9/27/2008

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -1

பழைய ஆட்களுக்கு, புது தலைமுறைக்காரங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு பெரும்பாலும் புரியறது இல்ல பாருங்க. அதான், அவங்க வசதிக்காக தமிங்கில தமிழ் அகராதி. வேணுமின்னா, தமிழ் தமிங்கில அகராதியும் எழுதலாம். அதாவது பழைய ஆட்கள் சொல்லுறது புது தலைமுறைக்கு புரிய வைக்க.

ரெக்கார்ட் - ஆவணம்
செகரட்டரி - செயலர்
மேனேஜர் - மேலாளர்
ஃபைல் - கோப்பு
புரோநோட் - ஒப்புச் சீட்டு
பால்கனி - முகப்பு மாடம்
பாஸ்போர்ட் - கடவுச் சீட்டு

பாஸ்வோர்ட் கடவுச்சொல்
டிசைன் - வடிவமைப்பு
சாம்பியன் - வாகைசூடி
விசா - நுழைவிசைவு
டெலிகேட் - பேராளர்
ஸ்பெசல் - பிரத்யேகம்
புராபோஸல் - கருத்துரு
ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
விசிட்டிங் கார்டு - காண்புச் சீட்டு
பிரீஃப்கேஸ் - குறும்பெட்டி
லம்சம் - திரட்சித் தொகை
மெயின் ரோடு - முதன்மைச் சாலை
பஜார் - கடைத்தெரு
புரோட்டோகால் - மரபுத்தகவு
செக் - காசோலை
ரசீது - பற்றுச் சீட்டு
பேண்ட் - முழு கால்ச்சட்டை
ட்ரௌசர் - அரை கால்ச்சட்டை
கரண்ட் - மின்சாரம்
டிக்கெட் - சீட்டு
மோட்டார் பைக் - துள்ளுவண்டி
மார்க்கெட் - சந்தை
லூசு - கிருக்கு/இளகினது
சீ டா -- சந்திக்கலாம்



(குப்பைமேடு ஏறிக் கோழி பிடிக்க மாட்டாதவன், கொல்லிமலை ஏறி அகராதி எழுதப் போறானாமா?)

7 comments:

  1. சிறிது எழுத்துப்பிழை இருக்கிறது, திருத்தவும் , மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  2. //
    குடுகுடுப்பை said...
    சிறிது எழுத்துப்பிழை இருக்கிறது, திருத்தவும் , மீண்டும் வருகிறேன்.

    //
    வாங்க இராசா, வாங்க! இன்ன பிழைன்னு சொல்லிட்டுப் போங்க இராசா சித்த!! என்ன செய்ய, தட்டச்சுல அப்பப்ப பிழைச்சுப் போகுது. வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  3. பாஸ்போர்ட் - கதவுச் சீட்டு
    கடவுச்சீட்டு

    அதே போல் பாஸ்வோர்ட்
    கடவுச்சொல்

    ReplyDelete
  4. ஸ்பெசல் - பிரத்யேகம்

    சிறப்பு ???

    ஸ்பெசல் செக்ரட்டரி டூ கவர்ன்மெண்ட் - அரசின் சிறப்பு செயலர் என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது

    ReplyDelete
  5. @@புருனோ Bruno said...

    வணக்கம், வாங்க! வருகைக்கும் பிழை திருத்தத்திற்கும் நன்றிங்க!!

    //
    ஸ்பெசல் - பிரத்யேகம்

    சிறப்பு ???

    ஸ்பெசல் செக்ரட்டரி டூ கவர்ன்மெண்ட் - அரசின் சிறப்பு செயலர் என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது
    //
    நீங்க சொல்லுறது சரிதான்.....

    special guest - சிறப்பு விருந்தினர்
    specially made - பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட

    ReplyDelete
  6. உங்கள் வலைப்பதிவில் நிறைய விடயங்கள் அறிந்து கொள்ளக் கூடியவாறு உள்ளது. ஏனைய பதிவுகளை பின்னர் படித்து பின்னூட்டமிடுகின்றேன்.

    ReplyDelete
  7. //
    கலைவாணி said...
    உங்கள் வலைப்பதிவில் நிறைய விடயங்கள் அறிந்து கொள்ளக் கூடியவாறு உள்ளது. ஏனைய பதிவுகளை பின்னர் படித்து பின்னூட்டமிடுகின்றேன்.

    //
    நன்றி கலைவாணி அவர்களே! ஏதோ நம்மால் முடிந்த, தமிழ் மொழி மற்றும் பண்பாடு பற்றிய தகவல்களைப் பரிமாறும் ஒரு முயற்சியே இது.
    வருகைக்கு நன்றி! அடிக்கடி வந்து செல்லுங்கள்!!

    ReplyDelete