10/07/2010

அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! பாகம்-2!!

சட்டனூகா, அக் 07: வீட்டில் இருக்கும் மகனோ அல்லது மகளோ, தனிமையாக இருக்க மட்டுமே விரும்புகிறாரா? மாலையில், காரணமெதுவும் இன்றி நேரங்கழிந்து வீட்டுக்கு வருகிறாரா? பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் காணப்படுகிறாரா? சரியாகச் சாப்பிடுவது இல்லையா??

இதில் எது ஒன்று உண்மையாக இருந்தாலும், உங்கள் பிள்ளை உங்களை விட்டு நழுவிக் கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை. அமெரிக்காவில், இப்போது வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் விபரீதம் என்னவாக இருக்க முடியும்?

பள்ளிகளில் மற்றவரைக் கேலி பேசியும், நையாண்டி செய்தும், இணையத்தினூடாக அவதூறுகளைப் பரப்புவதுமே! இணையத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்று வரும் சமூகக் குமுகங்களின் ஊடாக, இத்தொற்று நோயானது வெகு எளிதில் பரவி வருகிறது என்பதே இன்றைய நிலை.

இணைய வசதி அவ்வளவாக இல்லாவிட்டாலும் கூட, மேற்கத்தியக் கலாசாரத்தின் தாக்கம் மற்றும் சமகால நிகழ்வுகள் பற்றியதான தகவல்கள் இந்தியக் கல்விச் சாலைகளிலும் துரிதகதியில் நிலைகொண்டு வருவது கவலையளிக்க்க் கூடியதாகவே உள்ளது.

நிராகரித்தலும், கேலிக்கு உள்ளாக்குவதும், வெறுத்து ஒதுக்குவதும் பெரியவர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்ட கொடிய செயல்கள். அப்படி இருக்கையில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் மனதை, அவ்வாறான செயல்கள் எவ்வளவு தூரம் பதம் பார்க்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை.

அவ்வாறான மனம் நோகடிக்கப்பட்ட குழந்தைகள்,  ஆற்றுப்படுத்தலின்றித்   தெரிவு செய்வது ”தற்கொலை” எனும் முடிவைத்தான்! இளம் பிஞ்சுகளின் மனதில் நஞ்சைப் புகுத்துவதால் ஏற்படும் அதிமோசகரமான விளைவுகளைத் தகர்த்தெறிவது பெற்றோரால் மட்டுமே முடியும்.  இதோ, தற்கொலை செய்து கொண்ட ஒரு பதின்மூன்று வயதுக் குழந்தையின் தாய் சொல்வது இதுதான்:

Donna Witsell has a message for parents: "It happened to my daughter, it can happen to yours too. No one is untouchable. No one is untouchable."

Bullying is in our schools, and it's online. Why do kids do it? What can be done to put an end to it? 

சுட்டி-1

சுட்டி-2
சுட்டி-3

அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! பாகம்-1!!

12 comments:

  1. அண்ணா,

    மிகவும் தேவையான விசயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்.

    பெற்றோர் குழந்தைகளின் நண்பர்களாக இருந்தால் இது போன்ற தனிமையைத் தவிர்த்துவிடலாம்.

    ReplyDelete
  2. On-line bullying பத்தி சொல்றீங்களா?

    ReplyDelete
  3. @@வருண்

    ...mostly due to online activities... partly in class as well....

    ReplyDelete
  4. Yes, Whether it is on-line or not bullying is a serious thing. It is important that the parents pay attention to their kids and know how they are doing. They should have a good communication with their kids. Unfortunately most Indian parents cant listen or accept to their natural curiosities. As long as the kids and parents have good understanding and communication, this can be easily resolved. Otherwise, it is indeed DANGEROUS as you say!

    ReplyDelete
  5. //Yes, Whether it is on-line or not bullying is a serious thing. It is important that the parents pay attention to their kids and know how they are doing. They should have a good communication with their kids. Unfortunately most Indian parents cant listen or accept to their natural curiosities. As long as the kids and parents have good understanding and communication, this can be easily resolved. Otherwise, it is indeed DANGEROUS as you say!//

    அனுபவமா வருண் ?

    ReplyDelete
  6. கட்டுப்பாடு இருக்கிற இடத்துலயே இப்படி. இங்க என்னல்லாம் ஆகுமோ:(

    ReplyDelete
  7. //பள்ளிகளில் மற்றவரைக் கேலி பேசியும், நையாண்டி செய்தும், இணையத்தினூடாக அவதூறுகளைப் பரப்புவதுமே! //

    வளர்ந்தவங்களே செய்துட்டுத் தான் இருக்காங்க :(

    //நிராகரித்தலும், கேலிக்கு உள்ளாக்குவதும், வெறுத்து ஒதுக்குவதும் பெரியவர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்ட கொடிய செயல்கள்.//

    இது போன்ற கருமங்கள் தங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்வதற்கான மனோதைரியத்தையும் வளர்த்து விடனும்..

    நல்ல இடுகை..

    ReplyDelete
  8. அதென்னங்க அமெரிக்காவாழ் நம்மவர்கள்?

    ஊரு உலகமெல்லாம் இந்தப் பிரச்சனை கொடிகட்டிப் பறக்குதே:(

    ReplyDelete
  9. கேட்கவே நடுக்கமாகத்தான் இருக்கிறது...........பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. அவசியமான பதிவு.
    வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்காத மாநிலங்களில் பள்ளி செல்லும் பிள்ளைகளுடன் இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  11. அவசியமான எச்சரிக்கை!

    ReplyDelete