11/25/2008

சோமாறி, மொல்லமாறி தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அன்பர்களே வணக்கம்! நேத்தைக்கு ஊருக்கு பேசிட்டு இருந்தப்ப சொன்னாங்க, கார்த்திகை மாசத்து கனமழை விட்டபாடு இல்ல இன்னும்ன்னு. அப்புறம் அதப் பத்தி மேலும் மேலும் பேச்சுக் குடுத்ததுல நிறையப் பழமைகளை வாங்க முடிஞ்சது. அதைப் பத்தி சீக்கிரமே பதிவு போடுறேன். அதுக்கு முன்னாடி நாம கிட்டடியில எதிர்கொண்ட சில சொல்லுகளைப் பாப்போம்.

எதேச்சையா நான், எங்க‌ இங்க‌ இருந்த‌ க‌ளிம்பு ம‌ருந்த‌க் காண‌மேன்னு கேக்க‌, த‌ங்க‌ம‌ணிக்கு கோவ‌ம் வ‌ந்திடுச்சு. அமெரிக்கா வ‌ந்த‌ பின்னாடியும், ஏன் என் க‌ழுத்த‌ அறுக்குறீங்க‌ன்னு ச‌ண்டைக்கு வ‌ந்துட்டாக‌. அப்புற‌ம் நாம‌ வ‌ழ‌க்க‌ம் போல‌, லேசு பாசாப் பேசி ச‌மாளிச்சோம். அப்புற‌ம் அவிங்க‌ளும் அதப் ப‌த்தி கேட்டுத் தெரிஞ்சுகிட்டாக‌. ஆமுங்க‌, திர‌வ‌ நிலைக்கும் திட‌ நிலைக்கும் இடைப் ப‌ட்ட‌த‌த்தான் க‌ளிம்புன்னு சொல்லுற‌து. சுண்ணாம்புக் க‌ளிம்புன்னு சொல்வாங்க. க‌ளிம்பு ம‌ருந்துன்னு சொல்வாங்க‌.

அப்புற‌ம் பாருங்க‌, ந‌ம்ம‌ ந‌ண்ப‌ர் அணிமாவை ஊர்மாறின்னு நாம‌ அப்ப‌ப்ப‌ அன்பா சொல்லுற‌து உண்டு. அவ‌ர் அடிக்க‌டி ஊர் மாறிட்டு இருப்பாரு. அத‌னால‌தான். அப்ப‌ பாருங்க‌, இதென்ன‌ சோமாறி, மொல்ல‌மாறி போல‌ இருக்குதுன்னு ஒரு பேச்சு வ‌ந்த‌து. அப்ப‌ அதுக‌ளுக்கான‌ அர்த்த‌ம் என்ன‌ங்ற‌ பேச்சும் வ‌ந்துச்சு. எதோ எல்லாரும் பொழ‌ங்குறாங்க‌, நாம‌ளும் பொழ‌ங்குறோம்ங்ற‌துல‌ வ‌ந்து நின்னு போச்சு. அதான் இந்த‌ ப‌திவு மூல‌மா அதைப் ப‌த்தின‌ மேல‌திக‌த் த‌க‌வ‌ல்.

சோமாறி: சோமாறுத‌ல்ன்னா ந‌ல்ல‌ பொருளை எடுத்துகிட்டு, அது இருந்த‌ இட‌த்துல‌ கெட்டுப் போன‌ அல்ல‌து த‌ர‌க் குறைவான‌ பொருளை வெக்கிற‌துங்க‌. அந்த‌ மாதிரி செய்யுற‌வ‌ங்க‌ளை சோமாறின்னு சொல்ல‌ப் போய், நாள‌டைவில‌ திருட‌ற‌வ‌ங்க‌ளையும் அப்பிடியே சொல்லித் திட்டுற‌துன்னு வாடிக்கை ஆயிடுச்சாம்.

மொல்ல‌மாறி: மொல்லுமாற‌ல்ன்னா, குர‌லை மாத்திப் பேசுற‌துங்க‌. குர‌லை மாத்திப் பேசி ஏமாத்துற‌வ‌ங்க‌ளை மொல்ல‌மாறின்னு சொல்லி ஏசின‌து, நாள‌டைவில‌ பேசின‌ பேச்சை மாத்திப் பேசுற‌வ‌ங்க‌ளையும் மொல்ல‌மாறின்னு சொல்லித் திட்டுற‌ வாடிக்கை ஆயிடுச்சாம்.

இன்னொரு விளக்கம்: குறுந்தொகை (28)பாட்டுக்கு "Shall I charge (like a bull)?" என்று அ. கி. ராமாநுஜன் மொழிபெயர்த்துள்ளார்.கடனைப் தருகிறேன் என்று வாங்கிக்கொண்டு தராது ஏமாற்றிக்கொது திரிபவன் மொல்லமாறி. கடன் கொடுத்தவர்கள் மொலுமொலு என்று மொய்த்தாலும் கவலைப்படாத, நேர்மையற்ற புரட்டன். அவனுக்கு மானமில்லை, ஆனால் ஆடம்பரம் உண்டு. இதனால் கடனைத் திருப்பிக் கட்டாமல் ஏமாற்றியை மொல்லமாறி என்பது வழக்கம். கொங்குப் பழமொழி:"மொல்லப்பையன் சின்னான் நெல்லஞ் சோத்துக்கு அஞ்சான்". நன்றி: நா. கணேசன்

முடிச்சவிக்கி: அடுத்தவங்க கட்டுச் சோத்து மூட்டைய அவிழ்த்து, அதுல இருக்குற சோத்தைத் திருடி திங்குறவங்களை ஏசுற வாடிக்கை.

இன்னொரு விளக்கமும் உண்டு.அக்காலத்தில் பயணம் செய்பவர்கள் தங்களின் முக்கிய உடைமைகளை மூட்டையாகக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பணத்தை முடிந்து மடியில் செருகிக்கொள்வார்கள். (இப்போதும் புடைவைத்தலைப்பில் பணத்தை முடிந்துகொள்ளும் பழக்கம் உண்டு)உடையவர்களுக்குத் தெரியாமல் முடிச்சை அவிழ்த்துப் பொருளையோ பணத்தையோ திருடுபவர்களை முடிச்சவிழ்க்கி என்பர். நன்றி: அ. நம்பி

காற்றில்லாமல் தூசி பறக்குமா?

53 comments:

  1. வணக்கம் நண்பர் பழமை பேசி. பெயர் போடும் வசதியை மறுபடியும் கொண்டு வந்து விட்டீர்கள். அதற்கு முதல் நன்றி. சோம்பேறிதனமாக பின்னூட்டம் இடாமல் இருந்தால், சோமாறி, மொல்லமாறி என திட்டு வாங்க கூடாது என்று முதல் பதிவை போட்டாச்சு.
    அப்பாடா எப்படியோ முதல் பதிவு நாம்பதாம்பா.. இராகவன், நைஜிரியா

    ReplyDelete
  2. /*எதேச்சையா நான், எங்க‌ இங்க‌ இருந்த‌ க‌ளிம்பு ம‌ருந்த‌க் காண‌மேன்னு கேக்க‌, த‌ங்க‌ம‌ணிக்கு கோவ‌ம் வ‌ந்திடுச்சு*/
    அடிச்சவங்ககிட்டே களிம்பு கேட்டா கோபம் வரமா என்ன செய்யும்?

    ReplyDelete
  3. நீங்க ஒரு சோமாறி,மொல்ல‌மாறி,முடிச்சவிக்கி ன்னு நான் சொல்லைங்க

    ReplyDelete
  4. //இராகவன், நைஜிரியா//

    வாங்க, நன்றி! பதிவர் சந்திப்பு எப்படிப் போச்சு?

    ReplyDelete
  5. //நசரேயன் said...
    அடிச்சவங்ககிட்டே களிம்பு கேட்டா கோபம் வரமா என்ன செய்யும்?
    //

    அவிங்கதான பட்ட காயத்துக்கு மருந்து போட்டு ஆவணும்!

    //நசரேயன் said...
    நீங்க ஒரு சோமாறி, மொல்ல‌மாறி, முடிச்சவிக்கி ன்னு நான் சொல்லைங்க
    //

    நானும்! :-o))

    ReplyDelete
  6. //SUREஷ் said...
    நல்ல முயற்சி
    //

    வாங்க SUREஷ், நன்றி!

    ReplyDelete
  7. தலைப்பைப் பார்த்தவுடன் என்னையப் பத்திதான் எழுதியிருக்கீங்களோன்னு பயந்து போய்ட்டேன் :)

    ReplyDelete
  8. அய்யா ஓலைச்சுவடியார் இந்த திகிடுதித்தம் எல்லாம் எங்க கத்துக்கிட்டீங்க

    ReplyDelete
  9. பதிவர் - வாசகர் சந்திப்பு மிக நன்றாக நடந்தது. சந்திப்பை பற்றி வாசகரான நான் சொல்லுவதைவிட பதிவர் அணிமா மிக நன்றாக சொல்லுவார் என்பதால், அவரை உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும், இந்த சந்திப்பை பற்றி ஒரு பதிவு இடுமாறு கேட்டு கொள்கின்றேன். தாங்கள் இதற்கு வழிமொழியுமாறு கேட்டு கொள்கின்றேன்.

    ReplyDelete
  10. //குடுகுடுப்பை said...
    அய்யா ஓலைச்சுவடியார் இந்த திகிடுதித்தம் எல்லாம் எங்க கத்துக்கிட்டீங்க//


    :-o))

    ReplyDelete
  11. //இராகவன், நைஜிரியா said...
    பதிவர் - வாசகர் சந்திப்பு மிக நன்றாக நடந்தது. சந்திப்பை பற்றி வாசகரான நான் சொல்லுவதைவிட பதிவர் அணிமா மிக நன்றாக சொல்லுவார் என்பதால், அவரை உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும், இந்த சந்திப்பை பற்றி ஒரு பதிவு இடுமாறு கேட்டு கொள்கின்றேன். தாங்கள் இதற்கு வழிமொழியுமாறு கேட்டு கொள்கின்றேன்.
    //

    ஆள் அரவமே இல்லை... என்ன செய்தீங்க அவரை?

    ReplyDelete
  12. திரு. அணிமா அவர்களுக்கு அனுப்பிய மெசெஜ் இத்துடன் தங்கள் மேலான பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...
    //
    http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_25.html
    http://ramya-willtolive.blogspot.com/2008/11/blog-post_25.html
    யப்பா .. உனக்கு என்ன ஆச்சு.. இரண்டு பதிவுலேயும் உன்னைப்பற்றி கேட்கின்றார்கள். உடனே பதிவுக்கு போய் எதாவது பின்னூட்டம் போட்டுவிடப்பா..
    எம்பேர காப்பாத்தனும் புரிஞ்சுதா !!//

    ReplyDelete
  13. //புதுகை.அப்துல்லா said...
    தலைப்பைப் பார்த்தவுடன் என்னையப் பத்திதான் எழுதியிருக்கீங்களோன்னு பயந்து போய்ட்டேன் :)
    //

    வாங்க புதுகையார்! வணக்கம்!! உங்களை அப்படி சொல்லுவேனா?

    ReplyDelete
  14. //முடிச்சவிக்கி: அடுத்தவங்க கட்டுச் சோத்து மூட்டைய அவிழ்த்து, அதுல இருக்குற சோத்தைத் திருடி திங்குறவங்களை ஏசுற வாடிக்கை.//

    உங்கள் விளக்கம் சரி; இன்னொரு விளக்கமும் உண்டு.

    அக்காலத்தில் பயணம் செய்பவர்கள் தங்களின் முக்கிய உடைமைகளை மூட்டையாகக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பணத்தை முடிந்து மடியில் செருகிக்கொள்வார்கள். (இப்போதும் புடைவைத்தலைப்பில் பணத்தை முடிந்துகொள்ளும் பழக்கம் உண்டு)

    உடையவர்களுக்குத் தெரியாமல் முடிச்சை அவிழ்த்துப் பொருளையோ பணத்தையோ திருடுபவர்களை முடிச்சவிழ்க்கி என்பர்.

    ReplyDelete
  15. அட..அப்பிடியா?

    ReplyDelete
  16. உங்கள் சேவை தொடரட்டும்...

    ReplyDelete
  17. //எதேச்சையா நான், எங்க‌ இங்க‌ இருந்த‌ க‌ளிம்பு ம‌ருந்த‌க் காண‌மேன்னு கேக்க‌, த‌ங்க‌ம‌ணிக்கு கோவ‌ம் வ‌ந்திடுச்சு. //

    இங்கே நேர் எதிர்.கோபம் ரங்கமணிக்குத்தான்.தங்ஸ்க்கு சாப்பிட்ற வடநாட்டு சப்பாத்தியா இருந்தாலும் சரி,இந்த ஊரு குப்பூஸா இருந்தாலும் சரி,ரொட்டித்துண்டா இருந்தாலும் சரி எல்லாமே ரொட்டிதான்."என்னங்க ரொட்டி சாப்பிடறீங்களா?சோறு சாப்பிடறீங்களா?:))))

    ReplyDelete
  18. ஹல்லோ பழமைபேசி...

    நீங்க திரு.சோ ராமசாமி அவர்களைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்து ஏமாந்தேன்...

    ReplyDelete
  19. சோமாறி (< சோமாறு- being lazy) = சோம்பேறி.

    முடிச்சவிழ்க்கி = pickpocket

    மொல்லமாறி
    ---------------

    மொருமொரு > மொலுமொலு ஒரு ஓசைக் குறிப்பு.

    மொல்லுமொல்லெனல் Onomotopoeic expression signifying noisy clamour; இரைச்சற் குறிப்பு. (சங். அக.). மல்லர்கள் சண்டைக்குமுன் கைகால்களைத் தட்டிச்செய்யும் ஆரவாரம்.

    மல்லுக்கட்டுதல் < மொல்லுக்கட்டுதல்.
    (கம்பு < கொம்பு, பலி (Telugu, Sanskrit bali) < பொலி, பொருமு-/பொம்மு- > பம்பல்/பம்பல். நம்ம ஊரில் பண்ணையத்தில வேலை தெறக்கா இருக்கற சமயம் = பம்பல் < பொம்மு-/பொருமு (cf. பொம்மை).

    மொல்லை mollai , n. Aries of the zodiac. See மேடம்¹, 2. (சூடா. உள். 9.) மொல்லை = என்றால் ஆட்டுக் கிடாய். நம்ம ஊர்ல நாட்றாயங்கோயில் கடா (அங்கே போயிருக்கீங்களா?). கிடாய்கள் சண்டையிட்டு மண்டையில் முட்டும் ஓசையினால் மொல்லை (=charging ram) என்ற பெயர் உண்டு.

    முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
    ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
    ஆஅ ஓல்லெனக் கூவுவேன் கொல்!
    உயவு நோயறியாது துஞ்சும் ஊரே!

    என்னும் குறுந்தொகை (28)பாட்டுக்கு "Shall I charge (like a bull)?" என்று அ. கி. ராமாநுஜன் மொழிபெயர்த்துள்ளார்.

    கடனைப் தருகிறேன் என்று வாங்கிக்கொண்டு தராது ஏமாற்றிக்கொது திரிபவன் மொல்லமாறி. கடன் கொடுத்தவர்கள் மொலுமொலு என்று மொய்த்தாலும் கவலைப்படாத, நேர்மையற்ற புரட்டன். அவனுக்கு மானமில்லை, ஆனால் ஆடம்பரம் உண்டு. இதனால் கடனைத் திருப்பிக் கட்டாமல் ஏமாற்றியை மொல்லமாறி என்பது வழக்கம். கொங்குப் பழமொழி:
    "மொல்லப்பையன் சின்னான் நெல்லஞ் சோத்துக்கு அஞ்சான்".

    நம்ம ஊருலெ தெவசத்தில் தான் முதலில் சோறு, எல்லாருக்கும் அரிசி வந்தது nitrogen-fixation செயற்கை உரம் பெட்ரோலில் இருந்து வந்த பிறகுதான். பெட்ரோல் அரபிகள் கிணறு வத்தினால் அந்த ஆட்டம் முடிஞ்சுபோயிரும். வெள்ளையன் கார் ஓட்டத்தில் விரைவில் அந்நாள் (நம் குழந்தைகள், (அ) பேரம்பேத்தி காலத்தில்) வரும்.

    பிற பின்,
    நா. கணேசன்

    "காசு மொல்லை போடல்"
    http://flashkathir.wordpress.com/2007/03/17/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/

    ReplyDelete
  20. //நா. கணேசன் said... //

    அண்ணா,

    வாங்க, வணக்கம்! மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க. நீங்க சொல்லுறது சரியா இருக்குங்க. நான் இந்தத் தமிழ் அகராதியில பாத்ததை வெச்சு எழுதினேன்.

    //மொல்லு, s. (indeclin.) an imitative sound; 2. a noise made with the hands, or feet preparatory to a fight, இரைச்சல்.

    //சோமாறு, (p. 520) [ cōmāṟu, ] கிறேன், சோமாறினேன், வேன், சோமாற, v. a. [prov.] to exchange an article in dealing, putting an inferior in place of a better

    ReplyDelete
  21. //செந்தழல் ரவி said...
    ஹல்லோ பழமைபேசி...

    நீங்க திரு.சோ ராமசாமி அவர்களைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்து ஏமாந்தேன்...
    //

    வாங்க, இளைய குத்தூசி! மொல்லு மாறுற எல்லாரும் மொல்லமாறி தானுங்க.

    ReplyDelete
  22. //அ. நம்பி said... //

    வாங்க, வணக்கம்! மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  23. //Mahesh said...
    அட..அப்பிடியா?
    //

    //முரளிகண்ணன் said...
    அருமை
    //

    //Sriram said...
    உங்கள் சேவை தொடரட்டும்...
    //

    வாங்க, வணக்கம்!

    ReplyDelete
  24. //ராஜ நடராஜன் said...

    இங்கே நேர் எதிர்.கோபம் ரங்கமணிக்குத்தான்.
    //

    அப்புறம், என்னாச்சு? உங்களுக்கு கோவம் வந்தாலும், இடி உங்களுக்குத்தானே?!

    :-o)

    ReplyDelete
  25. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம எல்லாரும் திட்டிக்கிட்டு இருக்காங்க. :)

    ReplyDelete
  26. நீங்க யாரயோ திட்டறீங்கன்னு தெரியுது.. ஆனா யாருன்னு தான் தெரியல..

    ReplyDelete
  27. அ.நம்பி மற்றும் நா.கணேசன் சொன்னதுதான் நான் சொல்ல நினைத்தது. நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.

    ReplyDelete
  28. //
    சின்ன அம்மிணி said...
    இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம எல்லாரும் திட்டிக்கிட்டு இருக்காங்க. :)
    //
    வாங்க, வணக்கம்! அதாங்க, இந்த பதிவு!!

    ReplyDelete
  29. // Ŝ₤Ω..™ said...
    நீங்க யாரயோ திட்டறீங்கன்னு தெரியுது.. ஆனா யாருன்னு தான் தெரியல..
    //

    உங்க பேர்ல இருக்குற சங்கேதக் குறியீடுகளச் சொல்லுங்க.... நானும் சொல்லுறேன்!

    ReplyDelete
  30. //மன்மதக்குஞ்சு said...
    அ.நம்பி மற்றும் நா.கணேசன் சொன்னதுதான் நான் சொல்ல நினைத்தது. நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  31. உங்க தலைப்பை பார்த்து கொஞ்சம் குழம்பிட்டேன்

    சோமாறி, மொல்லமாறி தெரிஞ்சுக்கலாம் வாங்க! அப்பிடின்னு இருந்தது எனக்கு வழக்கம் போல சோமாறி மொள்ளமாரி எல்லாம் வாங்க ன்னு சொல்றமாதிரி இருந்தது.... :-)))

    பழமைபேசி ன்னு பேரை வைத்து பதிவு போட்டாலும் போடுறீங்க ..சும்மா பட்டாசா இருக்கு..உங்களுக்கு எப்படி இத்தனி மேட்டர் (தப்பா எதுவும் நினைக்காதீங்க நீங்க எழுதறதை தான் மேட்டர் னு சொன்னேன்) சிக்குது, முன்பே இத்தனை சொல்லலாம் என்ற நம்பிக்கையில் தான் இந்த பேரே வைத்து இருக்கீங்க போல..அசத்துங்க

    ReplyDelete
  32. appadiye Poruki,Purampokku itha mari pala word-kum meaning sonna nalla irukum....

    ReplyDelete
  33. //கிரி said...
    முன்பே இத்தனை சொல்லலாம் என்ற நம்பிக்கையில் தான் இந்த பேரே வைத்து இருக்கீங்க போல..அசத்துங்க
    //

    வாங்க கிரி, நொம்ப நாளா நம்ம பக்கம் உங்களக் காணோமே?
    ஆமுங்க, எதோ நமக்குத் தெரிஞ்சது!!!

    ReplyDelete
  34. கார்த்திகை மாசத்து கனமழை விட்டபாடு இல்ல ///





    boss

    ReplyDelete
  35. இங்க‌ இருந்த‌ க‌ளிம்பு ம‌ருந்த‌க் காண‌மேன்னு //////



    பண்பாட்டக் காப்பாத்திட்டிங்க

    ReplyDelete
  36. இப்போதும் புடைவைத்தலைப்பில் பணத்தை முடிந்துகொள்ளும் பழக்கம் உண்டு///



    அமரிக்காவில்..................

    ReplyDelete
  37. //SUREஷ் said...
    இப்போதும் புடைவைத்தலைப்பில் பணத்தை முடிந்துகொள்ளும் பழக்கம் உண்டு///
    அமரிக்காவில்..................
    //

    வாங்க SUREஷ்! வணக்கம்!!

    ReplyDelete
  38. சோமாறி தப்பான விளக்கம். அர்த்தம்- எவன் ஒருவன் அழகு மனைவி அருகில் ஆசையாய் படுத்திருந்தும் கையாலாகாதவனாய் கொட்டாவி விட்டு தூங்குகிறானானோ அவன் தான் சோமாறி.

    ReplyDelete
  39. //ஆட்காட்டி said...
    சோமாறி தப்பான விளக்கம். அர்த்தம்- எவன் ஒருவன் அழகு மனைவி அருகில் ஆசையாய் படுத்திருந்தும் கையாலாகாதவனாய் கொட்டாவி விட்டு தூங்குகிறானானோ அவன் தான் சோமாறி.
    //

    ஆட்காட்டி அண்ணா, வாங்க, வணக்கம்!

    //சோமாறு, (p. 520) [ cōmāṟu, ] கிறேன், சோமாறினேன், வேன், சோமாற, v. a. [prov.] to exchange an article in dealing, putting an inferior in place of a better

    இந்தத் தமிழ் அகராதியில பாத்ததை வெச்சு எழுதினேன்.

    ReplyDelete
  40. இந்த விளக்கம் அகராதியில் வராது.

    ReplyDelete
  41. //ஆட்காட்டி said...
    இந்த விளக்கம் அகராதியில் வராது.
    //

    புரியுதுங்க ஐயா! :-o)

    ReplyDelete
  42. புரியது.. என்னை வெச்சு பதிவு போடுறதுலே குறியா இருக்கீங்க..

    ReplyDelete
  43. //அவ‌ர் அடிக்க‌டி ஊர் மாறிட்டு இருப்பாரு. அத‌னால‌தான்///


    என்னங்க பண்றது, நம்ம வேலை அப்படி போட்டு தாங்குதுங்க..

    ReplyDelete
  44. ///சோமாறி, மொல்லமாறி தெரிஞ்சுக்கலாம் வாங்க!"///

    இது தெரிஞ்சிக்க மட்டும் தானே, என்னை பத்தி இல்லியே..
    என்ன சொல்லலியே ??

    ReplyDelete
  45. ‌////, ந‌ம்ம‌ ந‌ண்ப‌ர் அணிமாவை ஊர்மாறின்னு நாம‌ அப்ப‌ப்ப‌ அன்பா சொல்லுற‌து உண்டு///


    நான் மட்டும் ஒரே நாட்ல இருக்க மாட்டேன்னா சொல்றேன்.. அவங்கள அனுப்பின அதுக்கு நான் என்ன செய்ய??

    ReplyDelete
  46. //உருப்புடாதது_அணிமா said...
    புரியது.. என்னை வெச்சு பதிவு போடுறதுலே குறியா இருக்கீங்க..
    //

    ஆமா, மத்தவங்களைப் பத்தி எழுதினா சல்லடங்(trouser) கிழிஞ்சுடாது?

    ReplyDelete
  47. ///பழமைபேசி said...

    //இராகவன், நைஜிரியா//

    வாங்க, நன்றி! பதிவர் சந்திப்பு எப்படிப் போச்சு?
    //////


    விரைவில் அதை பற்றிய பதிவு வரும்..
    ஆச்சிரியம் பல உண்டு அந்த பதிவில்...

    ReplyDelete
  48. //உருப்புடாதது_அணிமா said...


    இது தெரிஞ்சிக்க மட்டும் தானே, என்னை பத்தி இல்லியே..
    என்ன சொல்லலியே ??
    //

    தெரிஞ்சிக்க மட்டும் தான்!

    ReplyDelete
  49. இங்கேயும் போட்டாச்சு அம்பது.. சோடா எங்கப்பா??

    ReplyDelete
  50. ///பழமைபேசி said...

    தெரிஞ்சிக்க மட்டும் தான்!///

    இனி நிம்மதியா கொல்ல பக்கம் ஒதுங்குவேன் ..

    ReplyDelete
  51. //பழமைபேசி said...

    ஆமா, மத்தவங்களைப் பத்தி எழுதினா சல்லடங்(trouser) கிழிஞ்சுடாது?///

    என்னை பாத்தா உங்களுக்கு விளையாட்டா இருக்கா??
    வெச்சுக்குறேன்.. ஒரு நாள் எல்லோருக்கும் ..

    ReplyDelete