7/27/2010

கோவையில் கூடிடுவோம்!!!

அனுதினமும் மின்னூடகங்களினூடாகப் பேசி மகிழ்கிறோம். சிலவேளைகளில், மின்னூட்டு முகம் பார்த்தும் கூடப் பேசி மகிழ்கிறோம். என்றாலும், குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் சூழலில் கிடைக்கப் பெறும் தாயகக் கடிதங்கள் கண்டு அடையும் உவகைக்கு முன்னால் தொலைபேசுதல் என்பது எளிதாய்த் தோற்று விடுகிறதே?

என்னதான் கடிதங்களை வைத்திருந்து, வைத்திருந்து வாசித்து மகிழ்ந்தாலும், இதோ வந்தேன் உனைக் காணவென்று முன் தோன்றி, முகம் கொடுத்துப் பேசுவதன் முன் கடிதங்கள் நனைந்த அப்பளங்களாகின்றன. என்னதான் நயம்பட எழுதி, பணிவு, அன்பு, நேயம் முதலானவற்றை விரித்தாலும், நோக்குதலும் நோக்குதலும் இடும் பிணைப்புக்கு ஈடாவதில்லை.

நேரில் சென்று, முகம் கொண்டு, பார்த்து, பேசி, தமிழால் இணைந்திடத்தான் ஆசை. காலதேவன் கஞ்சனவன்; அளந்துதானே கொடுக்கிறான்? எனவேதான், இந்த எளியவனிவன், தம் பணிவார்ந்த அழைப்பை, வரி வடிவத்திலே உங்கள் முன்னே விரித்திடச் செய்திடுகின்றேன்.

எம் தாயகத்து வலையுலக உறவுகளே, உம்மில் பலர் எப்படியும் வந்திடுவோம் என ஏற்கனவே இசைந்திட்டீர். மகிழ்ச்சி! நீவிர் மட்டும் வந்திட்டால் போதுமென எண்ணாது, இன்னும் பல அன்பர்களைக் கொணர்ந்து சேர்த்திடுவீர். இசைந்தோரல்லாது இருப்பாரும், வந்திடுவீர் கண்டு மகிழ்ந்திடுவோம்.

ஆம், தென்மேற்குப் பருவச் சாரலில் குளுகுளுக்கும் கோவைதன்னில் கூடிடுவோம்... நட்பு வட்டத்தை விரியச் செய்திடுவோம்... நூல் அறிமுக விழாவென்றே அரங்கம் பிடித்தோம். பதிவர் பெருமக்கள் வந்திட இசைந்திட்டார். இசைந்தோர் அனைவரும் விழாவினூடே இனித்துக் கதைத்திட நேரம் கிட்டாதேயெனப் பணித்திட்டார், விழா துவங்குமுன்னே பதிவர் கூடலென!!

ஆம், வலையுலக நண்பர்காள், வந்திடுவீர் எதிர்வரும் ஞாயிறு, 01082010, பிற்பகல் மூன்று மணிக்கு, கோவை அன்னபூர்ணா வளாக கங்கா அரங்கம் நோக்கி! நேரில் காண்போம்; உறவு கொண்டாடிடுவோம்!!

இதோ, அருட்சுடர் பதிப்பகத்தார் வெளியிட்ட, எம் வலைப்பதிவுகளின் சில இடுகைகளை உள்ளடக்கிய நூலின் அறிமுக விழா குறித்த அழைப்பிதழும்!!

===========================

பழமைபேசியின் ஊர்ப் பழமை நூல் அறிமுக விழா

01082010
ஞாயிறு மாலை 4.30 மணி
கங்கா அரங்கம், அன்னபூர்ணா, இரத்தின சபாபதி புரம்,
கோயம்பத்தூர்



27 comments:

  1. விமான சீட்டு அணிப்பி வையுங்க

    ReplyDelete
  2. அண்ணே : நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா???

    ReplyDelete
  3. விமான சீட்டு அணிப்பி வையுங்க

    ReplyDelete
  4. நசரேயன் said...

    /விமான சீட்டு அணிப்பி வையுங்க//

    ம்கும்:). இங்க பிரியாணிகூட வரலை. அப்புறமெதுக்கு வரப்போறீரு

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அண்ணா, வாழ்த்துக்கள். இந்த முறையும் நேரில் பார்க்க இயலாத சூழல்... ஓய்வு நேரம் அறிந்து உங்களை அழைக்கிறேன்.

    பிரபாகர்...

    ReplyDelete
  7. நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. ஒரு புத்தகம் பார்சேல்..

    ReplyDelete
  9. வாழ்த்துகள்

    ReplyDelete
  10. Valthukkal palamai ayya.

    ReplyDelete
  11. பழமைபேசி, புத்தகத்துக்கும் ஊர்ப்பயணம், விழா முதலியனவற்றுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தம்பி மணி
    நூல் வெளியீடு விழா இனிது அமைய வாழ்த்துக்கள்.
    நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவிக்கவும்.
    அண்ணன்
    நாஞ்சில் பீற்றர், தலைவர்
    உலகத் தமிழ் அமைப்பு
    அமெரிக்கா.

    ReplyDelete
  13. தம்பி மணி
    நூல் வெளியீடு விழா இனிது அமைய வாழ்த்துக்கள்.
    நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவிக்கவும்.
    அண்ணன்
    நாஞ்சில் பீற்றர், தலைவர்
    உலகத் தமிழ் அமைப்பு
    அமெரிக்கா.

    ReplyDelete
  14. தம்பி மணி
    நூல் வெளியீடு விழா இனிது அமைய வாழ்த்துக்கள்.
    நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவிக்கவும்.
    அண்ணன்
    நாஞ்சில் பீற்றர், தலைவர்
    உலகத் தமிழ் அமைப்பு
    அமெரிக்கா.

    ReplyDelete
  15. எனக்கு ஒரு துண்டு போட்டு வைங்க...

    ReplyDelete
  16. வாழ்த்துகள் பழமைபேசி அண்ணே

    ReplyDelete
  17. வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  19. அனைவருக்கும் மிக்க நன்றிங்க மக்களே!!!

    ReplyDelete
  20. நேரில் வர இயலாது என்றாலும் என்றாலும் உங்கள் புத்தகம் வெளிவருகின்றதை அறியும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. கோவையில் கூட்டமா? வந்துட்டா போச்சு....:)

    ReplyDelete