3/04/2011

நசரேய இளம்பாண்டியனார் வாழிய, வாழியவே!!

அமெரிக்கத் தூங்காநகரம்
நியூயார்க் நகரம்
மெய்சிலிர்த்துக் குதூகலித்தது
தம்மண்ணை அலங்கரிக்க
தமிழ்மொட்டு ஒன்று மலர்ந்ததென!

தமிழுக்கு உயிர்த்த
தென்பாண்டித் தேரடா நீ!
குருவின் தினத்தில்
தமிழ்க் குலவிளக்காய்
பாராள வந்தாய் நீ
பொங்குதமிழ்ப் பாடுவாய் நீ
அவனியெங்கும் தமிழ் பவனி வர
டேவிட் கவின் நீ
எம்மவர்க்கு அணி சேர்ப்பாய் நீ
தென்பாங்குத் தமிழே நீ வாழ்க!
செழிப்பும் செம்மையும் நினதாக!!


24 comments:

  1. ஆஹா! வாழ்த்துகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தா? ஆஹா.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ***அமெரிக்கத் தூங்காநகரம்
    நியூயார்க் நகரம்
    மெய்சிலிர்த்துக் குதூகலித்தது
    தம்மண்ணை அலங்கரிக்க
    தமிழ்மொட்டு ஒன்று மலர்ந்ததென!***

    மலர்னு பெண்களைத்தான் சொல்லுவாங்கனு லொள்ளு பண்ணத் தோன்றினாலும், உங்க கவிதை அருமைனுதான் சொல்லத்தோனுது மணியண்ணா!

    தளபதியைப் புகழ்ந்து நீங்க புகழுச்சியை அடஞ்சிட்டுடீங்க போங்க! :)

    ReplyDelete
  4. அகோ... நசரேய இளம்பாண்டிய்னார் அப்படின்னா, அவருக்கு இளவல் பிறந்திருக்காருங்க...

    ReplyDelete
  5. ***பழமைபேசி said...

    அகோ... நசரேய இளம்பாண்டிய்னார் அப்படின்னா, அவருக்கு இளவல் பிறந்திருக்காருங்க...***

    சின்னத் தளபதியா?! ரொம்ப சந்தோஷம்! :)

    ReplyDelete
  6. இளம்பாண்டியரே!வாழிய வாழியவே.

    ReplyDelete
  7. சோழநாட்டின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இளம்பாண்டியரே!வாழிய வாழியவே

    ReplyDelete
  9. //அவருக்கு இளவல் பிறந்திருக்காருங்க//
    இளவலா? யோவ்...


    நசரேயனுக்கு குழந்தை பிறந்திருக்குங்க.

    ReplyDelete
  10. இளவல் iḷaval : (page 358)
    மிதிலை. 129). Son; குமாரன்.

    இடம் பொருள் முக்கியமுங்க இளா!!

    ReplyDelete
  11. ***பழமைபேசி said...

    இளவல் iḷaval : (page 358)
    மிதிலை. 129). Son; குமாரன்.

    இடம் பொருள் முக்கியமுங்க இளா!!***

    சரி விடுங்க, என்னைவிட இளா தமிழ்ல மக்கு போலயிருக்கு! :)))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. எதிர்கால கவுஜ திலகத்துக்கு வாழ்த்துகள்:)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் நசர்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  15. குட்டி தளபதிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ;)

    இன்னொரு கவின்.. ம்ம்.. கவினிற்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  17. அடடா.. இளையத்தளபதிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. முதுமை தளபதிக்கும்..

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    ReplyDelete
  20. அவர் யாரோ. ஆனாலும் தாயும் சேயும் தந்தையுமாய் நீடூழி காலம் மகிழ்வோடு வாழ்க!

    முரண்பாடாய் நான் இதற்குள் வந்ததற்குக் காரணம் ஒரு விடயத்தைச் சொல்லிச் செல்ல.

    நீங்கள் (மணி) முன்னொரு முறை சொன்ன ’இடருய்தி’ பற்றி நிலாமகள் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.பார்க்கலாம் இங்கு;www.nallamagal.blogspot.com

    பொருத்தமற்று இதற்குள் வந்ததற்கு மன்னியுங்கள். தந்தைமையின் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நண்பருக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.

    நன்றி மணி!!

    ReplyDelete