3/17/2009

பள்ளயம் 03/17/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய பதிவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

அமெரிக்காவில்:

பள்ளயத்துல ஒரு படைப்பு அமெரிக்காவைப் பத்தினதா எழுதுறது வழக்கம்! அதான், இன்னைக்கும்!! இஃகிஃகி!!! விசயம் என்னன்னா, சில மாகாண அரசுகள்கிட்ட போதுமான நிதி இருப்பு இல்லீங்களாம். ஆக, வருமான வரிப் பிடித்தத்துல இருந்து வர வேண்டி திரும்பு தொகை இப்போதைக்கு வராதாமுங்க. எப்ப வருமோ, என்னவோ போங்க?!

அசைவுகள்

தமிழ் தொனமையான மொழி, செம்மொழி! அதனால, எந்த ஒரு செய்கை, உணர்வு, எதுவானாலும் பிறழ்வும் திரிபும் ஐயமும் குழப்பமும் இல்லாம அப்படியே கொண்டு போய்ச் சேர்க்க வல்லதுங்றது நமக்கெல்லாம் நிறைய நேரங்கள்ல தெரியறது இல்ல. இந்த நிலைமை வந்ததுக்கான காரணங்களை அலசுறதுல, நமக்கொன்னும் கிடைக்கப் போறது கிடையாது! இஃகிஃகி!! அதை விடுங்க, இந்த அசைவுகளை எப்படியெல்லாம் தமிழ் சொல்லுதுன்னு பாக்கலாம் வாங்க.

மேலுக்கும் கீழுக்கும்(vertical) ஏற்படுற அசைவு குலுங்கல். அதையே நாம, "டேய், ஒரு குலுக்கு குலுக்குடா"ன்னும் சொல்லுறோம். இங்கயும் அங்கயும் (horizontal)அசையுறதச் சொல்லுறது அலுங்கல். ஊர் வழில சொல்லக் கேட்டு இருப்பீங்க, "டேய், அலுங்காமக் குலுங்காமக் கொண்டு வரணும்"ன்னு. வளைஞ்சு வளைஞ்சு(circular) அசையுறத சொல்லுறோம், கலங்கல்ன்னு. சாஞ்ச வாக்குல(slant) அசையுறதச் சொல்லுறது மலங்கல்ன்னு. சோள மூட்டை மலங்கிடுச்சுங்றோம். ஒட்டு மொத்தமா நாலாபுறமும் உள்நோக்கி அசைஞ்சி, கசங்கிப் போறதைச் (crush) சொல்லுறது, நலங்கல்ன்னு. அதையே நலுங்குதல்ன்னும் சொல்லுறது. மேற்புறமா நடக்குற அசைவுக்கு சொல்லுறது துலங்கல். அப்படி நடக்குறதால ஏற்படுற அந்த மினுமினுப்பைப் பாத்து சொல்லுறது, ”டேய், புளி போட்டுத் தேச்சதுல சால் நல்லாத் துலங்கிடுச்சு”ன்னு. இப்படி நிறைய அசைவுகள் இருக்கு, அதை இனியொரு நாளைக்குப் பாக்கலாமே? இஃகிஃகி!!

(நன்றி: சித்தகிரி கண்காட்சி)

மேல இருக்குற படத்துல இருக்குற பெரியவர், சாணை பிடிச்சிட்டு இருக்காரு. அந்த சாணைச் சக்கரத்தைப் பத்தி நிறைய எழுத வேண்டி இருக்கு. அதையும் இனியொரு நாளைக்கு வெச்சிகிடலாமுங்க. வெளியூர்ல இருக்கோம், கால அவகாசம் இல்லை, அதான்! இஃகிஃகி!!

நெல்-எள் கணக்கு

கணக்கு குடுத்தா, நாளமேல் உங்கபக்கமே வரமாட்டோம்ன்னு சொல்லுறாங்க. குடுக்காட்டி, என்ன இன்னைக்கு கணக்கு எதுவும் இல்லையான்னு கேக்குறாங்க? அதான், இந்தப் பதிவுல ஒரு சின்னக் கணக்கு. இஃகிஃகி!!

எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல் அளமானால், ஒரு ஆள்பிரமாணம் வெட்டினவனுக்கு எத்தனை நெல்?


8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்

சாண் 8 கொண்டது ஆள் பிரமாணமென்றறிந்து, எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல்லு அ(8). ஆக, மனிதர்மட்டமாவது எண்சாணுயரம். இதை வைத்து 8 சாண் உயர் மனிதனுக்கு எவ்வளவு நெல் என்று கணக்கிடுங்களேன்.இஃகிஃகி!!

எதற்கும் நல்லது கெட்டது கிடையாது!

40 comments:

  1. பள்ளயம் அருமை...

    நெல் - எள் கணக்குக்கு வரும் பாருங்க பதிலுக சள் சள்னு !!!

    ReplyDelete
  2. மலங்க மலங்க முழிக்காதன்னு ஏன் சொல்றாங்க ? ஹி ஹி

    [ நான் தன் முதல்னு ஆர்வமா பின்னூட்டம் போடா வந்தேன் ..ஹ்ம்ம்....இதுக்குன்னே ஒரு கோஷ்டி இருக்குப்பா ]

    ReplyDelete
  3. ***///எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல் அளமானால், ஒரு ஆள்பிரமாணம் வெட்டினவனுக்கு எத்தனை நெல்?///***

    கேள்வியை நீ கேக்குறியா...இல்லை நான் கேக்கட்டுமா...
    நானே கேக்குறேன்..எனக்கு கேட்டு தான் பழக்கம்...கொள்கை .மாற மாட்டோம்ல

    ReplyDelete
  4. என் அறிவ நல்லா துலக்கிட்டீங்க அண்ணே

    :))

    ReplyDelete
  5. அலுங்கல் குலுங்கல் எல்லாமே அருமை...

    ReplyDelete
  6. பள்ளயம் மிக அருமை.

    "குழந்தை நலுங்கிடப்போகுது, பத்திரமா பார்த்துக்குங்க"னு நம்மூர்ப்பக்கம் சொல்வாங்க. அதுவும் இதுவும் ஒண்ணா?

    ReplyDelete
  7. //எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல் அளமானால், ஒரு ஆள்பிரமாணம் வெட்டினவனுக்கு எத்தனை நெல்?//

    நல்லாக் கேக்குறாங்கய்யா கணக்கு.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்!!


    (யாராச்சும் பதில் போடுங்களே...)

    ReplyDelete
  8. எல்லாம் சுவாரசியமான தகவல்களாய் தந்துட்டு வழக்கம் போல ஒரு கணக்கு சொல்லி குழப்பவுட்டுட்டீங்களே அண்ணே...

    ReplyDelete
  9. உண்மைதான் கணக்கு எனக்கு பிணக்கு .. அதனால் தான் பயம்மா இருக்கு இந்த பக்கம் வரவே..
    :)
    அலுங்கல் நலுங்க ல் நல்லா புரியுது இப்ப..

    ReplyDelete
  10. நல்லா கலக்கிட்டீங்க... என் அறிவு துலங்கிடுச்சு... அகோ... ராமானுஜம் சாரோட வாரிசு யாருங்க... வாங்க... வாங்க...

    ReplyDelete
  11. வணக்கம்

    அட இப்ப புரியுது தமிழ்

    அலுங்கல், குல்ங்கல்............

    ம்ம்ம்ம் இதுவும் நல்லா இருக்கு

    நன்றி
    இராஜராஜன்

    ReplyDelete
  12. //Mahesh said...
    பள்ளயம் அருமை...

    நெல் - எள் கணக்குக்கு வரும் பாருங்க பதிலுக சள் சள்னு !!!
    //

    நன்றிங்க மகேசு அண்ணாச்சி!

    உங்களுக்குப் பின்னாடி வர்றவிங்கல்லாம், நாய் நரின்னு சொல்லாமச் சொல்றீங்களா அண்ணே? இஃகிஃகி!!

    சள் = குரைத்தல்

    நெல் - எள் கணக்குக்கு வரும் பாருங்க பதிலுக சல் சல்னு !!!

    ReplyDelete
  13. இஃகி! இஃகி !!

    ஃபெல்லிங் மிஷ்டிக் ஆகிப் பூட்ச்சா?

    யருக்குமெ வெட தெரியலயா? ம்ம்... சரி... நானே சொல்லிடறேன்.. காதைக் கிட்டக் கொண்டு வாங்க...
    ...
    ..
    அதான் !! சரியா?

    ReplyDelete
  14. //நிலாவும் அம்மாவும் said...
    மலங்க மலங்க முழிக்காதன்னு ஏன் சொல்றாங்க ? ஹி ஹி

    [ நான் தன் முதல்னு ஆர்வமா பின்னூட்டம் போடா வந்தேன் ..ஹ்ம்ம்....இதுக்குன்னே ஒரு கோஷ்டி இருக்குப்பா ]
    //

    வாங்க நிலா அம்மா... வணக்கம்!! நீங்க taperஆப் பார்த்தா, அவிங்க அப்படித்தான் சொல்வாங்க....இஃகிஃகி!

    ReplyDelete
  15. சாயுங்காலம் வந்து கணக்குக்கு மறுமொழியுறேன்... வேலைக்கு நேரமாச்சு...

    ReplyDelete
  16. அட என்னாங்கடா. பாய்ஞ்சு பாய்ஞ்சு விடை போடுவாங்க. ஒருத்தரும் போடக் காணோம். ஒரு வேள பொட்டிய தட்டி போட்டாய்ங்களோ. சரி. தப்பா விடை சொன்னா தம்பி அடிக்கபோறதில்ல. இல்லாம யாருமே விடை சொல்லலன்னா மனசுக்கு கஷ்டமாயிடுமே. சொல்லிருவமா? குழியத்தனைன்னு போட்டுக்குங்க தம்பி. தப்புன்னா தயங்காம எந்த அழுகை பொருத்தம்னு நீங்களே சொல்லிடுங்க பழமை தம்பி

    ReplyDelete
  17. //எம்.எம்.அப்துல்லா said...
    என் அறிவ நல்லா துலக்கிட்டீங்க அண்ணே

    :))
    //

    அண்ணே நன்றிங்க!!!

    ReplyDelete
  18. //ச்சின்னப் பையன் said...
    அலுங்கல் குலுங்கல் எல்லாமே அருமை...
    //

    நன்றிங்க ச்சின்னப் பையன் !! :-0)

    ReplyDelete
  19. //எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல் அளமானால், ஒரு ஆள்பிரமாணம் வெட்டினவனுக்கு எத்தனை நெல்?//

    எனக்குத் தெரியும்,ஆனா நானே வழக்கம் போல விடை சொன்னா எப்படி.அதனால மத்தவங்களுக்கு விட்டுக் கொடுத்திடுறேன்.

    ReplyDelete
  20. பதிவு அருமைங்க ...
    அம்மீய்ய்ய்ய்..........
    நான் தான் கணக்கு கேட்டேன் - அதுக்குன்னு இப்டியா ...
    நல்லவேள பாலா சொல்லிட்டார். அதனால அதை வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  21. கேள்விக்கு பதில் தெரியாதலால் நான் வெளி நடப்பு செய்கிறேன்..

    ReplyDelete
  22. அழுங்கல் குலுங்கள் அருமை அண்ணே

    ReplyDelete
  23. // கணினி தேசம் said...
    பள்ளயம் மிக அருமை.

    "குழந்தை நலுங்கிடப்போகுது, பத்திரமா பார்த்துக்குங்க"னு நம்மூர்ப்பக்கம் சொல்வாங்க. அதுவும் இதுவும் ஒண்ணா?
    //

    ஆமாங்க! சரியாச் சொன்னீங்க!!

    ReplyDelete
  24. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    உண்மைதான் கணக்கு எனக்கு பிணக்கு .. அதனால் தான் பயம்மா இருக்கு இந்த பக்கம் வரவே..
    :)
    அலுங்கல் நலுங்க ல் நல்லா புரியுது இப்ப..
    //

    :-0)

    ReplyDelete
  25. //குடந்தைஅன்புமணி said...
    நல்லா கலக்கிட்டீங்க... என் அறிவு துலங்கிடுச்சு... அகோ... ராமானுஜம் சாரோட வாரிசு யாருங்க... வாங்க... வாங்க...
    //

    வாங்க அன்புமணி ஐயா...நன்றிங்க, நன்றிங்க, நன்றிங்க!!

    ReplyDelete
  26. //வனம் said...
    வணக்கம்

    அட இப்ப புரியுது தமிழ்

    அலுங்கல், குல்ங்கல்............

    ம்ம்ம்ம் இதுவும் நல்லா இருக்கு

    நன்றி
    இராஜராஜன்
    //

    வாங்க ஐயா...நன்றிங்க, நன்றிங்க, நன்றிங்க!!

    ReplyDelete
  27. \\தொடரில் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்\\


    தேவை தான் !!!
    மத்தவங்கள கிறுக்கு பிடிக்க வைக்கிறதுல பெருமகிழ்வு வேறயா

    ReplyDelete
  28. \\டேய், புளி போட்டுத் தேச்சதுல சால் நல்லாத் துலங்கிடுச்சு”ன்னு\\


    அப்ப இனிமேல் எல்லோரும் பல்ல புளி கொண்டு துலக்கலாம்

    ReplyDelete
  29. // Bala said...
    அட என்னாங்கடா. பாய்ஞ்சு பாய்ஞ்சு விடை போடுவாங்க. ஒருத்தரும் போடக் காணோம். ஒரு வேள பொட்டிய தட்டி போட்டாய்ங்களோ. சரி. தப்பா விடை சொன்னா தம்பி அடிக்கபோறதில்ல. இல்லாம யாருமே விடை சொல்லலன்னா மனசுக்கு கஷ்டமாயிடுமே. சொல்லிருவமா? குழியத்தனைன்னு போட்டுக்குங்க தம்பி. தப்புன்னா தயங்காம எந்த அழுகை பொருத்தம்னு நீங்களே சொல்லிடுங்க பழமை தம்பி
    //

    வாங்க பாலா அண்ணே, சாயுங்காலம் அறைக்குப் போயி விடை பதியுறேன்...

    உங்க மறுமொழியப் பாத்தாலே ஒரு மகிழ்ச்சிதான் போங்க!!

    ReplyDelete
  30. \\எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல் அளமானால், ஒரு ஆள்பிரமாணம் வெட்டினவனுக்கு எத்தனை நெல்?\\\


    ஒரு ஆள வேட்டுணா ஒரு தலைதான் வரும் .ஆனா ரெண்டு தலைய ஒரு ஆளுக்கு வைக்க முடியாது -(இதுக்குலதான் விடை இருக்கு)

    ReplyDelete
  31. எப்பிடின்னா கணக்குக்கு பதில் சொல்லி எனக்கு(ம்) அறிவு இருக்குன்னு நிரூபிக்க ஆசை தான்....என்ன ஒண்ணு, கேள்வி தான் புரிய மாட்டேங்குது :0(

    ReplyDelete
  32. இங்கயும் அங்கயும் (horizontal)அசையுறதச் சொல்லுறது அலுங்கல்.
    ////

    இதுதான் அற்த்தம்மா??

    ReplyDelete

  33. 8 சிறுகடுகு - 1 எள்
    8 எள் - 1 நெல்
    8 நெல் - 1 விரல்
    12 விரல் - 1 சாண்
    2 சாண் - 1 முழம்

    சாண் 8 கொண்டது ஆள் பிரமாணமென்றறிந்து, எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல்லு அ(8). ஆக, மனிதர்மட்டமாவது எண்சாணுயரம். இதை வைத்து 8 சாண் உயர் மனிதனுக்கு எவ்வளவு நெல் என்று கணக்கிடுங்களேன்.இஃகிஃகி!!
    இதெல்லாம் நெம்ப அதிகம்... இஃகிஃகி!!

    ReplyDelete
  34. //உருப்புடாதது_அணிமா said...
    உள்ளேன் அய்யா
    //

    ஐயா, வணக்கம்! நல்லா இருக்கீகளா?

    ReplyDelete
  35. //S.R.Rajasekaran said...
    \\தொடரில் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்\\


    தேவை தான் !!!
    மத்தவங்கள கிறுக்கு பிடிக்க வைக்கிறதுல பெருமகிழ்வு வேறயா
    //

    புளியங்குடியார்... இஃகிஃகி!!

    ReplyDelete
  36. வருகை தந்து, மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி!!

    ReplyDelete
  37. கலக்கறீங்க அண்ணே!

    ReplyDelete
  38. மணீயாரே... உங்களுக்கும் நம்ம கடைல ஒரு வேலை போட்டு குடுத்துருக்கேன். வந்து அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கோங்க :))

    ReplyDelete