12/03/2008

பின்னிப் ப‌(பெ)ட‌ல் எடுங்க‌!

வாங்க அன்பர்களே, வணக்கம்! போன பதிவுல நம்ப சனங்க மத்தியில, தமிழின்பாலும் ஊரின்மேலும் இருந்த தீராத வேட்கையப் பாத்து இருப்பீங்க. பல மடல்களும் வந்து இருக்கு, இனியும் படிக்கலை. எப்பிடியோ, அவிங்க மனசக் கிளரி விட்டதுல நமக்கு ஒரு சந்தோசம்!

ரெண்டு மூணு நாட்களுக்கு முன்னால, இங்க இருக்குற குளிரப் பத்தி நான் புலம்ப, பதிவர் அது சரி அண்ணாச்சி இங்கயுந்தான் குளிரு பின்னிப் பெடல் அடிக்குதுன்னு சொன்னாரு. உடனே நானும் பின்னூட்டத்துலயே அதைப் பத்தி மேற்கொண்டு பேசலாம்னு இருந்தேன். மறுபடியும் பதிவாப் போட்டா, பாடு பழமய அல்லாரும் படிச்சுத் தெரிஞ்சுக்குவாங்க பாருங்க, அதான் இந்த பதிவு!

பாருங்க, நம்ப ஊர்ல படல்(portable wall) அப்பிடிங்றது, தெனமும் கெழமையும் வீடு, தோட்டங் காடு, மேடு பள்ளம், வனாந்தரம்னு எங்கயும் பொழங்குற ஒன்னுங்க. கண்ணாலமா, தென்னை ஓலைல படல் கட்டிப் பந்தல் போட்டு, ஊரு கூடி பாடு பழமயோட அப்பிடியொரு குதூகலமா நடக்கும். இந்தப் படல்ங்றது ஒரு தற்காலிக தடுப்புச் சுவர்ங்க.

புள்ளை பெரிய மனுசி ஆயிட்டாளா? மாமங்காரங்க வந்து, பச்சையோலைல படல் கட்டி, குடிசை போட்டு அம்மினிய அதுல ஒக்கார வெச்சி, சீரு, தெரட்டின்னு என்னா அமர்க்களம்?! என்ன, அன்னையோட அம்மினியோட சேந்து வெளையாடுற பாக்கியம் பொன்னானுக்கு இனி இல்லை.

ஆடு மாடுக‌ அடைச்சு வெக்கிற‌ ப‌ட்டியா? ப‌ட‌லுக‌ வெச்சி நாலா புற‌மும் த‌டுப்புப் போட்டு, ந‌டுப்புல‌ ப‌ண்டங் க‌ன்னுக‌ளை நிறுத்தி வெச்சுருவோம். தென‌மும் சாய‌ங்கால‌ம் அந்த‌ப் ப‌ட‌லுக‌ளை ந‌க‌ர்த்திட்டே போவாங்க‌. அப்ப‌த்தான‌, எருவு காடு தோட்ட‌ம் பூரா விழுகும். ஆனா, இந்த‌ ப‌ட‌லை மூங்கில்க் குச்சிக‌ளை வெச்சி செய்திருப்பாங்க‌. ப‌ட்டிக்கு, ப‌க்க‌த்துல‌ கூட்டு வ‌ண்டியோட‌ கூடு ஒன்னும் இருக்கும். அதுல‌தான் காவ‌லுக்கு ப‌டுத்துக்க‌ற‌து. ம‌ழை வ‌ந்தாலும் உள்ள‌ பொட்டுக் கூட‌ ந‌னையாதுங்க‌!

குடிசை, வீடு, மாட்டு சாலை, பொட‌க்காளின்னு எங்க‌யும் ஒரு ப‌ட‌லைக் க‌த‌வா வெச்சிடுவோம். ஊட்டுல‌, ச‌ன‌ங்க‌ குளிக்க‌க் கொள்ள‌ ஒரு ஒதுக்குப் பொற‌ம் வேணுமா? இந்த‌ ப‌ட‌லுக‌ளை வெச்சா முடிஞ்ச‌து சோலி! இப்பிடி, இதுக‌ளோட‌ தேவை எங்க‌யும் இருக்கும். ப‌ட‌லுக‌ளை ப‌ல‌தும் வெச்சி செய்வாங்க‌. தென்னை ஓலை, ப‌னை ஓலை, மூங்கில் குச்சி, சிறு சிறு செடிக‌ன்னும் ப‌ல‌ வித‌மான‌ ப‌ட‌லுக‌ பொழ‌க்க‌த்துல‌ இருக்கு.

நானும் தென்னையோலை ந‌ல்லாப் பின்னுவேன். எங்க‌ அப்பிச்சிய‌விங்க‌ ஊரு, குண்ட‌ல‌ப் ப‌ட்டி லெட்சுமாபுர‌ம். அங்க‌ ஊர் எல்லைல‌ இருக்குற‌ தோப்பு எங்க‌ அப்பிச்சி அவிங்ள‌துதேன்! அப்பிடிப் பாருங்க‌, விசேச‌ வீடுக‌ள்ல‌ தெனை யோலை, ப‌னை யோலைல‌ த‌டுக்கு பின்னிப் ப‌ட‌ல‌ செய்யுற‌தும், அதுல‌ போட்டி போடுற‌தும் பொன்னானுக‌ளுக்குள்ள‌ ஒரு கெள‌ர‌வ‌ப் போட்டியா இருக்கும். அப்பிடி யாரு மொத‌ல்ல‌ பின்னிப் ப‌ட‌ல் எடுக்குறாங்க‌ளோ, அப்ப‌ச் சொல்லுற‌து, "ம‌வ‌னே, பின்னிப் ப‌ட‌ல் எடுத்துட்டானே?" அப்பிடின்னு.

அதுவே, பாடு ப‌ழ‌ம‌க‌ள்ல‌யும் யாரு விசுக்குன்னு செஞ்சாலும் இந்த‌ப் ப‌ழ‌ம‌ய‌ சொல்லுற‌து வாடிக்கையாமுங்க‌. தீவிர‌த்தைக் குறிச்சு சொல்லுற‌ ஒரு சொல்வ‌டையாவும் ஆச்சு. அதானுங்க‌ இந்த‌ "பின்னிப் ப‌ட‌ல் எடுக்குற‌து!". ஆனா, யாரு பின்னிப் பெட‌ல் ஆக்கினாங்க‌ன்னுதான் தெரிய‌லை. தோட்ட‌ங் காடுக‌ள்ல‌ பெட‌லும் இல்ல‌, க‌ட‌லும் இல்லீங்கோ! எல்லாம் இந்த‌ப் ப‌ட்ட‌ண‌த்து ச‌ன‌ங்க‌ செய்யுற‌ வேலை! இஃகி!! இஃகி!!! ச்சும்மா சொன்னேன், கோவிச்சுக்காதீங்க‌! ப‌ழ‌ம‌ய‌க் கேட்டாச்சு இல்ல‌?! போயி, உங்க‌ சோலி என்ன‌வோ அதுல‌ பின்னிப் ப‌ட‌ல் எடுங்க‌!!


கொங்கு தமிழ் அகராதி
பழமை: பேச்சு , வெட்டிப் பேச்சு
படல்: மூங்கிலால் அல்லது ஓலையால் வேயப்பட்ட ஒரு பக்க கதவு அல்லது அடைப்பு
அம்மணி( அம்மினி): இளம் பெண்
திரட்டி: பூப்புனித நீராட்டுவிழா
பண்டம்: ( இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடும் ) -- இக் கட்டுரையின் பொருளில் -- மாடு , எருமை போன்ற கால்ந‌டைகள்
பொடக்காளி ( புறக்காணி): கொல்லைப்புறம்
அப்பச்சி: அம்மாவின் அப்பா
விசுக்கென்று: எதிர்பாராமல், திடீரென , உடனடியாக

சாளை(சாலை): ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறு குடில்
தடுக்கு: தென்னை ஓலையால் வேயப்பட்ட கீற்று

32 comments:

  1. பின்றீங்களே !!

    இந்த இஃகி இஃகி தான் புரிய மாட்டிங்குது...

    இதுவும் ஊர்நாட்டுல பொழங்கறதோ??

    ReplyDelete
  2. //
    Mahesh said...
    பின்றீங்களே !!

    இந்த இஃகி இஃகி தான் புரிய மாட்டிங்குது...

    இதுவும் ஊர்நாட்டுல பொழங்கறதோ??
    //

    வாங்க மகேசு!

    "ஹி ஹி"தான் நம்ம ஊட்டுல இஃகி! இஃகி!! ஆயிடுச்சி....

    ReplyDelete
  3. இஃகி!இஃகி! நல்லாவே பின்னி படல் எடுக்கிறீங்க:)கூடவே மறுவதலையும் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கீங்க!

    ReplyDelete
  4. பின்னி படல் எடுக்கிறீங்க நீங்க..

    :) இஃகி இஃகி நிஜம்மாவே சிரிக்கிறமாதிரி இருக்குதுங்க நல்லாருக்கு..

    ReplyDelete
  5. //ராஜ நடராஜன் said...
    இஃகி!இஃகி! நல்லாவே பின்னி படல் எடுக்கிறீங்க:)கூடவே மறுவதலையும் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கீங்க!
    //

    வாங்க நட்டு ஐயா, போயி "அடங் கொன்னியா!" படீங்க.... உங்க பேர என்னமாக் கிழிச்சி தொங்கப் போட்டு இருக்கோம்னும் பாருங்க...

    ReplyDelete
  6. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    பின்னி படல் எடுக்கிறீங்க நீங்க..
    //

    வாங்க நம்மூரு அம்மினி!

    ReplyDelete
  7. //நானும் தென்னையோலை ந‌ல்லாப் பின்னுவேன்.//

    ஐ! நானும். நல்ல விளக்கம். நீங்க பின்னிப் படல் எடுத்திட்டீங்க பழம!

    ReplyDelete
  8. //கபீஷ் said...
    நீங்க பின்னிப் படல் எடுத்திட்டீங்க பழம!
    //

    வாங்க கண்ணு! நொம்ப நல்லது கண்ணு!!
    மகராசனா இரு!!!

    ReplyDelete
  9. பின்னி படல் எடுகிறீங்க

    ReplyDelete
  10. //நசரேயன் said...
    பின்னி படல் எடுகிறீங்க
    //

    வாங்க தளபதி!

    ReplyDelete
  11. அருமையா இருக்குது போங்கோ!!!

    தாரு எவ்வாறுனே தெரியாம, தாய் புள்ளயா பழவர சனத்தனத்த நெனைச்சா, தேனாட்டாட்டுமு இனிக்கிற நம்பூர் பேச்சுதானோ அல்லாரீமு ஒன்னு சேக்குது.

    நாளையிமினியிமு நம்ப சனமெல்லா ப்ரீமா, சந்தோசமா இருக்கோனும்னா, உன்னோ நிறையா பழம பேசுனீங்கனாதான ஆவு?

    ReplyDelete
  12. //Shankar said...
    நாளையிமினியிமு நம்ப சனமெல்லா ப்ரீமா, சந்தோசமா இருக்கோனும்னா, உன்னோ நிறையா பழம பேசுனீங்கனாதான ஆவு?
    //

    வாங்க சங்கரு, நல்லா இருக்கீங்தான? இதென்னுங்க பொள்ளாச்சி தெய்வாத்தா கதை வந்திட்டே இருக்குங்க... இப்ப, இங்க மத்தியானம் ஒன்றரை மணி. சாயங்காலம் ஒரு ஆறு மணிக்குள்ள கதைய வலை ஏத்திருவேன். நம்மூர்ப் பழமைதேன்!

    ReplyDelete
  13. // வாங்க சங்கரு, நல்லா இருக்கீங்தான?
    //

    அதுக்கென்னுங், நம்பூர்ல இருக்கங்காட்டீ தேவுளீங்.

    //
    சாயங்காலம் ஒரு ஆறு மணிக்குள்ள கதைய வலை ஏத்திருவேன்.
    //

    ச்சேர்ச்சேரீங், பொழுதோடோ படிச்சு போடலாங்.

    ReplyDelete
  14. நண்பரே , நம்ம கொங்கு தமிழில் கதைப்பது சரி.. ஆனால் உங்கள் கதையாடல் அதன் உள் அர்த்ததோடு பிறரை சென்று சேர்ந்ததா என்பது கேள்விக்குறி... உங்களுடைய புனைப்பெயரான பழமைபேசி என்பது கூட கொங்குமண்டலத்தை சாராத பலரால் .. பழமை என்பதை பழையது என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்...


    ஆகவே பதிவுக்கு டிஸ்கியாக கொங்கு வட்டார தமிழின் பொருள் விளக்கத்தை தருவது நல்லது.. நீங்ங் சொல்லலீங்.. நான் சொன்னா தப்பு இல்லீங்ங்ளே... கட்டு வார்த்தையா இருக்காதீங்ங்,,,

    கொங்கு தமிழ் அகராதி

    பழமை -- பேச்சு , வெட்டிப் பேச்சு

    படல் --- மூங்கிலால் அல்லது ஓலையால் வேயப்பட்ட ஒரு பக்க கதவு அல்லது அடைப்பு

    அம்மணி( அம்மினி) - இளம் பெண்

    திரட்டி - பூப்புனித நீராட்டுவிழா


    பண்டம் ( இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடும் ) -- இக் கட்டுரையின் பொருளில் -- மாடு , எருமை போன்ற கால்னடைகள்

    பொடக்காளி ( புறக்காணி)-- கொல்லைப்புறம்

    அப்பச்சி - அம்மாவின் அப்பா

    விசுக்கென்று -- எதிர்பாராமல், திடீரென , உடனடியாக


    என்னுங்.. யாரு எந்த வட்டார வழக்குல பதிவு போட்டாலும் அதற்குண்டான அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுங்க... அப்பத்தான எல்லாரும் ரசிக்க முடியும்...

    ReplyDelete
  15. //வசந்த் கதிரவன் said... //

    வணக்கமுங்க! நீங்க சொல்லுறது வாசுதவமான பேச்சுங்க. இனி அப்பிடியே செய்யுறனுங்க.... நொம்ப நன்றிங்ண்ணா!!

    ReplyDelete
  16. ////நானும் தென்னையோலை ந‌ல்லாப் பின்னுவேன்.//
    ஹிஹி, நானும். ஓலையை ஊற வைச்சு... படல் எடுத்துடுவோம்ல! எங்கப்பா தான் சொல்லிக் கொடுத்தது!

    நான் பின்னிப் பெடல் எடுக்கறது என்றால், இந்த சைக்கிள் (மைக்கல் வருவாரே, அந்த சைக்கல்) செயின் பத்தின விஷயம்னுல்ல நினைச்சிட்டிருந்தேன்:‍-)

    இஃகாஸ்யமா எழுதறீங்க!

    ReplyDelete
  17. கண்ணு... இன்னும் ரெண்ட உட்டுட்டன்..

    சாளை(சாலை) - ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறு குடில்

    தடுக்கு - தென்னை ஓலையால் வேயப்பட்ட கீற்று

    ReplyDelete
  18. //வசந்த் கதிரவன் said...
    கண்ணு... இன்னும் ரெண்ட உட்டுட்டன்..

    சாளை(சாலை) - ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறு குடில்

    தடுக்கு - தென்னை ஓலையால் வேயப்பட்ட கீற்று
    //

    நன்றிங்க!

    ReplyDelete
  19. இஃகி!இஃகி! நல்லாவே பின்னி படல் எடுக்கிறீங்க:)

    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  20. //Natty said... //

    வாங்க நட்டி.... உங்கள வெச்சி ஒரு பதிவு போட்டிருக்கேன், பாத்தீங்ளா... அடங் கொன்னியான்னு....

    ReplyDelete
  21. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    ////நானும் தென்னையோலை ந‌ல்லாப் பின்னுவேன்.//
    ஹிஹி, நானும். ஓலையை ஊற வைச்சு... படல் எடுத்துடுவோம்ல! எங்கப்பா தான் சொல்லிக் கொடுத்தது!

    இஃகாஸ்யமா எழுதறீங்க!
    //

    வாங்க ஐயா! நொம்ப சந்தோசம்!!
    நீங்களும் பின்னுவீங்ளா?

    ReplyDelete
  22. இந்தப் பின்னிப் பெடல் எடுக்கறதும் பெண்டு கழட்டிட்டானையும் ஒண்ணா நினைச்சுட்டு இருந்தேன்மா.

    இப்பப் புரிஞ்சு போச்சு.ஆங் புரிஞ்சு நின்னு கிட்டது:)
    நன்றிம்மா.

    ReplyDelete
  23. //வல்லிசிம்ஹன் said...
    இந்தப் பின்னிப் பெடல் எடுக்கறதும் பெண்டு கழட்டிட்டானையும் ஒண்ணா நினைச்சுட்டு இருந்தேன்மா.

    இப்பப் புரிஞ்சு போச்சு.ஆங் புரிஞ்சு நின்னு கிட்டது:)
    நன்றிம்மா.
    //

    வாங்க! ஆமாங்க, நாலு பேருக்குத் தெரியட்டுமேன்னுதான் இந்த பதிவுங்க!!
    நன்றிங்க!!

    ReplyDelete
  24. படலை தெரியுமா? ஈழத்தவர்களை பற்றித் தெரிந்தவர் என்பதால் ஒரு கேள்வி. படலை கட்டி யார் எண்டு தெரியுமா?
    அடுத்தது தென்னங்கீற்றில் இருந்து பின்னுவது கிடுகு. படல் கவுட்டுப் போட்டுப் பின்னுவாங்கள் எண்டு நினைக்கிறன்.
    அப்புறமா தடல் தெரியுமா?

    எதுக்கு இப்ப படத்த மாத்தி தடல் புடல் பண்ணுறீங்க?

    ReplyDelete
  25. //ஆட்காட்டி said...
    படலை தெரியுமா? ஈழத்தவர்களை பற்றித் தெரிந்தவர் என்பதால் ஒரு கேள்வி. படலை கட்டி யார் எண்டு தெரியுமா?
    அடுத்தது தென்னங்கீற்றில் இருந்து பின்னுவது கிடுகு. படல் கவுட்டுப் போட்டுப் பின்னுவாங்கள் எண்டு நினைக்கிறன்.
    அப்புறமா தடல் தெரியுமா?

    எதுக்கு இப்ப படத்த மாத்தி தடல் புடல் பண்ணுறீங்க?
    //

    ஆட்காட்டி அண்ணே, வாங்கோ! ஓம், படலை என்டால் வீட்டுக்கு முன்புறம் இருக்கும் அதுதானே? முற்றம் கடந்து வெளிக்கிடக்க இருக்குமே அதுதானென்ன, நாஞ்சொல்லுறது சரிதானே? கிடுகு என்டாலும் தெரியும் எனக்கு. ஒரு கிடுகு அறுபது சதம் என்டு சனங்கள் வாங்குவினும். அண்ணே, தடல் என்டால் வாழை மரத்தடல் தானே? தண்டு எடுக்கும் போது வருமென்ன?

    ReplyDelete
  26. அதுவும் சரி தான். அப்புறமா அதை சேர்த்து சாப்பிட பயன் படுத்துவார்கள். அதைத் தான் தடல் என்று பெரும்பாலும் கூறுவார்கள்.

    ReplyDelete
  27. பின்னி பெடல் எடுக்கிற வசனத்தை நிறைய இடத்தில் கேட்டிருக்கின்றேன் ஆனால் இன்றுதான் அதன் உண்மையை விளங்கி கொண்டேன். நிறைய செற்களுக்கு விளக்கம் அறிந்து கொண்டேன். நல்ல பதிவு. இயல்பான பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் தருவது அருமை.

    ReplyDelete
  28. //நர்மதா சிவா said...
    பின்னி பெடல் எடுக்கிற வசனத்தை நிறைய இடத்தில் கேட்டிருக்கின்றேன் ஆனால் இன்றுதான் அதன் உண்மையை விளங்கி கொண்டேன். நிறைய செற்களுக்கு விளக்கம் அறிந்து கொண்டேன். நல்ல பதிவு. இயல்பான பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் தருவது அருமை.
    //

    நன்றிங்க!

    ReplyDelete
  29. //ஆட்காட்டி said...
    அதுவும் சரி தான். அப்புறமா அதை சேர்த்து சாப்பிட பயன் படுத்துவார்கள். அதைத் தான் தடல் என்று பெரும்பாலும் கூறுவார்கள்.
    //

    நன்றிங்க, தடல் புடல் ஒரு பதிவு போடக் கிடக்கு!!

    ReplyDelete
  30. //Natty said...
    இஃகி!இஃகி! நல்லாவே பின்னி படல் எடுக்கிறீங்க:)
    //

    :-o))

    ReplyDelete
  31. பின்னி பிடல் எடுத்துடீங்கனா!!

    ReplyDelete
  32. //Bhuvanesh said...
    பின்னி பிடல் எடுத்துடீங்கனா!!
    //

    இஃகிஃகி! அது படல் கண்ணூ!!

    ReplyDelete