5/17/2011

வட அமெரிக்கத் தமிழ் வலைஞர் கூட்டம் 2011, வாரீர்! வாரீர்!!

அன்புத் தமிழ் உறவுகளே,

எதிர்வரும் யூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில், தென் கரோலைனா மாகாணம், எழில்நகரமாம் சார்ல்சுடன் நகரில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழா நடக்க இருப்பது தெரிந்ததே. அது சமயம், ஏராளமான தமிழ் நண்பர்கள், டொரொண்டோ யார்க் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், டொரொண்டோ பல்கலைக் கழகத் தமிழ் நண்பர்கள், ஒட்டாவாப் பல்கலைக் கழக நண்பர்கள், வட அமெரிக்காவில் ஆங்காங்கே இருந்து வரும் வலைப்பதிவர்கள், குமுக நண்பர்கள் எனப் பலர் வருவதாக இசைந்து உள்ளனர்.

சென்ற ஆண்டினைப் போலவே, இந்த ஆண்டும் வலைப்பதிவர்கள் மற்றும் வலை வாசகர்களுக்கான பிரத்தியேகக் கூட்டம் ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வழமை போலவே, குடவோலை முறைப்படி தெரிவு செய்யப்பட்ட இருவருக்கான பரிசில்களும் காத்து இருக்கிறது.

அனைத்து அன்பர்களும், தத்தம் உற்றார் உறவினர் மற்றும் நட்பினரோடு வந்திருந்து, பேரவை விழாவைச் சிறப்பிப்பதோடு மட்டுமல்லாது நம் வலையுலக நட்பையும் பாராட்டுவோம். வாருங்கள் தமிழன்பர்களே!! வர விரும்புவோர், தங்கள் வருகையை எம்மிடம் தெரியப்படுத்தினால், மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

விழா நிகழ்ச்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, பேரவை வலைதளத்தைப் பார்வையிடவும். www.fetna.org

கடந்த ஆண்டு நினைவின் நீட்சியாய்:

 அண்ணன் அப்துல்லா மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா

 தளபதி நசரேயன், இளா, யோகேஷ்வரன் மற்றும் அண்ணன் அப்துல்லா

  அண்ணன் அப்துல்லா மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா

 பதிவர் கூட்டம்

 வலைஞர் ஹரி, தமிழ்சசி மற்றும் இளா



 பதிவர் யோகேஷ்வரன்



பதிவர் சந்திப்பின் போது சுட்ட கூடுதல் படங்கள், நகர் படங்களாக:


தமிழால் இணைந்தோம்!

15 comments:

  1. அருமையான புகைப்படங்கள் - பகிர்வுக்கு நன்றி. இந்த வருடமும் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //what about chief guest?//

    எல்லாம் நம்ம கையிலதாங்க இருக்கு... ஏற்கனவே இசைந்திருக்கும் அன்பர்களோடு, மேலும் ஒரு 25 பேர் இசைவு தெரிவுக்கும் பட்சத்தில், பதிவர் கூட்டத்திற்கு, ஒரு சில முக்கிய விருந்தினர்கள், இதழாளர்கள் மற்றும் இலக்கிய விற்பன்னர்களைச் சிறப்பு விருந்தினராக கொண்டு வரச் செய்யலாம்.

    ReplyDelete
  3. இப்போதைக்கு, சாதனையாளர்களான முன்னாள் மாணவர் தலைவரும், இந்நாள் கனடியப் பாராளுமன்ற உறுப்பினருமான இராதிகா சித்சபேசன், கனடியத் தேசிய நிர்வாகி மோகன் இராமகிருட்டிணன், மேலும் மதிப்பிற்குரிய அப்துல் ஜப்பார் அவர்களைப் பதிவர் கூட்டத்திற்கு அழைக்கலாம் என இருக்கிறோம்.

    ReplyDelete
  4. வருகிறேன் அய்யா.

    ReplyDelete
  5. //அரசூரான் said...
    வருகிறேன் அய்யா.//

    இலைப் போடுற ஆளு, ஒக்காந்து சாப்புடுறேங்குது... பிச்சுப்போடுவம் பிச்சி!!

    ReplyDelete
  6. புகைப்படங்கள் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி சகா

    ReplyDelete
  7. அந்த கோட்டு போட்டவரு செம:))

    ReplyDelete
  8. சேர்தளம் சார்பில் விழா சிறக்க வாழ்த்துக்கள் மணியண்ணே!

    ReplyDelete
  9. வட அமெரிக்கத் தமிழ் வலைஞர் கூட்டம் 2011, வாரீர்! வாரீர்!!//

    நாம எல்லாம் அமெரிக்கா வர விசா தரமாட்டாங்க, ஆனாலும் கண்களால் உங்களின் கனிவான ஒன்று கூடலைப் பார்த்து இரசிக்கத் தான் முடியும் சகோ.

    ReplyDelete
  10. எதிர்வரும் யூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில், தென் கரோலைனா மாகாணம், எழில்நகரமாம் சார்ல்சுடன் நகரில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழா நடக்க இருப்பது தெரிந்ததே.//

    வாழ்த்துக்கள் சகோ.

    எல்லோரும் சந்தோசமாக ஒன்று கூடி, கலக்கலாக கலாய்த்து ஆரோக்கியமான கலந்துரையாடலை நடாத்தி மகிழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. படங்கள் எல்லாம் கலக்கலா எடுத்திருக்கீங்க.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. தளபதி அண்ணாச்சி படத்தை தைரியமுடன் வெளியிட்ட ஆசானுக்கு ஒரு பெரும் கூட்டத்தை சமாளிக்க வேண்டிய கட்டாயம்...

    எல்லாப் பொண்ணுங்களும் வரிசையில முந்திக்கிட்டு வரப்போறாங்க!

    :))))

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்

    ReplyDelete