5/31/2010

பதிவுலகச் சீர்கேடும், மூன்று நாள் விடுப்புக்கு வந்த கேடும்!!

எனதருமை வாசகர்களே, நண்பர்களே,

இப்படியானதொரு இடுகையை இடுவது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது. மன்னிக்கவும்!!

May 28 மாலை: சட்டநூகா நகரில் இருந்து சார்லட் நகருக்கு வந்தடைதல்

May 28 இரவு 9.30 மணி: சொந்த அலுவல் காரணமாக, நண்பர், சகபதிவர் ஆருரன் அவர்களுக்கான அழைப்பு

நீண்ட நாட்களாக அழைக்காமல் விடுபட்டுப் போனதற்கான விளக்கம்; சொந்த அலுவல் குறித்தான அளவளாவுதல்; இடையூடாக, பதிவுலகத்தில் ஏதோ சலசலப்பு என்று மட்டுமான தகவல்

May 29 சனி, காலை 7.30: நண்பர், சகபதிவருமான கதிர் அவர்களுடன் மடலாடல்

பூக்காரி எனும் இடுகையை வாசிக்கச் சொல்கிறார். வாசிக்கிறேன். மிகவும் எரிச்சலுற்றேன். பின்னூட்டங்கள் வாயிலாக, ஏதோ விபரீதம் என்பதை மட்டும் உணர முடிந்தது. தெரிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டதை அடுத்து, அலைபேசியில் கதிருடன் அளவளாவல். முழு விபரமும் தெரிய வருகிறது. வருத்தம் தெரிவித்ததோடு, அமைதி காக்குமாறு முடிவும் செய்தோம்.

May 29 சனி காலை 8.10: நண்பர், உடன்பிறவாச் சகோதரர் புதுகை அப்துல்லாவுக்கு அழைப்பு

சொந்த அலுவல் குறித்தான அளவளாவல். அவர் கேட்ட அலுவலை முடித்துத் தருகிறேன் என உறுதி கூறல். உரையாடல் முடியும் தருவாயில், நர்சிம் அவர்களது மேலான அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்தல். சில வினாடிகள் நேரமே அது குறித்துப் பேசிக் கொண்டோம்.

May 29 சனி காலை 9-10 காலை: அனைத்து இடுகைகளையும் வாசித்து, அந்தச் சிறு குழந்தையை நினைத்து நினைத்து பெரும் வருத்தம். மீண்டும் கதிர் அவர்களுக்கு அழைப்பு. இரு சாராருமே காரணம், எனினும் கொச்சைத்தனமான இழிவான சொற்களை நினைத்து அவமானமுற்றோம்.

May 29 சனி, நண்பகல்: பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கள் இல்லத்திற்குப் பயணம்

நித்திரையில் இருந்து, எழுந்து வந்தவருடன் செய்திப் பரிமாற்றம். அண்ணன் அவர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினார். பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றியே பேச்சு. குடும்பத்தினரும் கவலையில் பங்கு கொள்கிறார்கள். இடையூடாக, மீண்டும் கதிருக்கு அழைக்க, அவருடன் சீமாச்சு அளவளாவுகிறார். எங்கள் வீட்டுச் சகோதரிக்கு நேர்ந்த இடர் ஆகவே நினைத்துப் புலம்பினோம். வெளியே எங்கும் செல்ல மனம் வரவில்லை.

May 29 சனி இரவு: திரு. மாதவராஜ் இடுகை. மனம் மேலும் இறுகி, நித்திரை கொள்ளாத த்விப்பில். அடுத்த சில மணி நேரங்களில், நட்சத்திர இடுகை. பிற்படுத்தப்பட்ட பெண் என, மெதுவாக சாதி தலையெடுக்கிறது.

இதுகாறும், புலம்பெயர்ந்த மண்ணிலே இருந்து கொண்டு, சொந்தச் சகோதரியாய் நினைத்த நாங்கள் மனிதர்கள் அல்லவா?? சாதியைப் பார்த்துத்தான் கவலை கொண்டோமா??

கவலையினூடே, அவள் ஒரு தொடர்கதை எனும் பெண்ணின் பெருமையைப் பறை சாற்றும் படத்தைக் காண்கிறோம். முற்போக்கு சிந்தனையும், அதேவேளையில் கட்டுப்பாடு தவறாமையும் அப்படத்திலே வெளிப்படுகிறது. அதைச் சிலாகித்துக் கொண்டே, தமிழ்மணத்தைத் தட்டுங்கால், செந்தழல் இரவியின் இடுகை.

நேர்த்தியான, மனதிற்குப் பிடித்தபடியாக இருந்தமையால், வணக்கமும் பரிந்துரைக்கான ஒப்பமுக்கும் செலுத்தி அரைகுறை நித்திரை கொள்கிறேன்.

May 30 ஞாயிறு காலை: பதிவுலகம் எங்கும் இதேதான். வேலையற்றுப் போய், பக்கம் பக்கமாய்ச் சென்று பின்னூட்டுகள் படித்து, மனம் நொந்து, வெந்து போகிறோம்.

May 30 ஞாயிறு நண்பகல்: மனக்குழப்பத்தில் எது செய்தாலும் அது தவறாகவே முடியும். எனவே அமைதி காப்போம் என ஒருமனதோடு நண்பருகளுக்குமான ஒரு அறிவுறுத்தல். சீமாச்சு அண்ணாவின் இல்லத்திலேயே உறக்கம்.

May 30 ஞாயிறு, மாலை 7 மணி: பதிவர், சகோதரி முகுந்த் அம்மா அவர்கள், வேறொரு நண்பருக்கு அழைத்து, அவரிடம் இருந்து என் அலைபேசி எண்ணை வாங்கி, என்னை அழைக்கிறார்கள்.

என்ன சொல்வதென அறியாது, அலைபேசியை அருகில் இருந்த சீமாச்சு அவர்களிடம் கொடுத்து விடுகிறேன். கண்ணீர் விடாதது குறையாக அவர் புலம்ப, நாங்கள் இருவரும் சமாதானப்படுத்தி ஆற்றுப்படுத்துகிறோம்.

May 30 இரவு: என் வீட்டாருடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ள, அவர்களோ திகைத்துப் போய், அச்சமுறுகிறார்கள்.

May 31 காலை 5 மணி: மீண்டும், தமிழ்மணம் வாசம்; இடுகைகள் வாசித்து, மனநோய் மேலிடுகிறது. என் சார்ந்த நண்பர்களுக்குச் சொல்வதன் மூலம், என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். இடுகைகள் இட்டு, மேலும் தீயில் எண்ணெய் வார்க்கவா? செந்தழல் இரவி அவர்களுக்கு மட்டும் நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன் மடலாடல் வழியாக. இரு நாட்களும் சரிவரத் தூக்கமின்மையால், நித்திரையில் ஆழ்ந்து போகிறேன்.

May 31 காலை 9 மணி: உள்ளூர் நண்பர்களிடம் உரையாடல். அனைவருமே, ஒருவிதமான இறுக்கமான மனநிலையிலேயே இருந்தார்கள். அதன்பொருட்டு, மீண்டும் மடல். பொறுமையாக இருப்போம் என. சுயலாபம் கருதி என்றும் வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அறிவுரை சொல்வதன் மூலம், நானும் அதைக் கடைபிடித்தாக வேண்டுமே??

May 31 காலை 10 மணி: வினவு குழுமத்தின் இடுகை. நொந்து போயிருந்த மனது, மேலும் கசங்கிக் கண்ணீர் வடித்தது. தோழர்களே, சாதி பார்த்துத்தானா, நாங்கள் இந்த மூன்று நாட்களும் மனக்கண்ணீர் வடித்தோம்?? இடுகை இடாத காரணத்தால், நாங்கள் கள்ள மெளனிகளா ஆனோம்?? என்னால், என் நண்பர்களும் அவச்சொல்லுக்கு ஆளானார்களே?? செந்தழல் இரவியாரே, இதற்குத்தானா உம்மை நாங்கள் வணங்கினோம்??


முன்பின் பார்த்திராத சகோதரிக்காய், சகோதரனுக்காய், பாரெங்கும், எத்துனை எத்துனை தமிழ் உறவுகள் சாதி பார்க்காது, துஞ்சாது அல்லல் உற்றனரோ??


35 comments:

  1. அருமையாக எழுதி இருக்கிறீர்கள் அய்யா.

    எப்போது முடியும் என்று தெரியவில்லை :((

    ReplyDelete
  2. மூணு நாளா மனசே சரி இல்லை. தோழி சொன்ன சில இடுகைகள் பார்த்துத்தான் எது எதுக்கோ ஒரு முடிச்சும் சம்பந்தமும் இருக்குன்னு புலப்பட்டது.

    இதையெல்லாம் வாசித்த பிறகுதான் இதுலே சம்பந்தமுள்ளவர்களின் சாதிவிவரமும் தெரிஞ்சது.

    ப்ச்..... நானும் ஒரு கள்ள மௌனிதான்:(

    ReplyDelete
  3. தீதும் நன்றும் பிறர் தர வாரா....
    ( அன்பு பழமை பேசி., சற்றே தூரத்தில் நின்று நடப்பதை பார்த்துகொண்டு கனத்த நெஞ்சத்தோடு அலுவலகம் செல்வதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே...!!)

    ReplyDelete
  4. பழமையண்ணே,

    அந்தப்பதிவு எழுதப்பட்டதுக்கும் போடப்பட்டதுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது. இது சம்பந்தப்பட்டவங்க எல்லாருக்கும் தெரியும். நர்சிம் உட்பட. நர்சிம் சம்மத‌த்தோடதான் போடப்பட்டதுன்னு சொன்னதாலே கும்மி பின்னூட்டங்கள் போட்டேன். ஆனால் அவர் அந்த கேவலமான‌ பதிவு போட்டதும் என் பின்னூட்டங்களை எடுத்துட்டேன். நான் அவரைப்பற்றி தரக்குறைவாக அதில் பின்னூட்டம் இடவில்லை என்றே நம்புகிறேன். அவகூட இருக்காளுங்களே அவளுங்களுக்கும் இருக்கு என்று அந்தப்பதிவில் எழுதினார். என்னிடம் இதில் சம்பந்தம் இருக்கான்னு நேரடியா கேட்டிருக்கலாம். இப்படித்தான் இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையிலேயே பதிவு எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை அவருக்கும் தெரிவித்து விட்டேன்.

    நர்சிம்முக்கு மற்ற பெண் பதிவர்களிடம் பிரச்சனை இருந்தால் நேரடியாக அவர்களிடமே அது பற்றி கேட்டிருக்கலாம். என்ன காரணம் சொன்னாலும் நர்சிம் அந்தப்பதிவு எழுதியதில் எனக்கு உடன்பாடில்லை.
    நான் இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம்
    நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
    நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //நான் இப்போது லேட்டாக வருந்துகிறேன்.///

    லேட்டா வருந்துறதுதான் இப்போதைக்கு ஃபேஷன் போல!!

    ReplyDelete
  7. //ஜாதி இருக்கிரதென்று சொல்லுகிறபோதே அது இருக்கக் கூடாதென்கிற கனவும்,ஆசையும் இருக்கிறது தோழர்களுக்கு.//

    அட... இத ஆட்டோ பின்னாடியே எழுதி வைக்கலாம் போலயிருக்கே.

    ReplyDelete
  8. இந்த பதிவில் நர்சிமை விமர்சித்திருக்கும் காமராஜையும் வினவையும் நீங்கள் விமர்சித்திருக்கிறீர்களே தவிர நர்சிமை மருத்துக்குக்கூட விமர்சிக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன் அய்யா

    ReplyDelete
  9. May 30 ஞாயிறு காலை: பதிவுலகம் எங்கும் இதேதான். வேலையற்றுப் போய், பக்கம் பக்கமாய்ச் சென்று பின்னூட்டுகள் படித்து, மனம் நொந்து, வெந்து போகிறோம்.

    May 30 ஞாயிறு நண்பகல்: மனக்குழப்பத்தில் எது செய்தாலும் அது தவறாகவே முடியும். எனவே அமைதி காப்போம் என ஒருமனதோடு நண்பருகளுக்குமான ஒரு அறிவுறுத்தல். சீமாச்சு அண்ணாவின் இல்லத்திலேயே உறக்கம்.

    May 30 ஞாயிறு, மாலை 7 மணி: பதிவர், சகோதரி முகுந்த் அம்மா அவர்கள், வேறொரு நண்பருக்கு அழைத்து, அவரிடம் இருந்து என் அலைபேசி எண்ணை வாங்கி, என்னை அழைக்கிறார்கள்.

    என்ன சொல்வதென அறியாது, அலைபேசியை அருகில் இருந்த சீமாச்சு அவர்களிடம் கொடுத்து விடுகிறேன். கண்ணீர் விடாதது குறையாக அவர் புலம்ப, நாங்கள் இருவரும் சமாதானப்படுத்தி ஆற்றுப்படுத்துகிறோம்.

    May 30 இரவு: என் வீட்டாருடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ள, அவர்களோ திகைத்துப் போய், அச்சமுறுகிறார்கள்.

    இப்படிப்பட்ட துயரமான சோகமான அவலமான மனிநிலையில் யார்டா அவன்? அவனை எறக்கி விடணும்!!http://maniyinpakkam.blogspot.com/2010/05/blog-post_3537.html என்று ஒரு அவலமான பதிவை எழுதுகிறோம் என்று முடித்திருக்கலாம் பழமைபேசியாரே

    ReplyDelete
  10. யோவ் பெரிசு நீர் போன் பண்ணி சொல்லலன்னா மூன்றூ நாள் கம்பியூட்டர் பக்கமே தலை வெச்சி படுத்திருக்கமாட்டேன்.

    ReplyDelete
  11. பதிவுலகத்திலும் இப்படியெல்லாம் இருக்கும் என்பது தெரியாமல் என்னுடைய பெரும்பாலான நேரத்தை இதில் செலவிடுகிறேனோ என்று யோசிக்க வைக்கிறது. ஆரோக்கியமான சூழல் தான் எதிர்பார்த்தேன். ரொம்ப அதிர்ச்சியாய் உள்ளது. மூன்று நாட்களாக எனக்கும் ஓரளவு அதே நிலை தான்.

    ReplyDelete
  12. பதிவுலகத்திலும் இப்படியெல்லாம் இருக்கும் என்பது தெரியாமல் என்னுடைய பெரும்பாலான நேரத்தை இதில் செலவிடுகிறேனோ என்று யோசிக்க வைக்கிறது. ஆரோக்கியமான சூழல் தான் எதிர்பார்த்தேன். ரொம்ப அதிர்ச்சியாய் உள்ளது. மூன்று நாட்களாக எனக்கும் ஓரளவு அதே நிலை தான்.

    ReplyDelete
  13. மாதவராஜ் அவர்களின் பக்கத்தில் இட்ட என் பின்னூட்டம்...

    //மீண்டும் சொல்கிறேன்... நர்சிம்-ன் எழுத்து ஏற்புடையதில்லை...

    அதே சமயம் வெள்ளிக்கிழமை விஜி பக்கத்தில் இடுகை வந்த போதே, பிரச்சனை வேறு தளத்திற்கு திரும்பும் எனத் தெரிந்து, நர்சிம்-விஜி உட்பட பெரும்பாலன பதிவர்கள் இருக்கும் ஒரு மின் மடல் குழுமத்தில் அந்த இடுகையை நீக்க வேண்டும் / அல்லது முல்லையின் பின்னூட்டத்தை நீக்க வேண்டும் என்று பல பதிவர்கள் கேட்ட போதும், அது புறந்தள்ளப்பட்டது அது நீக்கப் படவில்லை என்பதின் நீட்சியாகவே இப்போது அது வேறு தளத்திற்கு நகர்ந்து...

    ஆண் /பெண் பதிவர்கள்
    சாதி என்று போய்க் கொண்டிருக்கிறது

    இது எங்கே போய் முடியும்? இந்த வன்மங்கள் முற்றிலும் சிதைந்து போகுமா?

    உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் வலையுலகம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை நூலை பலப்படுத்தப் போகிறோமா அல்லது பிய்த்தெறியப் போகிறோமா?//

    அதையே இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete
  14. //அர டிக்கெட்டு ! said...
    இந்த பதிவில் நர்சிமை விமர்சித்திருக்கும் காமராஜையும் வினவையும் நீங்கள் விமர்சித்திருக்கிறீர்களே தவிர நர்சிமை மருத்துக்குக்கூட விமர்சிக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன் அய்யா
    //

    தோழரே,

    மீண்டும் சொல்கிறேன்... என் மனநிலையைத் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

    இன்னமும் வருத்தமான மனநிலையில் இருக்கிறேன். அவர் எழுதியது கொச்சை... குழந்தையைக் குறிப்பிட்டமை எம்மை நோகடித்தது... செந்தழல் இரவி அவர்களின் இடுகைக்கான வழி மொழிதல்... காமராஜ் அய்யா அவர்களே எனது மனநிலையைக் குறிப்பிட்டவை... இவை எல்லாம் இடுகையில் இருக்கிறது.

    இன்றைய சூழலில், நர்சிம்மை விமர்சிப்பது எவரும் செய்யலாம். மிக எளிது. ஒட்டு மொத்தப் பதிவுலகும் ஒரு பிம்பத்தை ஒட்டி இருந்த சூழலிலே, தனியொருவனாக, எதிர்த்திசையில் நின்று, நர்சிமை ஒரு வருடத்திற்கு முன்னமே விமர்சித்தவந்தான் இந்த பழமைபேசி.

    விமர்சனம் என்றால், கடுவா முடுவா என்று சொற்களைப் போட்டுச் செய்வதுதான் என்பதல்ல!!

    மன்னிக்கவும்!!

    ReplyDelete
  15. என்ன செய்யலாம்
    நான் பதிவுலகிற்க்கு புதியவன்
    எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு

    தமிழ் பதிவுலகத்திலும் குருப்பிசமா

    நடப்பது நடக்கட்டும்

    ReplyDelete
  16. பிரச்சனைக்குரிய இடுகைய ரெண்டு பேரும் (நர்சிம் - விஜி) தூக்கிட்டாங்க....

    அவங்க ரெண்டுபேரைத் தவிர மீதி அத்தனை பேரும் அடிச்சிக்கிறாங்க...

    நல்ல உலகமடா இது...

    ReplyDelete
  17. வினவும் காமராஜூம் தேவையில்லாமல் சாதி பற்றி பேசுவதாக் எழுதும் பழமைபேசி @@@பூக்காரியில் ---
    அவ பொறப்பு அப்பிடி, நம்ம வளர்ப்பு வேற@@@ என்று அப்பட்டமாக சாதித் திமிருடன் எழுதுகின்றார்
    இது உங்கள் கண்களுக்கு படவேயில்லையா??? என்ன கொடுமை இது???

    வருத்தத்துக்கு காரணம் அவர் என்பதை திட்டி எழுதவேண்டாம், வினவையும் காமராஜையும் விமரசனமாக பேர்சொல்லி குறிப்பிட்டது போல எழுதியிருக்கலாமே???

    ReplyDelete
  18. dear friend

    sorry for putting comment in english. one of the fellow blogger who is a house wife and my friend is shocked and now afraid to post any posts because of this issue what to say

    ReplyDelete
  19. இந்த அளவு வளரவிடாமல் இருக்க யார் யார் எப்பாடு பட்டார்கள் என்பதறிவோம். உணர்ச்சிவசப்படாமல் இருந்தது தவறெனில் சற்றும் வெட்கமின்றி அதே தவறைத் திரும்பச் செய்வோம். கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்கிறவர்களை அடி என்றோ தட்டிக் கொடு என்றோ எவரும் சொல்ல முடியாது.

    ReplyDelete
  20. நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.

    அன்புடன்,
    www.narumugai.com

    ReplyDelete
  21. ஒருவரைப் பிடிக்கவில்லை அல்லது அவர் செய்வது/சொல்வது பிடிக்கவில்லை என்பதற்காக தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றியும், அவரது ஒழுக்கத்தை/குடும்பத்தைப் பற்றியும் தவறாகப் பேசுவதென்பது மிகவும் தரக்குறைவான செயல்.. யாரதைச் செய்திருப்பினும்..

    சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர்கள்.. என்னுடைய கண்டனத்தையும் இங்கேயே பதிவு செய்து கொள்கிறேன்..

    ReplyDelete
  22. ஹாட்ஸ் ஆஃப்... உங்கள் ஆதங்கத்தை சரியாக சொல்லியிருக்கின்றீர்கள் ஐயா.

    ReplyDelete
  23. ///பிரச்சனைக்குரிய இடுகைய ரெண்டு பேரும் (நர்சிம் - விஜி) தூக்கிட்டாங்க....

    அவங்க ரெண்டுபேரைத் தவிர மீதி அத்தனை பேரும் அடிச்சிக்கிறாங்க...///

    ஈரோடு கதிர். இந்த ஆணாதிக்க வெறியில், சம்பந்தப்பட்ட -குழந்தையை கொலை செய்ய துணிந்த வார்த்தைகளை வீசிய வெறியர்களை -நீங்கள் பதிவை நீக்கிவிட்டாலே போதும் என்று முன் முடிவு எடுப்பது மிகவும் அநாகரீகம்.

    பாலுக்கும் காவல். பூணைக்கும் தோழன். அப்படித்தானே ?

    ReplyDelete
  24. என்ன செய்யவது மணி..


    இதுவும் கடந்துபோகும்...

    ReplyDelete
  25. வணக்கம். இனி இன்று இரவு வரை வலையுலக வாசிப்புக்கு வாய்ப்பு இல்லை.

    இப்போதுதான் உறக்கம் கலைந்து இருக்கிறேன். எனவே கடந்த 8 மணி நேரத்தில் வெளியான எதையும் வாசிக்கவும் இல்லை.

    முடிவான கருத்தைச் சொல்லி, இப்போதைக்கு விடைபெறுகிறேன்.


    1. சக பதிவர் நர்சிம் அவர்களது பூக்காரி எனும் இடுகை மற்றும் அதற்கான பின்னூட்டங்களில் சிலவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதில் எள்ளளவு மாற்றமும் இல்லை. கூடவே, நான் வாசித்து ஒப்பமுக்குச் செய்த செந்தழல் இரவி அவர்களின் இடுகையை 100% ஆதரிக்கிறேன்.

    2. புலம்பெயர்ந்த மக்களுக்கென்று, அதுவும் 10+ ஆண்டுகளாய் வெளியூரில் இருக்கும் மக்களுக்கென்று ஒரு மனநிலை இருக்கிறது. அதையொட்டிய மனநிலைதான் இவ்விடுகை. நாங்களும் துன்புற்றோம்... சாதி, மதம் எனும் பேதமில்லாது.

    மேலும், ஈரோடு பதிவர் சங்கமத்தில் நான் உரைத்ததையே இங்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,

    சாதி, மத பேதமற்ற பதிவுலகக் கட்டமைப்பு தமிழுக்கும், தமிழனுக்கும் அவசியம். அதற்கு எவ்வகையில் இடையூறு வந்தாலும், குரல் எழுப்ப வேண்டியது எம் கடமை!!

    ReplyDelete
  26. நர்சிம்மை எனக்கு பதிவுலக வாயிலாக மட்டுமே தெரியும்.. தனிப்பட்ட முறையில் அவருடன் தொடர்பு கொண்டு என் அலுவல் ரீதியாக பேசியிருக்கிறேன்.. அப்போது நான் பதிவர் என அறிமுகம் செய்து கொள்லாமல், அலுவல் சம்பந்தமாக மட்டுமே பேசினேன்..

    அதாவது பெண்ணின் உணர்வுகள் குறித்து அவரின் படைப்பு குறித்து.. அப்போது அவர் நடந்து கொண்ட விதம் அதிருப்தியை ஏற்படுத்தியது... ஆனால் நடந்த சம்பவம் அவர் மீது வெறுப்பையே ஏற்படுத்துகிறது..

    இவ்வாறு அத்து மீறுபவர்கள் மீது, வலைப்பதிவின் சார்பாக யாரேனும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
  27. வேலையற்றுப் போய், பக்கம் பக்கமாய்ச் சென்று பின்னூட்டுகள் படித்து, மனம் நொந்து, வெந்து போகிறோம்.

    ReplyDelete
  28. உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் வலையுலகம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை நூலை பலப்படுத்தப் போகிறோமா அல்லது பிய்த்தெறியப் போகிறோமா?//

    சரியே..

    ReplyDelete
  29. சக பதிவர் நர்சிம் அவர்களது பூக்காரி எனும் இடுகை மற்றும் அதற்கான பின்னூட்டங்களில் சிலவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்

    எதிர்ப்பை பதிவு செய்த பழமைபேசிக்கு நன்றி.
    முடிந்தால் தனி இடுகையாக எழுதுங்கள். அதற்கு ஒரு வலிமை உண்டு

    ReplyDelete
  30. @@ செந்தழல் ரவி

    அய்யா.. செந்தழல்
    ஒரு முன் முடிவும் அல்ல

    விஜியின் இடுகை எடுக்கச் சொல்லி வெள்ளிக்கிழமை அத்தனை பேர் மின் மடல் குழுமத்தில் கேட்ட போது எடுக்க மறுத்து, ”எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொன்னதின் நீட்சி தானே இது...


    அதற்கு ஏன் அத்தனை கள்ள மவுனம் எல்லொரிடமும்..

    நர்சிம் இடுகையை முதலில் கண்டித்து எதிர்வாக்கு அளித்ததும் நானே..
    சனிக்கிழமை நர்சிம் இடுகை பார்த்தவுடனே, தயவுசெய்து எடுங்கள் என்று போனிலும் சொன்னேன்..

    இரண்டு பேரும் அப்போது எடுக்க வில்லை.. இப்போது எடுத்துவிட்டு மவுனமாக இருக்கிறார்கள்

    மத்தவங்க எல்லாம் அணி சேந்து அடிச்சிக்கிடறாங்க...

    சரி....
    இங்கே பால் எது பூனை எதுன்னு சொன்னீங்கன்ன பரவாயில்ல..

    ReplyDelete
  31. பதிவுலகத்தை பழிவாங்க என்னமோ நடக்குது.. தயவு செய்து எல்லோரும் கவனமாக இருங்கோ,,

    ReplyDelete
  32. //May 29 சனி காலை 9-10 காலை: அனைத்து இடுகைகளையும் வாசித்து, அந்தச் சிறு குழந்தையை நினைத்து நினைத்து பெரும் வருத்தம்.//

    எனக்கும் அதை படித்ததும் மிகுந்த மன வருத்தம் உண்டானது. அதை எழுதுவதற்கான காரணம் எதுவாகயிருப்பினும் குழந்தயைக் கூட குறி வைத்து எழுதியுள்ளது மனதை கனக்கச் செய்தது.
    :(

    ReplyDelete
  33. கொஞ்ச நாளா தமிழ்மணம் பக்கம் வரல. உங்க இடுகையை கூகுள் மூலமா படிப்பேன். உங்க இடுகை மூலமா தான் பூக்காரி எழுத்தாளன் சண்டை தெரிந்தது. கொஞ்ச நாள் நாம வலையுலகம் வரலைன்னா சண்டை போடாம இருக்க மாட்டாங்க போலிருக்கு :-((

    இப்பதான் சுகுணாதிவாகர், தியாகு, பாலபாரதி, பைத்தியக்காரன் (நாமளா), வினவு இடுகையெல்லாம் படிச்சேன். செந்தழலுக்கு மறுமொழி.


    இந்த மாதிரி சமயத்தில் என்னால இடுகை போட முடியலையேன்னு வருத்தமா இருக்கு. :(

    இன்னும் என் வலைப்பதிவு சரியாகலை :-(( சரி பண்ண பார்க்கறேன் இல்லைன்னா புதுசா ஒன்ன ஆரம்பிச்சிட வேண்டியது தான்.

    ReplyDelete
  34. இதுக்கு மேலே என்ன சொல்லறதுங்க.

    ReplyDelete