2/08/2010

வரவேற்பறைப் பதுமை ஜெனீபர்!

"அய்யா, நான் அப்படியே உங்களை விட்டுட்டு, புவனிய குமான் வகுப்புக்குக் கூட்டிட்டுப் போறனுங்!” என்று பரிவை வளைய விட்டார் சரவணன்.

“இல்லீங்க அய்யா, நான் வண்டிக்கு எல்லாம் சொல்லியாச்சு; இன்னும் ரெண்டு நிமிசத்துல வந்திரும்!” ஆயத்தத்தின் கதியில், வாரா வாரம் வெளியூருக்குச் சென்று கணினிப் பொட்டி அடிக்கும் மணியன்.

வாடகை வண்டியும் வந்துவிட, வழமையான விடை பெறுதலுடன் விமான நிலையம் நோக்கிப் பயணித்தான். சார்லட் பெருநகரத்தில் ஏழு ஆண்டு வாசம் இவனுக்கு. தமிழ் நண்பர்களின் அரவணைப்பும், நகரத்து மாந்தர்தம் விழுமியங்களும் இவனை மற்ற ஊர்களுக்குப் பெயர்ந்துவிடாது கட்டிப் போட்டது.

1755ம் ஆண்டு, பென்சில்வேனியாவில் இருந்து வேட்டைக்காக தென்புலம் வந்த தாமஸ் ஸ்ப்ராட் என்பார், அவர்தம் குடும்பத்தோடு ஒரு குடிலை ஒரு கானகத்தில் இட, அதன்பின் அதுவே ஒரு பெருநகரமாக ஆர்ப்பரித்து சார்லட் எனும் பெயரில் பெரிய நிதிநிறுவனங்களின் தலைமை இடமாகமும் நிமிர்ந்து நிற்கிறது இப்பெரு நகரம்.

அந்த சார்லட் விமான நிலையத்தில் இருந்துதான், நார்போஃக் எனும் சிறப்பு வாய்ந்த நல்லூருக்குச் சென்று பணிபுரிந்து வருகிறான் இந்த மணியன் என்பவன்.

நார்போஃக் எனும் சிற்றூரானது, விர்ஜீனியா கடற்கரையை ஒட்டிய ஊர். வளைகுடாப் பகுதியின் ஒரு அங்கம். பல சுரங்கப் பாதைகள், நீரடி வழித்தடங்கள், எழில்மிகு பூஞ்சோலைகள், கப்பற்படைத் தளங்கள் என பல சிறப்புகள் கொண்டதுதான் இந்த சிற்றூர்.

நார்போஃக் கப்பற்படைத் தளமானது இரண்டு உலகப் போர்களிலும் பெரும் பங்கு வகித்துள்ளது. அதுமட்டுமின்றி, துறைமுக வணிகத்தில் வெகுவேகமாகவும் வளர்ந்து வரும் ஒரு ஊர். போஸ்டன், நியூயார்க் மற்றும் ச்சால்ஸ்டன் ஆகிய துறைமுகங்களில் செலவீனம் அதிகம் ஆகிறது எனக் கருதுவோர் இங்கு வரத் துவங்கி உள்ளனர்.

அத்தகைய நார்போஃக்கில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு, நுகர்வோருடைய அழைப்புகளை நெறிப்படுத்திச் சேவை புரிவதற்கான மென்பொருள்க் கட்டமைப்பின் முதன்மைப் பொறியாளனாகப் பணிபுரியவே, வாரா வாரம் சென்று வருகிறான் மணியன்.

கடந்த நாற்பது வாரங்களாக, இவன் செல்வதும், அங்கு குறிப்பிட்ட தங்குவிடுதியில் தங்குவதும், நான்கு நாட்களுக்குப் பின்னர் திரும்ப வருவதும், பால்யகாலத்துப் பள்ளியில் காலமும் நேரமும் ஒலியும் மாறாது திரும்பத் திரும்ப நிகழ்ந்த ‘சர்வ லோகாதிப நமஸ்காரம்’ பிரார்த்தனை போலவே நிகழ்ந்து வருகிறது.

மேரியாட் விடுதிக்கும் இவனது முகம் வழமையானது. அங்கே, concierge lounge எனப்படுகிற பிரத்தியேகக் கவனிப்பு அறையில் மணியனுக்கும் ஒரு தனியிடம். வாரா வாரம் வந்திருந்து, விடுதியின் நடப்புக்கு பங்களிப்பவன் அல்லவா இவன்?

அந்த பிரத்தியேக கவனிப்பறையில், பகுதி நேரப் பணியாளராக வேலை பார்ப்பவள், பெக்கி டூடா. திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் மாலை ஐந்து மணி தொடக்கம் இரவு பத்து மணிவரை வேலை செய்வாள்.

பொதுவாக, தான் செய்யும் வேலையில் மட்டுமே கவனமாயிருப்பாள். தான் வேலை பார்க்கும் பிரத்தியேக அறையில், மாற்றாள் எவருமில்லாது, மணியனும் அவனது சக அலுவலர்கள் மட்டுமே இருக்கும்போது மட்டும் வந்து இவர்களோடு பேசுவாள்.

நடுத்தர வயது, அருகில் இருக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள். இளம் வயதிலேயே திருமணம் ஆகி, அதுவும் இரு திருமணங்கள், ஆக மொத்தம் நான்கு குழந்தைகள் அவளுக்கு. இரண்டாவது திருமணமும் முறிந்துவிட்ட நிலையில், காலையில் செய்தித்தாள் போடும் வேலை, பின் படிப்பு, மாலையில் விடுதி வேலையென தனது தாயின் துணையோடு வாழ்க்கையை எதிர்கொள்பவள்.

அவ்வப்போது, குழந்தைகள் சாப்பிட்டார்களா, இல்லையா? மூத்தவள், வீட்டுப்பாடம் சரியாகச் செய்தாளா, இல்லையா என்றெல்லாம் கவலைப்படுவாள்; தன் கவலையை மணியனோடோ அல்லது அவனுடைய சக அலுவலர்களோடோ சொல்லிப் பகிர்ந்து கொள்வாள்.

காலச்சக்கரத்தின் சுழலில் நடந்த ஒரு மாற்றம், பூமிமாதாவின் விளையாடலில் ஒன்றுதான், முன்தினம் இடம் பெற்ற பனிப்புயலும் அமெரிக்க நாட்டின் விளையாட்டுகளில் ஒன்றான கண்கவர் super bowlம். விளைவு?! ஒரு நாள் தாமதமாய் நார்போஃக் வந்தான் மணியன்.

கதவைத் திறந்து உள்ளே சென்றவன், திடுக்கிட்டான். பிரத்தியேகக் கவனிப்பு அறையில் கவனிக்க எவரும் இல்லை. அவரவர்க்கு வேண்டியதை அவரவரே எடுத்துப் புசித்தவாறும், மாந்தியவாறும். இடையில், வரவேற்பறைப் பணிப்பெண் ஜெனீபர் புன்னகையும் அவளுமாய் உள்ளே!

“என்ன ஜெனீபர், யாரையுமே காணோம்?”

”யெஸ் மணி! இங்க இப்ப ஆட்குறைப்புச் செய்து இருக்காங்க!! இனிமே லவுஞ்சுல அட்டெண்டர் யாரும் இருக்க மாட்டாங்க!!” என்று அமெரிக்காவின் இன்றைய ஆட்குறைப்புக் கோரத்தை மெலிதாகப் படரவிட்டாள்.

“அடக் கடவுளே! நாலு குழந்தைகளை வெச்சிட்டு இனி எப்படிச் சமாளிப்பாளோ?”

“You Indians, so adorable; fall in love too quickly"

"ஆமா, அடுத்தவங்க மேல பரிவு காட்டுறது எல்லாம் உறுத்துதா உங்களுக்கு? அப்படின்னா, காந்தியும், புத்தனும், வள்ளலாரும், அன்னை தெரசாவும் வாழ்ந்த ஊர்க்காரனுக காதல்ப் பித்தனுகதான்!”, முணுமுணுத்துக் கொண்டே கதவைச் சாத்திவிட்டு தனது வழமையான அறை எண் 723ஐ நோக்கியபடி மணியன்!

42 comments:

  1. //"ஆமாங்கடி, அடுத்தவங்க மேல பரிவு காட்டுறது எல்லாம் உறுத்துதாடி உங்களுக்கு? அப்படின்னா, காந்தியும், புத்தனும், வள்ளலாரும், அன்னை தெரசாவும் வாழ்ந்த ஊர்க்காரனுக காதல்ப் பித்தனுகதான்!”,//

    சரியாச் சொன்னீங்க...

    ReplyDelete
  2. //"ஆமாங்கடி, அடுத்தவங்க மேல பரிவு காட்டுறது எல்லாம் உறுத்துதாடி உங்களுக்கு? அப்படின்னா, காந்தியும், புத்தனும், வள்ளலாரும், அன்னை தெரசாவும் வாழ்ந்த ஊர்க்காரனுக காதல்ப் பித்தனுகதான்!”,//

    உண்மைதான்...

    ReplyDelete
  3. சத்தமாவே சொல்லியிருக்கலாம்...

    ReplyDelete
  4. ஹைரிங் & ஃபயரிங் - மேனேஜ்மெண்ட் பிரின்சிபில் என்று இருப்பவர்களிடம், அன்பையும் பாசத்தையும் எதிர் பார்க்க முடியாதுங்க..

    இது போல பலதும் பார்த்தாச்சு... காலையில் அலுவலகத்துக்கு வந்தவரை, அன்று இரவே விமானம் ஏற்றி அனுப்பியதையும் பார்த்து இருக்கின்றேன்..

    ReplyDelete
  5. கெடக்குது விடுங்க நாம நாமளாவே இருப்போம்.

    ReplyDelete
  6. //ஆமாங்கடி//

    என்னது ’டி’ யா, ஈய கும்பலுக்கு ஒரு மெயில் தட்டறேன். :-)

    ReplyDelete
  7. //மேரியாட் விடுதிக்கும் இவனது முகம் வழமையானது. அங்கே, concierge lounge எனப்படுகிற பிரத்தியேகக் கவனிப்பு அறையில் மணியனுக்கும் ஒரு தனியிடம். //

    அண்ணாச்சி நீங்க pay பண்ணுறியலா இல்ல கிளையன்ட் pay பண்ணுராவலா?????

    ReplyDelete
  8. //அண்ணாச்சி நீங்க pay பண்ணுறியலா இல்ல கிளையன்ட் pay பண்ணுராவலா?????
    //

    வில்லன் என்ன கேள்வி இது? சின்ன புள்ளயாட்டமா? :-)

    ReplyDelete
  9. //“அடக் கடவுளே! நாலு குழந்தைகளை வெச்சிட்டு இனி எப்படிச் சமாளிப்பாளோ?”


    “You Indians, so adorable; fall in love too quickly" //

    உண்மைலேயே பரிதாபத்துல சொன்னீரா இல்ல அந்த ஜெனிபிர் சொன்னாபுல எதாவது சமாசாரம் இருக்கா.....எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு யாருக்கு தெரியும்வே?????????

    ReplyDelete
  10. / கபீஷ் said...


    //அண்ணாச்சி நீங்க pay பண்ணுறியலா இல்ல கிளையன்ட் pay பண்ணுராவலா?????
    //

    வில்லன் என்ன கேள்வி இது? சின்ன புள்ளயாட்டமா? :-)//
    அட அது இல்லைங்க!!!! இப்பல்லாம் "காஸ்ட் கட்டிங்க்னு" சொல்லிட்டு "client பே" பண்ணுறதே இல்லங்க அதான்....

    They consider enerybody as local resource. No traveling and reimbursement etc....

    ReplyDelete
  11. உண்மையை அப்படியே உரித்து வைத்துள்ள இடுகை ...
    என்னால் இதற்கு மேல் ஒன்றும் சொல்லத்தோணவில்லை ...

    ReplyDelete
  12. //அட அது இல்லைங்க!!!! இப்பல்லாம் "காஸ்ட் கட்டிங்க்னு" சொல்லிட்டு "client பே" பண்ணுறதே இல்லங்க அதான்....
    //

    அப்படீன்னா நம்ம மணியண்ணன் போவாருங்களா? அப்படியே போனாலும் அங்கே, concierge lounge எனப்படுகிற பிரத்தியேகக் கவனிப்பு அறையில் தங்குவாருங்களா?

    சிறுவாட்டு காசுக்கு நூறு ரூபா கொடுத்து சில்லறை வாங்க சொல்லி குட்டிப்பசங்களை இன்சல்ட் பண்ணவரு

    இதே நீங்கன்னா ஒருவேளை அந்த கேள்வி கேக்கலாம். குகுக்கே பிரியாணி போட்டவரு.

    ReplyDelete
  13. //உண்மைலேயே பரிதாபத்துல சொன்னீரா இல்ல அந்த ஜெனிபிர் சொன்னாபுல எதாவது சமாசாரம் இருக்கா//

    வில்லன் இன்னும் ஒரு சி.பு.த கேள்வி. தலைப்பைப் பாருங்க பதுமையாம், அப்படீன்னா நீங்களே புரிஞ்சு, அண்ணிக்கிட்ட சொல்ல வேண்டியத கூட்டி, குறைச்சு சொல்லுங்க.

    ReplyDelete
  14. //“அடக் கடவுளே! நாலு குழந்தைகளை வெச்சிட்டு இனி எப்படிச் சமாளிப்பாளோ?” //

    //உண்மைலேயே பரிதாபத்துல சொன்னீரா இல்ல அந்த ஜெனிபிர் சொன்னாபுல எதாவது சமாசாரம் இருக்கா.....எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு யாருக்கு தெரியும்வே?????????//

    நல்லாச் சொன்னீங்க வில்லன்.. அண்ணியும் வேற ஊருல இல்ல.. என்னம்மோ பதுமங்கறாரு.. புதுமங்கறாரு.. எதுக்கும் அண்ணிய சாக்கிரதயா இருக்கச் சொல்லோனும்..

    நல்ல இடுகை.. நாமெல்லாம் நல்லாருக்கோனும்னு நம்ம ஊர விட்டு இங்க வந்து பொழப்போட்டறோம்.. ஆனா இப்ப இங்க இருக்கற ஏழை மக்களோட வாழ்க்கையாப் பாத்தா நமக்கே பாவமா இருக்கு.. நம்மூருல என்ன ஆனாலும் குடும்பங்கன்ற ஒரு அமைப்பு வழுவா இருக்கறதால (இன்னிக்கு வரைக்கும்) எல்லா சமாளிக்கற மாதிரி இருக்கு..இங்க பொம்பளைங்க பொழுதினிக்கும் வயத்த நொப்பி பெத்துத்தள்ளிடறாங்க.. சுலபமா அழிச்சுடவும் முடியாது.. எதிர்காலம் அவ்வளவு பிரகாசமா இல்ல.. அதுதான் வருத்தமான உண்மை..

    ReplyDelete
  15. /
    சரண் said...

    //“அடக் கடவுளே! நாலு குழந்தைகளை வெச்சிட்டு இனி எப்படிச் சமாளிப்பாளோ?” //

    //உண்மைலேயே பரிதாபத்துல சொன்னீரா இல்ல அந்த ஜெனிபிர் சொன்னாபுல எதாவது சமாசாரம் இருக்கா.....எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு யாருக்கு தெரியும்வே?????????//

    நல்லாச் சொன்னீங்க வில்லன்.. அண்ணியும் வேற ஊருல இல்ல.. என்னம்மோ பதுமங்கறாரு.. புதுமங்கறாரு.. எதுக்கும் அண்ணிய சாக்கிரதயா இருக்கச் சொல்லோனும்....//


    என்ன சொல்ல வரிங்க தல...."புள்ளை இல்லாத வீட்டுல கெழவன் துள்ளி ஆடின" கதைன்னு சொல்லவரிங்களா இல்ல.... காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரின்னு சொல்ல வர்றீகளா???? ஒன்னும் புரியல.........அண்ணாச்சி "பழைமை"ய பாத்தா பால்குடி மறவா புள்ள போல இருக்காரு... இருந்தாலும் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லபா .....

    ReplyDelete
  16. //

    கபீஷ் said...
    இதே நீங்கன்னா ஒருவேளை அந்த கேள்வி கேக்கலாம். குகுக்கே பிரியாணி போட்டவரு.//

    அதான் அப்பவே வெளக்கம் சொல்லிட்டேன்ல..... வெளில போட வேண்டியத அண்ணாச்சி குடுகுடுப்பைக்கு போட்டோம்னு....

    ReplyDelete
  17. @@முகிலன்
    @@வானம்பாடிகள்
    @@Sangkavi
    @@அக்பர்
    @@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).
    @@க.பாலாசி
    @@இராகவன் நைஜிரியா
    @@தாராபுரத்தான்
    @@அண்ணாமலையான்
    @@நண்டு=நொரண்டு
    @@நசரேயன்

    நன்றிங்க மக்களே!

    ReplyDelete
  18. //கபீஷ் said...
    //ஆமாங்கடி//

    என்னது ’டி’ யா, ஈய கும்பலுக்கு ஒரு மெயில் தட்டறேன். :-)
    //

    வாங்க இலண்டன் சீமாட்டி... சீமாட்டி, சீமாட்டி....

    இங்கயும் ‘டி’ வருதல்ல? அதான்!! எப்பூடி??

    ReplyDelete
  19. //வில்லன் said...

    அண்ணாச்சி நீங்க pay பண்ணுறியலா இல்ல கிளையன்ட் pay பண்ணுராவலா?????
    //

    ஏன் இந்தக் கொலைவெறி.... மிஞ்சுறதே நாலு காசு... அது உங்களுக்குப் பொறுக்கலையோ??

    ReplyDelete
  20. //கபீஷ் said...
    வில்லன் இன்னும் ஒரு சி.பு.த கேள்வி. தலைப்பைப் பாருங்க பதுமையாம், அப்படீன்னா நீங்களே புரிஞ்சு, அண்ணிக்கிட்ட சொல்ல வேண்டியத கூட்டி, குறைச்சு சொல்லுங்க.
    //


    ஏ, ச்சும்மா இருங்கப்பா.... குதூகலமா இருக்குற இடத்துல கும்மி அடிச்சு விட்றாதீங்க.... ஒருத்தன் நல்லா இருந்தாப் பிடிக்காதே? சீமாட்டி, நேரங்காலமா கலப்பை, கொத்துன்னு எடுத்துட்டு காடு கழனிக்கு கிளம்புங்க சித்த!!

    ReplyDelete
  21. //சரண் said...
    //“அடக் கடவுளே! நாலு குழந்தைகளை வெச்சிட்டு இனி எப்படிச் சமாளிப்பாளோ?” //

    //உண்மைலேயே பரிதாபத்துல சொன்னீரா இல்ல அந்த ஜெனிபிர் சொன்னாபுல எதாவது சமாசாரம் இருக்கா.....எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு யாருக்கு தெரியும்வே?????????//

    நல்லாச் சொன்னீங்க வில்லன்.. அண்ணியும் வேற ஊருல இல்ல.. என்னம்மோ பதுமங்கறாரு.. புதுமங்கறாரு.. எதுக்கும் அண்ணிய சாக்கிரதயா இருக்கச் சொல்லோனும்..
    //

    தம்பீ, நீங்களுமா? அவ்வ்வ்வ்..... அவங்க எல்லாம் கெட்ட பசங்க, அவங்க கூடச் சேராதீங்க.....

    ReplyDelete
  22. //வில்லன் said...
    அண்ணாச்சி "பழைமை"ய பாத்தா பால்குடி மறவா புள்ள போல இருக்காரு... இருந்தாலும் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லபா .....
    //

    இதா பார்றா.... சந்தடி சாக்குல் அண்ணாச்சின்னு சொல்லி, யூத் ஆவப் பாக்குறதை?!

    ReplyDelete
  23. //வில்லன் said...
    //

    கபீஷ் said...
    இதே நீங்கன்னா ஒருவேளை அந்த கேள்வி கேக்கலாம். குகுக்கே பிரியாணி போட்டவரு.//

    அதான் அப்பவே வெளக்கம் சொல்லிட்டேன்ல..... வெளில போட வேண்டியத அண்ணாச்சி குடுகுடுப்பைக்கு போட்டோம்னு....
    //

    ஆமா, அப்படியே அந்த பழைய பிரியாணிய இலண்டனுக்கும் ஒரு பார்சல்!

    ReplyDelete
  24. கலாய்ச்சுட்டுப் போன இலண்டன் சீமாட்டி அவர்களுக்கும், நெஜமாவே வில்லன் அவர்களுக்கும் நன்றியோ நன்றி!! இஃகிஃகி!!

    ReplyDelete
  25. //They consider enerybody as local resource. No traveling and reimbursement etc....//
    கண்டிப்பாக வாடிக்கையாளர் அவ்வாறு ஆர்க்யூ செய்வதை ஒத்து கொள்வதற்கில்லை.
    நான் ஃப்ரீலேன்சர், அந்த நிலையிலிருந்து பேசுகிறேன்.

    வாடிக்கையாளர் இடத்துக்கே சென்று வேலை செய்யும்போது ஒரு மணி நேரத்துக்கு இத்தனை பணம், ப்ளஸ் போகவர போக்குவரத்து செலவு (வாடகை ஊர்தி, ரயில் டிக்கெட், விமான டிக்கெட், எது பொருந்துகிறதோ) ப்ளஸ் சாப்பாடு, ஓட்டல் வாடகை, தேவைக்கேற்ப). கூடவே ஒரு நாளுக்கு மினிமமாக சில மணி நேரங்கள் சார்ஜ் செய்யப்படும்.

    இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால்தான் செல்வேன். மணியும் அவ்வாறே செய்கிறார் என நம்புகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. @@dondu(#11168674346665545885)

    வணக்கம் ஐயா! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே... நானும் அவ்வண்ணமே.... காரணம், நானொரு அமெரிக்க நிரந்தரவாசி என்பதால்!

    அதே நேரத்தில் நண்பர் வில்லன் அவர்கள் சொல்வதும் நடைமுறையில் உள்ளது.... H1B முறையில் திறமை மிக்கவர்களை வெளியில் இருந்து கொண்டு வந்து, ஒரு அறை உள்ள வீட்டில் நான்கு பேரைத் தங்க வைத்து, அவர்களுக்கு $50-75 வரை மட்டுமே கொடுத்து வேலை வாங்குவதும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    ReplyDelete
  27. //H1B முறையில் திறமை மிக்கவர்களை வெளியில் இருந்து கொண்டு வந்து, ஒரு அறை உள்ள வீட்டில் நான்கு பேரைத் தங்க வைத்து, அவர்களுக்கு $50-75 வரை மட்டுமே கொடுத்து வேலை வாங்குவதும் கணிசமாக உயர்ந்துள்ளது.//
    கொத்தடிமைகள் பற்றி நான் பேச விரும்பவில்லை. பல தருணங்களில் அநீதிகளை ஏற்று செயல்படுபவரும் குற்றவாளியே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. // dondu(#11168674346665545885) said...
    கொத்தடிமைகள் பற்றி நான் பேச விரும்பவில்லை. பல தருணங்களில் அநீதிகளை ஏற்று செயல்படுபவரும் குற்றவாளியே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //

    ஆகா....... அப்ப நானும் ஒரு முன்னாள்க் குற்றவாளியே..... சூழ்நிலைதானுங்க... என்ன செய்ய?

    நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  29. // dondu(#11168674346665545885) said...
    கொத்தடிமைகள் பற்றி நான் பேச விரும்பவில்லை. பல தருணங்களில் அநீதிகளை ஏற்று செயல்படுபவரும் குற்றவாளியே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //

    இஃகிஃகி... இங்க எல்லாமே Demand - Supply concept தான். இத புரிஞ்சுகிட்டு வேலையை பார்க்கவேண்டியது தான். நம்மூர்லயும் இதே கதை தான். மென்பொருள் துறையில இது தான் நடக்குது.

    ReplyDelete
  30. //dondu(#11168674346665545885) said...

    கொத்தடிமைகள் பற்றி நான் பேச விரும்பவில்லை. பல தருணங்களில் அநீதிகளை ஏற்று செயல்படுபவரும் குற்றவாளியே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//
    H1B இல் இருபவங்க எல்லாரும் கொத்தடிமைகள் ஆக இல்லை... பெரிய நிறுவனத்தில் முழு நேர ஊழியராக வேலை செய்தாலும் இருக்கும் எகோநோமிக் நிலைமையில் ஏகப்பட்ட கெடுபிடிகள்..... no business class. No 5 star hotel booking, No Friday fly back, no individual rental car etc etc... Eventhough companies are making good money they are not ready to spend and cut as much as possible (reduce teh expenses and increase the profit) because of this economy situation. Economy situation is the good reason for all the companies to cut all benefits.... nothing else...

    ReplyDelete
  31. /பழமைபேசி said...


    //வில்லன் said...
    அண்ணாச்சி "பழைமை"ய பாத்தா பால்குடி மறவா புள்ள போல இருக்காரு... இருந்தாலும் ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லபா .....
    //

    இதா பார்றா.... சந்தடி சாக்குல் அண்ணாச்சின்னு சொல்லி, யூத் ஆவப் பாக்குறதை?!//



    சொன்னாலும் சொல்லாட்டாலும் யூத் தான் அண்ணாச்சி.... அந்த இளைஞ்சர் அணி செயலாளர் பதவிய கேட்டப்ப வயச காரணம் காட்டி அண்ணாச்சி குடுகுடுப்பை என்னோட விண்ணப்பத்தை நிரகரிசுட்டார்.......

    ReplyDelete
  32. Is it $50-75 per hour?. It is not something to complaint.

    ReplyDelete
  33. //சூழ்நிலைதானுங்க... என்ன செய்ய?// true.

    ReplyDelete
  34. //அடக் கடவுளே! நாலு குழந்தைகளை வெச்சிட்டு இனி எப்படிச் சமாளிப்பாளோ?”//

    இது பரிவா, பாசமா, (கள்ளக்) காதலா என்பதை அந்தப் பதுமையின் படத்தைப் பார்த்துத் தான் சொல்லமுடியும்..

    வரும்போது அந்த அக்கா புகைப்படம் எடுத்து வாருங்கள் !!

    ReplyDelete
  35. //Seemachu said...
    //அடக் கடவுளே! நாலு குழந்தைகளை வெச்சிட்டு இனி எப்படிச் சமாளிப்பாளோ?”//

    இது பரிவா, பாசமா, (கள்ளக்) காதலா என்பதை அந்தப் பதுமையின் படத்தைப் பார்த்துத் தான் சொல்லமுடியும்..

    //

    ஆகா!

    ReplyDelete
  36. udambu valaiyatha 8 maninera velai, atharkku mel oeru vinadi pani seithal atharkku yirandu madangu kooli, varathil nangu nattkal mattum velai, thangumidam martrum velaiyidathil midamana seyarkai thatpa veppam, gana nimida dhorathil cafe breakarea and Mc D'. vuyartara pathukappudan koodiya apartment or town house ll kudumbam marrum makkal. thodu dhoorathil bank, utility, online shopping, nanbarkal, movie, songs, games marrum pannattu tholaipesi through high speed internet yenum indiralogam. adivega rail, sogusana car, malivu vilaiyil petrol (gas), anaithu porutkalum nalla deal lil. ellavatrukkum mel sambadhikkum 1 dollarukku kurainthathu 45 rubai yindhiya madhippu (madam 8500 dollar sambalam padivulakukko ellai nanbarkalukko solla vendiya avasiyam ellai :-)).

    piranthathu kongu Tamil nattin kukgiramam, tharpothu manaivi makkaludan vasippathu America yenum sorgapuri, Surplus nerathai selavida mattum TAMIL, TamilPadivu (Bothanai :-))

    200 rubai erunthal nangu nattkal arai vayirrtudan kadanthuvida ninaikku Unmai Tamila (Truetamilans) un nilai enna? Dharapuratthan.. ethai kavanikka koodatho..


    Nanum America thaan... sikako...

    ReplyDelete