12/09/2011

குவளப்பழம் (Apple)

இந்தக்குளிர்ல தோடம்பழம், முலாம்பழம், குவளப்பழம்னு தின்னுகிட்டு இருந்தா சீதளம் பிடிக்காதான்னு கேட்டு ஒரு நிலைக்குறிப்பு பதிஞ்சிருந்தேன். பயபுள்ளைக, அறுபது எழுபது வயதுள்ள பெரியவர்னு என்னை நினைச்சதும் அல்லாத, இவை எல்லாம் நாடோடிச் சொற்கள்(colloquial)னு வேற சொல்லிட்டாய்ங்க. தமிங்கலமற்ற தமிழ்ல பேசினாலே வயசு ஏறிப் போகுது?! இஃகி இஃகி!! இந்த பழமைபேசிங்ற பேரை வேற தவறுதலா புரிஞ்சிகிடுறாய்ங்க?!

தமிழுக்கு நேர்ந்த சோதனையப்பா, சோதனை! தமிழில் இருக்கிற இடுகுறிப் பெயர்கள் அனைத்தும் கிராமத்தான் கண்டெடுத்த முத்துகளே!! சரி விடுங்க. நாட்டு நடப்பு அப்படி. நண்பர்களைக் குறை சொல்லித் தப்பில்லை!!

அரத்திப்பழம்/குவளப்பழம்
Apple

சருக்கரை பாதாமி
Apricot

வெண்ணைப்பழம்
Avocado

வாழைப்பழம்
Banana
பஞ்சலிப்பழம்
Bell Fruit
அவுரிநெல்லி
Bilberry

கருநெல்லி
Blackberry
கத்தரிநெல்லி
Blueberry
கெச்சி
Bitter melon
File:Bittermelloncloseup.jpg
மஞ்சள் முலாம்பழம்
Cantaloupe
முந்திரிப்பழம்
Cashewfruit
சேலாப்பழம்
Cherry
சீமையிலுப்பை
Chickoo 

கடாரநாரத்தை
Citron
நாரத்தை
Citrus aurantifolia
கிச்சிலிப்பழம்
Citrus aurantium
மஞ்சநாரத்தை
Citrus medica
தோடம்ப்ழம்
Citrus reticulata
File:Mandarina.jpg

சாத்துக்கொடி
Citrus sinensis
Fil:Citrus sinensis.jpg
குருதிநெல்லி
Cranberry
கெச்சி
Cucumus trigonus

சீத்தாப்பழம்
Custard apple

பேயத்தி
Devil fig

நெல்லிக்காய்
Gooseberry

கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Grape

பம்பரமாசு
Grapefruit


கொய்யாப்பழம்
Guava

பலாப்பழம்
Jackfruit

நாவல்பழம்
Jambu fruit
நாகப்பழம்
Jamun fruit

பசலிப்பழம்
Kiwi

விளச்சிப்பழம்
Lichee

மாம்பழம்
Mango fruit

முசுக்கட்டைப்பழம்
Mulberry

அரபுக் கொடிமுந்திரி
Muscat grape

நரந்தம்பழம்
Orange

பப்பாளி
Papaya

குழிப்பேரி
Peach

ஆல்பக்கோடா
Plum

உலர்த்துப்பழம்
Prune
புற்றுப்பழம்
Raspberry

செம்புற்றுப்பழம்
Strawberry

தேனரந்தம்பழம்
Tangerine

குமட்டிப்பழம், தர்பூசணி
Watermelon
File:Watermelons.jpg

விளாம்பழம்
Wood apple

வெள்ளரிப்பழம்
Melon19 comments:

Mahi_Granny said...

ப்ளூ பெர்ரி தெரியும் பில் பெர்ரி தெரியாது. கெச்சி புதிதாய் பார்க்கிறேன். இத்தனைக்கும் தமிழ் சொல் கண்டெடுத்தது ஆச்சரியம் .aallpakada as the plum is new too.

Rathnavel Natarajan said...

அருமையான பழங்களைப் பற்றிய தொகுப்பு.
வாழ்த்துகள்.

தெய்வசுகந்தி said...

அருமைங்க!!!

க.பாலாசி said...

//நாவல்பழம்// இதுவும் பஞ்சலிப்பழமும் ஒரே மாதிரி இருக்கே... நாகப்பழம் இரண்டு இடத்தில இருக்கு.. எது உண்மையான நாகப்பழம்.. அது பிளாக்பெர்ரி, இது?? (சும்மா சந்தேகந்தான் திட்டாதீங்க சாமீ)

Unknown said...

அருமையான தகவல்

naanjil said...

தம்பி மணிவாசகம்.
அருமையான தொகுப்பு. படங்கள் உயியோட்டுவதாக உள்ளது. தமிழ்ப்பள்ளி பாடநூல்களில் அப்படியே சேர்த்துவிடலாம். இதை வைத்து ஒரு power point projection செய்யலாம்.
தமிழ் சேவைக்கு நன்றி.

sultangulam@blogspot.com said...

அருமை பழமைபேசி. நானும் முகநூலில் கேட்கலாமென நினைத்திருந்தேன். எல்லாமே புதிதாகத் தோன்றுகிறது. எம் தமிழ் அறிவு நாணங் கொள்ளச் செய்கிறது. குவளப் பழம் கூடத் தெரியாது. கெச்சியும் பாகற்காயும் வெவ்வேறா?

குலவுசனப்பிரியன் said...

Strawberryக்கு தமிழ் பெயர் தந்துள்ளீர்களா என்று அவக்கரமாகத் தேடினேன். ஆம் இருக்கிறது - பெயர் மிகப்பொருத்தம். அதன் விதைகள் மணல் போல நெருடும்போது, ”strawberry பெண்ணே” என்று பாடுபவர்கள் பட்டறிவில்லாமல் பாடுகிறார்களோ என்று தோன்றும்.

வருண் said...

எல்லாம் சரி, கொய்யாப்பழத்திலே ஒரு சில பழங்கள்ல உள்ள "பிங்க்" கலராவும், இன்னும் ஒரு சில வகையில் வெள்ளை நிறமாக இருக்கக் காரணம் என்ன?

தெரியாதுனா கேட்டு, படிச்சு எதாவது செய்து சொல்லுங்க! எனக்கு இந்து உண்மை தெரிஞ்சு ஆகனும்!

எனக்கு உள்ளே வெள்ளையாக உள்ள பழங்கள்தான் பிடிக்கும்! :)

வருண் said...

அந்த பொய்க்கனி முந்திரிப்பழம் சாப்பிட்டால் தொண்டையெல்லாம் ஏதோ பண்னும்ங்க. :(

ஓலை said...

Vayasaanavanga maathiri pesikkittu irunthaa vayasaanavangannu eppidi sollaama iruppaaga!

Aanaalum arumai pazhamai!

Sachandan said...

Thanks

நாகராஜன் said...

அருமை

அரசூரான் said...

அண்ணே, பாகற்க்காய்-கும் கெச்சி-யா? (சும்மா சந்தேகந்தான் திட்டாதீங்க சாமீ - நன்றி பாலாசி)

bandhu said...

படங்கள் மிக அழகாக உள்ளன. ஆனாலும்..நம் ஊரில் விளையாத பழங்களின் பெயர்களை தமிழ் 'படுத்துவதால்' என்ன நன்மை?

-/சுடலை மாடன்/- said...

அருமை!

பழமைபேசி said...

//பழங்களின் பெயர்களை தமிழ் 'படுத்துவதால்' என்ன நன்மை?//

மன்னிக்கணும்... யாரும் படுத்தவில்லை. ஒழித்ததுதான் உண்மை.

venki_nkp said...

puthiathai parkeren en palamai nanba. kalakera mani

venki_nkp said...

mani ippadi mani maniya kalakurea

so sweet

venkatesan.m