11/12/2008

வக்கணையாப் பேசுற நீ?!

அன்பர்களே வணக்கம்! நாம சின்ன வயசுல, திண்ணையில, ஆட்டாங் கல்லுகிட்ட, நல்ல தண்ணிக் கெணத்துகிட்டன்னு பொம்பளைங்க ஒன்னு கூடிப் பேசுற பக்கம் போயி ஒன்னுந் தெரியாத சின்னவனாட்டம், அவிங்க பழம பேசுறதக் கேக்குறது உண்டு. நொம்ப சுவராசியமா இருக்கும்.

"வக்கத்தவ வக்கணையாப் பேச வந்துட்டா சிறுக்கி!" ன்னு சொல்வாங்க. "அவன் ஒரு துப்புக் கெட்டவன்!" ன்னு சொல்வாங்க. "என்ன ஒரு சாமார்த்தியம், வாங்கிட்டே வந்திட்டாளே?!"ன்னு பெரு மூச்சு விடுவாங்க. "ஓகோ! நான் நாதியத்தவன்னு நெனச்சிட்டாளா, அவ?"ன்னு சீறிப் பாய்வாங்க. "பசப்புறதப் பாரு!"ன்னு சிறு மூச்சு விடுவாங்க.

நான் இந்தப் பழமைகெல்லாங் கேட்டுப் பல வருசம் ஆச்சு போங்க. ஊர்ல இன்னமும் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காங்ளாங்றதே சந்தேகந்தான். அப்புறம் பாருங்க, அதுகளுக்கான பொழக்கமும் மாறிப் போச்சுங்றது என்னோட தாழ்மையான எண்ணம். சரி, அந்தப் பழமைகளப் பத்தி எனக்குத் தெரிஞ்சதை இப்பப் பாப்பமா?! சொல்லுறதுல எதனா மாத்தம் இருந்தாலும் சொல்லுங்க.

வக்கு(வழிமுறை): செய்யுறதுக்கு உண்டான‌ வழிமுறை தெரியாதவிங்கள, வக்கில்லாதவன்னு சொல்வாங்க.

வக்கணை: இதனோட பொழக்கம் இப்ப நல்லாவே மாறிப் போச்சு. இப்பெல்லாம் சாமார்த்தியமாப் பேசுறதை, வக்கணையாப் பேசுறதுன்னு பொழங்கறோம். ஒருத்தங்க மத்தவங்க கிட்டப் பேசும்போது குறை சொல்லியும், எதிர் மறையாவும் பேசினா அது வக்கணை. இந்த எடத்துல பழமொழி ஒன்னு ஞாபகம் வருது. கட்டுன ஊட்டுக்கு எட்டு வக்கணை!
அதாவது, புதுசாக் கட்டின வீட்டைப் பத்திப் பொறாமைல கொற சொல்லிப் பேசுறது.

சாமார்த்தியம் அப்படீன்னா, சமர்த்தாப் பேசி காரியம் சாதிக்குறது. ஈழத்துல பொண்ணுக பெரிய மனுசி ஆனதை சாமத்தியம்னு சொல்வாங்க. பூப்புனித நீராட்டு விழாவைச் சாமத்திய சடங்குன்னு சொல்வாங்க.

துப்பு: இதுக்கு நெற‌ய‌ அர்த்த‌ம் இருக்கு. துப்புற‌து ஒன்னு. ம‌ர்ம‌ம் ப‌த்தின‌ த‌கவ‌லை துப்புன்னு சொல்வோம். திருடு போன‌ வ‌ண்டிய‌ப் ப‌த்தி துப்பு ஒன்னு கெட‌ச்சிருக்கு. அப்புற‌ம், துப்புங்ற‌துக்கு உண‌வுங்ற‌ அர்த்த‌மும் இருக்கு. ஆக‌, துப்பு கெட்ட‌வன், துப்பு இல்லாதவன்னு சொன்னா, ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட‌ வ‌ழியில்லாத‌வ‌ன்னு இடிச்சு சொல்லுற‌து.

சரிங்க, மத்ததை (நாதி, பசப்பு, பெரு மூச்சு, சிறு மூச்சு) எல்லாம் நாளைக்குப் பாப்போம். இப்ப நீங்க போயி வக்கணையாப் பின்னூட்டம் போடலாம். சாமார்த்தியமாவும் பின்னூட்டம் போடலாம். எப்படி வேணாலும் போடுங்க. ஆனா அந்த ஓட்டை மட்டும் நல்லபடியாப் போட்டுட்டு, அப்புறமா பின்னூட்டம் போடுங்க.

குப்பைல கெடந்தாலும், குன்றிமணி நெறம் போயிருமா?

30 comments:

  1. விவரமா, வக்கணைப்பற்றி போட்டு இருக்கின்றீர்கள். உங்களைப் படித்தபின் தான் எனக்கு, சும்மா பின்னூட்டம் இட்டு பசப்பறோமோ அப்படிங்கற எண்ணம் வர ஆரம்பிக்கிது. அதுக்காக துப்பு கெட்டவன் அர்த்தம் இல்லை, வக்கத்தவன் (வழிமுறை தெரியாதவன்) வேணும்னா வெச்சுக்கலாம். அதாவது பின்னூட்டம் போடவாவது கொஞ்சம் சாமர்த்தியம், உங்க வலைப்பூவை படித்த பின் வந்திருக்கு. இராகவன், நைஜிரியா.

    ReplyDelete
  2. ஐ.. நான் தான் முதல் பின்னூட்டம் போலிருக்கு.. சந்தோஷமாயிருக்கு..இராகவன், நைஜிரியா

    ReplyDelete
  3. //போயி ஒன்னுந் தெரியாத சின்னவனாட்டம், அவிங்க பழம பேசுறதக் கேக்குறது உண்டு. நொம்ப சுவராசியமா இருக்கும்.//

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்

    ReplyDelete
  4. //இராகவன், நைஜிரியா said...
    ஐ.. நான் தான் முதல் பின்னூட்டம் போலிருக்கு.. சந்தோஷமாயிருக்கு..இராகவன், நைஜிரியா
    //

    நொம்ப சந்தோசம், நன்றி!

    ReplyDelete
  5. //வருங்கால முதல்வர் said...

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்
    //

    ஆகா! ஆகா!! அதெல்லாம் அப்ப!!!

    ReplyDelete
  6. /*
    நான் இந்தப் பழமைகெல்லாங் கேட்டுப் பல வருசம் ஆச்சு போங்க. ஊர்ல இன்னமும் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காங்ளாங்றதே சந்தேகந்தான்
    */
    எல்லாம் இங்கிலி பீசில பேசி பின்னி பிடல் எடுத்து கிட்டு இருக்காங்க

    ReplyDelete
  7. நீங்க வக்கனையா எழுதலைன்னு நான் சொல்லலை சாமி

    ReplyDelete
  8. //நசரேயன் said...
    நீங்க வக்கனையா எழுதலைன்னு நான் சொல்லலை சாமி
    //

    ஆனா, நீங்க சாமர்த்தியமா எழுதறீங்களே! சபாசு!!

    ReplyDelete
  9. "நடமாடும் ஓலைச் சுவடி" அண்ணன் (ரொம்ப) பழமை பேசி வாழ்க...

    இந்த மாதிரி வார்த்தையெல்லாம் கடந்த அறுபது வருஷமா யாரும் பேசுறதா தெரியல...நீங்க கேட்டிருக்கீங்கன்னா...உங்க வயசு என்ன சாமி??

    ReplyDelete
  10. //அது சரி said...
    இந்த மாதிரி வார்த்தையெல்லாம் கடந்த அறுபது வருஷமா யாரும் பேசுறதா தெரியல...நீங்க கேட்டிருக்கீங்கன்னா...உங்க வயசு என்ன சாமி??
    //

    அது சரி அண்ணாச்சி வாங்க! அய்ய, நான் செத்துப் பொழச்சவன் அண்ணாச்சி!!

    ReplyDelete
  11. வக்கு ங்கற பததில இருந்துதான் வக்கீலும் உருவாகியிருக்கணும்

    ReplyDelete
  12. //
    சின்ன அம்மிணி said...
    வக்கு ங்கற பததில இருந்துதான் வக்கீலும் உருவாகியிருக்கணும்
    //

    வாங்க சின்ன அம்மிணி! சரியாச் சொன்னீங்க, அப்பிடி இருகக வாய்ப்புகள் இருக்கு.

    ReplyDelete
  13. வக்கணை என்றால் போட்டுக் குடுக்குறது எண்டும் வரும்.

    ReplyDelete
  14. //ஆட்காட்டி said...
    வக்கணை என்றால் போட்டுக் குடுக்குறது எண்டும் வரும்.
    //

    வாங்க ஆட்காட்டி அண்ணே! மேலதிகத் தகவலுக்கு நன்றி அண்ணே!
    எங்க ஊர்ல, அதைய கொள்ளி மூட்டுறது. அதுவே கோளி மூட்டுறதுன்னும் ஆச்சி. அப்ப்டி செய்யுறவிங்களை கோளி மூட்டின்னும் சொல்வாங்க.

    ReplyDelete
  15. அது கோள் மூட்டுறது.

    ReplyDelete
  16. //
    ஆட்காட்டி said...
    அது கோள் மூட்டுறது.
    //
    ஆகா, நல்லாத்தான் எசப் பாட்டு பாடுறீங்க. பழசெல்லாம் நல்லாக் கிளறி விடுறீங்க..... பத்த வெக்கிறது... கோள் வெக்கிறது...கோள் மூட்டுறது.

    ReplyDelete
  17. கொள்ளி வைக்கிறது- முடிவு கட்டுறது.

    ReplyDelete
  18. //
    சின்ன அம்மிணி said...
    வக்கு ங்கற பததில இருந்துதான் வக்கீலும் உருவாகியிருக்கணும்
    //

    அது "வகாலத்"ங்கற உருது வார்த்தைலேருந்து வந்தது.

    ReplyDelete
  19. ம்ம்ம்ம்... நெம்ப ஒட்டுகேக்காதீங்க... அப்பறம் ஒட்டுக்கேக்க காதிருக்காது... ஓட்டுப்போட கையிருக்காது :)))

    ReplyDelete
  20. போக்கத்த பயலே, கம்நாட்டி இதையும் வக்கனையுடன் சேர்த்து கொள்ளுங்கள்...:)

    ReplyDelete
  21. அதே போல இங்கு சென்னையில் "டே பாடு" என்கிறார்கள்...
    அதற்கு என்ன அர்த்தம் என்று யாராவது கூறுங்களேன்...

    ReplyDelete
  22. ஆமா முன்னலாம் வக்கணை பேசமட்டும் வாய்கிழியும்ன்னு வீட்டுல சொல்லுவாங்க.. கொஞ்சம் மாறித்தான் போச்சு.. நான் இப்பவும் மகளை வக்கணயா பேசு செயல்ல காட்டாதன்னு திட்டுவேன் .. :))

    ReplyDelete
  23. //அது சரி அண்ணாச்சி வாங்க! அய்ய, நான் செத்துப் பொழச்சவன் அண்ணாச்சி!!//

    நீங்க ஆவிப்பதிவரா?

    ReplyDelete
  24. //Sriram said...
    அதே போல இங்கு சென்னையில் "டே பாடு" என்கிறார்கள்...
    அதற்கு என்ன அர்த்தம் என்று யாராவது கூறுங்களேன்...

    November 13, 2008 8:00 AM //

    வாங்க ஸ்ரீராம்! சொல்லிட்டாப் போச்சு!!

    ReplyDelete
  25. //ஆட்காட்டி said...
    கொள்ளி வைக்கிறது- முடிவு கட்டுறது.
    //
    நொம்பச் சரி!

    ReplyDelete
  26. //Mahesh said...
    ம்ம்ம்ம்... நெம்ப ஒட்டுகேக்காதீங்க... அப்பறம் ஒட்டுக்கேக்க காதிருக்காது... ஓட்டுப்போட கையிருக்காது :)))
    //

    அதுக்கு அவசியமே இல்லங்க.... நம்ம மொகத்தப் பாத்தா, அவிங்க ஒன்னுஞ் சொல்லுறதில்ல.

    ReplyDelete
  27. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    நான் இப்பவும் மகளை வக்கணயா பேசு செயல்ல காட்டாதன்னு திட்டுவேன் .. :))
    //

    வாங்க, வணக்கம்!

    :-o)

    ReplyDelete
  28. //குடுகுடுப்பை said...

    நீங்க ஆவிப்பதிவரா?
    //

    மறுஜென்மம்? :-o)

    ReplyDelete
  29. //உருப்புடாதது_அணிமா said...
    present sir
    //

    ok sir!

    ReplyDelete