4/12/2009

அமெரிக்கா: பூந்தாதுத் தொல்லையும், தீராத இம்சையும்!

வணக்கம் அன்பர்களே! பொழப்பு தேடி அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசியா அமெரிக்கா வந்தப்ப நாம நல்லாதான் இருந்தோம். முதல் ரெண்டு மூனு வருசமும் நல்லாத்தான் போச்சுது. அப்ப பாருங்க, ஒன்றுகூடல் நடத்துறேம் பேர்வழின்னு நம்ம தமிழ் நண்பர் ஒருத்தர் வீட்ல, Carry, NCல கூடி இருந்தோம்.

நண்பரோட நண்பர், இப்ப அவர் நமக்கும் நண்பர், சித்தங்கலங்கி, மூக்குல, வாயில, கண்ணுலன்னு உடல்ல இருக்குற நவ துவாரங்கள்லயும் தண்ணி சிந்திகினு உள்ள வந்தாரு. உடனே, துடைப்பானால துடைச்சி விட்டு, மூக்குல பச்க், பச்க்ன்னு எதொ தெளிப்பானால தெளிச்சு விட்டாங்க. அதைப் பார்த்த நாம மிரண்டு போய்ட்டம்ல?! ஆச்சலு, என்னடா இது எல்லாம்ன்னு நாம கேட்க, அவரு,

“நிரந்தரவாசிக்கான(green card) விண்ணப்பம் எந்த நிலையில இருக்கு?”

“I-140 முடிஞ்சது, I-485 இனிதான் விண்ணப்பிக்கணும்டா. ஆமா, அது எத்தனை நாள் எடுக்கும்?”

“கவலையேபடாத. அது வர்றதுக்கு முன்னாடியே, இந்த ஒவ்வாமை(allergy) உனக்கு வந்துரும்டா!”ன்னான் பாவி மகன்.

அதேபோல அவன் சொன்ன நாள்ல இருந்து, ஒரு வருசத்துக்குள்ளயே அந்த ஒவ்வாமை வந்து சேந்துருச்சுங்க. வருசா வருசம் ஏப்ரல் ஒன்னாந்தேதி தவறாம வந்திடுதுங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, மருத்துவர்கிட்ட போனேன். அவர், பொறியில சிக்கின எலியாட்டம், லபக்னு புடிச்சி கிட்டாரு நம்மளை. நாம ஏற்கனவே எல்லாப் பற்றியமும் தெரிஞ்சுதான இருக்கோம். ஐயா, அந்த Allegraக்கு மருந்துச் சீட்டு எழுதிக் குடுங்க போதும்ன்னோம். ம்ம், நீங்க ஒரு தடவை பரிசோதனைக்கு வந்தே ஆகணும்ட்டாரு.

சரின்னு, ஒரு நல்ல நாளும் அதுவுமாப் போனோம். வாங்க, வாங்கன்னு உபசாரமல்லா வெகு பலமா இருந்துச்சு. முதல்ல உட்கார வெச்சாங்க. இடது பக்கம் திரும்பினா, 125 விதமான ஊசி மருந்து இருக்கு. என்னங்க, இன்னைக்கு இவ்வள்வு பேர் பரிசோதனைக்கு வர்றாங்களா? எல்லார்க்கும் ஒரே ஒவ்வாமை போல இருக்குன்னேன்.

அந்த தாதியம்மா சிரிச்சுகிட்டே, ஆமா, இன்னைக்கு நிறைய பேர் வர்றாங்க. ஆனா, ஒரு சிறு திருத்தம்ன்னாங்க. ஏன், நான் இன்னைக்கு போய்ட்டு, வேற ஒரு நாளைக்கு வரணுமான்னு கேக்க, அவங்க மறுபடியும் ஒரு குறுஞ்சிரிப்போட, நீங்க பாக்குற இந்த 125 ஊசிகளும் உங்களுக்குத்தான் போடப் போறங்கன்னு சொல்ல, நம்முளுக்கு அழுகையே வந்திடுச்சு. ஆனா, 60, 70 ஊசிகளோடயே நிறுத்திகிட்டாங்க.

அதைப்பார்த்த அந்த தாதி, இது சும்மா, தோல்ல மேலால போட்டு, உங்க உடம்பு எது எதுக்கெல்லாம் ஒவ்வாதுன்னு பாக்கப் போறோம்ன்னாங்க. சரி, பொறியில மாட்டியாச்சு, இனி என்ன செய்ய? நடத்துங்கன்னு சொல்லியாச்சு. இடது கையில மேல தோள்பட்டையில இருந்து, முழங்கை வரைக்கும், இட வலமா எட்டு எட்டு ஊசியா, எங்க அமுச்சி வறட்டி தட்டி வைக்குறா மாதிரி, குத்திகினே வந்தாங்க. முதல் பத்து ஊசிக்கும் வலிச்சது. அப்புறம், அவ்வளவாத் தெரியலை.

எல்லாமும் போட்டு முடிச்சதுக்கப்புறம், பத்து நிமிசங்கழிச்சு பாத்தா, ஒரு பத்து பன்னெண்டு வில்லைக ஊசி போட்ட இடத்துல. அதுகளை வெச்சி, உங்க ஒடம்பு இது இதுக்கு ஒவ்வாமைன்னு ஒரு பட்டியலையும் கீழ்க்கண்ட மருந்துகளையும் குடுத்தாங்க.

Allegra - மாத்திரை
Nasonex - மூக்குத் தெளிப்பான்
Visine - கண் சொட்டு மருந்து

இதுகளைத் தேவைக்கு ஏத்தா மாதிரி பாவிச்சுகுங்கன்னு சொல்லி மருந்துச் சீட்டும் குடுத்தாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்க, இந்த இம்சை. கண்ணுல ஒரே அரிப்பு, மூக்குல தண்ணியா ஊத்துது, உடம்பெல்லாம் சித்தங் கலங்கி ஓய்ஞ்சா மாதிரியே இருக்கு இப்பக் கூட.

சரி, ஏன் இது வருது? பாருங்க, வசந்த காலம் பொறக்குதோ இல்லையோ, மரம், செடி, புல்லுகள்ல பூந்தாது (மகரந்தத்தூள்) வெளிப்பட ஆரம்பிச்சிரும். இதுக, காத்துல 400 மைல் வரைக்கும், தரையில இருந்து மேல ரெண்டு மைல் வரைக்குமா பறக்குமாமுங்க. அவ்வளவு நுணுக்கமா இருக்குற இது, காத்தோட காத்தா மூக்கு, வாயி, கண்ணுல படும்போது உடல்ல இருக்குற தற்காப்பு அமைப்புகள் வேலை செய்ய ஆரம்பிச்சுடுமாம். அதாவது, தும்முறது, கண் உறுத்துறது இந்த மாதிரி.என்னதான், மேல சொன்ன மருந்துகளைப் பாவிச்சாலும், இம்சை இம்சைதானுங்க!

இது தெரிஞ்ச நம்மாள் ஒருத்தன், அவனோட இந்தியப் பிரயாணத்துக்கு நடுப்புல இருந்துட்டு கூப்ட்டான், ’டேய், இங்க Allegra கிடைக்குது, ஒரு ரெண்டு பெரிய பொட்டலம் 200 மாத்திரைக வாங்கிட்டு வரட்டா?’ன்னு கேட்டான். ’சரீடாப்பா!’ன்னேன் நானும். அவனும் நல்ல புள்ளையாட்டம் வாங்கியாந்து தந்தான்.

ஒரு மாத்திரை போட்டேன், ரெண்டு போட்டேன், ஒன்னும் வேலைக்காகலை. போன வாரம் பூராவும் இப்பிடியே ஓடுச்சு. முடியலை! பழைய குருடி, கதவைத் திறடின்னு நேத்து மறுபடியும் மருத்துவர்கிட்டப் போக, அவரும் மாதிரிக்கு இருந்த அதே Allegra மாத்திரைக, ஒரு 50 மாத்திரைகளுக்குப் பக்கமா குடுத்தாரு. அதுல ஒன்னை உள்ள போட்டன், அடைச்சி இருந்த மூக்கு ஒடனே தொறக்குது. அரிச்சிப், பிச்சிகினு இருந்த கண்ணு முழிக்குது, களைப்பு நீங்குது.... இது எப்படீங்க? இதுக்கும் மருத்துவர் கொடுத்தது, நுண்ணிய அளவுல குறைஞ்சதுதான். அப்ப, அந்த 200 மாத்திரைகளும் தூக்கிப் போட வேண்டியதுதானா? அல்லது, எனக்கு மனப்பிராந்தியா??

அதை விடுங்க, இப்ப ஒடம்புக்கும் கொஞ்சம் நல்லா இருக்கு, நாம நம்ம பினாத்தலை ஆரம்பிக்கலாம்... இஃகிஃகி! காயம், புண் அப்படீன்னு சொல்றமே, அதுகளை எப்படிப் பொழங்குறது? ஏன்னா, சில பல இடங்கள்ல இடம் மாறிப் பொழங்கிப் போடுறமே, அதனாலதான் ஒரு அலசல். அது வந்துங்க, புறச் சக்திகளால் ஆனது காயம். உளரீதியான உணர்வு, உடல் உபாதை இதுகளால ஆகுறது புண்.

நாள்பட்ட காயம் புண்ணாகலாம். ஆன காயம் ஆறி, பக்க விளைவின் காரணமாய் புண். புண் ஒரு போதும் காயம் ஆகாது. இது போக வடு, இரணம், ஊறுன்னு நிறைய இருக்கு. பிரத்யேக இடுகை கால அவகாசம் கிடைக்குறப்ப இடணும். இதெல்லாம் புழங்கினா, பயன்பாடு தெரியும். நாம இஞ்சூரி, வூண்டு, ரேஷ்ன்னல்ல காலத்தை ஓட்டுறோம்...இஃகிஃகி!

புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று!

27 comments:

  1. அட அங்க பின்னூட்டம் போட்டு முடிய இது முழைச்சிருக்கு கையோட ஓட்டும் போட்டாச்சி.. இனிமேதான் படிக்கணும்..வர்ட்டா..

    ReplyDelete
  2. hay fever? romba mosamna.. vaccination try pannunga sir..

    ReplyDelete
  3. இருக்கிற ஒவ்வாமை போறாதா. மனப்(பிராந்தி), புகை இதேல்லாம் வேற! இப்ப லொள்ளு பாக்க சந்தோசமா இருக்கு. நம்மூரு மாத்திரைகள்ள 'அ' போட்ட மாத்திரைலதான் மாவு பாதி மருந்து பாதிம்பாங்க. கடைல வாங்கின மாத்திரையில கூடவா?

    ReplyDelete
  4. இந்த ஓவ்வாமை எனக்கும் ஹோசூரில் வேலை செய்யும் போது இருந்ததுங்க. அப்புறம் சரியாடுச்சுங்க.

    மூக்கு அடைச்சுகிட்டா ரொம்ப மாத்திரை எல்லாம் போடற வழக்கம் எல்லாம் கிடையாதுங்க...

    நான் செய்வது சுடு தண்ணி வச்சு, யூக்கலிப்டஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு அந்த ஆவியை போர்வை போத்திக் கொண்டு பிடிப்பதுதான். (மாத்திரை போட்டால் வேற மாதிரி ஒவ்வாமை வந்துவிடும் என்பதால்..)

    இந்த மூக்குத் தெளிப்பானும் சில தடவைகள் பாவித்த பின் உபயோகப் படுவதில்லை.

    ReplyDelete
  5. டூப்ளிகேட் மாத்திரையா இருக்கும்னே, அப்போலோ மாதிரி மருத்துவமனைல வாங்கனும். தெருவில இருக்கிர மருந்துக்கடைகள் நம்பக மானதல்ல.

    ReplyDelete
  6. //கலகலப்ரியா said...
    hay fever? romba mosamna.. vaccination try pannunga sir..
    //

    ஆமாங்க, இன்னும் ஒரு வாரம் குடுத்த மருந்துகளோட மல்லுகட்டிப் பார்க்கலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
  7. இது ஆரம்பிக்க முன்னாடியே பண்றது நல்லது.. அடுத்த தடவை இது பத்தி யோசிங்க.. ஆலோசனை இலவசம்தான்.. அதனால கடைப் பிடிக்கணும்ங்கிற அவசரமில்ல.. நாம இப்போ கொர்ர்...

    ReplyDelete
  8. ஒவ்வாமைக்கு ஹோமியோப‌தி ம‌ருந்துக‌ள் சிற‌ந்த‌ ப‌ய‌ன‌ளிக்கும் என்கிறார்க‌ளே! வாதைக‌ள் எதுவுமின்றி எளிதான‌ ம‌ருத்துவ‌மாமே! தீர‌ விசாரித்து உட‌ல் ஏற்குமா என‌ தெளிந்து பின் ம‌ருந்துண்ணுவ‌து ந‌ல்ல‌து!

    ReplyDelete
  9. நம்க்கு இந்த பெர்ச்சின எல்லாம் இல்லீபா....

    அண்த்த, டெய்லி கொஞ்சம் ரெட் வைன் விட்டுப்பாரு அண்த்த..அல்லாம் சுகுராயிடும்...

    ReplyDelete
  10. வைன் பிடிக்காட்டி பொகை விட்டு பார்க்கலாம்...பாடி ஃபுல்லா பாய்சனாயிடுச்சின்னா பிசாத்து மகரந்தம் இன்னா பண்ணிடும்??

    ReplyDelete
  11. அண்ணா, உடும்பை பாத்துக்கங்க...

    உடும்பு நல்லா இருந்தாத்தான் வாழ்க்கை செவுத்துல ஏற முடியும்.

    ஆனாலும், ஏப்ரல் ஒன்னாந்தேதி ஆஸ்பத்திரி போனேன்னு சொன்னீங்களே., நாள்பட்ட பழிவாங்களோன்னு ஒரு பயமாயிருக்கு...

    இஃகி., இஃகி...

    ReplyDelete
  12. மகரந்தம் - பூந்தாது,


    ஐய்யா...

    புது வார்த்தை தெரிஞ்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  13. அட ஏங்க நீங்க வேற அதை ஞாபகப் படுத்துறீங்க


    நினைச்சாலே பயமா இருக்கு
    ஏப்ரல் வந்த புத்தாண்டு வருதோ இல்லியோ புது செட் இதெல்லாம் வந்துடும்

    Allegra - மாத்திரை
    Nasonex - மூக்குத் தெளிப்பான்
    Visine - கண் சொட்டு மருந்து

    ReplyDelete
  14. //பாலா... said...
    இப்ப லொள்ளு பாக்க சந்தோசமா இருக்கு.
    //

    இஃகிஃகி! ஆமாங்க பாலாண்ணே!!

    ReplyDelete
  15. //இராகவன் நைஜிரியா said... //

    வணக்கங்க ஐயா, மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க... அப்படியும் செய்யுறது உண்டுங்க!!

    ReplyDelete
  16. //குடுகுடுப்பை said...
    டூப்ளிகேட் மாத்திரையா இருக்கும்னே, அப்போலோ மாதிரி மருத்துவமனைல வாங்கனும். தெருவில இருக்கிர மருந்துக்கடைகள் நம்பக மானதல்ல.
    //

    அண்ணே, வாங்க, ரொம்ப நாள்க் கழிச்சி திண்ணைக்கு வர்றா மாதிரி இருக்குங்களே?! நல்லா இருக்கீங்களா??

    ReplyDelete
  17. பழமைபேசி... ஒரு பாட்டி வைத்தியம் இருக்கு முயற்ச்சித்து பாருங்களேன்...

    பாலில் மிளகு(தூள்), மஞ்சள்(தூள்) மற்றும் விதை கொத்தமல்லி(தூள்) சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு வடிகட்டி அருந்தவும். நீங்கள் இதை மார்ச் மாதமே ஆரம்பித்து விடலாம், உங்களுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி ஏற்ப்பட்டு ஒவ்வாமை கட்டுக்குள் வரும்.

    நாங்கள் மிச்சிகன் குளிரை மற்றும் ஜியார்ஜியா ஒவ்வாமையை இதை வைத்துதான் சமாளிக்கிறோம்.

    ReplyDelete
  18. //அரசூரான் said...
    பழமைபேசி... ஒரு பாட்டி வைத்தியம் இருக்கு முயற்ச்சித்து பாருங்களேன்...

    பாலில் மிளகு(தூள்), மஞ்சள்(தூள்) மற்றும் விதை கொத்தமல்லி(தூள்) சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு வடிகட்டி அருந்தவும். நீங்கள் இதை மார்ச் மாதமே ஆரம்பித்து விடலாம், உங்களுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி ஏற்ப்பட்டு ஒவ்வாமை கட்டுக்குள் வரும்.

    நாங்கள் மிச்சிகன் குளிரை மற்றும் ஜியார்ஜியா ஒவ்வாமையை இதை வைத்துதான் சமாளிக்கிறோம்.
    //

    மிக்க நன்றிங்க! ஊரில் நெஞ்சுச் சளிக்கு வீட்டார் கொடுக்க அருந்திய அனுபவம் இருக்கிறது. உடனே முயற்சிக்கிறேன்.... நன்றிங்க!!

    ReplyDelete
  19. Ur post on pollengrain allergy is nice.I hope u r going for walking which is the best thing for this sort of illness.

    ReplyDelete
  20. //கயல் said...
    ஒவ்வாமைக்கு ஹோமியோப‌தி ம‌ருந்துக‌ள் சிற‌ந்த‌ ப‌ய‌ன‌ளிக்கும் என்கிறார்க‌ளே! வாதைக‌ள் எதுவுமின்றி எளிதான‌ ம‌ருத்துவ‌மாமே! தீர‌ விசாரித்து உட‌ல் ஏற்குமா என‌ தெளிந்து பின் ம‌ருந்துண்ணுவ‌து ந‌ல்ல‌து!
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  21. அண்ணே.... நண்பர்கள் சொல்ற மாதிரி ஓமியோபதி நல்ல பயன் குடுக்கலாம். இப்ப கொஞ்சம் அடன்கின பிறகு ஜூன் ஜூலைல ஆரம்பிங்க. Anti-Histamin மருந்துகதான் குடுப்பாங்க. நல்ல பயன் இருக்கும்.

    ReplyDelete
  22. நியூஜெர்சி வந்து 1 வருஷத்துல எனக்கும் வந்துருச்சுங்க. அக்டோபர், நவம்பர் மறுபடியும் ஏப்ரல்ல அவதிப்படனும். இந்தவருஷம் தப்பிச்சுட்டேன் (இந்தியா வந்ததால).

    ReplyDelete
  23. உங்கள் பகுதியில் தயாரான தேனை பயன்படுத்தினால் சற்று கேட்கும்

    srini

    ReplyDelete
  24. அண்ணாச்சிக்கு இன்னும் சரியாகலை போல????????????

    ReplyDelete
  25. திண்ணைக்கு வந்து மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி! வெளியூர் பயணம் மேற்கொள்ள இருப்பதால், கால அவகாசம் வாய்க்கும் போது, வலையில் உலா மேற்கொள்வோம் அன்பர்காள்!

    ReplyDelete
  26. அட..

    இப்படியெல்லாம் அலர்ஜியா

    எங்க வீட்டில மிளகாய்ப்பொடி மெசின்ல பொடி அரைக்கிறாங்க. அவங்களுக்கு தும்மலே வருவதில்லை.

    ஆனால் நான் 50 அடி தூரத்தில் இருந்தாலும் உடனே எனக்கு மட்டும் தும்மல் வருது.. ஹ்ம்ம்ம்

    ReplyDelete