12/04/2008

மாப்ள, உழுத்திட்டண்டா! ஓடியாடா!!

வணக்கங்க! பரவாயில்லை, இன்னைக்கு கொஞ்சம் குளுரு கம்மி!! இஃகி! இஃகி!! அல்லார்த்துக்கும் நேத்து ஒரே சிரிப்பு! நான் ஏமாந்து போனதுல உங்களுக் கெல்லாம் ஒரு சந்தோசம். இஃகி!ஃகி!! ஊரு முக்குல நாமெல்லாம் எப்பிடியெல்லாம் பகலுன்னும் ராத்திரியின்னும் பாக்காம ஊர்ப் பழமைகளப் பேசி சிரிச்சிருப்போம். பையங்கள்லாமு நின்னு நாயம் பேசறதப் பாத்துப் போட்டு, அம்மினிகெல்லாம், சேந்து கெணத்துல தண்ணி சேந்தி எடுத்துட்டுப் போற மாதிரி வாரது, அல்லக் கண்ணுல நோட்டம் பாக்குறதுன்னு, நாலும் நடக்கும்.

அப்ப ஒருத்தன் இன்னொருத்தங் கிட்டக் கேக்குறது, "என்னடா பட்சிய மடிச்சுட்ட போல இருக்கு?". பொன்னானுக்கு ஒரு குறுஞ் சிரிப்பு வரும் பாருங்கோ, அய்யோ அப்பிடி ஒரு சிரிப்பு. அம்மினி காதுல உழுந்துருச்சுன்னா, அம்மினி இக்கும்னு ஒரு திருப்பி திருப்பீட்டு போகும். நெமை தப்புனா கொடத்துல இடிச்சும் போடும்ங்கோ, சாக்கிரதையா இருக்கோனும் அவிங்ககிட்ட.

இதே, சின்ன பாப்பாத்தியோ, பெரிய பாப்பாத்தியோ (அன்பர்களே, கொங்கு மண்டலத்தில் பெண் பிள்ளைகளை அன்பாக பெரிய பாப்பாத்தி, சின்ன பாப்பாத்தி என்று விளிப்பது வாடிக்கை! ஆமுங்க, நெலையில‌ நிக்குற தேரை, யாருன்னா தெருவுல இழுத்துவுட்டா என்ன பன்றது? அதான், சொல்லி வெச்சிர்லாம்!!) பொன்னானை செரி பன்னீற்ச்சுன்னு வெயுங்கோ, பசங்க சொல்லுறது, "என்னடா உழுந்திட்ட போல இருக்கு?". இராசு, ஒரு சிணுங்கு சிணுங்குவான். சில நேரங்கள்ல மூக்கும் மொகரையும் செவக்குமுங்கோ. என்ன பன்றது, உழுந்தது உழுந்ததுதானுங்ளே!

இந்த கணக்குப் பன்றது, தள்ளிட்டு வாறது எல்லாம் ஊர்ப் பசங்க கிட்டக் கெடையாது. பெரும்பாலும், எல்லாம் நல்ல சகவாசந்தான். எப்பனா ஒருக்கா, நொம்ப செரமப் பட்டு கை கூடி வந்தாச் சொல்றது, "உழுத்திட்டியா? சொன்னதச் செஞ்சி காமிச்சிட்டடா! கவலப்படாத, ஏர்த்தோட்டம் மூர்த்தி அண்ணங்கிட்ட சொல்லிப் பேசச் சொல்லுலாம்!!".

அதே மாதர, புளியா மரத்துல இருந்து புளியங்கா அடிச்சி விழுத்தினாலும், "டேய் நாந்தான்டா நெறய உழுத்தி இருக்குறேன்!"ன்னு சொல்லுவோம். அதே மாதர, மாங்காய் உழுத்துவோம், சீனிப் புளியங்கா உழுத்துவோம், இப்பிடி நெறயங்க. பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் இட்டேரீல‌ இதான வேலையே! இப்ப எதுக்கு இந்த பழம எல்லாம் வருதுன்னு கேக்குறீங்ளா? விசியம் இருக்குதுங்கோ! ஆமுங்கோ, நானும் இன்னைக்கு ஒன்னை உழுத்தீட்டனுங்கோய். ஆமுங்க, இப்ப நான் உங்ககூடப் பேசிட்டு இருக்கறது இரநூறாவதுங்க! ஆமங், 200வது பதிவுங்க. இஃகி!ஃகி!!

நான் நெனச்சே பாக்குலீங், இப்பிடி தமிழ்மணம் மீனாவேன்னும், அப்பிடி மீனா இருக்கும் போது இப்பிடி இரநூறாவது பதிவு எழுதுவன்னும். கூடாக் கூடா, எசப் பாட்டு பாடி என்னை கெளரதையா இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்ததுக்கு உங்களுக்கெல்லாம் நான் நொம்ப நன்னி சொல்லோனும். இல்லன்னா, நன்னி கெட்டவன் ஆயிருவனல்லங்.


உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென்கடிக் குங்கும தோயம் -என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, என்றன் விழுத்துணையே!

தொழிலதிபர் ஒருத்தர், தன்னோட‌ தொழில்சாலைய நடத்த முடியலன்னு விக்கிறதுக்காக கிளம்பிட்டு இருந்தாராம். அப்ப அவரோட சொகுசு வண்டி பழுது ஆயிட்டதுனால, அந்த வண்டிய ஓட்டுறவர்கிட்ட சொன்னாராம், "எப்பா, உன்னால சரி செய்ய முடியாது. போயி கடையில உட்டுட்டு, வேற வண்டி எடுத்துட்டு வா!"ன்னு. அந்த வேலையாள் சொன்னாராம், "என்னால திருத்த முடியாதுங்றது, என்க்கு முன்னாடியே தெரியாமப் போச்சுங்க. அதனால வண்டியச் சரி பண்ணிப் போட்டனுங்க!"ன்னு. அதைக் கேட்ட அந்த மொதலாளி, தொழிற் சாலைய விக்கிற முடிவையே கை விட்டுட்டாராம். அப்புறம் அது பல தொழிற்சாலைகள உண்டு பண்ணுச்சுங்ளாம்.


ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்!

42 comments:

  1. அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!அஃகா!
    இன்னிக்கி மீ த பஸ்ட்டு.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!!!!!!!!!

    200 அடிச்சதுக்கு!!!!!!!!

    அடுத்த வருஷம் 2000 அடிக்க
    முன்-வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இந்த லுக்கு வுடறதுக்குன்னே ஒரு
    நோம்பி இருக்குதெல்லோ.

    வீட்டுக்கு வெளியே நின்னாலே மூக்கு வேர்க்குற பெருசுக கூட எல்லாத்தையும் கூப்டுகிட்டு முருக்கு,கம்பர்கட்டு எல்லாம் எடுத்துகிட்டு ஆத்துக்கு போவாங்களே,

    அன்னிக்கு நாம யாருக்கு முருக்கு குடுத்தாலும் முருக்கிக்காம வாங்கிக்குவாங்க.

    ஆல்ரெடி செட் ஆயிருந்ததுன்னா,கையிலிருகற முருக்கை காட்டி சிரிப்பாங்களே
    ஒரு சிரிப்பு.,

    அதை வார்த்தையிலே எழுத முடியாதுங்.

    அண்ணே , நோகாம நோம்பி கும்புடறதுனா என்னங்க.

    ReplyDelete
  4. 200 க்கு வாழ்த்துக்கள்.

    எங்க பெரிம்மா வூட்டுக்கு ஒரு அக்கா வருமுங்க. அது பேரே பாப்பாத்திதானுங்க. பாப்பாத்தியக்கான்னு தான் கூப்புடறதே.
    உங்க பதிவுக்கு வந்து போனா ஊருக்குபோயிட்டு வந்த மாரி இருக்குது.

    ReplyDelete
  5. எரநூறு அடிச்சும் உழாம நிமிந்து நிக்கறீங்க பாருங்க:-))))


    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  6. புதுமையா பழமை பேசிக் கொண்டிருக்கும் பழமை பேசியாருக்கு, இரட்டை நூறாவது பதிவுக்கான வாழ்த்துக்கள்!!

    பட்டைய கெளப்புங்க!!!

    ReplyDelete
  7. \\...இதே, சின்ன பாப்பாத்தியோ, பெரிய பாப்பாத்தியோ (அன்பர்களே, கொங்கு மண்டலத்தில் பெண் பிள்ளைகளை அன்பாக பெரிய பாப்பாத்தி, சின்ன பாப்பாத்தி என்று விளிப்பது வாடிக்கை! ஆமுங்க, நெலையில‌ நிக்குற தேரை, யாருன்னா தெருவுல இழுத்துவுட்டா என்ன பன்றது? அதான், சொல்லி வெச்சிர்லாம்!!)..//


    ஹ ஹ ஹ ஹ...அப்புனு... கவி காளமேகத்தின் தாக்கம் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே தெரிதுப்போய்ய்ய்ய்ய்...

    ReplyDelete
  8. அஞ்சா நெஞ்சன் 200 க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. /*என்னடா பட்சிய மடிச்சுட்ட போல இருக்கு*/
    பதிவு பட்சியா?

    ReplyDelete
  10. //பெருசு said...
    இந்த லுக்கு வுடறதுக்குன்னே ஒரு
    நோம்பி இருக்குதெல்லோ.

    அண்ணே , நோகாம நோம்பி கும்புடறதுனா என்னங்க.
    //
    வாங்கண்ணே! நன்றி!!

    நல்லாவே கிளரி வுடுறீங்க...இன்னும் ஒரு மாசத்துக்கு இருக்கு பழமய்க எழுதறதுக்கு....நீங்க சொல்லுறது சொல்லிட்டே இருங்க...அப்பத்தான நான் எழுதலாம்.... இஃகி!ஃகி!!

    ReplyDelete
  11. //சின்ன அம்மிணி said...
    200 க்கு வாழ்த்துக்கள்.

    எங்க பெரிம்மா வூட்டுக்கு ஒரு அக்கா வருமுங்க. அது பேரே பாப்பாத்திதானுங்க. பாப்பாத்தியக்கான்னு தான் கூப்புடறதே.
    உங்க பதிவுக்கு வந்து போனா ஊருக்குபோயிட்டு வந்த மாரி இருக்குது.
    //

    நன்றிங்க! ஆமாமா, நம்மூர் காத்து ஒலகம் பூரா அடிக்கோனுமல்லோ?

    ReplyDelete
  12. //சின்ன அம்மிணி said...
    200 க்கு வாழ்த்துக்கள்.

    எங்க பெரிம்மா வூட்டுக்கு ஒரு அக்கா வருமுங்க. அது பேரே பாப்பாத்திதானுங்க. பாப்பாத்தியக்கான்னு தான் கூப்புடறதே.
    உங்க பதிவுக்கு வந்து போனா ஊருக்குபோயிட்டு வந்த மாரி இருக்குது.
    //

    நன்றிங்க! ஆமாமா, நம்மூர் காத்து ஒலகம் பூரா அடிக்கோனுமல்லோ?

    ReplyDelete
  13. //துளசி கோபால் said...
    எரநூறு அடிச்சும் உழாம நிமிந்து நிக்கறீங்க பாருங்க:-))))


    இனிய வாழ்த்து(க்)கள்.
    //

    நன்றிங்க ஆசிரியை! எல்லாம் உங்களாலதான்....

    ReplyDelete
  14. //vetri said...
    புதுமையா பழமை பேசிக் கொண்டிருக்கும் பழமை பேசியாருக்கு, இரட்டை நூறாவது பதிவுக்கான வாழ்த்துக்கள்!!

    பட்டைய கெளப்புங்க!!!
    //

    ஜெய் ஐயா, வாங்கோ வாங்கோ!!

    ReplyDelete
  15. //வசந்த் கதிரவன் said...
    ஹ ஹ ஹ ஹ...அப்புனு... கவி காளமேகத்தின் தாக்கம் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே தெரிதுப்போய்ய்ய்ய்ய்...
    //

    க‌ஃகஃகா...

    ReplyDelete
  16. மாரியாத்தா நோம்பியன்னைக்கு வெடியறதுக்கு மின்னாடியே வெளக்குமாவு எடுத்துருவாங்க...அப்ப அம்மிணிகளைப்பாக்க கூட்டம் அலமோதும்..எரநூறு ஆயிரமாப் பெருக வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. //நசரேயன் said...
    அஞ்சா நெஞ்சன் 200 க்கு வாழ்த்துக்கள்
    //

    நன்றிங்க‌!

    //நசரேயன் said...
    /*என்னடா பட்சிய மடிச்சுட்ட போல இருக்கு*/
    பதிவு பட்சியா?
    //

    பொழப்புக்கு ஒலை வெச்சிடுவீங்க போலிருக்கே?

    ReplyDelete
  18. //தங்ஸ் said...
    மாரியாத்தா நோம்பியன்னைக்கு வெடியறதுக்கு மின்னாடியே வெளக்குமாவு எடுத்துருவாங்க...அப்ப அம்மிணிகளைப்பாக்க கூட்டம் அலமோதும்..எரநூறு ஆயிரமாப் பெருக வாழ்த்துக்கள்..
    //

    வாங்க தங்சு... நன்றிங்க...
    அல்லா வந்து, கிளரி வுட்டுட்டுப் போறாங்ளே!

    ReplyDelete
  19. //விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத்துணையே!//

    `விதிக்கின்ற மேனி அபிராமி, என்றன் விழுத்துணையே!' என்று இருக்கவேண்டும்.

    என் + தன் = என்றன் - ஒருமை
    எம் + தம் + எந்தம் - பன்மை

    ReplyDelete
  20. //அ. நம்பி said...
    என்றன் விழுத்துணையே!' என்று இருக்கவேண்டும்.
    //

    வாங்க, நன்றிங்க!

    ReplyDelete
  21. பழசு பட்டையக் கிளப்பறீங்க! அடிச்சு ஆடுங்க! சீக்கிரமே ஆயிரமாப் உழுத்திருங்க!

    முருகனருள் முன்னிற்கும்!

    ReplyDelete
  22. ஏனுங்ணா! எப்டீங்னா இதெல்லாம்! மசக்காட்டு காற்றீங்ன்னா!

    பொன்னானுமு அம்மணியுமு லவுட்டு உடறத இன்னுங்கூடி வியாக்யானமா சொல்லீருக்லாம்ங்னா! இப்புடி மளார்ன்னு முடிச்சு போட்டீங்களே! இதெல்லாம் நல்லாலீங்கன்னா!! இஃகி!

    அப்பறம், எரநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்ங்ன்னா! ரெண்டாயின்றம் பதிவத்தாண்டியும் போய்க்கிட்டே இருக்கோனும்ங்னா!



    ஏனுங் பழம! என்ர கொங்குத்தமிழ் எப்புடி இருக்குன்னு சொல்லுங்! பொள்ளாச்சிலதான் ரெண்டு வருஷம் படிச்சனாக்குயுங்!

    ReplyDelete
  23. மணியண்ணே... வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!!

    200 சீக்கிரமே 2000 ஆகட்டும்... ஓட்டுப் போட நாங்க இருக்கோம்... பழமை புதுமைன்னு எல்லாங் கலந்து குடுங்க. எனக்குத்தான் நாலு தெரியாது. தெரிஞ்சவங்க சொல்லுங்க... நாங்க தெரிஞ்சுக்கிடறோம்....

    ReplyDelete
  24. //VSK said...
    பழசு பட்டையக் கிளப்பறீங்க! அடிச்சு ஆடுங்க! சீக்கிரமே ஆயிரமாப் உழுத்திருங்க!

    முருகனருள் முன்னிற்கும்!
    //

    நன்றிங்க ஐயா! உங்க ஆசில அப்பிடியே ஆகட்டுங்!!

    ReplyDelete
  25. //மோகன் கந்தசாமி said...
    ஏனுங் பழம! என்ர கொங்குத்தமிழ் எப்புடி இருக்குன்னு சொல்லுங்! பொள்ளாச்சிலதான் ரெண்டு வருஷம் படிச்சனாக்குயுங்!//

    வாங்க கண்ணு! நொம்ப நல்லா இருக்குங் கண்ணு!!
    நன்றிங்க்!!

    ReplyDelete
  26. // Mahesh said...
    மணியண்ணே... வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!!

    200 சீக்கிரமே 2000 ஆகட்டும்... ஓட்டுப் போட நாங்க இருக்கோம்... பழமை புதுமைன்னு எல்லாங் கலந்து குடுங்க. எனக்குத்தான் நாலு தெரியாது. தெரிஞ்சவங்க சொல்லுங்க... நாங்க தெரிஞ்சுக்கிடறோம்....
    //

    ஐயோ, கவுக்குறீங்களே! ம்ம், என்னைக்குத்தான் தெரிஞ்சவங்க தெரிஞ்சமாதர காமிச்சுக்குறாங்க.... என்னிய மாதர அரைங்க முன்னாடி நீங்க எப்பிடிச் சொல்லுவீங்க...சரி, சரி!!

    நொம்ப நன்றிங்கோ!!

    ReplyDelete
  27. நட்சத்திர வாரத்துல கொங்கு தமிழ்ல கலக்கிட்டு இருக்கீங்க. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. //"என்னடா உழுந்திட்ட போல இருக்கு?"// "என்னடா உழுதிட்ட போல இருக்கு?" .என மேம்போக்கா ஒருக்கா படிச்சிட்டேன்,; மறுக்கா படிக்கறெச்ச "த்" தோட சேர்த்து படிச்சுட்டேன். //vetri said...
    ... புதுமையா பழமை பேசிக் கொண்டிருக்கும் பழமை பேசியாருக்கு, இரட்டை நூறாவது பதிவுக்கான வாழ்த்துக்கள்!! பட்டைய கெளப்புங்க!!!// மீண்டும் மீண்டும் (ரிப்பீட்டே!!)

    ReplyDelete
  29. 200வது பதிவு,
    நட்சத்திர பதிவர்

    என்ன ஒரு ஒற்றுமையான நிகழ்வு

    ம், அருமையா இருக்கு

    ReplyDelete
  30. //Viji said...
    நட்சத்திர வாரத்துல கொங்கு தமிழ்ல கலக்கிட்டு இருக்கீங்க. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    //
    நன்றிங்கோ!

    ReplyDelete
  31. //மன்மதக்குஞ்சு said... //

    வாங்க, நன்றிங்க!!

    ReplyDelete
  32. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    200வது பதிவு,
    நட்சத்திர பதிவர்

    என்ன ஒரு ஒற்றுமையான நிகழ்வு

    ம், அருமையா இருக்கு
    //

    வாங்க அ.அம்மா! ஆமாங்க, நான் நினைச்சே பார்க்கலை, நன்றிங்க!!

    ReplyDelete
  33. பழம, உங்க பழம நெம்ப நல்லாருக்குதுங்!

    கொங்கு தமிழ் ரசிகர் மன்றம்

    ReplyDelete
  34. வாழ்த்துகள் மணிவாசகம்.
    இன்னும் ஆயிரம் எழுத உங்களுக்கு விஷயம் உண்டு.

    இத்தனை பழம்பேச்சுக்கள் ,கொங்கு தமிழில் கோர்ர்வையாக வந்து விழுகிறதே.
    மீண்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. //கபீஷ் said...
    பழம, உங்க பழம நெம்ப நல்லாருக்குதுங்!

    கொங்கு தமிழ் ரசிகர் மன்றம்
    //

    நொம்ப நன்றிங்கோ!
    நொம்ப நன்றிங்கோ!

    ReplyDelete
  36. //வல்லிசிம்ஹன் said...
    வாழ்த்துகள் மணிவாசகம்.
    இன்னும் ஆயிரம் எழுத உங்களுக்கு விஷயம் உண்டு.

    இத்தனை பழம்பேச்சுக்கள் ,கொங்கு தமிழில் கோர்ர்வையாக வந்து விழுகிறதே.
    மீண்டும் வாழ்த்துகள்.
    //

    அம்மா, நீங்க எல்லாம் வந்து படிக்குறதுதானுங்க எனக்குப் பெருமை!
    நொம்ப நன்றிங்க!!

    ReplyDelete
  37. 200 க்கு வாழ்த்துக்கள் பழமையாரே.

    ReplyDelete
  38. //குடுகுடுப்பை said...
    200 க்கு வாழ்த்துக்கள் பழமையாரே.
    //

    வாங்க, வாங்க, நன்றி! நன்றி!!

    ReplyDelete
  39. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    வாழ்த்துக்கள்.. :)
    //

    மிக்க நன்றிங்கோ!

    ReplyDelete
  40. இப்ப தான் நீங்க எழுத வந்தா மாதிரி இருக்கு. டக்கு டக்குன்னு இடுகைகளா போட்டு இருநூறு போட்டீங்க. வாழ்த்துகள். நீங்க தொடங்குன அன்னைக்கு நீங்க எழுதுறதைப் படிக்கத் தொடங்குனேன். நீங்க எழுதுற வேகத்துக்குப் படிக்காட்டியும் எல்லாத்தையும் ஒவ்வொன்னா படிச்சுக்கிட்டு வாறேன். ரொம்ப நல்லா எழுதுறீங்க.

    ரொம்ப நாளா உங்க புனைப்பெயரைப் பத்தி நினைச்சுக்குவேன் - என்னடா பொருளுன்னு. இப்ப புரியுது. :-)

    ReplyDelete
  41. //குமரன் (Kumaran) said...
    இப்ப தான் நீங்க எழுத வந்தா மாதிரி இருக்கு. டக்கு டக்குன்னு இடுகைகளா போட்டு இருநூறு போட்டீங்க. வாழ்த்துகள். நீங்க தொடங்குன அன்னைக்கு நீங்க எழுதுறதைப் படிக்கத் தொடங்குனேன். நீங்க எழுதுற வேகத்துக்குப் படிக்காட்டியும் எல்லாத்தையும் ஒவ்வொன்னா படிச்சுக்கிட்டு வாறேன். ரொம்ப நல்லா எழுதுறீங்க.

    ரொம்ப நாளா உங்க புனைப்பெயரைப் பத்தி நினைச்சுக்குவேன் - என்னடா பொருளுன்னு. இப்ப புரியுது. :-)
    //

    வாங்க‌ கும‌ர‌ன்! நொம்ப‌ ச‌ந்தோச‌முங்க‌!!
    ந‌ன்றியும் வாழ்த்துக‌ளும்!!!

    ReplyDelete