12/05/2008

தடல் புடல் விருந்து! வாங்க கண்ணுகளா!!

கண்ணுகளா, அல்லார்த்துக்கும் வணக்கம்! எங்கிருந்தாலும் நல்லா இருங்க!! நல்லா இல்லியின்னா, நீ வந்து செரி செஞ்சி தருவியா? அப்பிடீன்ல்லாம் கேக்கப் படாது. அப்பிடியே கேட்டிங்கன்னாலும், எங்கிட்ட சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை. அய்ய, அதுக்கோசரம் ஊட்டை உட்டுப் போட்டு போயிராதீங்க கண்ணுகளா, பேசுறதுக்கு விசியம் இருக்கு!

நம்ம ஊட்டுத் திண்ணைக்கி ஆட்காட்டி அண்ணன் அடிக்கொருக்கா வரும், வந்து நல்ல நல்ல பழமயிகளப் பத்திக் கேக்கும், அண்ணனுக்கு தெரிஞ்சதை சொல்லும். அப்பிடித்தான் நேத்தும் ரெண்டொரு கேள்வி கேட்டுப் போட்டு, "என்னடா மணியா, படத்த மாத்தி ஒரே தடல் புடல் பண்ணுறே?"ன்னு கேட்டுச்சு. அப்பத்தாங் கண்ணு மண்டையில ஒறச்சது, "அட, தடல் புடல் பத்திக் கூட நாம, நம்ம கண்ணுகளோட பேசுலாம்"ன்னு.

நம்ம ஊர்கள்ல சொல்லுறது கண்ணு, தடல் புடல் விருந்துன்னு. சனத்தப் பாத்தாக் கேக்குறது, "என்ன விருந்தெல்லாம் தடல் புடலா இருந்ததாமா?. அப்புறம் அதையே பலதுக்கும் பொழங்க ஆரம்பிச்சுட்டம் போல இருக்கு. அவசரத்துல செய்யுறதைச் சொல்லுறதுக்கும் இதைப் பொழங்க ஆரம்பிச்சுட்டம். "என்ன, தடால் புடால்னு ஏற்பாடு பண்ணிட்டீங்க?". அவன் வந்தான், தட புடன்னு எதையோ செஞ்சான், போய்ட்டான். அப்புறம், யாருனா எதுனா விமரிசையாப் பண்ணுனா, அதைப் பொறுக்காத சனஞ் சொல்லுறது, "எதுக்கு இந்த தடல் புடல்?". இப்பிடிப் பல விதமாப் பொழக்கத்துல இருக்கு இந்த தடல் புடல்.

கண்ணூ கண்ணு, இந்த தடல்ன்னா மெலிசாவோ, மொறு மொறுப்பாவோ இருக்குற தினபண்டங் கண்ணு!! வாழை மரத்தண்டுல வாற சிறு சிறு உள்தண்டுச் செதில், வெங்காயத்துல இருக்குற உள் செதில், இப்பிடி வறுவலுக்கு வாய்க்கிற செதிலுக எல்லாத்தையும் பரும்படியாச் சொல்லுறது தடல் கண்ணு.

ஒட‌னே நீங்க‌ கேககுற‌து, புட‌லுன்னா என்ன‌? க‌ண்ணு, புட‌ல்ன்னா புட‌ல‌ங்காய். அந்த‌க் கால‌த்துல‌ புட‌ல‌ங்காய்ல‌ எக்க‌ச்ச‌க்க‌மான‌ புட‌லை வ‌கை இருந்துச்சாம‌. பேய்ப் புட‌லை, சிறு புட‌லை, நீட்டுப் புட‌லை, கைப் புட‌லை இப்பிடியாமாங் க‌ண்ணு. உருளைக் கெழ‌ங்குல‌ கூட‌ ஐயாயிர‌ம் வ‌கை உருளைக் கெழ‌ங்கு இருந்துச்சாங் க‌ண்ணு. ம‌க‌சூலு நெற‌ய‌க் கெடைக்கோனுமுன்னு, ம‌ர‌ப‌ணு மாத்த‌ஞ் செஞ்ச‌ வெதைக‌ள‌ வெதைக்க‌ப் போயி, க‌ழுதை தேஞ்சி க‌ட்டெறும்பு ஆன‌ க‌தையா, 5000 இப்ப‌ வெறும் நாலோ, அஞ்சோல‌ வ‌ந்து நிக்குதாம‌ க‌ண்ணு. காய் க‌றிக‌ள்ல‌ நெற‌ய‌ப் போயே போச்சு போ!

இப்பிடித் த‌ட‌லையும் புட‌லையும் போட்டு, செற‌ப்பாக் குடுக்குற‌ விருந்து த‌ட‌ல் புட‌ல் விருந்து க‌ண்ணு. த‌ட‌ல் புட‌லா விருந்து, த‌ட‌ல் புட‌லா விருந்துன்னு பொழ‌ங்க‌ப் போயி, அது அந்த‌ விருந்தோட‌ வேக‌த்த‌ச் சொல்லுற‌ மாத‌ர‌ அர்த்தங் குடுக்க‌, வேக‌த்துக்குன்னே இந்த‌ சொல‌வ‌டைங்ற‌து ஆயிப் போச்சு போல‌. செரி க‌ண்ணுக‌ளா, ப‌டிச்சிட்டீங்க‌ல்லோ? இன்னைக்கி வெள்ளிக் கெழ‌மை, வார‌க் க‌டைசி, போயித் த‌ட‌ல் புட‌ல் விருந்துக்கு இப்ப‌வே ஏற்பாடு செய்யுங்க‌. செஞ்சி, உங்க‌ சோட்டாளிக‌ளைத் த‌ட‌ல் புட‌ல் விருந்து குடுத்து அச‌த்துங்க‌!!


நொறுங்கத் தின்றால், நூறு வயது!

44 comments:

  1. சின்ன அம்மினி அக்கா, தளபதி நசரேயன், பெருசு, இன்னபிற குசும்பர்களுக்கு சொல்லிக் கொள்வ என்னவென்றால், கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை எனக்குத் தெரியாது. அதுக்கு விளக்கம் கேட்டா, நான் அழுதுருவேன்!!!

    ReplyDelete
  2. தடல், புடல் விளக்கம் அருமை

    ReplyDelete
  3. //சின்ன அம்மினி அக்கா, தளபதி நசரேயன், பெருசு, இன்னபிற குசும்பர்களுக்கு சொல்லிக் கொள்வ என்னவென்றால், கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை எனக்குத் தெரியாது. அதுக்கு விளக்கம் கேட்டா, நான் அழுதுருவேன்//

    இப்பிடி அசால்டா சொன்னா எப்பிடி மணீ மாமா.


    //அசால்டா//

    இதுக்கும் விளக்கம் கேப்பமல்லோ!!

    இஃகி! இஃகா

    நம்ள பாத்தாலே மண்டுட்டு ஓடக்கூடாது.

    //மண்டுட்டு//

    விளக்கம் தேவை.

    ReplyDelete
  4. இன்னிக்கு வீட்டுல எப்படி.. தடல், புடல் விருந்தா உண்டுங்களா ..

    ரொம்ப நாளா எங்க chating ல வரவேயில்ல..

    ReplyDelete
  5. நீங்க படைக்கிற எழுத்து விருந்தே தடல் புடலாத்தான் இருக்கு.
    காமா சோமான்னு இல்லையே:)
    சிறுவாணித் தண்ணி ஓடி வந்த மாதிரி, நல்லா இருந்தது.

    ReplyDelete
  6. அண்ணே இதெல்லாம் யாருன்னே உங்களுக்கு சொல்லித்தாறாங்க!

    இந்தப் புள்ளையெல்லாம் ரொம்ம்ப நாளய்க்கு போலசுக் கெடக்கணும்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. // ம‌க‌சூலு நெற‌ய‌க் கெடைக்கோனுமுன்னு, ம‌ர‌ப‌ணு மாத்த‌ஞ் செஞ்ச‌ வெதைக‌ள‌ வெதைக்க‌ப் போயி//

    சந்துல சிந்து பாடிட்டீங்க பழம! இது ரொம்ப கவலைக்குறிய விஷயம். இதப் பத்தி ஒரு பதிவா எழுதுங்க. உரல் எல்லாம் எங்கிட்ட இருக்கு , எழுத தெரியல

    ReplyDelete
  8. தடல் புடலா விருந்து வச்சீட்டீங்க நீங்க

    ReplyDelete
  9. //கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை எனக்குத் தெரியாது//

    வர வர மாமியா(ர்) கழுத போல ஆனாளாம், அப்பறம் கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆன கதைனில்ல சொல்லுவாங்கோ...

    சரிங்க, கழுத தேஞ்ச கதை தெரியாட்டாலும் மாமியார் ஏன் கழுத போல ஆனாங்கனு விளக்கம் சொல்லுங்கண்ணா.

    ReplyDelete
  10. //கோவி.கண்ணன் said...
    தடல், புடல் விளக்கம் அருமை
    //

    வணக்கம்! நன்றிங்க கோவி.கண்ணன் ஐயா!!

    ReplyDelete
  11. //பெருசு said... //

    நல்லாக் கிளரி உடுறீங்க போங்க.... அடுத்த அடுத்த பதிவுகள்ல நீங்க கிளரி விடுறத மட்டுந்தான் போடப் போறேன்! இஃகி! இஃகி!!

    ReplyDelete
  12. //இராகவன், நைஜிரியா said...
    இன்னிக்கு வீட்டுல எப்படி.. தடல், புடல் விருந்தா உண்டுங்களா ..

    ரொம்ப நாளா எங்க chating ல வரவேயில்ல..
    //
    வணக்கங்க! விண்மீன் வாரமாச்சே, ஒரே பொட்டி அடி, அப்புறம் வேலையுங் கூட, அதான்! மன்னிச்சுகுங்க!!

    ReplyDelete
  13. //வல்லிசிம்ஹன் said...
    நீங்க படைக்கிற எழுத்து விருந்தே தடல் புடலாத்தான் இருக்கு.
    காமா சோமான்னு இல்லையே:)
    சிறுவாணித் தண்ணி ஓடி வந்த மாதிரி, நல்லா இருந்தது.
    //
    நன்றிங்க அம்மா, நன்றிங்க! சிறுவாணித் தண்ணி எல்லாம் ஞாபகப் படுத்திட்டீங்ளே? எனக்கு வேணும் இப்ப??

    ReplyDelete
  14. //muru said...
    அண்ணே இதெல்லாம் யாருன்னே உங்களுக்கு சொல்லித்தாறாங்க!

    இந்தப் புள்ளையெல்லாம் ரொம்ம்ப நாளய்க்கு போலசுக் கெடக்கணும்.

    வாழ்க வளமுடன்
    //

    நம்மூருப் பொன்னாம்போலத் தெரியுது! நல்லா இருக்கியா இராசா?

    ReplyDelete
  15. //கபீஷ் said...

    சந்துல சிந்து பாடிட்டீங்க பழம! இது ரொம்ப கவலைக்குறிய விஷயம். இதப் பத்தி ஒரு பதிவா எழுதுங்க. உரல் எல்லாம் எங்கிட்ட இருக்கு , எழுத தெரியல
    //

    ஆகா! கண்டுபிடிச்சிட்டீஙளே?! ஆமுங்க, எனக்கும் அங்கலாப்புதான்!!

    ReplyDelete
  16. //கபீஷ் said...
    தடல் புடலா விருந்து வச்சீட்டீங்க நீங்க
    //
    நொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  17. //Viji said...
    //கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை எனக்குத் தெரியாது//

    வர வர மாமியா(ர்) கழுத போல ஆனாளாம், அப்பறம் கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆன கதைனில்ல சொல்லுவாங்கோ...

    சரிங்க, கழுத தேஞ்ச கதை தெரியாட்டாலும் மாமியார் ஏன் கழுத போல ஆனாங்கனு விளக்கம் சொல்லுங்கண்ணா.
    //

    வாசகர் விருப்பம்-37 ... உங்க வரிசை எண் அதான்! ச்சும்மா சொன்னனுங்க. போட்டுட்டாப் போச்சு!

    ReplyDelete
  18. இராகவன், நைஜிரியா said...

    இன்னிக்கு வீட்டுல எப்படி.. தடல், புடல் விருந்தா உண்டுங்களா ..

    //
    வேற உண்டு தினமும்

    ReplyDelete
  19. /*
    சின்ன அம்மினி அக்கா, தளபதி நசரேயன், பெருசு, இன்னபிற குசும்பர்களுக்கு சொல்லிக் கொள்வ என்னவென்றால், கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை எனக்குத் தெரியாது. அதுக்கு விளக்கம் கேட்டா, நான் அழுதுருவேன்!!!
    */
    அதெப்படி நாங்க சொல்லுறதுக்கு முன்னாடி பதில் சொன்ன செல்லாது

    ReplyDelete
  20. இதுதான் தடல் புடல் பதிவா?

    ReplyDelete
  21. //குடுகுடுப்பை said...
    இராகவன், நைஜிரியா said...
    இன்னிக்கு வீட்டுல எப்படி.. தடல், புடல் விருந்தா உண்டுங்களா ..
    //
    வேற உண்டு தினமும்
    //

    உங்க வீட்லயாண்ணா? என்னது அது??

    ReplyDelete
  22. //நசரேயன் said...
    அதெப்படி நாங்க சொல்லுறதுக்கு முன்னாடி பதில் சொன்ன செல்லாது
    //

    அழுதுருவேன்...

    ReplyDelete
  23. //நசரேயன் said...
    இதுதான் தடல் புடல் பதிவா?
    //

    ஏ, வெளக்கஞ் சொல்லியும், திருந்த மாட்டீயளோ?

    ReplyDelete
  24. உங்க‌ சோட்டாளிக‌ளைத் த‌ட‌ல் புட‌ல் விருந்து குடுத்து அச‌த்துங்க‌!!
    //

    மொத விருந்து உங்களுக்குத் தானுங் :)

    ReplyDelete
  25. //புதுகை.அப்துல்லா said...

    மொத விருந்து உங்களுக்குத் தானுங் :)
    //

    சென்னை வரும்போது, மொதல்ல உங்க ஊட்டுக்குத்தான் வார்றதா இருக்கேன்....இஃகி!ஃகி!!

    ReplyDelete
  26. எப்படி அண்ணன் எப்படி

    எல்லா விஷயத்தையும் எப்படி புட்டு புட்டு வைக்கிறிங்க .உங்களுக்கு வயசு ரெம்ப அதிகமோ

    ReplyDelete
  27. //S.R.ராஜசேகரன் said...
    எப்படி அண்ணன் எப்படி

    எல்லா விஷயத்தையும் எப்படி புட்டு புட்டு வைக்கிறிங்க .உங்களுக்கு வயசு ரெம்ப அதிகமோ
    //

    ஏங்க, என்னோட படத்தைப் பாத்தா, அப்பிடியா தெரியுது? :-o)

    ReplyDelete
  28. //ஏங்க, என்னோட படத்தைப் பாத்தா, அப்பிடியா தெரியுது? :-o)//

    கலர்ப்படம் போட்டா உங்க வயசு தெரியாதாக்கூ?

    அந்தக் காலத்துல ராஜுஸ் எலக்கிட்ரிக் ஸ்டிடியோல எடுத்த போட்டோவை கம்ப்யூட்டர்ல குடுத்து கலர்பூசிருக்கிறீங்க... எங்களய ஏமாத்தமுடியுமா?

    :-))

    ReplyDelete
  29. //
    Kasilingam said...
    //ஏங்க, என்னோட படத்தைப் பாத்தா, அப்பிடியா தெரியுது? :-o)//

    கலர்ப்படம் போட்டா உங்க வயசு தெரியாதாக்கூ?

    அந்தக் காலத்துல ராஜுஸ் எலக்கிட்ரிக் ஸ்டிடியோல எடுத்த போட்டோவை கம்ப்யூட்டர்ல குடுத்து கலர்பூசிருக்கிறீங்க... எங்களய ஏமாத்தமுடியுமா?
    //வாங்க அண்ணா, இதுதான் புதுசு! முன்னாடி இருந்ததுதான் ஒரு ரெண்டு வருசப் பழசு!! நல்லா, இருக்கீங்ளா??

    ReplyDelete
  30. தடல், புடல், படல்னு
    பதிவு போடற நீங்க ஒரு கடல்!! புடிங்க வாழ்த்து மடல் !!

    ReplyDelete
  31. ***No tamil fonts and please forgive my english comment****
    Mani,

    some more pazamai from manikandan.

    http://pesalaam.blogspot.com/2006/10/blog-post_16.html
    http://pesalaam.blogspot.com/2006/10/ii.html
    http://pesalaam.blogspot.com/2006/10/blog-post_16.html
    http://pesalaam.blogspot.com/2006/11/blog-post_22.html
    http://pesalaam.blogspot.com/2006/09/blog-post_19.html

    ReplyDelete
  32. //Mahesh said...
    தடல், புடல், படல்னு
    பதிவு போடற நீங்க ஒரு கடல்!! புடிங்க வாழ்த்து மடல் !!
    //

    நன்றிங்கோ! நன்றிங்கோ!!

    ReplyDelete
  33. /
    பழமைபேசி said...
    சின்ன அம்மினி அக்கா, தளபதி நசரேயன், பெருசு, இன்னபிற குசும்பர்களுக்கு சொல்லிக் கொள்வ என்னவென்றால், கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதை எனக்குத் தெரியாது. அதுக்கு விளக்கம் கேட்டா, நான் அழுதுருவேன்!!!

    //

    சரி அப்ப வர வர மாமியா கழுத போல ஆனாளாம் - இதுக்கு விளக்கம் சொல்லுங்க. (நானும் தட புடன்னு பின்னூட்டம் போட்டாச்சு)

    ReplyDelete
  34. /நம்ள பாத்தாலே மண்டுட்டு ஓடக்கூடாது.
    //

    பெருசண்ணே, நெம்பத்தேன் குசும்பு , ஹஹஹா

    ReplyDelete
  35. //Udhayakumar said...
    ***No tamil fonts and please forgive my english comment****
    //


    வணக்கம்! நன்றிங்க!!!

    ReplyDelete
  36. //சின்ன அம்மிணி said...

    சரி அப்ப வர வர மாமியா கழுத போல ஆனாளாம் - இதுக்கு விளக்கம் சொல்லுங்க. (நானும் தட புடன்னு பின்னூட்டம் போட்டாச்சு)
    //

    அழுகுறேன்!அழுகுறேன்!!அழுகுறேன்!!!!

    ReplyDelete
  37. நான் அண்ணனில்லை, தம்பி தான். தடல் நான் சொல்லியது வேறு. அதாவது வாழைத் தண்டுகளைக் காய வைத்து சமனாக வெட்டி ஈர்க்கால் கோர்த்து வாழை இலை மாதிரி பயன் படுத்துவார்கள். பழைய காலங்களில் எல்லா இடங்களிலும் வாழை இலை கிடைப்பது அரிது. அதனால தடல். புடல் நீங்க சொல்லுறது சரி எண்டு தான் தோணுது.

    ReplyDelete
  38. //ஆட்காட்டி said...
    நான் அண்ணனில்லை, தம்பி தான். தடல் நான் சொல்லியது வேறு. அதாவது வாழைத் தண்டுகளைக் காய வைத்து சமனாக வெட்டி ஈர்க்கால் கோர்த்து வாழை இலை மாதிரி பயன் படுத்துவார்கள். பழைய காலங்களில் எல்லா இடங்களிலும் வாழை இலை கிடைப்பது அரிது. அதனால தடல். புடல் நீங்க சொல்லுறது சரி எண்டு தான் தோணுது.
    //

    இஃகி!ஃகி!! ஆட்காட்டி அண்ணே, எங்க ரெண்டு நாளா ஆளக் காணம்? இங்க பதிவு போட்டு, இப்ப அது ஆறியே போச்சு போங்க!!

    ReplyDelete
  39. கடும் உழைப்பண்ணே. வேலையைத் தக்க வைக்க. இல்லாட்டி வீட்ட அனுப்பிடிவாங்களே... மனிசியிட்டயே 3 நாள் கழிச்சுத் தான் பேசினன். அப்புறமா ஒரு சந்தேகம், காதலியை மனைவி என்பது தப்பா? நான் சொல்லுற மாதிரி?

    ReplyDelete
  40. நல்லாச் சொன்னீய

    தடலுக்கும் புடலுக்கும் வெளக்கம்

    நாம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிப்போடுறதுக்கெல்லாம்
    அண்ணன்
    அர்த்தமெல்லாம் கண்டுபுடிச்சி போடுது.

    நல்லா கத்துக்கறோம்.

    ReplyDelete
  41. //ஆட்காட்டி said...
    கடும் உழைப்பண்ணே. வேலையைத் தக்க வைக்க. இல்லாட்டி வீட்ட அனுப்பிடிவாங்களே... மனிசியிட்டயே 3 நாள் கழிச்சுத் தான் பேசினன். அப்புறமா ஒரு சந்தேகம், காதலியை மனைவி என்பது தப்பா? நான் சொல்லுற மாதிரி?
    //

    அண்ணே, பிழைப்பு பிரதானம். மொதல்ல அதைப் பாருங்க!!
    அப்புறந்தான் மத்ததெல்லாமு.... :-o{)

    ReplyDelete
  42. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    நல்லாச் சொன்னீய

    தடலுக்கும் புடலுக்கும் வெளக்கம்

    நாம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிப்போடுறதுக்கெல்லாம்
    அண்ணன்
    அர்த்தமெல்லாம் கண்டுபுடிச்சி போடுது.

    நல்லா கத்துக்கறோம்.
    //

    வாங்க தஙகச்சி.... பேசற பழமக்கி என்ன அர்த்தமுங்றது நெம்ப முக்கியமல்லோ கண்ணூ??

    ReplyDelete
  43. //வல்லிசிம்ஹன் said...
    நீங்க படைக்கிற எழுத்து விருந்தே தடல் புடலாத்தான் இருக்கு.
    காமா சோமான்னு இல்லையே:)
    சிறுவாணித் தண்ணி ஓடி வந்த மாதிரி, நல்லா இருந்தது.
    //

    அதே...

    ReplyDelete
  44. //இராம்/Raam said...
    //வல்லிசிம்ஹன் said...
    நீங்க படைக்கிற எழுத்து விருந்தே தடல் புடலாத்தான் இருக்கு.
    காமா சோமான்னு இல்லையே:)
    சிறுவாணித் தண்ணி ஓடி வந்த மாதிரி, நல்லா இருந்தது.
    //

    அதே...
    //

    வாங்க இராம்/Raam! நொம்ப நன்றிங்க!!

    ReplyDelete