12/02/2008

கனவில் கவி காளமேகம் - 9

வணக்கம் அன்பர்களே! அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காள்மேகம் ரொம்ப நாள் வரவே இல்லை. நட்சத்திரப் பதிவர் ஆயிட்டதால, நிறைய பின்னூட்டம், எல்லார்த்துக்கும் பதில் சொல்லிட்டு நித்திரை கொள்ள தாமதமாயிடுச்சு, திடீர்னு கனவுல கவி காளமேக அப்பிச்சி! மனுசன், வழக்கம் போல கேள்வி கேட்டுத்தான் அலம்பலை ஆரம்பிச்சாரு. அவரு இன்னைக்கு என்ன சொன்னாருன்னு மேல படிங்க!

"என்னடா பேராண்டி, நட்சத்திரப் பதிவராமே? நல்லா இருடா, நல்லாயிரு!"

"எல்லாம் நீங்க செய்த வேலைதான்! இப்ப, இதுல கொண்டு வந்து விட்டுடுச்சி!"

"அதனாலென்ன?! ஆமா இரவல், குறியாப்பு இதுகளுக்கு வெளக்கஞ் சொல்லு பாப்போம். நீ சின்ன வயசுல பொழங்குறதுதான இதெல்லாம்!"

"ஓ, தெரியுமே! அடுத்தவங்க கிட்ட இருந்து எதனாக் கடனா வாங்கிட்டு வர்றதுதான். இது கூடத் தெரியாதா?"

"அது சரிடா, ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"அப்பிச்சி, வேலையக் காமிக்க ஆரம்பிச்சிட்டீங்களே?! ரெண்டும் ஒன்னுதான்!"

"இல்லடா பேராண்டி! இரவல்ன்னா, ஒரு பொருளை அடுத்தவங்ககிட்ட வாங்கிட்டு வந்து பாவிச்சுட்டு, பொழங்கிட்டுத் திருப்பித் தந்திடணும்!"

"அப்பக் குறியாப்பு?"

"அட‌, உங்க‌ அம்மாதான் அடிக்க‌டி ப‌க்க‌த்து வீட்ல‌ குறியாப்பு வாங்கிட்டு வ‌ருமே? தெரிய‌னுமேடா ஒன‌க்கு?!"

"ஐயோ, தூக்க‌த்துல‌ வ‌ந்து உசுரு எடுக்காதீங்க‌, சொல்லிட்டுக் கெள‌ம்புங்க‌. நான் தூங்க‌ணும்!"

"கோவ‌த்துக்கு ஒன்னும் கொற‌ச்ச‌ல் இல்ல‌டா! ச‌ரி, சொல்லுறேன் கேட்டுக்கோ!! குறியாப்புன்னா, எதோ ஒரு பொருளை குறிப்புல‌யோ, அல்ல‌து இவ்வ‌ள‌வு வாங்கிட்டுப் போறேன்னு குறிச்சு சொல்லி வாங்கிட்டு வ‌ந்துட்டு, அதை குறிச்ச‌ வெச்சா மாதிரி திருப்பிக் குடுக்குற‌ வாடிக்கைதான் குறியாப்பு!"

"அப்பிச்சி கொல்லுறீங்க‌! இர‌வ‌ல்ங்ற‌தும் அதான‌?!"

"இல்ல‌டா, இர‌வை ஒரு ப‌டி வாங்கிட்டு வ‌ரும் போது உங்க‌ம்மா என்ன‌ சொல்லிட்டு வ‌ருது? இந்த‌ ஒரு ப‌டி இர‌வைய‌ அடுத்த‌ விசாழ‌க் கெழ‌மை ச‌ந்த‌யில‌ வாங்கித் தாரேன்னு சொல்லிட்டு வ‌ருது. அதே மாத‌ர‌, திருப்பியும் குடுக்குது. இங்க‌ உங்க‌ அம்மா வாங்கியாந்த‌ இர‌வை வேற, குறிப்பிட்ட மாதர திருப்பிக் குடுக்குற‌ ர‌வை வேற‌!"

"ஓ அப்பிச்சி, வெள‌ங்கிடுச்சி! இர‌வ‌ல்ன்னா வாங்கியாந்த‌ பொருளையே திருப்பித் தார‌து. புத்த‌க‌ம் இர‌வ‌ல் வாங்கியார‌து!"

"ஆமாடா பேராண்டி, ச‌ரி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"


இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)

20 comments:

  1. இப்படி ஒரு வார்த்தை இருக்கா?
    அடிக்கடி அவர் உங்க கனவில் வரட்டும்

    ReplyDelete
  2. நல்லா வெளங்கீருச்சுங்க

    ReplyDelete
  3. பெருசு said...

    நல்லா வெளங்கீருச்சுங்க

    பழசுக்கு போட்டியா பெரிசு.

    வாங்கினா குடுக்கனுமா? இது சரியில்லைன்னே

    ReplyDelete
  4. //விஜய் ஆனந்த் said...
    :-)))...
    //

    எப்பவும் ஒரே சிரிப்புத்தான்.... :-)

    ReplyDelete
  5. //கபீஷ் said...
    இப்படி ஒரு வார்த்தை இருக்கா?
    அடிக்கடி அவர் உங்க கனவில் வரட்டும்
    //

    உங்களுக்கென்ன, எனக்கல்ல தூக்கங் கெடுது? :-o)

    ReplyDelete
  6. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    புரிஞ்சுதுங்க :)
    //

    ஐயோ, இப்பிடிச் சொல்லி கவுக்குறீங்ளே?! :-o)

    ReplyDelete
  7. //பெருசு said...
    நல்லா வெளங்கீருச்சுங்க
    //

    வாங்க பெருசு...

    ReplyDelete
  8. //குடுகுடுப்பை said...
    பழசுக்கு போட்டியா பெரிசு.//

    :-o)

    //வாங்கினா குடுக்கனுமா? இது சரியில்லைன்னே//

    வாங்கிட்டுத் தரத் தேவையில்ல... நான் அப்பிடிச் சொல்லவே இல்லை! ஆனா, அதுக்குப் பேரு பிச்சையாமுங்க... :-o))

    ReplyDelete
  9. இரவலா பண முடிப்பு கெடைக்குமா?

    ReplyDelete
  10. //நசரேயன் said...
    இரவலா பண முடிப்பு கெடைக்குமா?
    //
    அதுக்கு பேரு, கைமாத்துங்க தளபதி!

    ReplyDelete
  11. ஹி. ஹி. ஆவி அமுதான்னு ஒரு கான்சப்ட் கேள்வி பட்டுருக்கேன்... நீங்க கூட அத மாதிரி ஏதாச்சும் ப்ரோக்ராம் பண்ணலாமே!

    ReplyDelete
  12. //Natty said...
    ஹி. ஹி. ஆவி அமுதான்னு ஒரு கான்சப்ட் கேள்வி பட்டுருக்கேன்... நீங்க கூட அத மாதிரி ஏதாச்சும் ப்ரோக்ராம் பண்ணலாமே!
    //

    வாங்க அவாய்க்கார அண்ணே! நமக்கு இது போதும்ங்க!!

    ReplyDelete
  13. engirunthu intha maathiri vishayam ellam pudikareengalo? Nallarukunga..

    ReplyDelete
  14. //தங்ஸ் said...
    engirunthu intha maathiri vishayam ellam pudikareengalo? Nallarukunga..
    //
    வாங்க தங்சு, ரொம்ப நாளா ஆளக் காணம்?

    ReplyDelete
  15. குறியாப்பு - புதுசா இருக்கே வார்த்தை !!!

    ReplyDelete
  16. //Mahesh said...
    குறியாப்பு - புதுசா இருக்கே வார்த்தை !!!
    //
    தெரிஞ்சுக்கத்தான இந்த பதிவே?!

    ReplyDelete
  17. இரவல் தெரியும். குறியாப்பு இன்னைக்குத் தான் கத்துக்கிட்டேன் - அதுவும் இதுக்கும் இரவலுக்கும் உள்ள வேறுபாட்டோட. நன்றி பழமைபேசியாரே.

    ReplyDelete
  18. //குமரன் (Kumaran) said...
    இரவல் தெரியும். குறியாப்பு இன்னைக்குத் தான் கத்துக்கிட்டேன் - அதுவும் இதுக்கும் இரவலுக்கும் உள்ள வேறுபாட்டோட. நன்றி பழமைபேசியாரே.
    //

    நீங்க எல்லாம் வந்து படிச்சுட்டு, திண்ணையில வந்து கருத்தும் சொல்லிட்டுப் போறீங்களே....நாந்தான் நன்றி சொல்லணும்!

    ReplyDelete