4/11/2009

விமர்சனம்: கவிஞர் கயல்விழி அவர்களின் தப்பிதம்!

உலகமயமாக்கலும், வணிகமயமாக்கலும் இவ்வுலகைத் திருப்பிப் போட்டு இருக்கிறது என்பது மிகையான ஒன்றல்ல. ஆனால், பொருளாதாரமயம் ஆக்கல் என்று சொல்வது விமர்சனத்துக்கு உட்பட்டது; ஏனெனில், அது, அது சார்ந்த நிறுவனங்களுக்கும், நிறுவனங்களின் அடிப்பொடிகளுக்குமே பயனளிக்கிறது என்று ஒரு சாரார் வாதிடுவதால்!

உலகமயமாக்களின் விளைவு, உலக அளவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரு சவாலாக அமைந்து உள்ளது. உலகமயமாக்கல் என்கிற மாபெரும் மாற்றத்தில், வெகுவாகப் பங்கேற்காத நாடு மற்றும் இனங்களின் மொழிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த மாற்றத்தின் பெரிய பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று என்ற வகையிலே, தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் பாதிப்பு என்பது இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இச்சூழலில், தமிழ் மொழியைக் காப்பது தமிழக அரசு, மற்றும் ஆர்வலர்களின் கடமை. ஒருவரின் மூதாதையரின் பிறப்பிடம் அறிந்து, அவர்கள் தமிழர் அல்லர் என்று பறைசாற்றுவது மடமை. தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் எவராயினும் அவர் தமிழரே! அப்படியல்லாது, அவர்களைப் பிரித்துக் கண்ணுறுவது தமிழனே தமிழுக்கு செய்யும் பேரிழுக்கு. அவ்விதம் வாதாடிவிட்டு, சாதியின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக் கோருவது மகாக் கேவலம் ஆனதும், மற்றும் தமிழனைக் கூறுபோடும் செயலுமானது என்பது சொல்லித் தெரிவதில்லை.

மேற்கூறியது போன்றதே, தமிழ் படைப்பாளிகளை சக தமிழர்களே தூற்றுவதும், காழ்ப்புணர்வு கொண்டு வசைத்தலும். ஒருவரது படைப்புகள் விமர்சிக்கப்படலாம், ஆனால் அந்த படைப்பாளியை அல்ல. ஆகவே, இன்றைய சூழலில், தமிங்கிலமன்றி தமிழில் எழுதுவோர், படைப்போர் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். தமிழில் எழுத முனைந்து, தமிங்கிலக் கலப்பு கொள்வோர், மென்மேலும் படைப்புகள் படைத்து, தமிங்கலம் தவிர்த்திடும் பொருட்டு ஊக்குவித்தலுக்கு உரியவர்களும், தமிழில் எழுதும் பொருட்டு பாராட்டுதலுக்கு உரியவர்களும் ஆவர்.

ஆனால், நாட்டிலே வணிகரீதியில் தமிழ் விற்கப்படுவதும், பட்டங்கள் சூடிக் கொள்வதும் இயல்பான ஒன்றாகிவிட்டது. இச்சூழலில், வலையுலகத்தில் ஏராளமான தமிழ் படைப்பாளிகள் மேற்கூறியவர்களோடு ஒப்பிடுகையில், பாராட்டுதலுக்கு இலக்காகாமலேயே கழிக்கப்படுகிறார்கள்.

இந்த மனநிலையில், கவிதை வடித்தும் பாக்கள் படைத்தும் இடுகையிட்ட தமிழ் படைப்பாளியை பாராட்டும் பொருட்டு, கவிஞர் என்றும், வளர்ந்து வரும் பாவலர் என்ற மதிப்படைச் சொல் கொண்டும் விளித்தோம். இது தவறா?


பாக்கள் படைக்கப்பட வேண்டும்; கவிதைகள் வடிக்கப்பட வேண்டும்; இவையாவும் உற்பத்தி செய்தல், உரைநடைக்கு ஒப்பாகும் என்றான் தமிழறிஞன் ஒருவன்.

உட்கருவான சூழலுக்குள் தம்மை ஆட்படுத்தி, மனமார உருகியும், நெகிழ்ந்தும் உணர்வுகளை இலக்கிய இலக்கணத்திற்குள் கட்டுண்டு பாக்கள் படைப்பவன் பாவலன்.

உட்கருவான சூழலுக்குள் தம்மை ஆட்படுத்தி, அனுபவத்தை விதைத்து, க‌ற்ப‌னை ந‌ய‌த்தைக் கூட்டி, தேன‌டையில் இருந்து வ‌டியும் தேனைப் போல், உள‌ச்சிந்தையை வ‌டிப்ப‌வ‌ன் க‌விஞ‌ன்.

இந்தப் பின்னணியோடு தமிழுலகில், சிந்தல்க் கவிஞர்கள், நறுக்குக் கவிஞர்கள், ஈரடிப்பயனறு(Haiku) கவிஞர்கள், முறையான பாக்கள் படைக்கும் பாவலர்கள், கவிஞர்கள் என, அவற்றுக்கான இலக்கணம் தெரிந்தும் தெரியாமலும் வலம் வருவோர் ஏராளம்.

இலக்கணம் தெரிந்திருக்கவில்லை என்பதற்காக, ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர் அவர்கள். எனவேதான், மேற்சொன்ன காரணிகளின் காரணமாய், வடித்தும் படைத்தும் இடுகைகள் இட்டுக் கொண்டு இருக்கும் கயல்விழி அவர்கள், கவிஞர் ஆகிறார்.

வாங்கினேன் சிறையில் தள்ளினார்கள்!
கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்!!

இப்படி நறுக்குத் தெறித்தாற்போல் வடிப்பவன் நறுக்குக் கவிஞன் என்றார் உணர்ச்சிக்கவி காசி ஆனந்தன். நம்மிடையேயும் ஒரு நறுக்குக் கவி உலா வந்து கொண்டுதான் இருக்கிறார், அவர்தான் பாமரன் பக்கங்கள் நறுக்குகவி பாலாண்ணே!

இனி தலைப்புக்கு வருவோம். தகுதியில்லாத அடுத்தோரை, பெரிய அடைச்சொல் கொண்டு அவர் விளிப்பது தவறன்றோ?! ஏனெனில், உற்பத்தி செய்யப்படுபவை பாக்களும் கவிகளும் ஆகாது அன்பர்காள்! ஆனாலும், தனித்தமிழில் படைத்தும் வடித்தும் ஏறு கொள்கையில், யாவரும் மதிப்படை கொள்வது திண்ணமன்றோ?!

தமிழில் எழுதிபேசி காசாக்கிக் கொள்,
தமிழையும் தமிழனையும் இழித்துப்பேசி!
இது அவர்களது அறம். (நன்றி: சிதறல்கள்)


29 comments:

  1. //வாங்கினேன் சிறையில் தள்ளினார்கள்!
    கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்!! //

    இதுதான் இன்னிக்கு நடைமுறை:(

    ReplyDelete
  2. //சின்ன அம்மிணி said...
    //வாங்கினேன் சிறையில் தள்ளினார்கள்!
    கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்!! //

    இதுதான் இன்னிக்கு நடைமுறை:(
    //

    வாங்க, வணக்கம்! உடல்நிலை சீராயிடுச்சுங்களா?

    ReplyDelete
  3. பேசித் தீர்வு க‌ண்டிருக்க‌லாம்! ஆசானே! தாங்குவேனா நானு? க‌விஞ‌ர் என்கிற‌ விச‌ய‌மெல்லாம் ரொம்ப‌ பெரிசுங்க‌! இர‌சிகைன்னு வேணா சொல்லிக்க‌லாம்!!

    ReplyDelete
  4. /நம்மிடையேயும் ஒரு நறுக்குக் கவி உலா வந்து கொண்டுதான் இருக்கிறார், அவர்தான் பாமரன் பக்கங்கள் நறுக்குகவி பாலாண்ணே! /

    இதுக்கு நான் தகுதிப் படுத்திக்கணும். நன்றி. பாவம். நம்ம கலகலப்ரியா. நான் கிறுக்கறதெல்லாம் படிச்சாக வேண்டிய தண்டனை. நல்லா இருக்கு. நிறைய எழுதுங்கோன்னு ஊக்கம் கொடுக்கும். இந்த பாராட்டு அவங்களுக்குதான் சேரணும்.

    ReplyDelete
  5. // தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் எவராயினும் அவர் தமிழரே! அப்படியல்லாது, அவர்களைப் பிரித்துக் கண்ணுறுவது தமிழனே தமிழுக்கு செய்யும் பேரிழுக்கு.//

    மிக சரியான வாதம் பாராட்டுகள்

    ReplyDelete
  6. கட்டுரையின் கரு தெரியாததால் .. சில இடங்களில் எனக்கு மட்டுமே குழப்பம்..

    ReplyDelete
  7. //ஆ.ஞானசேகரன் said...
    கட்டுரையின் கரு தெரியாததால் .. சில இடங்களில் எனக்கு மட்டுமே குழப்பம்..

    //

    வாங்க அன்பரே! மிகச் சரியா சொல்லி இருக்கீங்க. சில பல பற்றிய(matter)ங்களை, மெல்லவும் முடியாது; துப்பவும் முடியாது!

    அந்த பின்னணியில, பட்டும் படாமல் எழுதினதுதான் இது. அதான், ஆங்கிலத்துல Off the topicனு சொல்ற மாதிரி, பட்டும் படாம ஒரு சிலது இருக்கும்.

    ரெண்டு பேர்த்தை கெளரவப்படுத்தி இன்னும் வேலை வாங்கணும்ங்ற உத்தியில அந்த இலக்கை மனசுல வெச்சி, அதுல இருந்து பின்னோக்கி எழுதி இருக்கேன்.

    அதாவது, ரெண்டு மதிப்படைச் சொற்கள். அதை நியாயப் படுத்தறதுக்கு ஒரு வாதம். இந்த வாதத்தை நியாயப் படுத்தறதுக்கு இன்ன ரெண்டு வாதம் இப்படி.

    குழப்பமா இருக்கா? ரெண்டொரு தடவை படிச்சுப் பாருங்க. இதுக்குத்தான் நான், கிராமத்து பாணியில மட்டுமே எழுதுறது.

    ReplyDelete
  8. U've pointed out exactly.if u find time plz visit my blog for a kuttikavithai &give ur opinion whether it looks like a kavithai.I've some 7 kavithai 's on various topics.

    ReplyDelete
  9. //ஸ்ரீதர் said...
    super.
    //

    Thank you buddy!

    ReplyDelete
  10. //Muniappan Pakkangal said...
    U've pointed out exactly.if u find time plz visit my blog for a kuttikavithai &give ur opinion whether it looks like a kavithai.I've some 7 kavithai 's on various topics.
    //

    நண்பா, வாழ்த்துகள்! நல்லா இருக்கு, ஆனா வகைப்படுத்தி வையுங்க...

    ReplyDelete
  11. //கயல் said...
    பேசித் தீர்வு க‌ண்டிருக்க‌லாம்! ஆசானே! //

    நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க போல இருக்கு. இலக்கணம் தெரியாமல் எழுதுகிறார்கள்ன்னு, ஒரு சாரார் வளரும் படைப்பாளிகளை எள்ளி நகையாடுறது உண்டு. கணினியில், மென்பொருள் படைக்க, கடினமான இலக்கணங்களை கற்றுத் தேர்ந்து பாரோடி வரும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு, தமிழ் இலக்கண முறைப்படி கவி படைப்பது மிகவும் எளிது.

    எனவே அதைப் புறந்தள்ளி விட்டு, தமிழில் வடிக்கும், படைக்கும் படைப்பாளிகள் கெளரவிக்க வேண்டியவர்கள்.

    அதை மனதில் வைத்துச் சொன்னதுதான். உண்மையிலேயே, உங்களிடம் கவித்திறன் உள்ளது என்பதுதான் உண்மை.

    அதை, இருக்கும் இடுகைகளையும், இனி வரப் போகும் இடுகைகளையும் கண்டு வாசகர்கள் அறியப் போவதும் நடக்கத்தானே போகிறது கவிஞரே!

    ReplyDelete
  12. மிக்க‌ ந‌ன்றி ஆசானே!

    ReplyDelete
  13. ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பினேன். பின்னர் புரிந்தது. நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது. கவிதையோ, கட்டுரையோ, கதையோ, கும்மியோ எதுவாக இருந்தாலும் தமிழ் மொழியில் எழுதவேண்டும் என்ற ஆசையுடன் பதிவுலகில் எழுதிவரும் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் தான்.

    உங்கள் பதிவுகளை இதுவரை படித்ததில்லை. படிக்கிறேன். வாழ்த்துகள் கயல், பாலா.

    ReplyDelete
  14. //மஞ்சூர் ராசா said...
    ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பினேன். பின்னர் புரிந்தது. நீங்கள் சொல்வதில் நியாயம் உள்ளது.
    //

    வணக்கம் ஐயா! அதேதானுங்க ஐயா, நன்றிங்க!!

    ReplyDelete
  15. //பாலா... said...
    /நம்மிடையேயும் ஒரு நறுக்குக் கவி உலா வந்து கொண்டுதான் இருக்கிறார், அவர்தான் பாமரன் பக்கங்கள் நறுக்குகவி பாலாண்ணே! /

    இதுக்கு நான் தகுதிப் படுத்திக்கணும். நன்றி. பாவம். நம்ம கலகலப்ரியா. நான் கிறுக்கறதெல்லாம் படிச்சாக வேண்டிய தண்டனை. நல்லா இருக்கு. நிறைய எழுதுங்கோன்னு ஊக்கம் கொடுக்கும். இந்த பாராட்டு அவங்களுக்குதான் சேரணும்.
    //

    வாங்க பாலாண்ணே! கலக்கல்ப்ரியாக்கு, கலகலன்னு நன்றியும், பெருமை சேர்க்கவும் சூழல் சரியில்லை...

    அவங்களோட நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடிக்கும்...

    ReplyDelete
  16. அவ்வ்வ். ஒன்னாப்பு பையன் பரிச்ச எழுதினா மாதிரி எழுதிட்டு, தமிழய்யா ஷொட்டு குடுப்பாரா குட்டு குடுப்பாரான்னு உக்காந்திருக்கேன். தம்பியக்காணோம்.

    ReplyDelete
  17. மணியாரே.... கொஞ்ச நாளாவே இடுகைகள்ல ஒரு வித கோவம், ஆதங்கம் இதெல்லாம் புதைஞ்சு இருக்கற மாதிரி தெரியுது. :))))

    ReplyDelete
  18. //Mahesh said...
    மணியாரே.... கொஞ்ச நாளாவே இடுகைகள்ல ஒரு வித கோவம், ஆதங்கம் இதெல்லாம் புதைஞ்சு இருக்கற மாதிரி தெரியுது. :))))
    //

    வாங்க வணக்கம்! உங்ககிட்ட மறைக்க முடியுமா? உண்மைதாங்க அண்ணே!

    உங்க கருத்துலயே எல்லாமும் புதைஞ்சு இருக்கு...

    எல்லாரும் பெருகணும், ஓங்கணும்ன்னு விருப்பப் படுவாங்க... அந்த விருப்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குறுகலும், உடைத்தலும் இருக்கக் கூடாது பாருங்க.

    ReplyDelete
  19. என்னங்கடா நம்ம பேரு கன்னாபின்னான்னு அடிபடுது.. கயல் கவிஞர் மற்றும் பாலகவிஞர் :p (இப்போதானே சார் ஆரம்பிச்சிருக்கிங்க அதனால சொன்னேன்).. இவர்கள் இருவரினதும் ரசிகை நான்..

    பாலா சார் சும்மா அடிச்சி விடாதீங்க.. கன்னாபின்னான்னு விமர்சனம் பண்ணி எழுதவிடாம பண்றதுதான் நான்.. மத்தபடி நாம ஒண்ணும் பண்ணல.. கவிக்கு பொய் அழகுன்னு எது வேணா சொல்றதா அவ்வ்வ்வ்வ்...

    பழமை.. ரொம்ப நன்றி.. அதுக்கு என்ன நன்றி, பெருமைன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. என்னங்கையா நடக்குது இங்க.. விட்டா நகைச்சுவைத் திலகம்னு பட்டம் கொடுப்பாய்ங்க போல.. என்னை வச்சு காமெடி கிமெடி பண்ணலியே.. அர்ர்ர்... (மீதிப் பதில் நம்ம இடுகையில்..)

    ReplyDelete
  20. //கலகலப்ரியா said... //

    வாங்க வாங்க... கலக்கல் திலகம்ன்னு கொடுப்பமே?!

    ReplyDelete
  21. //ஆ.ஞானசேகரன் said...
    // தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் எவராயினும் அவர் தமிழரே! அப்படியல்லாது, அவர்களைப் பிரித்துக் கண்ணுறுவது தமிழனே தமிழுக்கு செய்யும் பேரிழுக்கு.//

    மிக சரியான வாதம் பாராட்டுகள்
    //

    நன்றிங்க!!!

    ReplyDelete
  22. வந்ததே தாமதம்.இருந்தாலும் நான் அப்புறமா வாரேன்!

    ReplyDelete
  23. எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் தெளிவாகச் சொல்லும் அண்ணன் பழ்மைபேசியின் தமிழ்ப்பணி சிறக்கட்டும்.வாழ்க தமிழ்...வளர்க தமிழ் ;
    "மெல்லத் தமிழ் இனிச் சாகும் அந்த
    மேற்கு மொழிகள் இனிதோங்கி வளரும் ..." சொன்னவன் சொன்னான் ... ஆதங்கத்தில் சொன்னான் .தமிழர்கள் இருக்கும் வரை தமிழ் இருக்கும்.அதன் தேனினும் இனிய கவிதைகளும் இருக்கும்.மரபுக் கவிதையோ ...புதுக் கவிதையோ எதுவானாலும் "சித்திரமும் கைப்பழக்கம் " பழ மொழிக்கேற்ப எழுத
    எழுதகைவரப்பெறும்.இது எனக்கு நானே சொல்லிக் கொள்வது.சரி தானே பழமை பேசி அண்ணா?!

    ReplyDelete
  24. //ராஜ நடராஜன் said...
    வந்ததே தாமதம்.இருந்தாலும் நான் அப்புறமா வாரேன்!
    //

    அண்ணே, என்ன நெம்ப நாளா ஆளைக் காணோம்?? அவ்வ்வ்....

    ReplyDelete
  25. //மிஸஸ்.தேவ் said... //

    வாங்க சகோதரி... உங்களையெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீங்க எல்லாம் இருக்குற வரையிலும் தமிழ் சாகாதுதான்!!

    ReplyDelete
  26. //கலக்கல் திலகம்ன்னு கொடுப்பமே//
    அப்போ நீங்க எல்லாம் கலங்கும் திலகமா என்ன.. சாக்கிரத மக்கா..

    ReplyDelete
  27. //கலகலப்ரியா said...
    //கலக்கல் திலகம்ன்னு கொடுப்பமே//
    அப்போ நீங்க எல்லாம் கலங்கும் திலகமா என்ன.. சாக்கிரத மக்கா..
    //

    ஆகா.... இதைத்தான நாங்க எதிர்பார்த்தோம்... இஃகிஃகி!!

    ReplyDelete