10/08/2010

பொருள் பேசுகிறது!

எல்லாருக்கும் வணக்கம்! என் பெயர் “பொருள்”. நான் எங்கும் இருப்பேன். தூணாகவும் இருப்பேன். துரும்பாகவும் இருப்பேன். நான் இல்லாத நாடு இல்லை. இல்லாத ஊர் இல்லை. இனியும் சொல்லப் போனால், நான் இல்லாவிட்டால் எந்த மனிதரும் இல்லை.

அஃறிணை எனத் தரம் தாழ்த்திப் பேசினாலும், நிலை அதுதான் உயர்திணையே! பேசுவது மட்டும், வக்கணையாய்ப் பேசுகின்றார் மாந்தர்! உயர்திணைக்கு எதிராக, கீழ்திணைதான் வரும். ஆனால், நாங்கள் அப்படி எதையும் கீழ்மைப்படுத்த விரும்பவில்லை. எனவேதான், அஃறிணை என்கிறோம் என வக்கணையாய்ப் பேசுகின்றார் மாந்தர் குலத்தோர்!

ஆனால், யாராவது என்னைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கிறார்களா? என்னை, மிகக் குறைந்த விலையில் வாங்குவதையும், அதிக விலையில் விற்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள். நான் ஒன்றும், சும்மா பிறந்து விடவில்லை. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றின் அழிவில்தான் பிறக்கிறேன்.

என்னை, உயிர்ப்பிப்பதும் மனிதர்களே! உயிர்ப்பித்துப் பாவித்து, பாவித்துப் பலன் பெறுவது மாத்திரமே அவர்களுக்குத் தெரியும். இன்றைக்கு ஈரோடு கதிர் அவர்கள், அவர்தம் இனத்திற்கு நேரும் இன்னலைப் பற்றி எழுதி இருக்கிறார். மகிழ்ச்சி! ஆனால், இதோ நான் உயிர்க்கும் கதை! நீங்களாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்!!!


மாந்தர் குலமே, என்கதை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகாவது, என்னைப் பாவிப்பதைக் குறைத்து, பாவிக்கும் முறைகளைச் செம்மைப்படுத்தி, மற்றன அழிவதைக் காத்து, நீரும் மகிழ்வாயிருக்கத் தெரிந்து கொள்வீரே!

நான், எப்போதும் போல, அஃறிணையாய் உயிர்ப்பிக்கப்பட்டு, உங்களுக்காய் மெழுவர்த்தியெனக் கரைந்து, செத்துப் போகிறேன்... செத்துப் போகிறேன்... உயிர்த்து, உழைத்து, உங்களுக்காய் மெழுவர்த்தியெனக் கரைந்து, செத்துப் போகிறேன்.

-பொருள்.

28 comments:

  1. ***மதிகெட்ட மாந்தர் குலமே, என்கதை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகாவது, என்னைப் பாவிப்பதைக் குறைத்து, பாவிக்கும் முறைகளைச் செம்மைப்படுத்தி, மற்றன அழிவதைக் காத்து, நீரும் மகிழ்வாய் இருக்கத் தெரிந்து கொள்வீரே!***

    உங்க "பொருள்" ரொம்ப திமிரா பேசுது! அதுக்கு நாவடக்கம் பற்றி நல்ல திருக்குறள் சொல்லிக்சொல்லிக்கொடுங்கோ! :)))

    ReplyDelete
  2. @@வருண்

    Hi Varun, But you must watch the movie... :-)

    ReplyDelete
  3. இப்படி ஒரு கோணத்துல யோசிக்க முடியுமாங்கற மாதிரி ஒரு இடுகை..

    உண்மை தான்!!

    எவ்வளவு பொருள் ஈட்டுகிறாய் என்பதை விட எப்படி பொருள் ஈட்டுகிறாய் என்று பார்ப்பதே முறையானது.

    எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தால் நல்வழி பிறக்கும்.

    ReplyDelete
  4. May be when I get home I will watch it.:)))

    ReplyDelete
  5. The best video. Thanks for sharing.

    ReplyDelete
  6. இப்ப இருக்கற இடத்துல மறுசுழற்சி பண்ணக்கூடிய பொருட்கள தனியா குப்பைல வைக்கிற மாதிரி ஏற்பாடு வீட்டுக்கு வீடு இருக்கு.. அவங்களே வந்து எடுத்துட்டுப் போயிடறாங்க.. இன்னும் நிறைய இடத்துல வரணும்..

    ReplyDelete
  7. பாதி வீடியோ ஓடியிருக்கு.. பாராட்டனும்ன்னு தோனுச்சு.. ரொம்ப எளிமையா, அருமையா சொல்லியிருக்காங்க.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  8. WoW. What a masterpiece!

    Thanks. Thanks. Thanks.

    I will appreciate if you give me the video link directly.

    Great Pazhamai. Thanks.

    ReplyDelete
  9. அருமையான, பயனுள்ள, சிந்திக்கத் தூண்டும் பதிவு.......நன்றிங்க.

    ReplyDelete
  10. ரசிக்கும்படியான சிறப்பான கட்டுரை நன்றி!

    ReplyDelete
  11. நல்லா "பொருள்" பட கூறியுள்ளீர்

    ReplyDelete
  12. Nice video. Thanks for sharing.

    ReplyDelete
  13. //உயிர்த்து, உழைத்து, உங்களுக்காய் மெழுவர்த்தியெனக் கரைந்து, செத்துப் போகிறேன்.//

    மிக்க நன்று ..!!

    ReplyDelete
  14. ”பொருளு”க்கு நான் அண்ணனா!

    ReplyDelete
  15. சிந்திக்கவைக்கும் வீடியோ.

    ReplyDelete
  16. //ஈரோடு கதிர் said...
    ”பொருளு”க்கு நான் அண்ணனா!
    //

    அய்யே.... கண்டபடியா எல்லாம் யோசிக்கப்படாது.... அது ஒரு மரியாதையைக் குறிக்கும் பதம் மட்டுமே....க்கும்!!!

    ReplyDelete
  17. "மதிகெட்ட மாந்தர் குலமே"\

    The video is really targeted towards greed of fat a$$ american consumers. You may have to rephrase those words.

    ReplyDelete
  18. //**மதிகெட்ட மாந்தர் குலமே, என்கதை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகாவது, என்னைப் பாவிப்பதைக் குறைத்து, பாவிக்கும் முறைகளைச் செம்மைப்படுத்தி, மற்றன அழிவதைக் காத்து, நீரும் மகிழ்வாய் இருக்கத் தெரிந்து கொள்வீரே!***
    //

    thanks for sharing.

    ReplyDelete
  19. I dont know whether I am going to believe what she says about chemical toxins and that breast feeding is the worst of all. Yes, it is worst way to spread if you are intoxicated mother. How many percentage of mothers were intoxicated and working in a chemical factory and inhale toxins everyday? There is lot of exaggeration here. If I get deep into that she will have real trouble answering some questions, raised!

    ReplyDelete
  20. அருமை நண்பரே கலக்குறிங்க போங்க

    ReplyDelete
  21. @@ வருண்

    Hi Varun,

    As this video has been shared with school kids in U.S, I beleive in their objective. Same time, I also think that there could be some exaggeration.... here is something else, you to raise questions...

    ReplyDelete
  22. பதிவுக்கு எப்படியும் ஒருபொருள் கிடைத்து விடுகிறது..சபாஷ்

    ReplyDelete
  23. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. excellent video! thanks for your time & thoughts to post this!

    After coming to US, the first thing that irritated me is these plastics, everywhere... and wasting paper...

    my mom wont allow to take lunch in tupper-ware, but here, i am living with plastics, and i pack food in plastic box, everyday to my husband. i have no strength/voice to fight against this. But only thing, i do is to use, wall mart bags, instead of using trash bags that are bought. a trash is used, to hold trash in our home.

    And i use a cotton cloth, and use it to clean kitchen and wash the cloth, instead using paper. I do not know what else i can do. I just want to avoid buying any un-needed (need is put here instead of a want) thing..

    i want to tell a lot, will try to put them all in a post, in my blog..

    thanks for this video!!!!!! it says my anger, and also gives more and more information, and justifies my anger!!! thanks!

    i also want you to find some other video that teaches how to avoid creating more trash in US. Becos, in india, my mom literraly avoids using plastics. she started practising us to use cotton bags(manjal pai). but here that is not possible. i m ready to carry such bags, but i am not sure, if someone will accompany me, if i do so ;)

    so pleaseeeeeee find some other video that teaches how to avoid creating more trash in US. either its india or US, its my loving nature, tht i shd not spoil.

    thanks for this video!!
    (it has been a long time since i posted or commented. so please bare me mistakes and repetitions)

    ReplyDelete