12/12/2008

முட்டலும் மோதலும்!

நம்ம கற்பனைல மாடுமேய்ப்பனும், தளபதியும்.


மாடுமேய்ப்பன்: என்னாட்டைக் காணோமே?

தளபதி: தேடித்தான் புடிச்சுக்கோ!

மாடுமேய்ப்பன்: அடுப்பு மேல ஏறுவேன்!

தளபதி: துடுப்பைக் கொண்டு சாத்துவேன்!

மாடுமேய்ப்பன்: நெல்லைக் கொறிப்பேன்!

தளபதி: பல்லை ஒடைப்பேன்!

மாடுமேய்ப்பன்: வடிதண்ணியக் கொட்டுவேன்!

தளபதி:வழிச்சு வழிச்சு நக்கிக்கோ!

மாடுமேய்ப்பன்: கோட்டை மேல ஏறுவேன்!

தளபதி: கொள்ளி கொண்டு சாத்துவேன்!

மாடுமேய்ப்பன்: செக்கு மேல ஏறுவேன்!

தளபதி: செவினியில அடிப்பேன்!

மாடுமேய்ப்பன்: ஓட்டுமேல ஏறுவேன்!

தளபதி: ஈட்டியால குத்துவேன்!

மாடுமேய்ப்பன்: காலே வலிக்குது!

தளபதி: கட்டையத் தூக்கிப் போட்டுக்கோ!

மாடுமேய்ப்பன்: நான் போடுறேன் பதிவு!

தளபதி: நான் போடுறேன் பின்னூட்டம்!!


இப்பிடித்தாங்க சின்ன வயசுல ஒன்னுக்குள்ள ஒன்னு விளையாடிக்குவோம். வீட்டுக்குப் போகும் போது அன்பா ஒருத்தர்க்கு ஒருத்தர் விட்டுக் குடுத்துடுவோம். அதான வாழ்க்கையே! இதெல்லாம் ஒரு பெரிய விசயமா? வாங்க, நாமளும் போயி எதானாச்சும் நமக்குப் பிரியமான விங்களோட வெளையாடலாம்.

கிட்டாதாயின் வெட்டென மற!

51 comments:

  1. நான் பதிவ படிக்கலன்னு சொல்றதுக்கு இந்த பின்னூட்டம்!!! :-):-):-)

    ReplyDelete
  2. // தளபதி: நான் போடுறேன் பின்னூட்டம்!! //

    நான் தளபதி இல்ல.. இருந்தாலும் போடுறேன் இரண்டாவது பின்னூட்டம்..

    ReplyDelete
  3. //கிட்டாதாயின் வெட்டென மற! //

    எப்படி.. ச்சீ..ச்சீ.. இந்த பழம் புளிக்கும் என்பது மாதிரியா?

    ReplyDelete
  4. //வாங்க, நாமளும் போயி எதானாச்சும் நமக்குப் பிரியமான விங்களோட வெளையாடலாம். //

    ஆமா.. யாருக்கெல்லாம் கும்மி அடிக்க வேண்டுமோ அவர்கள் எல்லாம் வரலாம்...

    வெளையாட்டுதானே.. வெளையாடிபார்த்துடலாம்.. காசா பணமா..

    ReplyDelete
  5. பதிவுலகம் ஒரு குடும்பமுன்னு நான் எப்பவும் சொல்வேன். அது இன்னொருக்கா நிரூபணமாயிருக்கு.
    அம்புட்டுதான்.

    சண்டையில்லாத குடும்பம் உண்டோ?

    இதெல்லாம் கருத்துவேறுபாடுகள்.

    பஞ்சாயத்துக்கு வரட்டும், தீர்ப்பைச் சொல்லிறலாம்:-)))))

    ReplyDelete
  6. //வீட்டுக்குப் போகும் போது அன்பா ஒருத்தர்க்கு ஒருத்தர் விட்டுக் குடுத்துடுவோம். //

    அப்படிங்களா..

    தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் அப்படின்னு சொல்லுவாங்க..

    இன்னுமும் அப்படியே இருக்கீங்களே அப்பு.. விட்டு கொடுக்கற பழக்கம் அப்பவே ஆரம்பிச்சாச்சா...

    ReplyDelete
  7. /*சின்ன வயசுல ஒன்னுக்குள்ள ஒன்னு விளையாடிக்குவோம். வீட்டுக்குப் போகும் போது அன்பா ஒருத்தர்க்கு ஒருத்தர் விட்டுக் குடுத்துடுவோம்*/
    ஆமா உண்மைதான்

    ReplyDelete
  8. // துளசி கோபால் said...
    பதிவுலகம் ஒரு குடும்பமுன்னு நான் எப்பவும் சொல்வேன். அது இன்னொருக்கா நிரூபணமாயிருக்கு.
    அம்புட்டுதான்.

    சண்டையில்லாத குடும்பம் உண்டோ?

    இதெல்லாம் கருத்துவேறுபாடுகள்.

    பஞ்சாயத்துக்கு வரட்டும், தீர்ப்பைச் சொல்லிறலாம்:-))))) //

    நாட்டாண்மை தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு யாரவது சொன்னா என்ன செய்வீங்க...

    ReplyDelete
  9. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

    ReplyDelete
  10. அய்யா நண்பரே..

    தமிலீஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டு போட்டுட்டேன்...

    ReplyDelete
  11. /*
    பதிவுலகம் ஒரு குடும்பமுன்னு நான் எப்பவும் சொல்வேன். அது இன்னொருக்கா நிரூபணமாயிருக்கு.
    அம்புட்டுதான்.

    சண்டையில்லாத குடும்பம் உண்டோ?

    இதெல்லாம் கருத்துவேறுபாடுகள்.

    பஞ்சாயத்துக்கு வரட்டும், தீர்ப்பைச் சொல்லிறலாம்:-)))))
    */
    ௬ட்டுங்க பதினெட்டு பட்டி பஞ்சாயத்தை

    ReplyDelete
  12. //ஆமா.. யாருக்கெல்லாம் கும்மி அடிக்க வேண்டுமோ அவர்கள் எல்லாம் வரலாம்...//

    அப்போ இது கும்மி பதிவா? நான் ஆஜர்

    ReplyDelete
  13. உ_அ எங்கே? திரு இராகவன், நைஜிரியா!

    ReplyDelete
  14. பார்வைகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படுகின்றன.சண்டைப் பதிவர்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் மனதை நோகடிக்கவே செய்கிறது.ஒவ்வொருவரும் வாழ்வின் பன்முகங்களிருந்து கொண்டு முகம் பாராமலேயே இப்படி குரோதங்கள் வளர்வது ஆரோக்கிய சிந்தனைக்குரியதல்ல.

    ReplyDelete
  15. நல்ல கும்மி பதிவு

    யாரு மாடு மேய்ப்பன்
    யாரு தளபதி

    ReplyDelete
  16. துளசி கோபால் said...

    பதிவுலகம் ஒரு குடும்பமுன்னு நான் எப்பவும் சொல்வேன். அது இன்னொருக்கா நிரூபணமாயிருக்கு.
    அம்புட்டுதான்.

    சண்டையில்லாத குடும்பம் உண்டோ?

    இதெல்லாம் கருத்துவேறுபாடுகள்.

    பஞ்சாயத்துக்கு வரட்டும், தீர்ப்பைச் சொல்லிறலாம்:-)))))//

    ஆனாலும் டீச்சர் கலங்கல

    ReplyDelete
  17. பழமையார் ரெண்டு புள்ளபூச்சிகளை வெச்சுதான் பதிவு போட்டிருக்கார்.

    ReplyDelete
  18. மாடுமேய்ப்பன்: நான் போடுறேன் பதிவு!

    தளபதி: நான் போடுறேன் பின்னூட்டம்!!

    //

    அதுதான் தொடர்ந்து நடக்குது

    ReplyDelete
  19. கிட்டாதாயின் வெட்டென மற!

    //
    இது எங்கியோ படிச்ச மாதிரி இருக்கே

    ReplyDelete
  20. உங்க பதிவு நல்லாத்தான் இருக்கு...ஆனா என்ன தான் நடக்குதுன்னு ஒண்ணும் புரியல..

    இப்ப எதுக்கு எல்லா மூத்த பதிவர்களும் சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்துல அடிச்சிக்கிறாங்க??

    அத விடுங்க...ஒரு பழம்பெரும் மூத்த பதிவரா இருந்துக்கிட்டு யாருகூடயும் சண்ட போடாமா சும்மா இருக்கீங்களே இது உங்க கேங்க அலட்சியப்படுத்துற மாதிரி ஆயிடாதா?? :0)

    ReplyDelete
  21. சென்னை கடற்கரை பதிவர் சந்திப்புகளுக்கு வாங்க. மழை பெஞ்சா ஒண்ணாப் போய் குடையின்றி கடலலையில் காலை நனைத்த வண்ணம் நின்று பேசுவோம். :)))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. பதிவர்களே, வணக்கம்! பதிவு போட்ட கையோட வெளில போக வேண்டிய சூழ்நிலை, அதான் உடனே உங்க கருத்துகளை மட்டுறுத்த முடியலை! கால தாமதத்திற்கு வருந்துகிறேன். கிராமப் பக்கம், ஓநாய் ஆட்டைத் துரத்திகிட்டு போற விளையாட்டுல பாடுற பாட்டுங்க இது. மத்தபடி நானா இதை எழுதலை.

    ReplyDelete
  23. //dondu(#11168674346665545885) said...
    சென்னை கடற்கரை பதிவர் சந்திப்புகளுக்கு வாங்க. மழை பெஞ்சா ஒண்ணாப் போய் குடையின்றி கடலலையில் காலை நனைத்த வண்ணம் நின்று பேசுவோம். :)))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //

    வணக்கங்க ஐயா! அதுக்கொரு வாய்ப்பு வந்தா அவசியம் கலந்துகிடுறேனுங்க!!

    ReplyDelete
  24. //அது சரி said...
    அத விடுங்க...ஒரு பழம்பெரும் மூத்த பதிவரா இருந்துக்கிட்டு யாருகூடயும் சண்ட போடாமா சும்மா இருக்கீங்களே இது உங்க கேங்க அலட்சியப்படுத்துற மாதிரி ஆயிடாதா?? :0)
    //

    ஓ, நாங்கெல்லாம் பழப்பெரும் பதிவருக ஆயிட்டமா? குடுகுடுப்பை அண்ணே, தளபதி, மலைக்கோட்டையார் எல்லாம் வாங்க, அது சரி அண்ணன் என்னவோ சொல்றாரு....

    ReplyDelete
  25. //மோகன் கந்தசாமி said...
    உள்ளேன் அய்யா!
    //

    இளைய மூத்த பதிவர் வாங்க, வணக்கம்!

    கோவிச்சுக்காதீங்க...ச்சும்மா, ஒரு பகிடி, அவ்வளவுதேன்!

    ReplyDelete
  26. // குடுகுடுப்பை said...
    கிட்டாதாயின் வெட்டென மற!

    //
    இது எங்கியோ படிச்ச மாதிரி இருக்கே
    //

    ஊர்ல சொல்லுறதுதாண்ணே!

    ReplyDelete
  27. //குடுகுடுப்பை said...
    பழமையார் ரெண்டு புள்ளபூச்சிகளை வெச்சுதான் பதிவு போட்டிருக்கார்.
    //

    அண்ணே, வேற என்ன செய்யச் சொல்றீங்க? அப்புறம் என்னோட சல்லடம் கழண்டுறாது?

    ReplyDelete
  28. //ராஜ நடராஜன் said...
    பார்வைகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படுகின்றன.சண்டைப் பதிவர்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் மனதை நோகடிக்கவே செய்கிறது.ஒவ்வொருவரும் வாழ்வின் பன்முகங்களிருந்து கொண்டு முகம் பாராமலேயே இப்படி குரோதங்கள் வளர்வது ஆரோக்கிய சிந்தனைக்குரியதல்ல.
    //

    நடராசு அண்ணே, ஆசுவாசப் படுத்துகிங்க. நாளைக்கு நல்ல கிராமத்துப் பாட்டாப் போடுறேன்.

    ReplyDelete
  29. //கபீஷ் said...

    அப்போ இது கும்மி பதிவா? நான் ஆஜர்
    //

    மன்னிக்கவும், நாந்தான் இடத்துல இல்லாமப் போய்ட்டேன்.

    ReplyDelete
  30. //இராகவன், நைஜிரியா said...
    அய்யா நண்பரே..

    தமிலீஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டு போட்டுட்டேன்...
    //

    நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  31. //துளசி கோபால் said...
    பதிவுலகம் ஒரு குடும்பமுன்னு நான் எப்பவும் சொல்வேன். அது இன்னொருக்கா நிரூபணமாயிருக்கு.
    அம்புட்டுதான்.
    //

    நல்லாச் சொன்னீங்க!

    ReplyDelete
  32. பஞ்சாயத்துக்கு வரட்டும், தீர்ப்பைச் சொல்லிறலாம்:-))))) //


    reeeeeeeepeeeeeeeeeeeeeetuuuuuuuuuuuu

    ReplyDelete
  33. //SUREஷ் said...
    //

    வாங்க! நன்றி!!

    ReplyDelete
  34. ஒ.. இதுக்கு பேரு தான் பதிவா???

    ReplyDelete
  35. ஒ.. இதுக்கு பேரு தான் பின்னூட்டமா??

    ReplyDelete
  36. :)) பழமைபேசி நல்லா எழுதுறிங்க...

    ReplyDelete
  37. எங்கேந்துதான் புடிக்கிறீக இந்த மாதிரி நல்ல மேட்டரெல்லாம் :)

    ReplyDelete
  38. // கபீஷ் said...
    உ_அ எங்கே? திரு இராகவன், நைஜிரியா! //

    பின்னூட்டம் போட்டுள்ளார் பாருங்களேன்..

    ReplyDelete
  39. இந்த senior bloggers war எப்போ முடியும்? உங்களுக்கேதும் தகவல் தெரிஞ்சா அதையும் பதிவாப் போடுங்களேன்.தமிழ் மணம் பக்கம் வரவே யோசனையா இருக்கற புதுப் பதிவர்களுக்கு உதவியா இருக்கும்.

    ReplyDelete
  40. //உருப்புடாதது_அணிமா said...
    ஒ.. இதுக்கு பேரு தான் பின்னூட்டமா??
    //

    வாங்க மலைக்கோட்டையார்! இஃகி!ஃகி!!

    ReplyDelete
  41. //VIKNESHWARAN said...
    :)) பழமைபேசி நல்லா எழுதுறிங்க...
    //

    வாங்க ஐயா! நன்றிங்க!!

    ReplyDelete
  42. // கிரி said...
    :-?
    //
    வாங்க கிரி! என்ன குழப்பமா? ஒன்னும் புரியலை, நீங்க சொல்லுறது.

    ReplyDelete
  43. //புதுகை.அப்துல்லா said...
    எங்கேந்துதான் புடிக்கிறீக இந்த மாதிரி நல்ல மேட்டரெல்லாம் :)
    //

    அண்ணே! வாங்க, வணக்கம்!! சின்ன வயசுல விளையாட்டுல பாடுற பாட்டுங்க, அதைக் கொஞ்சமா மாத்தி இப்ப பதிவாக்கிட்டேன்! இஃகி!ஃகி!!

    ReplyDelete
  44. //மிஸஸ்.டவுட் said...
    இந்த senior bloggers war எப்போ முடியும்? உங்களுக்கேதும் தகவல் தெரிஞ்சா அதையும் பதிவாப் போடுங்களேன்.தமிழ் மணம் பக்கம் வரவே யோசனையா இருக்கற புதுப் பதிவர்களுக்கு உதவியா இருக்கும்.
    //

    உங்களுக்கு விசயந் தெரியாதா? நானே, ஊருக்கு புதுசுங்கோய்....

    ReplyDelete
  45. நீங்க சூடா சொல்லலைனாலும் சூட்டுக்கு போய்டுச்சு

    ReplyDelete
  46. //நசரேயன் said...
    நீங்க சூடா சொல்லலைனாலும் சூட்டுக்கு போய்டுச்சு
    //

    இஃகி!ஃகி!!

    ReplyDelete
  47. மிக அருமையான பதிவு .....தொடருங்கள் .. ...

    :-))))))

    ReplyDelete
  48. // Vishnu... said...
    மிக அருமையான பதிவு .....தொடருங்கள் .. ...

    :-))))))
    //

    நன்றிங்க‌!

    ReplyDelete
  49. //நசரேயன் said...
    நீங்க சூடா சொல்லலைனாலும் சூட்டுக்கு போய்டுச்சு
    //

    ReplyDelete