12/02/2008

அடங் கொன்னியா......

வணக்கம்! இத்தோட ஏச்சு பேச்சுகளுக்கு விளக்கம் போடுறது இல்லைன்னு சொல்லிப் பதிவும் போட்டுப் பாத்தேன். அன்பர்கள் விட மாட்டேங்றாங்க! போட்டா, எதுக்கு இந்த மாதிரி எல்லாம் எழுதறேன்னும் சொல்லுறாங்க. என்ன செய்யறதுன்னே புரியலை. கோயம்பத்தூர் பொன்னான் ஒருத்தர் வந்து கேட்டதுக்கு மட்டும், இன்னைக்கு பாப்போம். ஏன்னா, மத்ததுக்கு எல்லாம் பதிவுல விளக்கம் போட முடியாது இராசா! தங்கமணி எல்லாம் வந்து, நாம எழுதறதப் படிக்குதல்லோ?!

விளக்கங் கேட்ட பொன்னான் பேரப் பாத்த ஒடனே எனக்கு எங்க ஊர் ஞாபகம் வந்திருச்சு, ஆமுங்க, உடலைப்பேட்டை (உடுமலைப் பேட்டை)தானுங்க நம்ம ஊரு. நம்ம சோட்டாளிக பேரப் பாருங்கோ சித்த:

தங்சு: தங்கவேல்/தங்கராசு
பொன்சு: பொன்னுச்சாமி
ராம்சு: இராமசாமி
கந்சு: கந்தசாமி
ரங்சு: ரங்கநாதன்/ரங்கராசு
ச்சின்சு: சின்னதுரை
பால்சு: பாலவிநாயகன்
திர்றான்: திருமூர்த்தி
செலுவான்: செல்வராசு
கிட்டான்: கிருட்டிணசாமி
பீபிச்சி: பிரபாகரன்
சந்து: சந்திர சேகரன்
மக்கான்: மகேந்திரன்
கோக்சு: கோகுல கிருஷ்ணன்
பெருசு: பெரியசாமி
நட்டு: நடராசு
சுச்சான்: சுரேஷ்
கிச்சு: கிருஷ்ண்ன்
கோந்து: கோயிந்தன்
ஆரான்: ‍‍ஆறுமுகம்
மயில்ஸ்: மயில்சாமி (மயிரான்)
நடயன்: நடராஜ்
ரவியான்: ரவி
சின்னு: சின்னராசு/சின்னச்சாமி

கனகான்: கனகராசு
கீச்மூச்: கிருஷ்ண மூர்த்தி
புச்சான்: புருஷோத்தமன்
நண்டு: நந்த குமார்
ப்ராசு: ப்ரகாஷ
ராக்கி: ராமகிருஷ்ணன்
பத்து பத்மநாபன்


இப்பிடி நெறயங்க! "சுப்பிர மணியா! கொப்பரை வாயா!!"ன்னு ஒரு பாட்டு கூட இருக்கு, இப்ப மறந்து போச்சு! உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க!! இப்ப எதுக்கு, இந்த ஞாயம் வந்ததுங்ன்னா, அடங் கொன்னியான்னா என்னன்னு கேட்டது ரங்சுங்ற நம்ம பதிவர்தானுங்க. அதான் இந்தப் பேருகள்லா ஞாபகத்துக்கு வந்திச்சு. சரி இப்ப இதுக்கான அர்த்தத்தைப் பாப்போம்.

கொன்னின்னா வந்து குழந்தை பேசுற குளரல். அதான் வாய் திக்கி திக்கிப் பேசுறதை கொன்னிப் பேசுறதுன்னும் சொல்வாங்க. கொன்னை வாயன்னும் சொல்வாங்க. ஆக, தாறுமாறாப் பேசுறவனை கொன்னியான்னு விளிக்கிறது வாடிக்கையாச்சு. அப்புறம் அதுவே, சாதாரணமாவும் பொழங்கற மாதிரி ஆயிடுச்சு. அடங் கொன்னியா, அங்க பாரு கொட்டாய்ல எவ்வளவு கூட்டமுன்னு.



உண்ணாச் சொத்து, மண்ணாய்ப் போகும்!

48 comments:

  1. இதுதான் அர்த்தமா? கவுண்டமணி படத்துல இத நிறைய தடவை பயன்படுத்துவார்.

    ReplyDelete
  2. சுச்சான் -சுரேஷ்
    கிச்சு -கிருஷ்ண்ன்
    கோந்து - கோயிந்தன்
    ஆறுமுகம்-ஆரான்
    மயில்சாமி-மயிரான் இல்லீங் / மயில்ஸ்
    நடராஜ் - நடயன்
    ரவி- ரவியான் (இதை விட சுருக்கி கூப்ட முடியாதுங்)

    கவுண்டர்- கவுண்ஸ்

    கிளப்பி உட்டுட்டியே மணீயா!!!!!!!!!!

    அடங்கொன்னியா!உட்டா இன்னிக்கெல்லாம் ரவுண்டு கட்டி கம்பஞ்சுத்தி ஆடற மாதிரி, லுங்கிய மடிச்சி கட்டிட்டு ஆடிட்டே இருக்கலாம்.

    கெரகம் , நேரம் வேணுமுல்லோ.

    அப்பறம் எம்பட பேரு பெரியசாமி இல்லீங்.

    ReplyDelete
  3. //கபீஷ் said...
    இதுதான் அர்த்தமா? கவுண்டமணி படத்துல இத நிறைய தடவை பயன்படுத்துவார்.
    //

    கோயமுத்தூர் வழக்கு மொழிதானுங்க...

    ReplyDelete
  4. //இதுதான் அர்த்தமா? கவுண்டமணி படத்துல இத நிறைய தடவை பயன்படுத்துவார்.//
    கவுண்டமணிய விட அதிகமாக பயன்படுத்தியவர் ராசக்காபாளையம்
    சுந்ஸ் (சுந்தர்ராஜன்)

    ReplyDelete
  5. //பெருசு said...

    கிளப்பி உட்டுட்டியே மணீயா!!!!!!!!!!

    கெரகம் , நேரம் வேணுமுல்லோ.

    அப்பறம் எம்பட பேரு பெரியசாமி இல்லீங்.
    //

    அய்யோ, எனக்கு ஊட்டு பொடக்காளீல ஜோட்டாலிக கூட கவுடி வெளையாடுற நாவகம் எல்லாம் வந்து தொலைக்குதே?!

    இங்க குளுருல கெடந்து செத்துகிட்டல்ல இருக்கேன்?!

    ReplyDelete
  6. //பெருசு said...
    கவுண்டமணிய விட அதிகமாக பயன்படுத்தியவர் ராசக்காபாளையம்
    சுந்ஸ் (சுந்தர்ராஜன்)
    //

    சுந்தரத்தண்ணன் எல்லாம் நம்மூரை பிரபலியப் படுத்துனதுல நொம்ப முக்கியமான ஆள் ஆச்சே?!

    ReplyDelete
  7. //இங்க குளுருல கெடந்து செத்துகிட்டல்ல இருக்கேன்?!//

    ஏஞ்சாமி, ஜலவாதிக்கு போற பக்கத்துலே சீமெண்ண டின்லே சரக்கு
    வெச்சு ஆரும் விக்கறதில்லியா.
    அப்படியே குத்தவெச்சு,
    ரெண்டு கிளாஸ் ஊத்திகிட்டு ஊறுகாயை நக்..............

    ReplyDelete
  8. //பெருசு said...
    ஏஞ்சாமி, ஜலவாதிக்கு போற பக்கத்துலே சீமெண்ண டின்லே சரக்கு
    வெச்சு ஆரும் விக்கறதில்லியா.
    அப்படியே குத்தவெச்சு,
    ரெண்டு கிளாஸ் ஊத்திகிட்டு ஊறுகாயை நக்..............
    //

    அதெல்லாம் உட்டுபோட்டுனுங்க.... எப்பனாச்சும், ஒருக்கா பசங்க வந்தாத்தேன்.... நாசமாப் போனவனுக எவனும் பக்கத்துல இல்ல பாருங்க...

    ReplyDelete
  9. இதுதான் புதுமைபேசி

    ReplyDelete
  10. //நசரேயன் said...
    இதுதான் புதுமைபேசி
    //

    :-o)

    ReplyDelete
  11. சில சொற்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்று எண்ணினால் எழுதித்தான் ஆகவேண்டும். தயக்கம் எதற்கு?

    ReplyDelete
  12. ஒங்க பதிவையும், பின்னூட்டங்களையும் பாக்கறப்போ அம்புட்டு சந்தோசமா இருக்குது ராசா... இங்கனெயே இருக்கேன், ஆனா இதெல்லாம் கேக்க முடியறதில்ல..

    ஒரே இங்கிலிபீசு..

    ReplyDelete
  13. பத்தான் - பத்மநாபன்
    பத்மநாபனை ஒருநாளும் முழுப்பேர் சொல்லி கூப்பிட்டதே இல்ல, பத்தான்னு தான் கூப்பிட்டுக்கோம்.

    ReplyDelete
  14. 'சுப்பிரமணியன் கொப்பரவாயன்
    வெல்லந்திருடி வேங்கட்டராமன்'
    இவ்வளோ தான் ஞாபகம் இருக்கு

    ReplyDelete
  15. //அ. நம்பி said...
    சில சொற்களுக்கு விளக்கம் தரவேண்டும் என்று எண்ணினால் எழுதித்தான் ஆகவேண்டும். தயக்கம் எதற்கு?
    //

    ஐயா, வாங்க, வணக்கம்! அது ஒரு மாதிரியான சொற்கள்ங்க ஐயா! இந்த நட்சத்திர வாரம் முடியட்டும்ங்க!!

    ReplyDelete
  16. //பரிசல்காரன் said...
    //

    வாங்க பரிசல்காரரே! வணக்கம்!! ஆமுங்க!!!
    நீங்க சொல்லுறதும் சரிதானுங்க!!!

    ReplyDelete
  17. //சின்ன அம்மிணி said... //

    வாங்க சகோதரி! வணக்கம்!!
    சித்த யோசிச்சி, இல்லியானா யார்கிட்டயாவது கேட்டாவது அந்த பாட்டு தெரிஞ்சி சொல்லுங்க. சித்த, உங்களுக்கு புண்ணியமாப் போகும்!

    ReplyDelete
  18. அண்ணா அப்படியே எங்க ஊர்ப்பக்கம்மா போய்ய்ட்டு வந்த பீலிங்குங்க. தங்ஸ், பெருசுனு பேரு லிஸ்ட பார்த்தா ஸ்க்கூல்ல கூட படிச்ச்வனுங்க நினைப்புதானுங்கணா வருது. படிப்பு வேலைனு அங்க இங்க சுத்தி நான் பேசறது என்ன தமிழ்னு? எனக்கே குழப்பமா இருக்கு. உங்க பதிவுக்கு வந்தாலே கோயம்முத்தூர் வாசம் தூக்கலா இருக்கு, கலக்குங்க.

    ReplyDelete
  19. //Viji said... //

    வாங்க விஜய்! வணக்கம்!!
    கவலைய விடுங்க.... நாம, நாமளாவே இருப்போம். அடிக்கொருக்கா, நம்மூட்டுத் திண்ணைக்கு வந்துட்டு போங்க..... நாலு பழமை பேசுனா மாதரயும் இருக்கும்....

    ReplyDelete
  20. anna, oor nyabaham vandhu poduchungo. neengalavathu paravaiyillai NC yile Naan NH le verachu poiye Kedakkarango

    ReplyDelete
  21. நா கூட இன்னாவோன்னு நினைச்சுகினுருந்தேன். இத்தக்கண்டிதா ”கொன்னியா” நு சொல்றாங்கலாபா :)))

    ReplyDelete
  22. அடங்கொன்னியா.... இதுக்கு இப்பிடியா அர்த்தம் !!!!

    அப்பறம் இன்னுஞ் சில பேருக..

    கனகான் - கனகராசு
    கீச்மூச் - கிருஷ்ண மூர்த்தி
    புச்சான் - புருஷோத்தமன்
    நண்டு - நந்த குமார்
    ப்ராசு - ப்ரகாஷ
    ராக்கி - ராமகிருஷ்ணன்

    போறவு மணியாரே... பரிசலாரும் நம்மூருதான் தெரியுமல்லோ !!

    ReplyDelete
  23. நசரேயன் said...

    இதுதான் புதுமைபேசி
    //

    இதுதான் பழசு

    ReplyDelete
  24. பின்னூட்டமெல்லாம் அருமைங்கோவ்!

    அதென்னுமோ, நம்பூர் பேச்சு கேக்கிறதுனா அப்பிடியொரு பிரியம்ங்கெனக்கு.

    நான், நெம்பட செட்டு ஆளுங்க அல்லார்த்துக்கும், இதைய படிங்கன்னு ஒரு மெயில் போட்டாச்சுங்க.

    ReplyDelete
  25. முதலில் வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவராய் ஆனதற்கு.

    அடங்கொன்னியா!

    சூப்பர் வழக்கம் போலவே

    ReplyDelete
  26. //Chandran s said...
    //

    வாங்க சந்திரன்! ஆசுவாசப் படுத்திகுங்க!!
    அப்பப்ப நம்ம ஊட்டுத் திணணைக்கு வந்திட்டுப் போங்க!! பழமை நாலு பேசுங்க!! இங்கயும் நல்ல குளிரு இந்த வருசம்... :-o(

    ReplyDelete
  27. //புதுகை.அப்துல்லா said...
    நா கூட இன்னாவோன்னு நினைச்சுகினுருந்தேன். இத்தக்கண்டிதா ”கொன்னியா” நு சொல்றாங்கலாபா :)))
    //

    வாங்க அண்ணே! ஆமுங்க அண்ணே!!

    ReplyDelete
  28. //Mahesh said...
    போறவு மணியாரே... பரிசலாரும் நம்மூருதான் தெரியுமல்லோ !!
    //

    ஆமுங்க.... பரிசலாரைத் தெரியாத ஆள் உண்டா.... நல்ல மனுசன்!!

    ReplyDelete
  29. //குடுகுடுப்பை said... //

    வாங்க! வணக்கம்!!

    ReplyDelete
  30. //Shankar said...
    நான், நெம்பட செட்டு ஆளுங்க அல்லார்த்துக்கும், இதைய படிங்கன்னு ஒரு மெயில் போட்டாச்சுங்க.
    //
    வாங்க சங்கரு! நல்லா இருக்கீங்ளா? நம்ம ஊடுதான், திண்ணைக்கு வாங்க, பாடு பழமயப் பேசுங்க...

    ReplyDelete
  31. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    முதலில் வாழ்த்துக்கள் நட்சத்திர பதிவராய் ஆனதற்கு.
    //

    வணக்கம்! நன்றிங்க அமிர்தவர்ஷினி அம்மா!!

    ReplyDelete
  32. எல்லாத்தையும் போடமுடியலன்னாலும், இப்படி போடமுடிஞ்ச விளக்கங்களை அப்பப்ப தெரியப்படுத்துங்கள்..

    ReplyDelete
  33. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    எல்லாத்தையும் போடமுடியலன்னாலும், இப்படி போடமுடிஞ்ச விளக்கங்களை அப்பப்ப தெரியப்படுத்துங்கள்..
    //

    சரிங்க, அப்பிடியே செய்யுறனுங்க....

    ReplyDelete
  34. அட நம்ம மணிதான் இந்த வார மீனா? நடக்கட்டு நடக்கட்டு.

    உங்கூர்க்கிட்ட பண்ணக்கிணர்ல ஒரு தோப்புக்கு கெடாவெட்டுக்கு வந்திருக்கன். உடாம ஊருக்கெல்லாம் வருவீங்களா?

    ReplyDelete
  35. //Kasilingam said... //

    அண்ணா, அங்கயா இருக்கீங்க? ஆகா! ஊருக்கு வந்து ரெண்டு வருசம் ஆயிப் போச்சுங்க... அப்பா, அம்மா எல்லாம், சூலூர்ல இருக்காங்க. நான் கணேசன் அண்ணாகிட்ட உங்களைப் பத்தி பேசிட்டு இருந்தேன்.

    ReplyDelete
  36. ங்கொக்கமக்க பின்னீடீங்னா.னம்மூர் பேச்சு கேட்டா வெகு பிரியமா இருக்குத்ல்லொ.னமக்கு திருப்ப்பூர்தாங்.

    ReplyDelete
  37. //Anonymous said...
    ங்கொக்கமக்க பின்னீடீங்னா.னம்மூர் பேச்சு கேட்டா வெகு பிரியமா இருக்குத்ல்லொ.னமக்கு திருப்ப்பூர்தாங்.
    //

    வாங்க கண்ணு! ச்சும்மா, பேரோட வாங்க...அப்பத்தான பேர் சொல்லிப் பேசறதுக்கு வாட்டமா இருக்கும்.

    ReplyDelete
  38. கருப்பசாமி - கருப்ஸ்

    ReplyDelete
  39. //நசரேயன் said...
    கருப்பசாமி - கருப்ஸ்
    //

    வாங்க தளபதி, வாங்க!!

    ReplyDelete
  40. நீங்க எழுதறதையெல்லா நொம்ப நாளா பாக்கறேங்க. சந்தோசம். வீதம்பட்டியில படிச்சீங்களா, சரியாப் போச்சு, நானு சக்கார்பாளையத்தில. எல்லா ஊர்க்கரங்களு இங்க அங்க அலமோதி இணையத்தலதா கூடறாங்களாட்ருக்குது.

    ReplyDelete
  41. //
    அருள் செல்வன் கந்தசுவாமி said...
    நீங்க எழுதறதையெல்லா நொம்ப நாளா பாக்கறேங்க. சந்தோசம். வீதம்பட்டியில படிச்சீங்களா, சரியாப் போச்சு, நானு சக்கார்பாளையத்தில. எல்லா ஊர்க்கரங்களு இங்க அங்க அலமோதி இணையத்தலதா கூடறாங்களாட்ருக்குது.
    //

    ஆமுங்க! நொம்ப சந்தோசமுங்க. நமக்கு வீதம்பட்டி, வேலூர், அந்த வட்டாரமே நல்ல பரிச்யந்தானுங்க. பொழுது போகாத நேரத்துல நம்மூர் பழம பேசிட்டு பொழுத ஓட்டுறதுதானுங்க... என்னுங்க கொஞ்ச கொஞ்சமா பழக்க வழக்கமும் மாறிட்டு வருது பாருங்க...அதான் தெரிஞ்ச பழசையும் எழுத்தாக்கிட்டு வாரணுங்க...

    ReplyDelete
  42. ஏங் கண்ணு... பின்னூட்டம் போடறவங்கொ பேருக்கு பொறத்தால ஏதொ இத்தினிக்கூண்டு வாக்கியம் மட்டும் போட்டு பொறவால டபுக்கு டபுக்குனு இப்புடி // ரெண்டு கோட்ட மட்டும் போட்டு என்ன சொன்னாங்கொ ஏது சொன்னாங்கொ எங்குளுக்கு தெரியாம சசுபென்சா வெச்சுகிறியே.. ஏஞ்சாமி...திட்டுனாங்கலாக்கும்... முழுசா போடு கண்ணு.. என்னத்தையோ போ..ஏதொ எங்கூரு கண்ணுப்பையன் கேட்டான். நானும் கேட்டு போட்டன்.. ஆமா... டேய் கண்ணுப்பையா நீ சொன்னத கேட்டுப் போட்டண்டோய்...

    ReplyDelete
  43. //வசந்த் கதிரவன் said...
    ஏங் கண்ணு... பின்னூட்டம் போடறவங்கொ பேருக்கு பொறத்தால ஏதொ இத்தினிக்கூண்டு வாக்கியம் மட்டும் போட்டு பொறவால டபுக்கு டபுக்குனு இப்புடி // ரெண்டு கோட்ட மட்டும் போட்டு என்ன சொன்னாங்கொ ஏது சொன்னாங்கொ எங்குளுக்கு தெரியாம சசுபென்சா வெச்சுகிறியே..
    //

    ஐயோ கண்ணுகளா,

    அப்பிடியா எல்லாம் இல்ல! மேல இருக்குது பாருங்க அவிங்க சொன்னது....அதை மறுக்கா, மறுக்காப் போட்டு எடத்தை அடைக்காட்டி என்னன்னுதாங் கண்ணு உட்டுபோட்டன்.

    ReplyDelete
  44. கண்ணு... மொதல்லோ உன் பட்டப்பேருக்கு விளக்கம் குடுத்து ஒரு பதிவு போடு சாமி... பழமைபேசினா.. என்னமோ.. பழைமைவாதி என்கிற கணக்கில் கொங்குத்தமிழ் அறியாதவர்கள் நினைக்கக் கூடும்.. சொல்லிப்போட்டன் ஆமா...

    ReplyDelete
  45. //வசந்த் கதிரவன் said...
    கண்ணு... மொதல்லோ உன் பட்டப்பேருக்கு விளக்கம் குடுத்து ஒரு பதிவு போடு சாமி... பழமைபேசினா.. என்னமோ.. பழைமைவாதி என்கிற கணக்கில் கொங்குத்தமிழ் அறியாதவர்கள் நினைக்கக் கூடும்.. சொல்லிப்போட்டன் ஆமா...
    //

    வாரம் ஒருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான இருக்கேன். இந்த பக்கத்தை சித்த படிச்சுப் பாருங்க சின்ராசு!

    http://maniyinpakkam.blogspot.com/2008/10/blog-post_7311.html

    ReplyDelete
  46. தங்கவேல் இல்லீங்...தங்கராசு...ஊட்டுல கூப்படறது சின்னு, சின்னப்பாப்பு,சின்ராசு..

    ReplyDelete
  47. //தங்ஸ் said...
    தங்கவேல் இல்லீங்...தங்கராசு...ஊட்டுல கூப்படறது சின்னு, சின்னப்பாப்பு,சின்ராசு..
    //

    வாங்க தங்சு.... உங்கள எல்லாம் வெச்சி ஒரு பதிவு போட்டுட்டேன் பாத்தீங்ளா?

    ReplyDelete
  48. Nomba nalla irukku kannu... Innaikku thann motha mothalaa paathengannu... romba padichu sirichupottan... Romba naalakku appuram namba oor palamaya padikka oru santhosam. Valga valarga ungal thondu.

    ReplyDelete