1/13/2011

இதற்குப் பெயர்தான் அயோக்கியத்தனம்??

இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

====================

கல்லூரி நாட்களில், அண்ணன் இராமகிருஷ்ணன் அவர்களது அபிமானியாக இருந்தேன். அவர் ஒரு மாபெரும் தியாகி என்பதனாலேயே. சில வேளைகளில், வேண்டாத வேலைகளில் ஈடுபடுகிறாரே என அயர்ச்சியும் ஏற்பட்டது உண்டு.

சலிப்பான இன்னபிற காரணங்களாலும், சில பல தெளிவு ஏற்பட்டமையாலும், பின்னாளில் எம்மை நாமே நெறிப்படுத்திக் கொண்டோம். இன்றைக்கு இச்செய்தியைக் கண்டதுமே, அவருடைய அந்த அர்ப்பணிப்பு இன்னமும் தொடர்கிறது என்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அரசுக்கு வேலை பார்க்கும் எதோ ஒரு தனிநபர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்.

தமிழ்நாட்டில், அதுவும் உடுமலைப் பேட்டையில், தளிக்கு அருகண்மையில் வந்து இக்காரியத்தைச் செய்வதென்பதும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய ஒரு தீவிரவாதம்தான்! இது போன்ற செயல்களைத் திமுகவினர் உடனுக்குடனே கண்டித்துக் களைய வேண்டும். இல்லாவிடில் போடிபட்டித் தம்பு வழியில், எஞ்சிய உடுமலைத் திமுகவினரும் கூடாரத்தை விட்டு வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!

19 comments:

  1. ||இது போன்ற செயல்களைத் திமுகவினர் உடனுக்குடனே கண்டித்துக் களைய வேண்டும்||

    உங்க திமுக பாசத்துக்கு ஒரு அளவே இல்லீங்களா? மனசைத் தொட்டுச் சொல்லுங்க, இதையெல்லாம் திமுக எதிர்க்குமா என்ன? எந்த உலகத்திலங்க மாப்பு இருக்கீங்க?


    ||எஞ்சிய உடுமலைத் திமுகவினரும் கூடாரத்தை விட்டு வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!||

    எதைக் கண்டிச்சுங்க வெளியேறுவாங்க! அப்படிக் காரணம் சொல்லி வெளியேற புதுசா ஒரு காரியம் தேவையா!!!?

    ReplyDelete
  2. என்ன செய்யுறதுங்க மாப்பு, தாயா புள்ளையா இருந்து வந்தது?!

    ReplyDelete
  3. அப்படியே இருந்தாலும் உங்க எதிர்பார்ப்பு ’அநியாயமானது’!

    உங்ககிட்டேயிருந்து இந்த மாதிரி எதிர்பார்க்கல!

    ReplyDelete
  4. மாப்பு, நீங்க பொதுவா திமுக’ன்னு பாக்குறீங்க.... உடுமலை ஒன்றியமும், தளி ஒன்றியமும் சற்று மாறுபட்டது. தளி மாரிமுத்து, உருத்திராபாளையம் மாரிமுத்துன்னு எல்லாம் இருந்த இடமுங்க அது!!

    இப்ப எப்படின்னு தெரியாது... இருந்தாலும் அந்த இடத்துல இருக்கிற திமுககாரனுக்குன்னு ஒரு மாண்பு இருக்கு... அந்த ஒரு பிடிமானம்தான் காரணம்!!

    ReplyDelete
  5. நம்ப்ப்ப்ப்ப்பி சொல்றீங்க. பார்க்கலாம்.மாண்பு நிக்குதா. மாப்பு ஓடுறாரான்னு:)

    ReplyDelete
  6. பாலாண்ணே,

    ஒரு அங்கலாய்ப்புதான்... இதெல்லாம் கண்டுக்காம விடக்கூடாதுங்ற ஏக்கமும்!!

    ReplyDelete
  7. //கல்லூரி நாட்களில், அண்ணன் இராமகிருஷ்ணன் அவர்களது அபிமானியாக இருந்தேன். அவர் ஒரு மாபெரும் தியாகி என்பதனாலேயே. சில வேளைகளில், வேண்டாத வேலைகளில் ஈடுபடுகிறாரே என அயர்ச்சியும் ஏற்பட்டது உண்டு. //

    சமூகம் சார்ந்த உணர்வோடு இராமகிருஷ்ணன் இருப்பது கோவைக்கு பெருமையே என்பேன்.

    ReplyDelete
  8. நானும் இன்றைய செய்திகளில் பார்த்தேன். என்ன ஒரு அயோக்கியத்தனம்...

    பரபரப்பிற்கு அப்பாற்பட்ட சூழலில் இருக்கும் ஒரு பள்ளியின் நாட்காட்டியில் இதை எல்லாம் செய்வது கொடூரமானது.

    ReplyDelete
  9. ***இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.***

    இதெல்லாம் ரொம்ப அதிகம், மணியண்ணா! நீங்க சொல்றதாலே நம்புறேன்.

    அயோக்கியத்தனம் என்பதெல்லாம் உங்க பெருந்தன்மை. அதைவிட "நல்ல வார்த்தை" தலைப்பில் போடனும்!

    ReplyDelete
  10. இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.//

    இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். ஒவ்வொரு ஆள் மனசா உடைக்கணும்னா அவங்கவங்க வீட்டிற்கு முன்னாடியும் பிரச்சினை வந்து கதவ தட்டினாத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவிங்க...

    வடிகட்டின அயோக்கியத்தனம், பழம!

    ReplyDelete
  11. இராணுவ ரீதியாக எதுவும் செய்ய முடியும் அப்படிங்ற பொருள்ல போட்டிருக்குன்னு நண்பர், நாட்காட்டியின் படம் அனுப்பி இருக்காருங்க.

    அது, எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளிகளில் விநியோகிக்கக் கூடியது அல்ல அது.

    ReplyDelete
  12. இந்தக்காலண்டர ஓசில குடுத்து ஓட்டுக்கேட்டாலும் கேப்பாங்க நம்மூரு அரசியல்வாதிங்க. அதையும் வாங்கிக்கொண்டு போடவும் மக்கள் இருக்காங்க. ராஜபக்சே செய்த இன அழிப்பை ஊடகங்கள் தெளிவாக மறைத்தாயிற்று, இவரோ யாரோ சிவப்புத்துண்டு சித்தர்னு பூஜை கூட போடுவாங்க

    ReplyDelete
  13. //இது போன்ற செயல்களைத் திமுகவினர் உடனுக்குடனே கண்டித்துக் களைய வேண்டும்//

    annaee... they have turned a blind eye to things much much bigger than this in the past.... the greed for power will veil so many things behind. I do appreciate your anger/concern but I am afraid it will remain just an angst. :(

    ReplyDelete
  14. எல்லாமே சாத்தியம் - ஒரு நாட்டிலிருந்து துரத்தப்பட்டு தெறித்து ஓடுவது கூட

    ஆனால் நீங்க திமுக மேல வைச்சிருக்க பாசம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்குது.

    உள்ளூர் திமுக தொண்டர்களால் கொள்கை முடிவை மாற்ற முடியுமா?

    அவர்கள் வெறும் செயல்வீரர்களே.

    யோசியுங்கள் தல

    ReplyDelete
  15. பொங்கல் வாழ்த்துக்கள் (புத்தாண்டு சொல்லலாமா தெரியல)

    ReplyDelete
  16. கேடுகெட்ட செயல். இதைவிட கொடூரங்கள் நடந்தபோது அமைதியாயிருந்த 'வாக்கப்பட்ட கூட்டம்' இப்போது மாத்திரம் பொங்கி எழுமா?

    ReplyDelete
  17. உடனடியாக தடை செய்ய வேண்டிய செயல்

    ReplyDelete
  18. "எல்லாமே சாத்தியம்" பல பொருள் சொல்லுதே.

    ReplyDelete
  19. tamil unarvodu iruggeenga , jaggiratha

    ReplyDelete