7/28/2010

தமிழ்ச் செம்மொழி நகரில் இருந்து....

கோவை மத்திய சிறைச் சாலை முன் இருக்கும் இப்பதாகையில் இருக்கும் எழுத்துப் பிழை, பொருட்பிழையைச் சரியாகச் சுட்டுவோருக்கு ஆயிரம் பொற்காசுகள்!!!

தமிழ் வாழ்க!

100% கழிவு, தமிழுக்கு??

தமிழ்ச் சொல்? அருகில் இருக்கும் மின்கம்பத்தில்?!!!


கோயம்பத்தூர், கோயமுத்தூர், கோயம்புத்தூர்.... முதலானவற்றை, பெயர்ப்பலகைகளில் எங்கும் காண்கிறோம். இவற்றுள் எது சரி??

அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும் பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி??

இராவத்தூர், ராவத்தூர், ராவுத்தூர், ராவ்ட்டூர்.... ஆகா, ஆகா!! ??

13 comments:

  1. அமையவிருக்கும் செம்மொழிப் பூங்கா, கோவை.
    சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை.


    1000 பொற்காசும் எனக்கே எனக்குத் தான்:-) பிக்குணியை அப்புறம் தருமிணின்னு மாத்திக்கணுமோ!?

    ReplyDelete
  2. அமெரிக்கா போகனுமா? இல்லை புழல் வேலூர் போகனும்ன்னு நினைக்கிறீங்களா?

    சட்டம் தன் கடமையைச்செய்து விடும் ஜாக்ரத.

    ReplyDelete
  3. அண்ணே! பல இடங்களில் எண் கணிதம் படுத்துற பாடு தாங்க முடியலண்ணே!!

    ReplyDelete
  4. சென்னை நதிகள் சீறமைப்பு அறகட்டளை

    ஐயன்மீர் இதில் எழுத்துப் பிழையும் இல்லை, பொருட்பிழையும் இல்லை.
    முதலில் சென்னை நதிகள். சென்னையில் மகா சாக்கடைகள் உண்டேயன்றி நதிகள் ஏது?

    சீறமைப்பு -> சிறிய + அமைப்பு, அதாவது சிறிதாக்கி அமைத்தல்
    அற -> இல்லாமல் போக
    கட்டளை -> ஆணை.
    இப்போது பொருளைத் தொகுத்துச் சொல்கிறேன்:
    சென்னையில் இருக்கும் மிகப் பெரிய சாக்கடைகளைச் சிறியதாக்கி
    அமைத்துவிடாமலிருப்பதற்கான அரசாணை.



    கூடுதல் தகவல்

    ReplyDelete
  5. ஒய் டென்சன்? நோ டென்சன்.!

    ReplyDelete
  6. அண்ணே... கலக்கலோ கலக்கல்

    ReplyDelete
  7. ஒய் டென்சன்? நோ டென்சன்.!

    டென்சன் லெஸ். ஒர்க் மோர்.

    ஒர்க் மோர் தமிழ் தயிர்.

    ReplyDelete
  8. அண்ணே... கலக்கலோ கலக்கல்

    கலக்கிட்டு கடைசில முடிச்சு வைக்காம போயிட்டீகளே அண்ணே........

    வலைச்சரம் கடைசிநாள் பாருங்கண்ணே...........

    ReplyDelete
  9. //
    கோயம்பத்தூர், கோயமுத்தூர், கோயம்புத்தூர்.... முதலானவற்றை, பெயர்ப்பலகைகளில் எங்கும் காண்கிறோம். இவற்றுள் எது சரி??

    அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும் பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி?
    //
    எங்களுக்கு எதுக்கு வம்பு.... நாங்க கொஞ்சம் மூளைக்கு வேல கொடுத்து இதுதான் சரின்னு சொல்லுவோம், ஆனா நீங்க, கி.மு 1637 ல் எழுதப்பட்ட <......> இலக்கியத்துல குறிப்பிட்டுள்ளதுதான் சரியான பேர். இப்ப நாம சொல்லுர எல்லாமே தப்புன்னு பல்பு குடுப்பீங்க...
    நீங்களே சரியான பேர சொல்லிடுங்க..

    ReplyDelete
  10. பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியும் பயனுள்ளதாக இருந்தது..

    ReplyDelete
  11. ஊருக்கு வந்து கம்னு இருந்துட்டு போற மாதிரி தெரியல

    ReplyDelete
  12. கலக்கல்...தொடரட்டும்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. டிஸ்கவுண்ட் என்று ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுதியுள்ளதை கவனிக்க. அதாவது டிஸ்கவுண்ட் என்பது தமிழான போதும் தமிழ் எழுத்துக்கள் இன்னும் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

    செம்மொழி மாநாட்டின் வெற்றி இதில் இருக்கிறது என்பது ஏனோ தங்களுக்கு தெரியவில்லையே...

    ReplyDelete