12/29/2010

அமெரிக்க அதிபராக ஒரு இந்திய வம்சாவளிப் பெண்?

அமெரிக்க அதிபராக ஒரு இந்திய வம்சாவளிப் பெண் வர வாய்ப்பு இருக்கிறதா? சமீபத்தில் கூட, லூசியானா ஆளுநராக இருக்கும் மாண்புமிகு Bobby Jindal அவர்களுடைய பெயர் வலுவாகப் பரிந்துரையில் இருந்தமை, அதற்கான வாய்ப்புகளைப் பறைசாற்றும் விதமாக அமைந்தது.

மேலும் எமது அண்டை மாகாணமான தென் கரோலைனா ஆளுநராக மாண்புமிகு Nikki Haley அவர்கள் சமீபத்தில் பதவி ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

கூடுதலாக, மற்றுமொரு புள்ளி விபரத்தையும் நாம் ஆராய வேண்டி இருக்கிறது. கடைசியாக எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்க குடியேற்றத்தின் சதவீதம் என்பது 7.6% ஆகும்.

ஆனால், 1990க்கும் 2000க்கும் இடையில் நிகழ்ந்த இந்தியக் குடியேற்றமானது, முந்தைய பத்தாண்டுகளோடு ஒப்பிடுகையில் 105% உயர்வாக இருந்தது. 2000க்கும் இன்றைய நாளுக்கும் இடையிலான குடியேற்றம் தோராயமாக 110%க்கும் அதிகமாக இருக்குமெனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. இப்படியாகப் பெருகிவரும் இந்தியர்களின் எண்ணிக்கையும், நமது யூகத்திற்கு வலு சேர்ப்பனவாகவே உள்ளன.

அடுத்ததாக, அமெரிக்காவில் இருக்கும் நம்மவர்களின் கல்வியறிவு எப்படியாக உள்ளது? நம்மவர்களில் 67% பேர், குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்; 40% பேர் முதுகலைப் பட்டம் பெற்றவராக இருக்கிறார்கள். ஆனால் தேசிய அளவில், பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 28 சதவீதம்தான்.

நம்மவரிலே ஆண், பெண் எனப் பிரித்தோமானால், பெண்கள் கிட்டத்தட்ட 95%க்கும் மேலானவர்கள் பட்டம் பெற்றவர்கள்.

இந்தியர்களில் கிட்டத்தட்ட 73% பேர் பணிக்குச் செல்பவர்களாகவும், 27% பேர் தொழில் முனைவோராகவும் இருக்கிறார்கள். பணிக்குச் செல்லும் 73% பேரில், கிட்டத்தட்ட 58% பேர் மேலாண்மை அல்லது நிபுணத்துவப் பணி புரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பின்னணியில், இந்திய வம்சாவளியர் ஒருவர் அமெரிக்காவின் அதிபராக ஆக முடியுமா, முடியாதா?? சரி, அமெரிக்க அதிபராக ஆவதற்கான அடிப்படைத் தகுதிகள்தான் என்ன?

  • அமெரிக்க மண்ணில் பிறந்தவர் மட்டுமே அதிபராக ஆகமுடியும். (ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு)
  • குறைந்தபட்சம் 35 வயது உடையவராய் இருத்தல் வேண்டும். John Kennady அவர்கள்தான் இன்றைய தேதியில் இளைய வயதில் அதிபரானவர். அதிபர் ஆகும்போது, அவரது வயது 43.
  • குறைந்தபட்சம் 14 ஆண்டுகள், அமெரிக்க மண்ணில் வாழ்ந்தவராய் இருத்தல் வேண்டும்.
இவையெல்லாம் அரசியல் சட்ட ரீதியான அடிப்படைத் தகுதிகள். இதற்கும் மேலானது, தனிமனித ஒழுக்கம், தலைமைப் பண்பு மற்றும் சமூகத் தொண்டு என்பனவாகும்.

நிறையக் குழந்தைகள் அதிபராகும் தன்மையோடு வளர்ந்து வருவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். வட இந்தியா, தென்னிந்தியா என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பது நம் எண்ணம் இல்லை என்றாலும் கூட, உள்ளமையைச் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது. ஆந்திரர்களுக்கு அடுத்தபடியாக, தமிழர்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகிறார்கள் என்பது கண்கூடு.

எனினும், தொழில் முனைவதில் குஜராத்தியர்கள் வலுவாக இருந்து வருகிறார்கள். ஆனால், அதுவே அவர்களுடைய அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அமைந்துள்ளது. எனவே, அடுத்த இருபதாண்டுகள் கழித்துப் பார்த்தால், தென்னிந்தியர்களே வலுவாய் இருப்பர் என்பது இன்றைய நடப்பின் அடிப்படையிலான யூகம்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அப்படியாக, முளையில் தெரியும் நாளைய அதிபர்கள் யார், யார்?

டெக்சாசு மாகாணத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் பதிவர் குடுகுடுப்பையின் மகளா? வட கரோலைனா மாகாணத்தில், கல்விக் கட்டிடத்திற்காய் உண்டியல் குலுக்கிக் கொண்டிருக்கும் பதிவர் சீமாச்சுவின் மகளா?? ஊர் ஊராய்த் திரியும் நாடோடி பழமைபேசியின் மகளா???

நம்மவர்களில் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் நிறைய விண்மீன்கள் பட்டொளி வீசி மின்னத்தான் போகின்றன! இதோ,  அந்த வகையில், முளைவிட்ட இளந்தளிர் ஒன்றின் தலைமைப் பண்பை ஆராய்வோம் வாருங்கள்!!

இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல கலாம் அவர்கள் கூறினார், ”குழந்தைகளே கனவு காணுங்கள்” என்று. எத்துனை மகத்துவமான சொல்லது?

குழந்தையின் கனவிலே அடங்கி இருக்கிறது ஒரு தேசத்தின் எதிர்காலம். குழந்தையின் கனவிலே அடங்கி இருக்கிறது, பெற்றவர்களின் எஞ்சிய நாட்கள். குழந்தையின் கனவிலே அடங்கி இருக்கிறது, பிரபஞ்சத்தின் அமைதி!

அப்படியான குழந்தைக்குத் தேவை, தலைமைப் பண்பு. தலைமைப் பண்பு என்பது, தலைவருக்கு மட்டுமே அமையும் பண்பு என்பது மடமையன்றோ? இப்பூவுலகில், ஒவ்வொரு குழந்தையும் தலைவரே! அதை நன்கு புரிந்து கொண்டு, கல்விக் கூடங்கள் இயங்க வேண்டும். இதோ இந்த அமெரிக்காவில் அது நிதர்சனம்!!

ஏழு வயதுக் குழந்தைகள், தத்தம் வகுப்புப் பிரதிநிதியைத் தெரிவு செய்யத் தேர்தல் நடத்துகிறார்கள். மூன்று குழந்தைகளை, மற்றவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அவர்களாகத் தேர்தலில் குதிக்கவில்லை. கவனிக்க! மற்றவர்கள், இவர்களை முன்மொழிந்து, வழிமொழிகிறார்கள்.

இருபத்து நான்கு பேர் இருக்கும் வகுப்பில், ஒரு குழந்தை ஏழு வாக்குகள் பெறுகிறது. மற்றொரு குழந்தை ஐந்து வாக்குகள் பெறுகிறது. இறுதியாக் வந்த இக்குழந்தை பனிரெண்டு வாக்குகள் பெறுகிறது. பெருவாரியான வாக்குகள் பெற்று, வகுப்புப் பிரதிநிதியும் ஆகிறாள். மொத்த வகுப்பும் கூடி தம் பிரதிநிதியைப் பாராட்டி வாழ்த்துகிறார்கள். அவர்களுடைய வயது என்ன? ஏழு!

வகுப்பினுடைய கோரிக்கையாக, அவர்களுடைய விருப்பப்படி ஏதோவொன்றை மாணவர் சங்கத்திற்குச் சென்று பணித்திட வேண்டும். வகுப்புப் பிரதிநிதியானவள், வகுப்பு மாணவர்களைக் கேட்கிறாள். அவ்வகுப்பு மாணவர்களும், தம் தலைவருக்கு மதிப்புக் கொடுத்து, ‘நீயே எதோவொன்றைச் சொல்லிவிட்டு வா’ எனப் பணிக்கிறார்கள். இவள் செய்த காரியம் என்ன?

”எனக்கு மற்றவர்களது மேலான மரியாதை, எண்ணம் மற்றும் அவர்களது உரிமை என்பன முக்கியமாகப்படுகிறது. இதோ, இந்தத் தாளை இங்கே வைக்கிறேன். இன்று மாலைக்குள், ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்தை இத்தாளில் குறிப்பிட வேண்டும்” எனச் சொல்கிறாள்.

அதன்படியே, ஒன்பது விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு, அதில் ஒன்றைத் தெரிவு செய்து மேலிடத்திற்குப் பரிந்துரை செய்கிறாள். எல்லா வகுப்பினரது கருத்துகளும் அலசப்பட்டு, இவர்களுடைய வகுப்பின் பரிந்துரையே தெரிவும் ஆகிறது.

இக்குழந்தை நாளைய அமெரிக்க அதிபர் ஆகமாட்டாளா? ஆவதற்கு சர்வ வல்லமையும் அமைய வேண்டும். இது போல, எண்ணற்ற இந்தியக் குழந்தைகள் அமெரிக்காவிலே வளர்ந்து வருகிறார்கள். அனைவரையும் வாழ்த்துவோம். அத்தோடு, இன்றைய இடுகைநாயகியும் மேற்கூறிய வகுப்புப் பிரதிநிதியுமான, பதிவர் சீமாச்சுவின் மகள் சூர்யாவை வாழ்த்துவோம்!!

34 comments:

  1. வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்த்துகள்.
    Fantastic.

    பெண் பெற்றது பொன் பெற்றது போன்றது என்று ஒத்து கொள்கிறோம்.

    பசங்களுக்கும் சான்ஸ் கொடுங்கய்யா.

    ReplyDelete
  2. அருமையான இடுகை. இந்தக் கல்வி முறை நம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.

    ReplyDelete
  3. வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்த்துகள்

    ReplyDelete
  4. //பசங்களுக்கும் சான்ஸ் கொடுங்கய்யா//

    ஓட்டுபோடுங்க ..கும்மி அடிங்க

    ReplyDelete
  5. எனக்கு ஒரு தமிழ்ப்பெண் அதிபராகனும்!

    ReplyDelete
  6. "ஓட்டுபோடுங்க ..கும்மி அடிங்க"

    -உங்களுக்கு நீரா ராடிய tape தான் வரும்.

    ReplyDelete
  7. எனக்கு ஒரு தமிழ்ப்பெண் அதிபராகனும்!
    //

    ஓட்டு சேக்கத்தான் தேசி.:)

    ReplyDelete
  8. சூர்யா அதிபராகி, இட்லியை அமெரிக்காவின் தேசிய உணவாக மாற்றவேண்டும். மெக்டொனாட்ஸில் அமெரிக்கர்கள் இட்லிடை டிஸ்யூ பேப்பரில் வைத்து கடிப்பதை பார்க்க காமெடியாக இராது :)))

    ReplyDelete
  9. விளையும் பயிர் முளையிலே தெரியும் !!!!

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  10. வாழ்க! வளர்க! வெல்க சூர்யா!!

    ReplyDelete
  11. வாழ்த்துகள்.!!!

    வாழ்த்துகள்.!!

    வாழ்த்துகள். !!!

    ReplyDelete
  12. அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க..
    சூர்யா அம்மா மாதிரின்னு நெனைக்கிறேன் அதான் இவ்ளோ சூட்டிகையா இருக்கு, சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  13. என்னதான் இருந்தாலும் சீமாச்சு அண்ணன் மாதிரி வராது. இருந்தாலும் சூர்யாவுக்கு அவுங்க அம்மா மாதிரி. அதான் இப்படி. சூர்யாவுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. ----"அமெரிக்க அதிபராக ஒரு இந்தியப் பெண்?"---

    ஒருவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவுடன் அவர் அமெரிக்கர் ஆகிவிடுவார். அவர்களை மறுபடியும் இந்தியர் என்று சொல்வது இரண்டு நாட்டு குடியுரிமைச் சட்டங்களையும் அவமரியாதை செய்வது போன்றது. :-(((

    இந்தியர் (இந்தியக் குடியுரிமை உள்ளவர்) அமெரிக்காவின் அரசியல் பதவிகளில் பங்கு கொள்ள முடியாது.

    கல்பனா சாவ்லா தொடங்கி இன்றுவரை தவறாக இந்த இந்தியர் என்ற பதம் பயன்பட்டுவருகிறது.

    இந்திய வம்சாவழியினர் என்று சொல்லலாமே தவிர இந்தியர் என்று சொல்லமுடியாது.

    **

    இப்படி ஒரு அமெரிக்கர் (இந்திய வம்சாவழி அமெரிக்கர்) அமெரிக்காவிற்க்கு அதிபராக வருவதால் இந்தியாவிற்கு ஒரு பயனும் இல்லை.

    பாபி ஜின்டால் தன்னை, "இந்திய வம்சாவழி" என்று மறந்தும்கூட சொல்லமாட்டார். அமெரிக்க அரசியலில் அவை எல்லாம் மைனஸ் பாயிண்டாக (முழுமையான அமெரிக்கனாக இல்லை என்று) பார்க்கப்படும்.

    **

    ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப குடியுரிமை வாங்கிவிட்டால் (அல்லது பிறப்பால் வந்த குடியுரிமை) முழுமனதோடு அந்த நாட்டை நேசிக்க வேண்டும். அவர்களை மறுபடியும் மறுபடியும் இந்தியர் என்று அடையாளம் காட்டிக் கொண்டிருக்கக்கூடாது.

    **

    இந்தக் குழந்தைகள் அமெரிக்கர்கள். அவர்கள் அந்த நாட்டில் அரசியல் பதவிகளுக்கு வருவது ஆச்சர்யம் இல்லை.

    அவர்கள் இந்திய வம்சாவழி என்பதால் இந்தியாவிற்கு புண்ணாக்கு அளவிற்குகூட பயன் இல்லை. நான் சொல்வது தவறு என்றால், "பாபி ஜிண்டால்" அல்லது "நிக்கி" அவர்களின் சமீபத்திய அல்லது இதுவரை அவர்கள் பேசியுள்ள அல்லது எந்தவிதத்திலாவது தன்னை இந்திய அரசியல் அல்லது மக்களுடன் தொடர்பு படுத்தி நன்மை /தீமை/ பயன் என்று பேசியுள்ள பேச்சுக்ளைச் சுட்டவும். உதவியாய் இருக்கும்.

    ***


    எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்களின் திறமைமையை ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் இந்த அமெரிக்க குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.

    **

    கொசுறு:
    கடந்த தேர்தலில் ஒபாமா முஸ்லீமா? அவர் சர்ச்சுக்குப் போவாரா? என்றெல்லாம் கேள்வி வந்தபோது ஓபாமாவால் " நான் முஸ்லீமாகவே இருந்தால் என்ன தவறு?" என்று பேசுவதற்கு அவரால் முடியவில்லை. நான் சர்சுக்குப்போவேன் என்றுதான் சொல்ல முடிந்தது. ஆனால் அதற்கு பதிலளிக்கும் விதமாக "காலின் பவல்" மட்டுமே "ஒபாமா முஸ்லீமாக இருந்தால்தான் என்ன?" என்று கேட்டார்.

    பழைய எச்சங்களை சுமந்துவரும் யாரையும் அமெரிக்கர்கள் அமெரிக்கர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது போல இன்னும் 50 வருடங்களுக்காவது கிறித்துவர் மட்டுமே அதிபராக முடியும்.

    .

    ReplyDelete
  15. //இருந்தாலும் சூர்யாவுக்கு அவுங்க அம்மா மாதிரி. அதான் இப்படி.//

    இளா, சீமாச்சு அண்ணன் பாஸ்டனுக்கு கெளம்புறாராம் நம்மள அடிக்க, எங்கியாவது ஓடிடலாம் வாங்க..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  16. @@கல்வெட்டு

    வணக்கம்; இந்திய வம்சாவளி எனக் குறிப்பிடுவதே சரி; திருத்தி விடுகிறேன்!

    அடுத்ததாக, அரசியல் சரித்தன்மை கருதி.. இன்றைய நிலை அப்படியாக இருக்கிறதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நிச்சயமாக அந்நிலை மாறும்..

    எல்லாமும் எண்ணிக்கையைப் பொறுத்தே அமைகிறது...

    change in paradigm makes difference... I believe, we are going to see the change in coming years gradually!!

    ReplyDelete
  17. இந்திய வம்சாவளி முன்னற்ற கழகத்தின் சார்பாக வருங்கால அமெரிக்க அதிபராக வர விருக்கும் சூர்யாவுக்கு
    வருங்கால கலிபோர்னிய கவர்னர் சார்பாக வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  18. //பழமைபேசி ,

    எல்லாமும் எண்ணிக்கையைப் பொறுத்தே அமைகிறது...//

    ஓட்டரசியலில் எண்ணிக்கைதான் பிரதானம். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால். அமெரிக்கர்களை இந்தியர்கள் என்று சொல்வது மிகவும் தவறு.

    நெஞ்சில் கைவத்து உறுதிமொழி எடுத்து குடியுரிமை வாங்கி அமெரிக்கனாக மாறிவிட்டவர்களை அமெரிக்கர்கள் என்று சொல்வதே நல்லது.

    இல்லை என்றால் இரண்டு நாடுகளையும் மனதளவில் ஏமாற்றுவது போன்றது.

    .

    ReplyDelete
  19. //ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப குடியுரிமை வாங்கிவிட்டால் (அல்லது பிறப்பால் வந்த குடியுரிமை) முழுமனதோடு அந்த நாட்டை நேசிக்க வேண்டும். அவர்களை மறுபடியும் மறுபடியும் இந்தியர் என்று அடையாளம் காட்டிக் கொண்டிருக்கக்கூடாது.//

    கல்வெட்டு,

    இதெல்லாம் நடைமுறையில சாத்தியமே இல்லைங்க! பில் கிளிண்டன் தன் மூதாதையர்கள் அயர்லாந்து எனக் கூறினது இல்லையா?

    ஆப்பிரிக்க அமெரிக்கன் எனச் சொல்வதில்லையா? பாபியும் நிக்கியும், இந்தோ அமெரிக்கன் எனக் கூறிக் கொள்வது இல்லையா?? சைனீசு அமெரிக்கன் எனச் சொல்வது இல்லையா?? ப்ளோரிடா செனட்டர்,மார்க் ரூபியோ தான் ஒரு க்யூபன், க்யூபா வம்சாவளியினருக்காய் குரல் கொடுப்பேன் எனச் சொல்லவில்லையா?? மெக்சிகோவையும் மெக்சிகன் மக்களையும் கையாள்வதற்கு அரிசோனா ஆளுனர் பில் ரிச்சர்ச்ய்டனை நாடுவது இல்லையா?

    அரசியல் சரித்தன்மையைக் கருத்தில் கொண்டாலும் கூட, முந்தை என்பதும் கூட வரத்தானே செய்யும்??

    ReplyDelete
  20. //ஓட்டரசியலில் எண்ணிக்கைதான் பிரதானம். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால். அமெரிக்கர்களை இந்தியர்கள் என்று சொல்வது மிகவும் தவறு. //

    ஒப்புக்கொள்கிறேன்... என் குழந்தை தெருவில் சென்று கொண்டிருக்கிறாள்... ஒரு வெள்ளைக்கார அமெரிக்கத் தாய் என்னவெனச் சொல்லிக் குறிப்பிடுவாள்?

    “see, that Indian, little girl is walking all alone..." Isn't??

    ReplyDelete
  21. ஆஹா, சீமாச்சு அண்ணா பொண்ணு இப்பவே கலக்க ஆரம்பித்து விட்டதா? சுட்டிப் பெண் சூர்யா-விற்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. // இதெல்லாம் நடைமுறையில சாத்தியமே இல்லைங்க! பில் கிளிண்டன் தன் மூதாதையர்கள் அயர்லாந்து எனக் கூறினது இல்லையா?//

    பில் சொன்னார், கலிபோர்னியா கவர்னர் சொல்கிறார். .....

    எனது கேள்வி... பொது வெளியில் பாபியும் , நிக்கியும் ஏதாவது சொல்லி உள்ளார்களா?

    ***

    //ஆப்பிரிக்க அமெரிக்கன் எனச் சொல்வதில்லையா? பாபியும் நிக்கியும், இந்தோ அமெரிக்கன் எனக் கூறிக் கொள்வது இல்லையா?? சைனீசு அமெரிக்கன் எனச் சொல்வது இல்லையா?? //


    அதே.
    நீங்கள் "இந்தோ அமெரிக்கன்" என்று சொல்லலாம். இந்தியர் என்று சொல்வது தவறு என்கிறேன். புரியவில்லையா அல்லது விவாதமா? :-(((

    இந்தியவம்சாவளியினர் என்று சொல்லுங்கள் அல்லது இந்தோ அமெரிக்கன் என்று சொல்லுங்கள்.

    இந்தியர் என்று சொல்லாதீர்கள். அவ்வளவே.


    ****


    // ப்ளோரிடா செனட்டர்,மார்க் ரூபியோ தான் ஒரு க்யூபன், க்யூபா வம்சாவளியினருக்காய் குரல் கொடுப்பேன் எனச் சொல்லவில்லையா?? மெக்சிகோவையும் மெக்சிகன் மக்களையும் கையாள்வதற்கு அரிசோனா ஆளுனர் பில் ரிச்சர்ச்ய்டனை நாடுவது இல்லையா?//

    மறுபடியும் நான் கேட்பது. பாபியும் நிக்கியும் ஏன் அப்படி ஏதும் சொல்லமாட்டேன் என்கிறார்கள் என்பதே. அவர்கள் இந்திய வம்சாவழி என்பதால் இந்தியாவிற்கு புண்ணாக்கு அளவிற்குகூட பயன் இல்லை.

    "பாபி ஜிண்டால்" அல்லது "நிக்கி" அவர்களின் சமீபத்திய அல்லது இதுவரை அவர்கள் பேசியுள்ள அல்லது எந்தவிதத்திலாவது தன்னை இந்திய அரசியல் அல்லது மக்களுடன் தொடர்பு படுத்தி நன்மை /தீமை/ பயன் என்று பேசியுள்ள பேச்சுக்ளைச் சுட்டவும். உதவியாய் இருக்கும்.
    ***


    இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவிற்கு பதவிக்கு வருவதால் இந்தியாவிற்கு ஒரு நன்மையும் இல்லை எனது எனது கருத்து.


    உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். மதிக்கிறேன்.


    ***

    // ஒப்புக்கொள்கிறேன்... என் குழந்தை தெருவில் சென்று கொண்டிருக்கிறாள்... ஒரு வெள்ளைக்கார அமெரிக்கத் தாய் என்னவெனச் சொல்லிக் குறிப்பிடுவாள்?

    “see, that Indian, little girl is walking all alone..." Isn't??//



    ஆசியன் அமெரிக்கன்

    ஆப்ரிக்கன் அமெரிக்கன்

    இந்தோ அமரிக்கன்... உள்ள நாட்டில் ஏன் "அய்ரோப்பிய அமெரிக்கன்" என்றோ அல்லது "ரஷ்ய அமெரிக்கன்" என்றோ அடையாளங்கள் இல்லை என்பதை மிகச்சிலரே சிந்தித்து தனக்குள் கேள்வி எழுப்புவார்கள்.

    உதாரணத்திற்கு, உங்கள் குழந்தை அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என்று கொள்வோம். நீங்களே அவர்களை இந்தியர்கள் என்று தலைப்பிட்டு எழுதும்போது , ஒரு (அய்ரோப்பிய) அமெரிக்கன் உங்கள் குழந்தைகளை அமெரிக்கன் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி???

    ***

    அரசியல் மிகயும் ஆழமானது . அதன் தந்திரங்கள் சூத்திரங்கள் பிடிபட ஒவ்வொருவருக்கும் ஒரு காலக்கெடு உண்டு. உங்களின் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது.


    என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் "ஆசியன் அமெரிக்கன்" ஆக இருக்க முடியுமே தவிர அமெரிக்கனாக (அய்ரோப்பிய அமெரிக்கன் போல) அடையாளம் காண இன்னும் 200 வருடங்கள் ஆகலாம்.

    **

    அதுவரையில் நீங்களும் அவர்களை இந்தியர்கள் என்று சொல்லிக் குழப்பவேண்டாம். நீங்கள் அமெரிக்கனாக (குடியுரிமை பெற்றவர்) இருந்தால் சத்தாமாக அமெரிக்கன் என்று சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளையும் சொல்லச் சொலுங்கள். அதுதான் நீங்கள் எடுத்த உறுதிமொழிக்கு உண்மையாய் இருத்தல்.

    **

    Indian origin எனது வேறு இந்தியர் எனது வேறு . ஒருவர் Indian origin ஆக‌ இருப்பதால் அவர் இந்தியரல்ல.


    *

    ReplyDelete
  23. கல்வெட்டு,

    நீங்கள் சொல்வது புரிகிறது. அரசியல் சரித்தன்மையோடு நீங்கள் பேசுகிறீர்கள். நான், யதார்த்தத்தைப் பேசுகிறேன்.

    அரசியல் ஆழமானதுதான்... அருகி வரும் மக்கள்தொகையும் பெருகி வரும் மக்கள் தொகையும் நிலையை மாற்றும்; மாறும்!

    மற்ற்படி, நானும் தங்களது கருத்தினைப் பெரிதும் மதிக்கிறேன்!

    ReplyDelete
  24. சூரியாவிற்கு எனது வாழ்த்துகள்.

    பழமைய ரவுண்டு கட்டறதுன்னா எல்லாருக்கும் குசி இஃகிஃகி. என் பங்குக்கு....

    பாபியும் நிக்கியும் தங்களை கடும் கிறுத்துவர்களாக அடையாளப்படுத்திக்கொண்ட பஞ்சாபியர்களே. அதைக்குறிப்பிட பழமை தவறிவிட்டார்.

    கல்வெட்டு தற்போது அப்படின்னு போட்டுக்குங்க.
    தற்போது பாபியும் நிக்கியும் தங்களை இந்திய வம்சாவளியினர் என்று சொன்னால் ஆளுனர் ஆக முடியாது. தற்போது Cow beltல non-christian ஆளுநர் ஆவது சாத்தியமா? no chance. நிறைய இந்தியவம்சாவளியினர் வாக்கு செலுத்தும் போது இந்நிலை மாறும்.

    இந்திய வம்சாவளியினர் நிறைய பேர் அரசியல்\அதிகார பதவிக்கு வரும் போது மட்டுமே இந்தியாவிற்கு சில நன்மைகள் கிடைக்கும்.

    இரவி மெக்கில திங்கும் எல்லாரும்(வெள்ளை) டிசு பேப்பர் வைச்சு திங்கிறதல்லை. தின்னுபுட்டு டிசுல துடைப்பாங்க (நான் பார்த்தவரைக்கும்).

    ReplyDelete
  25. @@குறும்பன்

    வாங்க, வணக்கம்!

    நடப்பு நிலையிலிருந்து.... நீட்சியாக மக்கள் தொகையும், நம்மவர் பங்கும் எப்படியெல்லாம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கு... அப்படி அதிகரிக்கும்பட்சத்தில் வாய்ப்பு அமையலாம்ங்ற யூகம்... இதான் இடுகையின் உள்ளீடு....

    கிறித்துவர்கள் மட்டுமே அதிபர் ஆக முடியும்ன்னு சட்டம் சொல்லுதா? இல்லையே!

    எண்ணிக்கைச் சூழல் மாறும் போது, எல்லாமும் மாறும்ங்றது ஒரு எதிர்பார்ப்பு! அவ்வளவுதான்!!

    ReplyDelete
  26. //கிறித்துவர்கள் மட்டுமே அதிபர் ஆக முடியும்ன்னு சட்டம் சொல்லுதா? இல்லையே//

    சட்டம் சொல்லைதான். ஆனா அது தானே உண்மை\நடப்பு.

    அமெரிக்க அதிபராவதே கிறுத்துவரா இருந்தா தானே சாத்தியம்.

    ReplyDelete
  27. இந்திய வம்சாவளியினர் அமெரிக்க குடியுரிமை பெற்றாலும் தங்கள் தனித்துவத்தை பல வருடங்களாக கடைப்பிடித்து தான் வருகின்றனர். ஒரு போதும் இழப்பதில்லை. அதனால் அமெரிக்க குடியுரிமைக்கு ஒரு போதும் தவறு இழப்பதும் இல்லை. இழைப்பதாக உள்ளூர் மக்களும் கருதுவதில்லை.
    இந்திய வம்ச வழியினர் இந்திய சுதந்திர தினத்தை உள்ளூர் மேயர், கவர்னர் ஆகியோரை வைத்து கொண்டாடுகின்றனர் . பல இடங்களில் கோவில் கட்டி, இந்தியாவிலேயே விட்டுவிட்ட பல பண்டிகைகளை அமெரிக்காவிலும் கொண்டாடுகின்றனர். நவராத்திரியை அமெரிக்காவில் கொண்டாடும் அளவு தமிழ்நாட்டில் குறைந்து விட்டது என்று கூட சொல்லலாம். ஆயிரம் இரண்டாயிரம் இந்திய வம்சாவெளியன்ர் ஒரே இடத்தில் கூடி தீபாவளியை வான வேடிக்கையுடன் கொண்டாடுகின்றனர். இதில் நிகழ்த்தும் உள்ளூர் மேயர், கவர்னர் அவர்களின் உரையைக் கேட்டுப் பாருங்கள். எந்த அளவுக்கு இவர்களுக்கு சகிப்புத் தன்மை இருக்கிறது என்று தெரியும்.
    இந்தியர் என்று சொல்வதாலும் இந்திய கலாசாரங்களை அமெரிக்காவில் கடைபிடிப் பதாலும், ஒரு போதும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள் தமது குடியுரிமைக்கு இணக்கம் செய்விப்பதாக அமெரிக்க அரசு கருதுவது இல்லை. அப்பிடி இருந்தால் இந்நேரம் பல ஆயிரம் மக்கள் குடியுரிமை போயிருக்கும். இல்லாத ஒன்றை தானாக உருவகப் படுத்த தேவையில்லை.
    பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தங்கள் சுற்றத்தாரை விட்டு வாழும் மக்கள் என்று கருதும் உள்ளூர் மக்கள் அதிகம். இப்ப சமீப காலமாகத்தான் வேலைவாய்ப்பு குறைவதால் ஒரு குறுகிய கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால் அது நீங்கள் சித்தரிக்கும் விதத்தில் அல்ல.

    contd.

    ReplyDelete
  28. பின்னொரு காலத்தில் ஒரு இந்திய வம்சா வழியினர் அமெரிக்க அதிபராகவோ அல்லது அதற்க்கு அடுத்த பதவியிலோ வர வாய்ப்பு இருக்கு, ஏற்படும். ஆனால் நம் இந்திய மக்களுக்கு தான் சோனியா காந்தி போன்றவர்களை பிரதமராக்க எதிர்ப்பது என்கிற குறுகிய மனப்பான்மை. ஆனால் சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காவிட்டாலும், இந்திய மண்ணுக்குத் தான் உழைக்கிறார். ஆனால் செய்யும் ஊழலும் அடிக்கும் கொள்ளையும் ஒட்டு மொத்த சமுதாயத்தையே அழிக்கக் கூடிய அளவுக்கு செயல்கள் செய்து வருவது இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து வரும் நம்குடி மக்கள்.

    I standby Pazhamaipesi.

    ReplyDelete
  29. பழம விடுய்யா கல்வெட்டு சரியாத்தான் சொல்றார்.

    ReplyDelete
  30. //பழம விடுய்யா கல்வெட்டு சரியாத்தான் சொல்றார்.
    //

    நான் ஒன்னுஞ் சொல்லவே இல்லியே?

    ஆமா, மூவேந்தர்களும்(செ.த, கு.கு & வரு) வந்து கருத்துச் சொல்லி இருக்கீங்க?? ஆச்சர்யமா இருக்கு?!

    ReplyDelete
  31. சூர்யா.... கலக்குமா.........!! :) :)

    ReplyDelete
  32. //சோனியா காந்தி போன்றவர்களை பிரதமராக்க எதிர்ப்பது என்கிற குறுகிய மனப்பான்மை. ஆனால் சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காவிட்டாலும்//

    பிறப்பால் அமெரிக்க குடிமகனான இந்திய வம்சாவளியை சார்ந்த ஒருவர் பிரதமர் ஆக வருவதி பற்றி பேசிகொண்டிருக்கும் போது "சோனியா காந்தி போன்றவர்களை பிரதமராக்க எதிர்ப்பது என்கிற குறுகிய மனப்பான்மை" என்ற சொல்லாடல் மூலம் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று தெரியவில்லை.

    // ஆயிரம் இரண்டாயிரம் இந்திய வம்சாவெளியன்ர் ஒரே இடத்தில் கூடி தீபாவளியை வான வேடிக்கையுடன் கொண்டாடுகின்றனர். இதில் நிகழ்த்தும் உள்ளூர் மேயர், கவர்னர் அவர்களின் உரையைக் கேட்டுப் பாருங்கள். எந்த அளவுக்கு இவர்களுக்கு சகிப்புத் தன்மை இருக்கிறது என்று தெரியும்//

    இதே உள்ளூர் மேயர், கவர்னர் தான் உள்ளூரில் மற்ற நாட்டு விழாக்களிலும் பேசுகிறார்கள் , அரசியல் அமைப்புக்கு உட்பட்ட உரையில் என்ன சகிப்புத் தன்மை உணர முடியும் !!!.

    ReplyDelete
  33. அருமையான பதிவு மற்றும் விவாதங்கள்.

    முதலில் அங்குள்ள பள்ளிகளில் உள்ள வழக்கத்தைப் பற்றிக் கூறியமை சிறப்பு.

    மாணவி சூர்யாவிற்கு வாழ்த்துகள்.

    கல்வெட்டு வைத்திருக்கும் வாதங்கள் சிறப்பு. அதே சமயம் இந்திய வம்சாவழியினர் என்ற காரணத்தினாலேயே ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது என்பது சரியான வாதம் கிடையாது என்றே நினைக்கிறேன்.

    அதே வேளையில், இந்திய வம்சாவழியினரின் வெற்றி அனைவருக்கும் ஒரு எ.காட்டாக அமையும். ஏற்கனவே அவ்வகையில் இந்திரா நூயி போன்றோர் தொழில்துறையில் சாதித்து வருகிறார்கள்.

    நன்றி.

    ReplyDelete