5/14/2011

தோல்வி உணர்தலும், ஆற்றுப்படுத்தலும்!!

தமிழக பதினான்காம் சட்டமன்றம் விரைவில் அமைய இருக்கிறது. சபைக்குத் தெரிவான அனைவரையும் வாழ்த்துவது நம் கடமை. தேர்தலை வெகு நேர்த்தியாக நடத்தி முடித்த அரசுப் பணியாளர்கள் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

1970களில் தேடிக் கொண்ட வெறுப்புணர்வை வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திட 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதுவும் மாற்றுக் கட்சி இல்லாத ஒரு சூழலில் அமைந்த ஒரு வாய்ப்பு எனவும் கருதுவோர் உண்டு.

தமிழக மண்ணில் நடந்தேறிய துன்பியல்ச் சம்பவத்தை ஒட்டி, அவ்வாய்ப்பும் பறிபோக மாற்றுக் கட்சியின் அரசு அமைகிறது. அடாவடி, நாணயமற்ற எதேச்சதிகாரம் முதலானவற்றால் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு. 1996ஆம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று முரசு கொட்டப்படுகிறது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நல்லதொரு ஆட்சியும் நடத்தப்படுகிறது.

என்றாலும், ஓட்டுக்கணக்குகளும் சிலபல சூழ்ச்சிகளுமாக திமுகவுக்கான அடுத்த வாய்ப்பு நல்கப்படவில்லை. நல்லதொரு ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்படாதது வரலாற்றுப் பிழையாகவே நான் கருதுகிறேன். இதில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் இருக்கக்கூடும். எனினும், என்னால் உறுதிபடக் கூற இயலும், அது வரலாற்றுப் பிழையென!!

2001ஆம் ஆண்டு மாற்றுக் கட்சியின் ஆட்சி மீண்டும் கொண்டு வரப்படுகிறது. பழி வாங்குதலும், வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமையும் இடம் பெற்று, ஒரு வெறுமையான ஆட்சி இடம் பிடிக்கிறது. அரசியல் கணக்குகளும், புதிய கட்சிகளின் தோற்றமுமாகச் சேர்ந்து கொண்டு, அதிமுக வெற்றி வாய்ப்பை இழக்கிறது. கணக்குகளின் வாயிலாகத்தான் திமுகவுக்கு, தனிப்பெரும்பான்மை இல்லாத ஆட்சி கிடைக்கிறது.

மத்திய ஆட்சியில் பங்கு மற்றும் மாநிலத்தில் ஆட்சி எனும் ஒருவிதமான மமதையோடு, 1970களில் சம்பாதித்துக் கொண்ட அதே வெறுப்புணர்வை தானாகத் தேடிக் கொண்டிருக்கிறது திமுக. தன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து நழுவியது மாபெரும் பிழை!! கட்சியை ஒரு வணிக நிறுவனம் போல் மாற்றியது, அறமற்ற செயல்!! இவற்றால், நல்ல பல அதிகாரிகளைக் கொண்டு இழைத்துக் கட்டிய வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படும் அளவுக்கு வெறுப்புணர்வை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது திமுக!!

மாற்றுக் கட்சியானது, தவறிழைத்து வெறுப்புணர்வை வளர்த்துக் கொள்ளாத வரையிலும் திமுகவின் மேல் இருக்கும் வெறுப்புணர்வு குறைய வாய்ப்பு இல்லை. 1970களில் ஏற்பட்ட களங்கத்தை, எம்.ஜி.ஆர் என்னும் கவர்ச்சிமிகு தலைவர் இருக்கும் வரையிலும் துடைத்தெறிய இயலவில்லை.

அகவை அறுபதுகளில் காலடி எடுத்து வைத்திருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் அவர்களது பக்குவம் பலமடங்கு மெருகு கூடப் பெற்றிருக்கும் என்றே நம்பலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு நீங்க வெகுநாட்கள் பிடிக்கும். இச்சூழலில், விஜயகாந்த அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, திமுகவுக்கு மேலும் சிக்கலைக் கூட்டுகிறது.

இத்தேர்தலைப் பொறுத்த வரையில், தோராயமாக 60:40 எனும் விகிதாச்சாரத்தில் தமிழகம் பிளவுபட்டு இருக்கிறது. வெறுமனே 22 இடங்கள்தான் திமுக பெற்றிருக்கிறது என ஒருவர் எள்ளி நகையாடுவதும் சரியல்ல. ஒருவர் அப்படிச் செய்வாரேயாயின், அது அவரது முதிர்ச்சியின்மையையே காட்டுவதாகப் பொருள் கொள்ளலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆளுங்கட்சியின் அடாவடி, அநியாயங்களை எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு என்பதை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சி, மாநிலந் தழுவிய போராட்டம் நடத்தியது உண்டா? அநியாயங்களை, அந்தந்த இடத்திலேயே முட்டுப் போட்டு நிறுத்த முயன்றது உண்டா?? கிடையாது என்பதுதானே மெய்??

மக்களுக்கு உகந்த ஆட்சியை நடத்தாத ஒரு கட்சிக்கு அங்கீகாரம் அளிப்பது முறையல்ல. சட்டம் ஒழுங்கைச் சரிவரப் பராமரிக்காத ஒரு ஆட்சி தொடர்வதில் நியாயமில்லை. எனவே மக்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது மட்டுமே இதில் இருக்கும் மகத்தான உண்மை.

ஆளுங்கட்சி ஆக்கப்பூர்வமான திட்டங்களைத் தீட்ட வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுக்காக்க வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள், தமக்குள்ள கடமைகளைத் தட்டிக்கழிக்காது செயல்பட வேண்டும்.

60% பேருக்கு, திமுகவை எதிர்ப்பதற்கான காரணங்கள் பலவாக இருந்திருக்கிறது. அதே போல, எஞ்சி இருக்கும் 40% பேருக்கு திமுகவை ஆதரிப்பதற்கான காரணம் ஒன்று கூடவா இருந்திருக்காது?? ஆகவே, வெற்றிக் களிப்புகள் நாகரிகத்துக்கு உட்படல் வேண்டும். தோல்விச் சூழல், காழ்ப்புணர்வுகளுக்கு வித்திடாமை வேண்டுதல் வேண்டும். நல்லதொரு சூழல் நாட்டில் தவழ்ந்திட, நாமனைவரும் வேற்றுமைகளைக் கடந்து, மற்றவர்தம் உணர்வை மதித்திடல் வேண்டும்!!

Healing quite honestly makes our life better!!

21 comments:

  1. நல்ல பகிர்வு.

    மக்கள் எப்போதும் சரியாகவே முடிவெடுக்கிறார்கள். இனிமேலாவது இதை புரிந்துகொண்டு ஆட்சி நடத்தினால் அனைவருக்கும் நலம்.

    ReplyDelete
  2. Thampi:
    Thanks for the analysis. Well-written and timely.
    Change is the basic principles of democracy.
    Post-LTTE issues are also played a role in the minds many solid voters for DMK for long time. Opposition used this opportunity in very well. 2G played a great role with family domination every where.

    ReplyDelete
  3. Pazhamai - Once again a nicely written post. I want to share my alternate opinion on the 60-40 analysis. There are families vote for Cong, DMK, AIADMK still they believe it belongs to Gandhi/Nehru, Anna and MGR respectively. So the 22.5% Vote of DMK and 10% Cong is attributed to these factors besides the goodies beneficiaries, party members and that leave theReal voter-suyamaga sindhikka koodiya voter very very small % choosing DMK over AIADMK. So my alternate opinion is it is nothing less than a Major disaster for DMK! Matter of time Congress will pull the plug, MK retiring already! and Mahabharatham will start in MK family branching DMK further. So DMK RIP!!

    ReplyDelete
  4. நடுநிலையான் ஆய்வு,
    பாராட்டுகள்

    ReplyDelete
  5. //I want to share my alternate opinion on the 60-40 analysis.//

    Thanks Abai Sir! I didn't mean DMK alone got 40% share... I meant ADMK alliance vs DMK alliance!!

    And we can't rule out DMK so easily. B'se it has strong roots in every nook and corner in Tamilnadu.

    ReplyDelete
  6. வாரிசு ஆட்சி நிலை நாட்டப்படாமல் இருந்ததில் எனக்கு மெத்த மகிழ்ச்சியே.

    ReplyDelete
  7. The person like you, who blindly support the party whatever the party leaders do, is a big problem for Tamilnadu. Particulary kazhaga udan piraappugals (both from DMK and ADMK) are stupids, blinds, defs and sapakkedu for Tamilnadu.

    ReplyDelete
  8. @@Chitra

    முடியலை... மக்களாட்சிப்படி, கட்சிகள், கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் முதலானவை தவிர்க்க இயலாதது.

    எக்கட்சியிலும் சாராமல், சுகபோக வாழ்க்கை அனைவரும் வாழ வேண்டும் என்றால் எப்படி??

    இந்தியாவின் ஒட்டுமொத்த சாபக்கேடே, அரசியலில் இருந்து ஒதுங்கி நின்று, அரசியலில் ஈடுபடுவோரைச் சாடிக்கொண்டும், சுயநலத்தோடும் இருப்பதுதானே?!

    ReplyDelete
  9. ungkaL கட்சி என்று makkaL அறிந்தும் இப்படி //மத்திய ஆட்சியில் பங்கு மற்றும் மாநிலத்தில் ஆட்சி எனும் ஒருவிதமான மமதையோடு, 1970களில் சம்பாதித்துக் கொண்ட அதே வெறுப்புணர்வை தானாகத் தேடிக் கொண்டிருக்கிறது திமுக. தன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து நழுவியது மாபெரும் பிழை!! கட்சியை ஒரு வணிக நிறுவனம் போல் மாற்றியது, அறமற்ற செயல்!! // சொல்கிறீர்கள். நேர்மை போலத் தான் தோன்றுகிறது.

    //கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆளுங்கட்சியின் அடாவடி, அநியாயங்களை எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு என்பதை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சி, மாநிலந் தழுவிய போராட்டம் நடத்தியது உண்டா? அநியாயங்களை, அந்தந்த இடத்திலேயே முட்டுப் போட்டு நிறுத்த முயன்றது உண்டா?? கிடையாது என்பதுதானே மெய்??//
    ஊடகவியலாளர் என்று உங்களை ஒரு கூட்டத்தில் அறிமுகப் படுத்தியதாக நினைவு. என் நினைவு தவறாக இருந்தால், மன்னிக்கவும்.

    நண்பரே, பதிவு என்ற வில்லும், கனிந்த தமிழ் என்ற அம்புகளும் கொண்ட நீங்கள் இந்த அநியாயங்களை உரக்கச் சொல்லி முட்டுப் போடப் பார்த்திருக்கிறீர்களா?

    நட்புடன்,
    கெ.பி.

    ReplyDelete
  10. //நண்பரே, பதிவு என்ற வில்லும், கனிந்த தமிழ் என்ற அம்புகளும் கொண்ட நீங்கள் இந்த அநியாயங்களை உரக்கச் சொல்லி முட்டுப் போடப் பார்த்திருக்கிறீர்களா?//

    நான் புலம் பெயர்ந்து வாழும் ஒரு நாடோடி. அப்படி இருக்கையில், தாயகத்தைப் பற்றி எழுத இயலாதல்லவா??

    தேர்தல் நடந்த வேளை, ஆறு வார காலம் நான் ஊரில் இருந்தமையால்தான் ஒரு சில இடுகைகள் இட்டுள்ளேன்.

    புலம் பெயர்ந்து வாழும் இடத்தில், ஒரு சாமன்யனின் எல்லைக்கு மேற்பட்டு, தமிழ் மக்களுக்கும், மொழிக்கும், என்னால் ஆன வேலைகளைச் செய்தே வருகிறேன்.

    மற்றபடி, முழுநேர எதிர்க்கட்சியின் பங்கும், புலம் பெயர்ந்து வாழும் நாடோடின் பகுதி நேர வலைப்பதிவுப் பங்களிப்பும் ஒப்பிடுவதற்கு உகந்தது அன்று!!

    ReplyDelete
  11. 1) ஊர்ல இருந்த வேளை திமுகவை எதிர்த்து நிறைய பதிவு போட்டீங்களா?

    //திமுகவின் கதாநாயகி ஊர்கோலம் போகப் புறப்பட்டு விட்டாள். வெற்றிக்கனி அவளுடையதுதானா?? //
    //அதிமுகவுக்கு திமுக எவ்வளவோ மேல் என்பதையும் சொல்கிறார்கள். காசைக் கொடுத்தாவது காரியம் சாதிக்க முடிகிறது. எந்த நேரத்திலும் இவர்களை அணுக முடிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.
    மற்றபடி, ஈழப் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், அண்டைய மாகாணங்களுடன் இருக்கிற நதிநீர்ப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி நிலை, நிதி நிலை முதலானவற்றை எல்லாம் யாரும் எண்ணிப் பார்க்கவோ அல்லது அதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருப்பதாகத் தெரியவில்லை.// அப்படின்னு தாயகப் பயணம் தொடங்கினப்புறம் பதிவுகள்ள எழுதி இருக்கீங்க.

    2) புலம் பெயர்ந்த நாடோடி எதிர்க்கட்சியைப் பற்றி குற்றம் மட்டும் சொல்வது எதற்கு? சொல்வதற்கு மன்னிக்க.

    சரி, புள்ள குட்டியைப் படிக்க வைக்கணும், கிளம்பறேன்.

    ReplyDelete
  12. @@கெக்கே பிக்குணி

    நான் ஊரில் இருக்கும் போது, விமர்சனம் செய்து இட்ட இடுகை ஒன்றே ஒன்றுதான். அதுவும் திமுகவைச் சாடியே!!

    http://maniyinpakkam.blogspot.com/2011/04/2011.html

    //புலம் பெயர்ந்த நாடோடி எதிர்க்கட்சியைப் பற்றி குற்றம் மட்டும் சொல்வது எதற்கு? சொல்வதற்கு மன்னிக்க. //

    நான்கு இடுகைகள் இட்டேன்... திமுக தோற்பது மற்றும் வெற்றி பெறுவதற்கான காரணங்கள். கூடவே அதிமுக வெற்றி மற்றும் தோல்விக்கான காரணங்கள். திமுகவைச் சாடிக் குறிப்பிட்டுள்ளவை உங்கள் கண்களுக்கு புலப்படாதது ஏனோ?!

    ReplyDelete
  13. மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் போன்றவை ஆளும் திமுக மீது சாமானியன் கோபப்பட முதன்மை காரணங்கள். 2G ஊழல், எல்லா இடங்களிலும் குடும்ப ஆதிக்கம் ஆகியவை அடுத்தது. ஈழ துரோகம் மன்னிக்க முடியாதது.

    திமுக மீதான வெறுப்பின் காரணமாக அதிமுக பயன்பெற்றுள்ளது. ஜெயலலிதாவை விரும்பி வாக்கு விழுந்ததாக நான் கருதவில்லை.

    ஜெயலலிதா இதை புரிந்து ஆட்சி செய்தால் நன்று. இல்லாவிட்டால் 2016ல் அதிமுக ஆட்சியிலிருந்து போவதை & திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கமுடியாது.

    1996-2001 நல்ல ஆட்சி என்பதை மறுக்க முடியாது. 1996ல் திமுக தோற்றதற்கு ஒழுங்காக கூட்டணி அமைக்காததும் காரணம்.

    ReplyDelete
  14. நடு நிலையாக எழுதப்பட்டுள்ளது உங்களின் அலசல், உண்மையில் ஆளுங் கட்சி ஆட்சியில் இருக்கும் போது எதிர்க் கட்சியினர் செய்த குழறுபடிகளை உணர்ந்தாவது- மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் எனும் கருத்துக்கள் காத்திரமானவை.

    ReplyDelete
  15. //2001ஆம் ஆண்டு மாற்றுக் கட்சியின் ஆட்சி மீண்டும் கொண்டு வரப்படுகிறது. பழி வாங்குதலும், வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமையும் இடம் பெற்று, ஒரு வெறுமையான ஆட்சி இடம் பிடிக்கிறது. அரசியல் கணக்குகளும், புதிய கட்சிகளின் தோற்றமுமாகச் சேர்ந்து கொண்டு, அதிமுக வெற்றி வாய்ப்பை இழக்கிறது. கணக்குகளின் வாயிலாகத்தான் திமுகவுக்கு, தனிப்பெரும்பான்மை இல்லாத ஆட்சி கிடைக்கிறது.//
    2001-06 அதிமுக ஆட்சியிலும் அதன் முந்தைய ஆட்சியில் செய்த தவறுகள் இல்லை. மழைநீர் சேமிப்புத் திட்டம், வீரப்பனைக் கொன்றது போன்ற பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.

    இந்த அதிமுக ஆட்சி போனதும் கூட்டணிக் கணக்குகளினால்தான் என்பதை எனது பதிவில் கூறியுள்ளேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. @@dondu(#11168674346665545885)

    Yes Sir! Post Election healing is not at all happening. Rather some pundits are making the situation worse and I feel pity for them. :-o)

    ReplyDelete
  17. திராவிடத்துவா போய் இந்துத்வா வந்திருக்கிறது. இரண்டுமே தமிழர்களுக்கு ஆப்புதான்.

    காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் பாடை கட்டி, பால் தெளித்து கறிவிருந்தோடு கொண்டாடலாம் என்றால், அ.தி.மு.கவும், தே.மு.தி.க.வும் கல்யாணம் செய்துகொண்டு கலவரப்படுத்துகிறார்கள். இரண்டு நிகழ்வுகளுமே ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை என்பது உண்மைதான் என்றாலும் எதிர்கொள்ள சங்கடமாக இருக்கிறது.

    இந்த நிலையை விருப்பு வெறுப்பின்றி ஒரு ஞானியைப் போல் தூரத்திலிருந்தபடி மெளனமாக வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

    நாக. இளங்கோவன் அவர்களின் நாம் தமிழர் இடுகை நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. அந்த முயற்சியை ஒத்த சிந்தனை கொணடவர்கள் முன்னெடுத்துச் செல்லலாம்.

    500கோடி செலவு செய்து செம்மொழி மாநாடு நடத்திவிட்டு ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்றும், ஈழப் படுகொலைகளில் பங்கெடுத்த போலித்தனங்கள் செய்த டாக்டர் கயவ்ரின் மேல் இருக்கும் அறுவெறுப்பு இன்னும் அகலவில்லை.
    அதே நேரத்தில், எந்த முயற்சியும் செய்யாத இன்னொரு புரட்டுக் கும்பலுக்கு ஆட்சி போயிருப்பது வேதனையாகவும் இருக்கின்றது.

    -----------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - மே '2011)

    ReplyDelete
  18. It will be interesting to see what happens to DMK after MK dies. I can see a lot of in-fighting if the power is not transferred within the family tree. A case can be made that the next election it may be DMDK vs ADMK and DMK nowhere to be found.

    I can never forgive DMK for not protecting sri lankan tamils. Even UN, US, and Canada are pushing to bring Raja Pakse on war crimes trials. But the pussy Indian govt and it side kick DMK were not making any efforts. I want to see the death of DMK sooner, I really do.

    ReplyDelete
  19. 1996ஆம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று முரசு கொட்டப்படுகிறது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நல்லதொரு ஆட்சியும் நடத்தப்படுகிறது.

    என்றாலும், ஓட்டுக்கணக்குகளும் சிலபல சூழ்ச்சிகளுமாக திமுகவுக்கான அடுத்த வாய்ப்பு நல்கப்படவில்லை. நல்லதொரு ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்படாதது வரலாற்றுப் பிழையாகவே நான் கருதுகிறேன். இதில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் இருக்கக்கூடும். எனினும், என்னால் உறுதிபடக் கூற இயலும், அது வரலாற்றுப் பிழையென!!//

    சரிதான். அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்யும் ஒருவனைச் சரியாக அங்கீகரிக்கவில்லையென்றால் அவன் வேலை செய்வதைக் குறைத்து கொள்வதோடு தேவையில்லாத குழப்பங்களை விளைவிப்பான். எனெக்கென்னவோ இந்த தி.மு.க ஆட்சியில் இதுதான் நடந்ததாகத் தோன்றுகிறது. ஆனால் இப்படி ஒரு முடிவு பாராளுமன்ற தேர்தலில் வந்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  20. மாற்றுக் கட்சியானது, தவறிழைத்து வெறுப்புணர்வை வளர்த்துக் கொள்ளாத வரையிலும் திமுகவின் மேல் இருக்கும் வெறுப்புணர்வு குறைய வாய்ப்பு இல்லை. 1970களில் ஏற்பட்ட களங்கத்தை, எம்.ஜி.ஆர் என்னும் கவர்ச்சிமிகு தலைவர் இருக்கும் வரையிலும் துடைத்தெறிய இயலவில்லை.

    அகவை அறுபதுகளில் காலடி எடுத்து வைத்திருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் அவர்களது பக்குவம் பலமடங்கு மெருகு கூடப் பெற்றிருக்கும் என்றே நம்பலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு நீங்க வெகுநாட்கள் பிடிக்கும். இச்சூழலில், விஜயகாந்த அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, திமுகவுக்கு மேலும் சிக்கலைக் கூட்டுகிறது.//

    அப்படிச் சொல்ல முடியாது. 1996 சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க 1998 மக்களவைத் தேர்தலில் மீண்டு வரவில்லையா?

    இந்த தேர்தலில் தி.மு.க மீது மக்கள் அடைந்த அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும் விஜயகாந்த் கூட்டணி ஜெ வுக்குப் பெரிதும் உதவியுள்ளதை மறுக்க முடியாது. அவர் தன் மூன்றாம் அணி கொள்கையைக் கை விட்டதால் அவருக்கு வரும் ஓட்டுகள் பாதியாகக் குறையும் என்று கணக்கிட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. தனக்கு இருந்தது தனித்த வாக்கு வங்கி என்பதை அவர் நிரூபித்து விட்டார். அவர் தனித்து நின்றிருந்தால் அவர் ஒன்றிரண்டு இடங்கள் பெற்றிருப்பார். அ.தி.மு.க அணி நூறு இடங்கள் பெற்றிருக்கும். கலைஞர் மயிரிழையில் கூட்டணி ஆட்சி அமைத்திருப்பார்.

    ReplyDelete