3/19/2009

'தொடர்பதிவு' என்று எழுதும் பதிவர்களே!

பதிவர் சமுத்திரத்துக்கு ஒரு இடுகை இடுறேன்னு காந்தலாயிடாதீங்க, என்ன? இஃகிஃகி! ச்சும்மா, ஒரு இதுதேன்!! இஃகிஃகி!!!



  • ஒரு பதிவர், ஒரு தலைப்பின் பேரில் தொடர்ந்து எழுதுவது தொடர் இடுகை!
  • ஒருத்தர், இனியொருத்தருக்கு கோர்த்துவுடுற இடுகை சங்கிலித் தொடர் இடுகை!!

  • ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவிங்களுக்கு கோர்த்துவுட்டா, அது வலைத் தொடர் இடுகை!! அதாவது, வலையில ஒரு கண்ல இருந்து, பல கண்களுக்கு கோர்த்து வுடுறா மாதிரி!!!

ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்!

38 comments:

  1. விளக்கத்துக்கு நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    விளக்கத்துக்கு நன்றி

    வாழ்த்துக்கள்
    //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... மறுபடியும் ‘க்’ன்னாவை கோர்த்து வுட்டுட்டீங்களே?

    ReplyDelete
  3. அகோ! என்ன இன்னைக்கி கணக்கு எதுவும் இல்லையா...?

    ReplyDelete
  4. சரிதான்...
    தகவலுக்கு நன்றி தல...
    :-)

    ReplyDelete
  5. அப்படியே இன்னொருத்தர் பதிவை சுட்டு வெளியிடறதுக்கு என்ன பேருன்னு சொல்லிடுங்க அண்ணே ...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்..


    தப்ப தப்பா தான் பன்னுவோம்

    ReplyDelete
  7. ///Sriram said...

    அப்படியே இன்னொருத்தர் பதிவை சுட்டு வெளியிடறதுக்கு என்ன பேருன்னு சொல்லிடுங்க அண்ணே ...//


    அண்ணனுக்கு அடுத்த பதிவுக்கு மேட்டர் ரெடி

    ReplyDelete
  8. //வாழ்த்துக்கள் அல்ல, அது வாழ்த்துகள்!//

    இது தொடர்பாக ஒரு விவாததில் படித்தது.... இரண்டுமே சரியென்று !!! :)

    ReplyDelete
  9. வாழ்த்துக்க்க்க்க்க்க்கள்

    :)

    ReplyDelete
  10. அண்ணாத்த வெளியூரில இருக்காங்களாம்...பின்னூட்டம் போட முடியாதாம்......ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு பதிவு தான் போட முடியும் போல:(

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அண்ணே:)))........அந்த க்க மட்டும் எடுத்துக்கோங்க...இஃகிஃகி!!!

    ReplyDelete
  12. இப்பத்தான் நம்ம திண்ணைல நீங்க விட்டுட்டு வந்த துண்டை உதறி அடடே...அண்ணன் வீட்டுத் திண்ணைலயே இதப் போட்டுருக்கலாமேனு சொல்லிட்டு இங்க வந்து ஜம்னு ஜமுக்காளமே இருக்கு :)

    ReplyDelete
  13. அகோ, நம்மள மாதிரி ஆட்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

    வாழ்த்துக்கள். ச்சே..வாழ்த்துகள்!!


    நன்றி.

    ReplyDelete
  14. இப்ப நீங்க போட்ட பதிவுக்கு என்ன பேர்னு சொல்லவே இல்லையே.
    வாழ்த்துகள் (அ) வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. //அறிவிலி said...
    இஃகிஃகி!!!
    //

    இஃகிஃஃகி!!!

    ReplyDelete
  16. தமிழ் ஆசானே வணக்கம்.

    வாழ்த்த அனுபவமில்லை, அதனால் வணங்குகின்றேன்..

    தமிழ், தமிழ் அப்படின்னு சொல்லிகிட்டு, என்ன மாதிரி கொலை பண்றவங்க மத்தியிலே, இப்படி ஒருத்தர் என நினைக்கும் போது, இதயம் இனிக்கின்றது, கண்கள் பனிக்கின்றது.

    ReplyDelete
  17. //ஒருத்தர், இனியொருத்தருக்கு கோர்த்துவுடுற பதிவு சங்கிலிப் பதிவு!! //

    உங்களை வேத்தியன் ஒரு சங்கிலிப் பதிவுக்கு கோத்துவுட்டாரே, அது என்னா ஆச்சு?

    ReplyDelete
  18. // குடந்தைஅன்புமணி said...
    அகோ! என்ன இன்னைக்கி கணக்கு எதுவும் இல்லையா...?
    //

    நாளைக்குப் போடுவம்ல நண்பா! இஃகிஃகி!!

    ReplyDelete
  19. //வேத்தியன் said...
    சரிதான்...
    தகவலுக்கு நன்றி தல...
    :-)
    //

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  20. //
    பதிவர் சமுத்திரத்துக்கு ஒரு பதிவு எழுதறேன்னு காந்தலாயிடாதீங்க, என்ன? இஃகிஃகி! ச்சும்மா, ஒரு இதுதேன்!! இஃகிஃகி!!!
    //

    உங்க சிரிப்புதான் highlight இங்கே!!

    ReplyDelete
  21. //
    ஒரு பதிவர், ஒரு தலைப்பின் பேரில் தொடர்ந்து எழுதுவது தொடர் பதிவு!
    //

    சரி ரைட்டு!!

    ReplyDelete
  22. //
    ஒருத்தர், இனியொருத்தருக்கு கோர்த்துவுடுற பதிவு சங்கிலிப் பதிவு!!
    //

    இதுவும் சரி ரைட்டு!!

    ReplyDelete
  23. //
    ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவிங்களுக்கு கோர்த்துவுட்டா, அது வலைப் பதிவு!! அதாவது, வலையில ஒரு கண்ல இருந்து, பல கண்களுக்கு கோர்த்து வுடுறா மாதிரி!!!
    //

    ஆஹா என்னா விளக்கம் உங்களை விட்டால் இப்படி விளக்கம் சொல்ல ஆளே இல்லே போங்க.

    எப்படி சிரிக்கறீங்க இஃகிஃகி !!

    ReplyDelete
  24. //
    வாழ்த்துக்கள் அல்ல, அது வாழ்த்துகள்!
    //

    இப்போ என்னாதான் சொல்ல வரீங்க அண்ணா??

    ReplyDelete
  25. //
    ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்!
    //

    இது கொசுருவா??

    ReplyDelete
  26. //
    ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவிங்களுக்கு கோர்த்துவுட்டா, அது வலைப் பதிவு!! அதாவது, வலையில ஒரு கண்ல இருந்து, பல கண்களுக்கு கோர்த்து வுடுறா மாதிரி!!!
    //

    இது மல்ட் லெவல் மார்க்கெட்டிங் மாதிரியா தல? :0))

    நம்ம சிவகாசி ஜெயலட்சுமி மாதிரி மேட்டருன்னா என்ன மாதிரி தர டிக்கெட்டுங்களுக்கு கபால்னு பிரியும்....:0))

    ReplyDelete
  27. //
    வாழ்த்துக்கள் அல்ல, அது வாழ்த்துகள்
    //

    இப்பிடித் தான் நெறையப் படிச்சவங்க சொல்றாங்க...ஆனா, அதுல ஏன் இ"க்"கன்னா வரக் கூடாது?? எந்த இலக்கணப்படியும் படிச்சதா எனக்கு ஞாபகம் இல்ல..(சரி சரி, அஞ்சாப்பு படிப்பு அவ்வளவு தான்)...

    ஒற்று மிகாதுன்னு ஒரு இலக்கண விதி இருக்கு...ஆனா, வாழ்த்து, மகிழ்ந்து, புணர்ந்து அப்படின்னு ஏகப்பட்ட வார்த்தையில ஒற்று மிகும்...ஓண்னு, இந்த வார்த்தை (வார்த்தை என்பதே தமிழா?? இரண்டு ஒற்று வருகிறதே) எல்லாம் தமிழ் இல்லை....இல்லையேல் தமிழ் குறித்து எனது அறிவு குறைவு (இதற்கு அதிக சாத்தியம்...)

    கொஞ்சம் விளக்குவீர்களா?

    (இதை எழுதும் போது நேர் நேர் நேர் தேமாங்கனி, நேர் நேர் நிரை தேமாங்காய், நிரை நேர் நிரை புளி மாங்காய்...நிரை நிரை நேர் புளி மாங்கனி ....எங்க தமிழய்யா என்னை குனிய வச்சி குட்டியது ஞாபகம் வருது... அப்படியே இன்னும் கூவிளங்காய், கூவிளங்கனி எல்லாம் இருக்கு....)

    ReplyDelete
  28. // அது சரி said... //

    அது சரி அண்ணாச்சி, அதையே பதிவில இருந்து நீக்கிட்டேன். பாட்டுக்கள், வாழ்த்துக்கள், பத்திரிக்கை இதுல எல்லாம் வர்ற ‘க்’, ஒற்று மிகாதுன்னு படித்த நினைவு. இப்ப வேற மாதிரி சொல்லுறாங்க.... அவ்வ்வ்....

    அதைவிடுங்க, ஒற்று மிகாததுக்கு விதிகள் இருக்கு. அரை குறையாப் போட விருப்பம் இல்ல. முழுசுமாக் கிடைச்சப்புறம் பதியுறேன்.

    ReplyDelete
  29. ஒரு பதிவர் பத்து வரில பதிவ போட்டு பின்னூட்டத்தில பட்டிமன்றமே நடத்துறாங்க. :P. அதுக்கென்ன பேரு வைக்கலாம் பழமை. ச்சும்மா. டமாசு. ஆனால் இடுகைகளின் வளர்ச்சி எல்லாத் துறையிலும் பரவி இது ஒரு இலக்கிய வகையாகக் கூட மாறலாம். பகுப்பு அதற்கு படிகல். நல்ல முயற்சி.

    ReplyDelete
  30. உங்களை வேத்தியன் ஒரு சங்கிலிப் பதிவுக்கு கோத்துவுட்டாரே, அது என்னா ஆச்சு? //

    நீங்க நல்லா கொத்துவுடுறீங்க ராகவன் அண்ணே...

    ReplyDelete
  31. // Sriram said...
    அப்படியே இன்னொருத்தர் பதிவை சுட்டு வெளியிடறதுக்கு என்ன பேருன்னு சொல்லிடுங்க அண்ணே ...
    //

    வாங்க தம்பீ...அதைச் சுட்டுப் பதிவுன்னு சொல்லிகிடலாம்...இஃகிஃகி!

    ReplyDelete
  32. வலைப்ப்பதிவு: இந்தச் சொல் உருவான விதம். Internetங்கிறதுல net அதாவது வலை. அதுல நாம பதியறதாலம் வந்ததே வலைப்பதிவு. இம்மாதிரி சொற்கள நமக்கு கொணர்ந்தது இராம.கி ஐயா மற்றும் காசி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  33. நாங்க வந்துட்டோம் உங்க வீட்டுக்கு ,இனி உங்க டர்ன், வந்து எதுனா சொல்லிட்டு போங்க பழமைபேசி அண்ணே.

    ReplyDelete
  34. சிறப்பான விளக்கம்!

    இதுக்கு யாராவது சங்கிலிப்பதிவு போடுவீகளா..?

    -பரிசல்காரன்

    (ஆதிமூலகிருஷ்ணன், கார்க்கி ஆகியோருடன்.. சென்னையில் எம்.எம்.அப்துல்லாவின் அறையிலிருந்து...)

    ReplyDelete
  35. //தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
    சிறப்பான விளக்கம்!

    இதுக்கு யாராவது சங்கிலிப்பதிவு போடுவீகளா..?

    -பரிசல்காரன்

    (ஆதிமூலகிருஷ்ணன், கார்க்கி ஆகியோருடன்.. சென்னையில் எம்.எம்.அப்துல்லாவின் அறையிலிருந்து...)
    //

    அண்ணே, வாங்க! எல்லார்த்தையும் கேட்டதா சொல்லுங்க!!

    ReplyDelete