவாக.
    //

    அதையேதான் நானுஞ் சொல்லுதேன்.... இஃகிஃகி!

    ReplyDelete
  16. //Poornima Saravana kumar said...
    என்னா ஒரு தலைப்பு!!!
    //

    இஃகிஃகி!!

    ReplyDelete
  17. அப்பொ... நீங்களும் நானும் காவலிகளா? இஃகி ! இஃகி !! இஃகி !!!

    ReplyDelete
  18. நல்லா புரிஞ்சு போச்சு..விளக்கத்துக்கு நன்றி...


    நன்றி :நசரேயன்

    ReplyDelete
  19. குடுகுடுப்புக்காரன் மாதிரி பேசுறீங்களேண்ணே...

    ஆனாலும் நீங்க சொல்லுறத கேக்க நல்லாதான் இருக்கு.

    இஃகி இஃகி


    பின்னூட்ட உதவி : அப்பாவி முரு

    ReplyDelete
  20. சத்தியமா google reader la படிச்சேன்


    பின்னூட்ட உதவி : நசரேயன்

    ReplyDelete
  21. ஓ...................



    பின்னூட்ட உதவி : SUREஷ்

    ReplyDelete
  22. என்னா ஒரு தலைப்பு!!!




    பிண்ணூட்ட உதவி : Poornima Saravana kumar

    ReplyDelete
  23. //பின்னாடி வரிசைத் தண்டங்களுக்குக் கேள்வி கேட்கணும்ங்ற எண்ணம் எப்பவுமே வராதா?’ன்னு என்னைப் பாத்து கரிச்சுக் கொட்டிட்டு//

    இஃகிஃகி இஃகிஃகி!!



    பின்னூட்ட உதவி : Poornima Saravana kumar

    ReplyDelete
  24. பின்னூட்ட களவானித்தனம் :::


    25

    ReplyDelete
  25. // மனைவி மாதிரி, களத்தி மாதிரி இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி! //

    நல்ல விளக்கம் அண்ண்ச்சி:)))
    இப்போ புரியுது நல்லாவே!



    பின்னூட்ட உதவி : Poornima Saravana kumar

    ReplyDelete
  26. //மனைவியே இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும் இராசா, கவலைய விடுங்க!
    //

    அட! அட! அட!

    எம்புட்டு நல்ல எண்ணம்!!!


    பின்னூட்ட உதவி/: Poornima Saravana kumar

    ReplyDelete
  27. நம்ம ஊரு பக்கம் சக்களத்திக்கு வேறல்ல அர்த்தம். இரண்டாவதா ஒருத்திய தேடினா அதுக்குத்தான் இப்படி கூறுவாக.


    பின்னூட்ட உதவி : குடந்தைஅன்புமணி

    ReplyDelete
  28. அஜால், குஜால் கேள்விப்படிருப்பீங்க... கஜல்...? நம்ம வலைக்கு வாங்க!


    பின்னூட்டா உதவி : குடந்தைஅன்புமணி

    ReplyDelete
  29. வணக்கமுங்க.. வாழ்க தமிழ் வாத்தியார், வளர்க பின்னாடி வரிசைத் தண்டச் சோறு..!


    பின்னூட்ட உதவி : Eezhapriya

    ReplyDelete
  30. அந்த இடம் பொருள் ஏவல்ல, ஊர்வழில சொல்லுறது, ’காவாலிக எல்லாம் கோயில்த் திண்ணையில இருப்பாங்க! அவன் ஒரு காவாலி!’, இப்படி பல வாக்குல காவலியப் பேசுறதுங்க//


    ஆஹா...சின்ன வயசு நினைவுகளை எல்லாம் மீட்டிக் கலக்குறீங்களே....

    பதிவு சுவையும் சுவாரசியமும் நிறைந்தது....தொடருங்கோ நண்பரே...


    பின்னூட்ட உதவி “: கமல்

    ReplyDelete
  31. அப்பொ... நீங்களும் நானும் காவலிகளா? இஃகி ! இஃகி !! இஃகி !!!


    பின்னூட்ட உதவி : Mahesh

    ReplyDelete
  32. ஹி ஹி. நம்ம வாத்தி இப்படி சொன்னாங்க. இல்லக் கிழத்தின்னா மனைவி. இன்னோண்ண கொண்டு வந்து வெச்சா சகக் கிழத்தி. மாதிரி எல்லாம் இல்லை. மாதிரின்னா பேரு வேறங்க பழமை. கிழத்திக்கு என்னல்லாம் உரிமை இருக்கோ அதேல்லாம் சகக்கிழத்தி(சக்களத்தி). ஒரு வேளை கிழத்தி தான் களத்தின்னு மறுவிச்சோன்னு நீங்கதான் சொல்லணும். ஹெ ஹெ. காவாலி கொஞ்சம் தூக்கலா இருந்தா தான் சக்களத்திக்கு இடமோ? சின்ன வயசுல சினிமா நெறய பார்த்திங்களோ?

    ReplyDelete
  33. இதுக்கு முன்னாடி போட்ட பின்னூட்டங்கள் நான் போட்டது இல்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க???

    ReplyDelete
  34. இதோ பாருங்க நானும் “ காவாலி தான்” காவாலி தான் ..

    ReplyDelete
  35. எப்படி இப்படி தலைப்பு வைக்குறீங்க ??
    ஒரே குஜால கீது

    ReplyDelete
  36. நல்ல விளக்கம்...


    ( நான் மெய்யாலுமே படிச்சிட்ட்டு தான் சொல்றேன் )

    ReplyDelete
  37. //அவனவன் செய்யுளுகளை உறுத் தட்டு தட்டுன்னு தட்டிட்டு இருந்தோம்.///

    விளக்கம் தேவை...

    ReplyDelete
  38. ///நல்ல கேள்வி! பின்னாடி வரிசைத் தண்டங்களுக்குக் கேள்வி கேட்கணும்ங்ற எண்ணம் எப்பவுமே வராதா?///

    நமக்கு பதில் சொல்லவே வராது, இதுல கேள்வி வேற கேக்கனுமா??

    ReplyDelete
  39. //உருப்புடாதது_அணிமா said...
    //அவனவன் செய்யுளுகளை உறுத் தட்டு தட்டுன்னு தட்டிட்டு இருந்தோம்.///

    விளக்கம் தேவை...
    //

    உறுத்தட்டுறதுன்னா, மனப்பாடம் செய்யுறதுங்க மலைக்கோட்டையார்!

    ReplyDelete
  40. //இடம் பொருள் ஏவலைப் பொறுத்தது’///


    எனக்கு தெரிஞ்சது எல்லாம் இடம், பொருள் ஆவி ( ஆனந்தி தான் )

    ReplyDelete
  41. //Bala said...
    ஹி ஹி. நம்ம வாத்தி இப்படி சொன்னாங்க. இல்லக் கிழத்தின்னா மனைவி. இன்னோண்ண கொண்டு வந்து வெச்சா சகக் கிழத்தி. மாதிரி எல்லாம் இல்லை. மாதிரின்னா பேரு வேறங்க பழமை. கிழத்திக்கு என்னல்லாம் உரிமை இருக்கோ அதேல்லாம் சகக்கிழத்தி(சக்களத்தி). ஒரு வேளை கிழத்தி தான் களத்தின்னு மறுவிச்சோன்னு நீங்கதான் சொல்லணும்.
    //

    பாலாண்ணே, வாங்கோ! களத்திர தோசம், களத்திரம் எல்லாம் முறையான மனையாளுக்கு போட்டியா வர்ற விடயங்கள்தானுங்க அண்ணே!

    ReplyDelete
  42. //அவர் அப்ப சொன்னது, இப்பதாங்க எனக்கு சரியாப்படுது. இஃகிஃகி!!///


    அப்போ சரி..

    ReplyDelete
  43. //Eezhapriya said...
    வணக்கமுங்க.. வாழ்க தமிழ் வாத்தியார், வளர்க பின்னாடி வரிசைத் தண்டச் சோறு..!
    //

    வாங்க கலகலப்ரியா! இஃகிஃகி, நீங்களும் என்னைக் காவாலின்னே முடிவு செய்துட்டீங்க போல? அவ்வ்...

    ReplyDelete
  44. ///பழமைபேசி said...

    //உருப்புடாதது_அணிமா said...
    //அவனவன் செய்யுளுகளை உறுத் தட்டு தட்டுன்னு தட்டிட்டு இருந்தோம்.///

    விளக்கம் தேவை...
    //

    உறுத்தட்டுறதுன்னா, மனப்பாடம் செய்யுறதுங்க மலைக்கோட்டையார்!///


    அதெல்லாம் எனக்கு தெரியாது...
    எதுக்கு மனப்பாடம் பன்னனும்.. ( அதுக்கு தான் பிட் அடித்தல் என்ற சொல்+வழிமுறை இருக்கே)

    ReplyDelete
  45. //மனைவியே இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும் இராசா, கவலைய விடுங்க!////

    அப்படி எதுனா நடந்தா சரிதான்..
    ( உம்ம்ம்...)

    ReplyDelete
  46. நான் தனியா இங்க ஆடிக்கிட்டு இருக்கேன்..

    யாருமே இல்லியா??

    ReplyDelete
  47. மலைக்கோட்டையார் நான் இப்பத்தான் தேகப் பயிற்சி சாலையில இருந்து வந்தேன்... குளிச்சிட்டு வந்தடுறேன்...இல்லாட்டா நாற்றம் உங்கூரு வரைக்கும் வந்தாலும் வந்திடும்... இஃகிஃகி!

    ReplyDelete
  48. நான் தான் அம்பது...

    எப்படி எங்க பின்னூட்ட வேகம் ??

    ReplyDelete
  49. //பழமைபேசி said...

    மலைக்கோட்டையார் நான் இப்பத்தான் தேகப் பயிற்சி சாலையில இருந்து வந்தேன்... குளிச்சிட்டு வந்தடுறேன்...இல்லாட்டா நாற்றம் உங்கூரு வரைக்கும் வந்தாலும் வந்திடும்... இஃகிஃகி!///

    நாற்றம் என்றால் மணம் என்று எங்கோ படித்ததாக நியாபகம்!!!
    இஃகிஃகி

    ReplyDelete
  50. தேர்தல்ல தான் கள்ள ஓட்டு. பின்னூட்டத்திலையுமா. பழமபேசி செல்லாத ஓட்டா அறிவிக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  51. //Bala said...
    தேர்தல்ல தான் கள்ள ஓட்டு. பின்னூட்டத்திலையுமா. பழமபேசி செல்லாத ஓட்டா அறிவிக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
    //

    இஃகிஃகி! மலைக்கோட்டையார் எப்பவும் இப்படித்தானுங்க பாலாண்ணே! அவர் ஒரு பின்னூட்டச் சக்கரவர்த்தி!!

    ReplyDelete
  52. //
    சக பதிவர்ங்ற மாதிரி, சக மனைவி, இஃகிஃகி, மனைவி மாதிரி, களத்தி மாதிரி இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி!
    //

    அட ஆமாங்க....நான் கூட சக களத்தி, சக களத்தி, சக களத்தின்னு சொல்லிப் பார்த்தேன்..கடைசில சக்களத்தின்னு மாறிடுது!

    ReplyDelete
  53. //இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி//

    அடி வாடி என் சக்களத்தின்னு ஊர் அம்மணிக குழாயடிச் சண்டை ஏன் போட்டாங்கன்னு இப்பத்தானே எனக்குத் தெரியுது

    ReplyDelete
  54. வந்து போன எல்லா அண்ணாச்சிகளுக்கும், சகோதரிகளுக்கும் நன்றிங்கோ!!!

    ReplyDelete