5/03/2011

இராதிகா சித்சபேசன் அவர்கட்கு வாழ்த்துகள்!!

நேற்று போல இருக்கிறது. ஆண்டுகள் பல கழிந்து விட்டன. யார்க் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். ஈழத்து நண்பர்கள் மோகன் இராமகிருட்டிணன், மொகேந்திரன், சதீசு சிங்கமாபாணர், பராபரன் ஆகியோருடன் எம்மையும் இணைத்துக் கொண்டிருந்த காலமது.

தமிழ் மாணவர்களுக்கு, மென்பொருள் நிரல்படுத்துதலைக் கற்றுக் கொடுப்பதுதான் எனக்கு வாய்த்த பணி. பிஞ்ச்/கீல் சந்திப்பில் கூடுதல் பள்ளியை நிறுவுவதில் மொகேந்திரன் அவர்கள் முக்கியப்பங்கு வகித்தார். அப்பள்ளிக்கு ஊக்கமும், உணர்வும் அளித்தவர் சித்சபேசன் அவர்கள்.

செலவு தொகையாக, ஒரு வகுப்புக்கு இவ்வளவு என எங்களுக்குப் பணமும் தருவார். பல்கலைக்கழக மாணவனான எனக்கு அது பெரும் உதவியாக இருந்தது. அக்கால கட்டத்தில் நிறையத் தமிழ் இளஞ்சிறார்கள் பள்ளிக்குப் பயில வருவார்கள். ஆசிரியராகப் பணிபுரிந்த நாங்கள் எல்லாம், “இவர்கள் எல்லாம் கனடாவை ஆளப் போகிறவர்கள் என பெருமிதம் கொள்வோம்”.. அம்மாணவர்களுள், இராதிகா சித்சபேசனும் ஒருவர்.

ஐந்து வயதில் புலம்பெயர்ந்து வந்திருந்தாலும், தெளிதமிழில் பேச வல்லவர். கனடியப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கும், அவரைத் தொடர்ந்து அரசியலில் மிளிரப் போகும் தமிழ் உறவுகளுக்கும், எமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!!


13 comments:

  1. Congratulation to both of you.

    ReplyDelete
  2. நல்லாவே தமிழ்ல பேசுறாங்க.. :)

    ReplyDelete
  3. மிக்க நன்றி தம்பி மணி
    நல்ல தகவல். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    அன்புடன்
    நாஞ்சில் இ. பீற்றர்

    ReplyDelete
  4. அதென்ன "பழமைபேசி" என்று அப்பப்போ தோன்றுவதுண்டு!இப்போ புரிந்து விட்டது!நன்றி சகோதரரே,கூடவே உங்கள் பதிவூடாக மீண்டும் வாழ்த்துக்கள்,சகோதரிக்கு அல்ல என் பெறா மகளுக்கு!!!!

    ReplyDelete
  5. //Congratulation to both of you.//

    நசர்ஜி!இது காப்பி பெஸ்ட்.

    ReplyDelete
  6. இப்ப நீங்க அமெரிக்காவிலா இல்ல நம்மூர்ல இன்னும் பனை மரமா பார்த்து சுத்திகிட்டிருக்கீங்களா?

    ReplyDelete
  7. //ஐந்து வயதில் புலம்பெயர்ந்து வந்திருந்தாலும், தெளிதமிழில் பேச வல்லவர். கனடியப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கும், அவரைத் தொடர்ந்து அரசியலில் மிளிரப் போகும் தமிழ் உறவுகளுக்கும், எமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!!//


    வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
  8. தங்களின் முன்னால் மாணவி தமிழில் சிறப்பாக பேசாமல் இருந்தால்தான் வியப்பு...

    ReplyDelete
  9. நமக்காக ஒரு சகோதரி நம்மில் இருந்து, நினைக்கவே சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கு.

    ஒரு பொண்ணா நம்ம ஊருல இது ரொம்ப கஷ்டம்.எடுத்தவை பணிகள் யாவிலும் வெற்றி கனி பறிக்க வாழ்த்துக்கள் சகோதரி.

    வாழ்த்துக்களுடன்,
    வாகை பிரபு

    ReplyDelete
  10. வாழ்த்துகள் இருவருக்கும்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் இருவருக்கும்.

    ReplyDelete
  12. ஆசிரியராகப் பணிபுரிந்த நாங்கள் எல்லாம், “இவர்கள் எல்லாம் கனடாவை ஆளப் போகிறவர்கள் என பெருமிதம் கொள்வோம்”.//
    சமுதாயச் சிற்பிகளல்லவா??

    ReplyDelete