1/18/2009

எந்திரன்: பெயரிட்டதின் பின்னணி

வணக்கம்! படிக்காதவன், வில்லு இதுகளுக்கான மாற்றுப்பார்வையில் விமர்சனம் பார்த்தவங்க, மத்த மத்த படங்களுக்கான விமர்சனத்தையும் எழுதச் சொல்லிக் கேட்டு இருந்தாங்க. அந்த வரிசையில, இன்னைக்கு நாம பார்க்கப் போவது எந்திரன் பற்றியது. இதைப் பற்றி எழுதச் சொன்ன வலைஞர் தளபதி நசரேயன் அவிங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.


எந்திரம்ன்னா என்ன? இதற்கான பொருள், பாவிக்கப்பட்ட விதத்தைப் பார்க்க வேண்டியது அவசியமாகுது. இலக்கியம், இன்ன பிற தமிழ்ச் சொல்லாடல்ல எந்திரன் எப்படியெல்லாம் சொல்லாடப்பட்டு இருக்குங்றதையும், இன்ன பிற அர்த்தங்களையும் கீழ கொடுத்து இருக்கேன்.

சூத்திரப்பொறி
இயந்திரம்
யந்திரம்
ஏந்திரம்
சூத்திரம் machine in general
திரிகை A hand-mill
மந்திரசக்கிரம் mystical diagram in astrology and worn on the arm
தேர்
தீக்கடைகோல் Sticks for producing fire by attrition
குலாலச்சக்கரம் A potter's wheel
ஊர்தி conveyance artificially managed

பொதுவா வழக்கத்துல, இயந்திரங்களையும், சோதிடர்கள் மந்திரிச்சு எழுதித் தர்ற அந்த சக்கரத்தையும் நாம எந்திரம்ன்னு சொல்லுறோம். சக்கராயுதம் வெச்சு இருக்குற பகவானை, சக்கராயுதன்னு சொல்லுறோம். சக்கரன்னும் சொல்லுறோம். கண்கள் பெருசா இருந்து, முழிச்சுப் பாக்குறது தூக்கலா இருக்குறவனை, முழியன்னு சொல்லுறோம்.

அதே மாதிரி இயந்திரத்தனமா, சொன்னதைச் செய்யுற மனித‌னையும், ஓய்வு ஒழிவு இல்லாம, அளவுக்கு மிகுதியா இயந்திரமாட்டம் வேலை செய்யுற மனித‌னையும் இயந்திரன்னும் எந்திரன்னும் சொல்லலாம். வண்டியக் கையாளுறவனை வண்டிக்காரன்னு சொல்லுறோம். பெட்டி அடிக்குறவனை பெட்டிக்காரன்னு சொல்லுறோம். அதே மாதிரி, இயந்திரம் அல்லது எந்திரத்தைக் கையாளுறவனை இயந்திரக்காரன் அல்லது எந்திரக்காரன்னு சொல்லலாம்.

ஆகக்கூடி, மனிதன மாதிரி செயல்படுற எந்திரத்தை என்ன சொல்லுறது? பொதுவா இயந்திர மனிதன் அல்லது எந்திர மனிதன்னு ரெண்டு வார்த்தைச் சொல்லாப் பாவிக்கிறோம். இதை இனியும் சுருக்கி எளிமைப் படுத்த முடியாதா? எந்திரன் அல்லது எந்திரக்காரன்ங்ற சொல்லையே இதுக்கும் பாவிக்கலாமா?? தேவை இல்லைங்றது நம்ம கருத்து. செம்மொழி அப்பிடின்னா, எந்த ஒரு உணர்வு, பொருள், செய்கைன்னு, மொத்தத்துல எதுவும், குழப்ப(ambiguity)மில்லாம தகவல்ல‌ ஊடுருவிக் கொண்டு செல்லணும். நம்ம தமிழ் மொழி, சந்தேகத்துக்கிடமில்லாம செம்மொழிதான்!

அப்ப, அந்த தனிச்சொல் என்னவா இருக்க முடியும்? வாங்க, அலசுவோம்! போலின்னா நம்ம எல்லார்த்துக்கும் தெரியும், ஒன்னை மாதிரியே இது இருக்கும், ஆனா அதல்ல இது. ஆக, இயந்திர மனிதன்ங்றவன் மனிதனைப் போன்றதொரு போலி மனிதன், இல்லீங்ளா? அதனால, நாம ஏன் போலியன்னு சொல்லக் கூடாது? இஃகி!ஃகி!! கூட்டிக் கழிச்சிப் பாருங்க, கணக்கு சரியா வரும்!

கடைசியா, நம்ம போலியனோட வரலாறு பற்றின ஒன்னு ரெண்டு செய்திகளைப் பாக்கலாம். கி.மு 250ம் ஆண்டுகளுக்கு முன்னாடியே, புனைவுகள் வாயிலாகவும், சின்ன இயந்திரத்தன்மையுள்ள பொருள் மூலமாவும் போலியனின் பிறப்பு துவங்குச்சாமுங்க. அது படிப்படியா, வளர்ச்சி அடைஞ்சு இப்ப, கிட்டத்தட்ட மனிதனுக்கு இணையான போலியா வளர்ச்சி அடைஞ்சு இருக்கானாமுங்க.

ஃபுளோரிடா மாகாணத்துல இருக்குற டாம்பாவுல, சர்க்கரை மாதிரியான உணவுப் பொருளைச் சாப்ட்டுட்டு, உண்ட உணவை ஈ‍ கோலி நுன்ணியிரிகள் மூலமா, குளுகோசா மாத்தி, அதுல இருந்து மின்சக்திய வரவெச்சு, அதன் மூலமா வேலை செஞ்சுட்டு இருக்கானாம், கேசுட்ரோனோம்ன்னு பெயர் கொண்ட இந்தப் போலியன். இஃகிஃகி! மேலதிகத் தகவலுக்கும் படங்களுக்கும்
இந்தச் சுட்டியச் சொடுக்குங்க.

பக்கச் சொல் பதினாயிரம்!

28 comments:

  1. Me gusto mucho la letra...saludos desde chile.

    ReplyDelete
  2. //joanna said...
    Me gusto mucho la letra...saludos desde chile.
    //

    என்னய்யா இது? எந்திரன்னு சொன்னா, பிரெஞ்சு, இசுபானிசுன்னு அகில உலகமும் வந்து பின்னூட்டம் போடுது??

    dueto chile... kumustoe getro!

    ReplyDelete
  3. //கபீஷ் said...
    Mu bien!!!!
    //

    Comment ça va கபீஷ் ? Merci beaucoup!

    ReplyDelete
  4. //கபீஷ் said...
    Bien, gracias yi tu?
    //
    gracias y i me la pase muy bien este fin de semana espero que tu tambien te la ayas pasado bien.

    ReplyDelete
  5. //கபீஷ் said...//

    ஏங்க, எசப்பாட்டை நிறுத்திட்டீங்க?
    இஃகிஃகி!

    ReplyDelete
  6. Tres bien !!!

    நம்ம பங்குக்கு சீனத்துல....

    Gong xi fa cai !!

    ReplyDelete
  7. //Mahesh said...
    Tres bien !!!
    //

    நன்றிங்க மகேசு!

    //நம்ம பங்குக்கு சீனத்துல....
    Gong xi fa cai !!//

    ஜன 26ல தான சீனப் புத்தாண்டு?

    ReplyDelete
  8. ஐயா கலக்கீட்டீங்க...
    என்ன மொழிங்க அது???
    யாரையாவது திட்றீங்களோ???
    :-)))

    ReplyDelete
  9. சிங்களம் தெரியாது எனக்கு

    ReplyDelete
  10. //வேத்தியன் said...
    ஐயா கலக்கீட்டீங்க...
    என்ன மொழிங்க அது???
    யாரையாவது திட்றீங்களோ???
    :-)))
    //


    யாரோ ஒரு இத்தாலியரு வந்து, எந்திரனை வாழ்த்திட்டுப் போனாரு, அதுக்குப் பின்னாடி, ஃப்ரென்ச், இசுபானிசு, மான்டெரின்னு போய்ட்டு இருக்கு... எல்லாம் நல்ல விசயந்தான். இஃகிஃகி!

    ReplyDelete
  11. //நம்ம பங்குக்கு சீனத்துல....
    Gong xi fa cai !!//

    ///ஜன 26ல தான சீனப் புத்தாண்டு?///

    ஆமாங்க... 26தான் ஆனா காளை வேகமா வந்துக்கிட்டுருக்கே... சீன ஆருடம்படி இந்த வருசம் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குமாம்.

    ReplyDelete
  12. //Mahesh said...
    சீன ஆருடம்படி இந்த வருசம் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குமாம்.
    //

    ஒ ஓ...

    ReplyDelete
  13. como va la vida?

    (sorry sterday i couldnt continue the esapaattu)

    ReplyDelete
  14. எந்திரன் என்ற ஒரு சொல்லுக்கு 11 பொருளா!!!

    எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம்.நீங்க வரிசையில நின்னுதானே பதிவு போடறீங்க?ஏன் கேட்கிறேன்னா உங்கள் பதிவை நடுப்பக்கத்தில் பதிவர் வரிசையிலேயே காண்பதில்லை.ஒன்று வாசகர் பரிந்துரை,சூடான பகுதியில தட்டுப்படும்.இல்லையின்னா வலதுபுறம் இன்றைய பின்னூட்ட ஏரியாவில தென்படும்.

    ஒருவேளை நான் தூங்கும்போது சத்தமில்லாம வந்து வரிசையில நிற்கிறீங்களோ என்னவோ:)

    ReplyDelete
  15. பின்னூட்டம் பக்கம் வந்தா இன்னா பாசையில கலாய்க்கிறீங்கோ?ஒண்ணும் புரியல.Merci beaucoup!கல்லூரிப் பிரஞ்சு மாத்திரம் கொஞ்சம் உதவுது.மத்ததெல்லாம் மாலும் நஹி.

    ReplyDelete
  16. //குடுகுடுப்பை said...
    சிங்களம் தெரியாது எனக்கு
    //

    எதுக்கு? சிங்களத்து அம்மினி கூடப் பேசவா?? தங்கமணி குடுகுடுப்பை, இவரு என்ன சொல்றாருன்னு பாருங்க...

    ReplyDelete
  17. //கபீஷ் said...
    como va la vida?

    (sorry sterday i couldnt continue the esapaattu)
    //

    பரவாயில்லங்க... அங்க குளிர் எப்படி இருக்கு?

    ReplyDelete
  18. //ராஜ நடராஜன் said...

    ஒருவேளை நான் தூங்கும்போது சத்தமில்லாம வந்து வரிசையில நிற்கிறீங்களோ என்னவோ:)
    //

    வாங்க அண்ணே, ஆமுங்க இது ரெண்டுங் கெட்ட நேரத்துல போட்ட பதிவுதானுங்க.... நன்றிங்க!

    ReplyDelete
  19. //ராஜ நடராஜன் said...
    பின்னூட்டம் பக்கம் வந்தா இன்னா பாசையில கலாய்க்கிறீங்கோ?ஒண்ணும் புரியல.Merci beaucoup!கல்லூரிப் பிரஞ்சு மாத்திரம் கொஞ்சம் உதவுது.மத்ததெல்லாம் மாலும் நஹி.
    //

    இஃகிஃகி! எனக்கும் ஒன்னும் புரியலை....எப்பிடி அந்த இத்தாலிக்காரன் வந்து பின்னூட்டம் போட்டு ஆரம்பிச்சு வெச்சான்னு...

    ReplyDelete
  20. //பரவாயில்லங்க... அங்க குளிர் எப்படி இருக்கு?//

    Not that bad.Guess better than your place :-):-)

    ReplyDelete
  21. அடுத்து கந்தசாமி க்கும் எழுதி போடுங்க, நான் பதிவு போட்ட உடனே

    ReplyDelete
  22. //கபீஷ் said...
    //பரவாயில்லங்க... அங்க குளிர் எப்படி இருக்கு?//

    Not that bad.Guess better than your place :-):-)
    //

    You are lucky....

    ReplyDelete
  23. //நசரேயன் said...
    அடுத்து கந்தசாமி க்கும் எழுதி போடுங்க, நான் பதிவு போட்ட உடனே
    //

    தளபதி உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தான ஆவணும்...இஃகிஃகி!

    ReplyDelete
  24. //எந்திரம்ன்னா என்ன?//

    இதுகூட தெரியாதா அண்ணாச்சி!!!!!!!!!!!!!. அது ரொம்ப சிம்பிள். தோச மாவு அரைக்க பயன்படும்.

    மொத்ததுல ஊட்டுக்கு தெரியாம எந்திரன் படம் பாத்துட்டு வந்தா கரண்ட்டு செலவு இல்லாம ஆட்டுகல்லுல மாவாட்ட உட்டுருவங்கன்னு (தங்கமணிதான் வேற யாரு) சொல்லுதிரு அப்படிதானவே?

    ReplyDelete
  25. //நசரேயன் said...
    அடுத்து கந்தசாமி க்கும் எழுதி போடுங்க, நான் பதிவு போட்ட உடனே
    //

    யோவ் நசரேயா என்ன அடுத்த பதிவும் பாம்பே படத்த பாத்துட்டு போட்ட காதல் கடிதம் இல்லையா. என்னவே எமதிட்டே போறீரு எங்கள.

    ReplyDelete
  26. //வில்லன் said...

    மொத்ததுல ஊட்டுக்கு தெரியாம எந்திரன் படம் பாத்துட்டு வந்தா கரண்ட்டு செலவு இல்லாம ஆட்டுகல்லுல மாவாட்ட உட்டுருவங்கன்னு (தங்கமணிதான் வேற யாரு) சொல்லுதிரு அப்படிதானவே?

    //

    கிளப்பிட்டீங்க அண்ணாச்சி.... டக்குன்னு பிடிச்சிட்டீங்களே? அப்புறம், நாமளும் போலியனாட்டந்தான்.... என்னது? நீங்க இப்பவே போலியன்ந்தானா?? சும்மா சொல்லுதீக!

    ReplyDelete