11/03/2010

மாமலை

எதேச்சையாய்
ஆடியைப் பார்க்கையில்
காண நேரிட்டது
Respected Teacher
I am
suffering from fever
So I am unable
to come to school
Please grant me a
leave for one day.
Yours Obediently,
Pazhamaipesi என
அன்று சொல்லத் துவங்கி
இன்று மலையாய்க் குவிந்து
முகத்தில் வழிகிறது பொய்!

13 comments:

  1. மாமலையாய் பொய். ஏன்ன்ன் ....?

    தீபாவளி கொண்டாட ஊர் திரும்பியாச்சா?

    வாழ்த்துகள்(தீபாவளி).

    ReplyDelete
  2. அப்பயிருந்தே பழமை பேசிட்டு இருந்தீங்களா?

    ReplyDelete
  3. என்னவோ சொல்லுறீங்க ?

    ReplyDelete
  4. ஒன்றும் விளங்கவில்லையே...

    ReplyDelete
  5. அழுந்தத் துடைத்து
    அடுத்தும் பார்த்திடின்
    ஆங்காங்கே தெரியும்
    yours truly
    sincerely yours
    yours faithfully
    வடுக்கள்.

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்குங்க ..!!
    ஆனா நான் பொய் சொல்ல மாட்டேன் . ஹி ஹி ஹி ...!!

    ReplyDelete
  7. //philosophy prabhakaran said...
    ஒன்றும் விளங்கவில்லையே..//

    கவிதை என்பதே, உணர்வுகளில் இருந்து வடிவதுதானுங்க... பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு, அறையில் இருக்கும் கண்ணாடியில் எதிர்பட்ட முகப்பிம்பத்தைக் கண்டதும் எழுந்த நினைப்புதான் இது! இஃகி!!

    ReplyDelete
  8. ***இன்று மலையாய்க் குவிந்து
    முகத்தில் வழிகிறது பொய்!***

    வயசாக ஆக, கூசாமல் பொய் சொல்ல கத்துக்கிறதென்னவோ உண்மைதான்!

    வய்சாக ஆக ஆளும் வளரும் அறிவும் வளரனும்! ஆனால் அறிவு வளர வளர ஒவ்வொருவரிடமும் பொய்மைதான் வளருது! :(

    ReplyDelete
  9. ***பழமைபேசி said...

    //philosophy prabhakaran said...
    ஒன்றும் விளங்கவில்லையே..//

    கவிதை என்பதே, உணர்வுகளில் இருந்து வடிவதுதானுங்க... பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு, அறையில் இருக்கும் கண்ணாடியில் எதிர்பட்ட முகப்பிம்பத்தைக் கண்டதும் எழுந்த நினைப்புதான் இது! இஃகி!!

    November 4, 2010 7:25 AM***

    மன்சாட்சியை தூக்கி எறிந்துவிட்டால், கண்ணாடியை எவ்ளோ நேர்ம பார்த்தாலும், இது போல கவிதை வராது. நல்ல வேளை பத்திரமா வச்சிருக்கீக! எங்களுக்கு ஒரு கவிதை கெடச்சது வாசிக்க! :)

    ReplyDelete
  10. //
    பொய் ஒன்றைச் சொல்லிவிட்டு, அறையில் இருக்கும் கண்ணாடியில் எதிர்பட்ட முகப்பிம்பத்தைக் கண்டதும் எழுந்த நினைப்புதான் இது
    //
    என்கிட்ட அலைப்பேசியில கதைக்கும்போது சொன்னதாண்னே???

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. மலையளவுக்கெல்லாம் பொய் இல்லை.பொய்.

    ReplyDelete
  13. வணக்கமுங்க பாத்து பலநாள் ஆச்சு அதுதா ஒரு எட்டு பாத்துட்டு போலாமுனு வந்தா பாபா பிளாக்சீப் கணக்கா ஒரு கவிதை,இருந்தாலும் நம்ம பேபி ஸ்கூல் நெனப்ப கெளப்பிவுட்டூடுச்சு.அடிக்கடி இப்படி ஏதாவது எழுதிவுடுங்க ஏதோ என்னமாதிரி ஆளுகளுக்கெல்லாம் பனங்கள்ளு குடுச்சமாதிரி ஒரு வொகச்சல் வருமுல்ல.

    ReplyDelete