1/18/2009

அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை!

வணக்கம்! வலியும் காய்ச்சலும் வந்தாத்தான் தெரியும்ன்னு நாட்டுப்புறத்துல சொல்லுறது உண்டு. ஆனா, நாம சொல்லப்போற வலி நமக்கு வராது. நம்மால அடுத்தவிங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு. அப்பிடி வரக்கூடாதுன்னு வேண்டிக்குவோம். அப்பிடியே வந்தாலும், அதைப் பாக்க நாம இருக்க மாட்டோம் பாருங்க. ஆமுங்க, அகால மரணங்றது வரக்கூடாது.

சரி, அப்பிடி ஒன்னு நடந்து போச்சு, அதனால மத்தவிங்களுக்கு சிரமம் வெக்கக் கூடாது பாருங்க. ஆமுங்க, அகால மரணம் நடந்தவரோட சொத்துகளும் குழந்தைகளும், அவரோட மனைவி/கணவனுக்குத் தானாகவே போய்ச் சேரும்ங்ற வகையிலதான் பெரும்பாலான மாகாணங்கள்ல சட்டம் இருக்கு. ஆனாலும், உசுலு(உயில்) இல்லாதபட்சத்துல சில நடைமுறைச் சிக்கல்களும், அதிக செலவீனமும், வில்லங்கச் சிக்கலும் ஏற்பட வாய்ப்பு இருக்கு. கூட‌வே, அதிகப்படியான பராமரிப்பு நிர்மாண‌ வ‌ரியும் செலுத்த‌ வேண்டி இருக்கும்.

அது பரவாயில்லை, கணவன், மனைவி ரெண்டு பேருமே அகால மரணத்துக்கு ஆட்பட்டா, நிலைமை ரொம்பச் சிக்கல். சட்டப்படி அனைத்து சொத்துகளும், குழந்தைகள் குறிப்பிட்ட வயதை எட்டுற‌ வ‌ரையிலும் அனுப‌விக்க‌ முடியாது. உயில் இல்லாத‌ ப‌ட்ச‌த்துல‌, மாகாண‌ அர‌சு ஒருத்த‌ரை நிய‌மிச்சு, யாரையாவ‌து பாதுகாவ‌ல‌ரா நிய‌மிக்க‌ முய‌ற்சி செய்யும். நெருங்கின‌ உற‌வின‌ர்க‌ள் இருந்தா அவ‌ங்க‌ளுக்கு முன்னுரிமை.

பெரும்பாலும் நம்மவர்களுக்கு உற‌வின‌ர்க‌ள் ப‌க்க‌த்துல‌ இருக்க‌ வாய்ப்பு இருக்காது. அந்த‌ ச‌ம‌ய‌த்துல‌ குழந்தைக‌ளும் சொத்தும் அர‌சு க‌ட்டுப்பாட்டுக்கு வந்து, அவிங்களையும் சொத்துகளையும் பராமரிக்கும். அர‌சு, அத‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தை இருக்குற‌ சொத்துல‌ இருந்து எடுத்துக்கும். குழந்தைக‌ள் வளந்து, அந்த‌ வ‌ய‌சை எட்டும் போது வ‌ரியும் ப‌ராம‌ரிப்புக் க‌ட்ட‌ண‌முமாவே சொத்து க‌ரைஞ்சு போயிடாது?!

இதெல்லாத்தை விடச் சிக்கல் கல்யாணமாகாத இளைஞர்களுக்குத்தான். இவிங்களுக்கு என்ன சொத்து இங்க இருக்கு? யார் உறவினர்கள்?? இதுகளை எல்லாம் நம்ப வெச்சி, மீட்டெடுக்குறது ரொம்பச் சிரமம். அப்படியே நண்பர்கள் மூலமா முயற்சிகள் மேற்கொண்டாலும், பூர்த்தியா செய்யவே முடியாது. அதிக செலவாகும். அந்த நேரத்துல, மாகாண அரசு மிச்சமிருக்குற சொத்துகளை எடுத்துக்கும். எடுத்து பள்ளிகள், பாதுகாப்பகங்கள்ன்னு நல்ல காரியங்களுக்காக கொடுத்துடுவாங்க.

சரி, இதெல்லாத்துக்கும் என்னதான் தீர்வு? உயில் எழுதி வெக்குறதுதாங்க தீர்வு. அதனுடைய முக்கியத்துவம், அந்த சூழ்நிலையிலதான் தெரிய வரும். பெத்த குழந்தைகள் நிலைமய நினைச்சுப் பாருங்க. தாத்தா, பாட்டி, உறவினர்கள்ட்ட போக வேண்டாமா? ஆக, உயில் ரொம்ப முக்கியம். இதுக்காக சட்டத்தரணிகிட்டப் போனா, $300ல இருந்து $2000 வரைக்கும் மொய் அழுக வேண்டி இருக்கும். நாமா செஞ்சா, $25ல முடிச்சுடலாம். சரி, இனி அதுக்கான வழி முறைகளைப் பாக்கலாமா?

முதல்ல செய்ய வேண்டியது என்னன்னா,வரவு, செலவு, முதலீடு, காப்புரிமை, ஓய்வூதியக் கணக்கு மற்றும் இன்னபிற சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லார்த்தையும் தொகுத்து, ஒரு இடத்துல கோப்பாக்கி வைக்கணும். என்னுடைய யூகம், 90% பேர் அவிங்களுடைய மதிப்பு என்ன, அவிங்களுடைய கணக்குகள் பற்றின விபரம் தெரிஞ்சு வெச்சிருக்க மாட்டாங்க. அவிங்களுக்கான பட்டியல் இதோ! உடனே, தகவலைச் சேகரிச்சு குறிப்புல போட்டு வையுங்க. இருப்புத் தொகை குறிப்பிடத் தேவை இல்லை. குறைந்த பட்சம், எந்த நிறுவனத்துல கணக்கு இருக்குங்றதையாவது எழுதி வைக்கணும்.

Assets

Group Life Insurance,
Employer Settlement Information if applicable
Umbrella Insurance details
Funeral Insurance details
Personal Life Insurance details
Insurance with Credit Cards
Travel Life Insurance
Non Insurance Claims
Real Estate Equity
401k
Pension Plan/Social Security
Stocks/Bonds/Rental/IRA/Vehicle/Cars/Boats/
College Savings 403k
Lockers/Jewelry
Savings/Checking/FSA/CDs
Annuity
Tax Returns
Personal Assets
Personal Loans/Mortgage etc, etc..,
Hot Cash
Miles & Rewards

Liabilities

Mortgage Payment
Vehicle Loans
Credit Cards
Loans against 401k

மேல சொன்ன விசயங்கள் பற்றின தகவல்களைத் தொகுத்து, உங்களுக்கு நம்பகமான இடங்கள், வீட்லயோ அல்லது பாதுகாப்புப் பெட்டகத்துலயோ வெக்கலாம். அந்த இடத்தைப் பற்றின விபரத்தை உயில்ல குறிப்பிடுதல் நலம். ஓரளவுக்கு இந்த வலையகத்துல உங்க எல்லாக் கணக்குகளையும் ஒருங்கிணைக்க முடியும், சேவை இலவசம். இதுக்கு அப்புறமா, நீங்க உயில் தயாரிக்கத் தெரிவு செய்ய வேண்டியது ரெண்டு விசயம். முதலாவது நிறைவேற்றுநர், அடுத்தது பாதுகாவலர்.

நிறைவேற்றுநர் (executor) யாராக வேணுமானாலும் இருக்கலாம். அவிங்க உயில்ல குறிப்பிட்டு இருக்குறபடி, காரியங்களை நடத்தி வைக்கக் கூடியவரா இருக்கணும். நீங்க இருக்குறபக்கம் இருக்கக் கூடியவரா இருக்கணும். உயில் எழுதின பிறகு, ஒரு நகலை அவ்ர்கிட்ட கொடுத்து வைக்கிறது உசிதம். பாதுகாவலர்(guardian)ங்றது, நீங்க உங்க குழந்தைகளுக்கு யார் பாதுகாவலரா நியமனம் செய்யுறதுங்றதுதான். குழந்தைகள் அந்த குறிப்பிட்ட வயசை அடையற வரையிலும், இவர்கிட்டத்தான் வளரும். இவர் சொத்துகளையும் பராமரிப்பு செய்ய உரிமை இருக்கும். இவர்கிட்ட பொறுப்புகளை ஒப்படைக்குறதுதான் நிறைவேற்றுநர் வேலை. பாதுகாவலர் பொறுப்பு எடுத்ததுக்கு அப்புறம், நிறைவேற்றுநர்க்கு கடமை முடிஞ்சது.

மேல குறிப்பிட்டதைச் செய்த பிறகு, நீங்க உயில் எழுதத் தயார். நிறைய வலையகத்துல, உயில் எழுது சேவை குறைந்த கட்டணத்துல நீங்களாகவே செய்யக் கூடிய வகையில இருக்கு. அதுல போயி, உங்க விபரங்களைக் கொடுத்து, உயில்(Last Will & Testament) முன்வரைவு ஆவணத்தை தரவிறக்கம் செய்திடுங்க. இதற்கான கட்டணம், அதிகபட்சம் $20. அதன் பின்னாடி, மூனு சாட்சியங்களோட, சான்றுறுதி (notary public) அலுவலர் முன்னாடி குறிப்பிட்ட இடத்துல கையொப்பம் இடணும். கையொப்பம் இட்டதும், அது முறையான உயில் ஆயிடும். இஃகிஃகி!


எங்க நவசக்தி தமிழ்ப் பண்பாட்டுக் குழுவில இதைப் பற்றிப் பேசப் போறேன்னு சொன்னதும், அதை அப்பிடியே பதிவாப் போட்டுடுங்கன்னு சொன்ன அண்ணன் மகேசுக்கு இந்தப் படைப்பு! வேற எதனா, இது குறிச்சு ஐயப்பாடு இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் தெரிஞ்சிருந்தா, எனக்குத் தெரிஞ்ச தகவலைப் பகிர்ந்துகிடுறேன். முடிஞ்சா இந்த பதிவையோ, தகவலையோ உங்க நண்பர்கள்கிட்டவும் பகிர்ந்துகுங்க.... பதிவுத் திருட்டுன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். இஃகிஃகி!

இப்ப எதுக்கு இப்படி ஒரு பதிவு?

என்ன செய்ய? விமானம் எல்லாம் தண்ணி தட்டுது... போற வாற ஊர்திகள், அங்க இங்க இடிக்குது... போதாக்குறைக்கு துப்பாக்கி குண்டுகளும் பதம் பாக்குது.... இந்திய இளைஞர்கள் பெரிய நிறுவன(branded cloths, iphone) உடுப்புகள்ல வலம் வர்றது எல்லாம், பொருளாதார மந்தத்துல பாதிக்கப் பட்டவிங்களை உறுத்தலாம்....பாத்து சூதானமா இருந்துக்குங்க அப்பு....

பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்!

31 comments:

  1. நல்ல பதிவு தோழரே...

    ReplyDelete
  2. //ச்சின்னப் பையன் said...
    மிக நல்ல பதிவு...//

    நன்றிங்க நண்பா!

    ReplyDelete
  3. கன்னா பின்னானு யோசிக்க வைச்சிட்டீங்க

    ReplyDelete
  4. நல்லாச் சொன்னீங்க.... ரொம்ப உபயோகமான பதிவு.... நீங்க சொன்ன பிறகு நானும் இங்க சிங்கைல நேத்தே விசாரிக்க ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப நன்றி.

    ReplyDelete
  5. அதென்ன அமெரிக்க நம்மவர்களே!ஊரு சுத்துற எல்லாரும் ஆட்டத்துல கலந்துக்குங்க.

    ReplyDelete
  6. சூப்பர் பதிவு சுவாமி!

    ReplyDelete
  7. நல்ல உபயோகமான பதிவு!1

    தேவா..

    ReplyDelete
  8. நல்லா வெவரமா சொல்லியிருக்கீங்க.. புள்ளகுட்டியெல்லாம் வரப்போகுது.. இதப் பத்தியெல்லாம் யோசிக்கிற நேரம் வந்திருச்சு.. நெனச்சுப் பாத்தா கருக்குன்னு இருந்தாலும் இதையெல்லாம் சூதானமா செஞ்சு வெச்சுக்கிறது நல்லதுங்..

    இத்தன வெவரமா எலாத்தப் பத்தியும் தெரிஞ்சக்கரதோட மட்டும் இல்லாம எங்களுக்கும் சொல்லரதுக்கு நாங்கெல்லாம் எத்தன நன்றி சொன்னாலும் தகுங்க..

    ReplyDelete
  9. தகவல் நல்லா இருக்கு, பதிவோட சேத்து 1000000 டாலர் கொடுத்த இன்னும் ரெம்ப நல்லா இருக்கும்

    ReplyDelete
  10. ரொம்ப நல்ல போஸ்ட் தல...எல்லாருக்கும் யூஸ் ஆகும்..

    ReplyDelete
  11. நான் யாருக்கெல்லாம் கடன் குடுக்கணும்னு இன்னிக்கே ஒரு உயில் எழுதப் போறேன் :0))

    ReplyDelete
  12. //நான் யாருக்கெல்லாம் கடன் குடுக்கணும்னு இன்னிக்கே ஒரு உயில் எழுதப் போறேன் :0))//

    வாங்க ஏழைங்க!! நாங்க நம்பிட்டோங்க!!

    ReplyDelete
  13. நான் போட்ட கமெண்ட காணும் அதுக்கு நான் உயில் எழுதல.

    ReplyDelete
  14. நல்ல பதிவு தோழரே... இதெல்லாம் ஸேவின்க்ஸ் உள்ளவங்களுக்கு பொருந்தும். நம்ம மாதிரி அன்றாடம் காட்சிகளுக்கு பொருந்தாது.

    நமக்கெலாம் அந்த கஷ்டம் இல்ல. ஏன்னா நிர்வாகமே தங்கமணி தான். நம்ம சும்மா தொடுக்கு. டிரைவர்வேல, எடுபிடிவேல (வாங்குன சாமான தூக்கிட்டு வர) மட்டும்தான். மத்த சமாசாரம் (பைனான்ஸ்) எல்லாம் தாங்கமனியே.

    ReplyDelete
  15. //இந்திய இளைஞர்கள் பெரிய நிறுவன(branded cloths, iphone) உடுப்புகள்ல வலம் வர்றது எல்லாம், பொருளாதார மந்தத்துல பாதிக்கப் பட்டவிங்களை உறுத்தலாம்....பாத்து சூதானமா இருந்துக்குங்க அப்பு....//

    இதை நான் அப்படியே வழி மொழிகிறேன். பொதுவா அமெரிக்காவுல ரொம்ப சாக்கிரதையா இருகோனும் இல்லன்ன சுட்டு போடுவான் பிசாத்து காசுக்காக.

    ReplyDelete
  16. //வில்லன் said...
    நல்ல பதிவு தோழரே... இதெல்லாம் ஸேவின்க்ஸ் உள்ளவங்களுக்கு பொருந்தும். நம்ம மாதிரி அன்றாடம் காட்சிகளுக்கு பொருந்தாது.

    நமக்கெலாம் அந்த கஷ்டம் இல்ல. ஏன்னா நிர்வாகமே தங்கமணி தான். நம்ம சும்மா தொடுக்கு. டிரைவர்வேல, எடுபிடிவேல (வாங்குன சாமான தூக்கிட்டு வர) மட்டும்தான். மத்த சமாசாரம் (பைனான்ஸ்) எல்லாம் தாங்கமனியே.
    //

    வருகைக்கு நன்றி! அப்ப தங்கமணிக்கு இந்த பதிவை அனுப்பி வையுங்க ஐயா!!

    ReplyDelete
  17. @@கபீஷ்
    @@தேனீ
    @@Mahesh
    @@ராஜ நடராஜன்
    @@மோகன் கந்தசாமி
    @@thevanmayam
    @@சூர்யா
    @@நசரேயன்
    @@அது சரி
    @@குடுகுடுப்பை

    அனைவருக்கும் நன்றிங்க....

    ReplyDelete
  18. //ராஜ நடராஜன் said...
    அதென்ன அமெரிக்க நம்மவர்களே!ஊரு சுத்துற எல்லாரும் ஆட்டத்துல கலந்துக்குங்க.
    //

    விசயம் பொதுவானதா இருந்தாலும், குடுத்த தகவல் அமெரிக்கா பற்றினதா இருந்த்தாலும், அமெரிக்கான்னு தலைப்புல இருந்தாத்தான் வாசகர்கள் படிக்க வருவேன்னு அடம் பிடிப்பதாலும்தான்....மத்தபடி எல்லாரும் வந்து போகலாம் நம்ம வீட்டுக்கு....இஃகிஃகி!

    ReplyDelete
  19. புத்தகக்கடைகளில் 'கடைசி உயில்' ஒன்னு கிடைக்கும்.

    அதை வாங்கிட்டா வேலை சுலபம்.

    ரெண்டு சாட்சிக் கையெழுத்தோடு,
    நம்ம பேட்டையில் இருக்கும் JP கிட்டே ஒரு கையெழுத்தும் வாங்கிக்கிட்டா ஆச்சு.

    இதைவச்சுச் சமாளிச்சுரும் நம்ம வாரிசு.


    ஆமாம்...கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, நம்ம பிள்ளைங்க ஆழும்பாழுமா ஆக்காம இருக்க வழி என்னன்னு சொல்லுமைய்யா பழமைபேசியாரே.

    வீட்டை ட்ரஸ்ட்லே போட்டால் இங்கே இப்போதைக்கு காப்பாத்திறலாம்.

    ReplyDelete
  20. //துளசி கோபால் said...

    ஆமாம்...கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, நம்ம பிள்ளைங்க ஆழும்பாழுமா ஆக்காம இருக்க வழி என்னன்னு சொல்லுமைய்யா பழமைபேசியாரே.
    //

    வாங்க, வணக்கம்! அது ஆண்டவன் விட்ட வழி... இருக்கும் போது செய்ய வேண்டியதைச் செய்வோம்... என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  21. உபயோகமான ஒரு நல்ல பதிவு..

    வாழ்த்துகள் தோழா..
    வெங்கடேஷ்
    http://www.thiratti.com

    ReplyDelete
  22. ரொம்ப உபயோகமான பதிவு.... நன்றி நண்பா...

    ReplyDelete
  23. அருமையான வெப்தளம் நன்றி உங்களுக்கு..

    ReplyDelete
  24. பழமைபேசி
    வாரிசு இல்ல சொத்துக்கு உரிமையாளர் ஆவது எப்படி?
    அடுத்த பதிவு போடவும்.

    பி.கு
    இனை பதிவாக கோயில் சொத்தை வலைப்பது எப்படி? .
    என்பதை தெளிவு படுத்தவும்.
    இஃகிஃகி! இஃகிஃகி! இஃகிஃகி!
    புதுவை சிவா.

    ReplyDelete
  25. உறுப்படியான தகவலுக்கு நன்றி..............

    ReplyDelete
  26. வில்லன் said...

    நல்ல பதிவு தோழரே... இதெல்லாம் ஸேவின்க்ஸ் உள்ளவங்களுக்கு பொருந்தும். நம்ம மாதிரி அன்றாடம் காட்சிகளுக்கு பொருந்தாது.

    நமக்கெலாம் அந்த கஷ்டம் இல்ல. ஏன்னா நிர்வாகமே தங்கமணி தான். நம்ம சும்மா தொடுக்கு. டிரைவர்வேல, எடுபிடிவேல (வாங்குன சாமான தூக்கிட்டு வர) மட்டும்தான். மத்த சமாசாரம் (பைனான்ஸ்) எல்லாம் தாங்கமனியே.//

    மொதல்ல ஒம்ம பேர ஹீரோன்னு மாத்துங்கவே

    ReplyDelete
  27. @@திரட்டி.காம்
    @@ஷாஜி
    @@TamilBloggersUnit
    @@vipoosh

    அனைவருக்கும் நன்றிங்க....

    //புதுவை சிவா :-) said...
    பழமைபேசி
    வாரிசு இல்ல சொத்துக்கு உரிமையாளர் ஆவது எப்படி?
    அடுத்த பதிவு போடவும்.

    பி.கு
    இனை பதிவாக கோயில் சொத்தை வலைப்பது எப்படி? .
    என்பதை தெளிவு படுத்தவும்.
    இஃகிஃகி! இஃகிஃகி! இஃகிஃகி!
    புதுவை சிவா.
    //

    இஃகிஃகி!!

    அனுபவப்பட்ட‌ நீங்கதான் அதைப் பத்தி தெளிவா எங்களுக்கு சொல்லணும்.... போடுங்கண்ணா சீக்கிரம்...

    ReplyDelete
  28. அருமையான தகவல் ஐயா.

    ReplyDelete