10/25/2010

நகரம் ஆள்கிறது!

கைவிடப்பட்ட வீடுகள்
சிதைந்த வாழ்க்கை
இடம்பெயர்ந்த மக்கள்
மெளனித்த கோயில்மணி
பயனற்றுப்போன அம்மிகள்
உருத்தெரியா சந்தைப்பேட்டை
களையிழந்த தலைவாசல்
இருள்கொண்ட சத்திரம்
அற்றுப்போன சுமைதாங்கி
எறிந்துகிடந்த இலாடப்பை
குரலுடைந்த ஊர்த்தலைவர்
ஆளில்லா அரசமரத்தடி
ஊர் உறங்குகிறது
நகரம் ஆள்கிறது!
நகரம் ஆள்கிறது!!

13 comments:

  1. பழமை,
    இந்த 9 நிமிட வீடியோ வில் ஒரு நல்ல அம்சம் கூட இல்லையா. உங்க ஒவ்வொரு வரியும் நெஞ்சில ஆணி அடிக்கிற மாதிரி இருக்கு, தயவு செய்து நீங்களே இதற்கு ஒரு எதிர் கவுஜ எழுதிடுங்களேன். கொஞ்சமாவது சந்தோசப் படுவோம்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியும் நெஞ்சில ஆழமா இறங்குது. அருமையான எழுத்துக்கள்.

    ReplyDelete
  3. நகரம் ஆள்கிறதுதான்... ஆனால் காணொளியில் கண்ட காட்சி மனதை கொள்ளைகொள்கிறது.

    ReplyDelete
  4. நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தலை சுற்றும் நகர வாழ்வு
    தேர்ந்த குயவனாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கை
    மனம் சிதைந்த வாழ்க்கையிலும்
    கோவில் தேடும் மனிதம்
    பொருட்காட்சிகளில் தேடி வாங்கும்
    வளையலும், மருதாணியும்
    வளர்ந்த நாட்களில் ரசிக்காத
    புல்லும், கொக்கும், ஏரியும், எருமையும்
    என்றோ ஊர் திரும்புகையில்
    ஒளிப்பெட்டி நிறைக்கும் பசி
    அண்டார்ட்டிக் குளிர் அறையிலும்
    ஆலமரத்து நிழல்தேடும் ஆணி வேர்
    குளுகுளு காரில்
    நகரத் தலைவர்
    ஊர் உயிருடனிருக்கிறது
    நகரம் ஏங்குகிறது!
    நகரம் ஏங்குகிறது!

    ஓக்கேயா சேது சார்:))

    ReplyDelete
  6. ///குரலுடைந்த ஊர்த்தலைவர்
    ஆளில்லா அரசமரத்தடி//

    நாட்டாமை கூட இல்லைங்க ..!!!

    ReplyDelete
  7. இலாடப்பை?

    இதென்னங்க மாப்பு

    ReplyDelete
  8. @@ஈரோடு கதிர்

    இலாடச்சில்லுகள், சின்ன சுத்தி, கூர்மிகு கத்தி, ஆணிக்குச்சிகள், தாம்புக்கயிறு, சிறு முட்டி முதலானவற்றை மத்தியில் வைத்து, சணல்பை கொண்டு குறுக்காக மடித்து வைக்கப்பட்டிருக்கும் பை!

    என்னா கிராமத்து வேர் நீங்க? இஃகி, சரி பாலாண்ணன் சொல்றதையுங் கேட்டுட்டுப் போங்க!!

    ReplyDelete
  9. உண்மைதான் நண்பரே நகரம் ஆள்கிறது நரகம் ஆகிறது

    ReplyDelete
  10. வானம்பாடிகள் சார்,
    ரொம்ப நன்றி. கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஆனால் உறுத்தும் வரிகள்
    "குளுகுளு காரில்
    நகரத் தலைவர்
    "
    எவ்வளவு அழகா குயவன் சட்டி, cup பண்ணி காமிச்சாரு. வெள்ளைக்காரன் கூட கையைத் தட்டிட்டுப் போய்ட்டான்.
    நன்றி சார்.

    ReplyDelete
  11. ***ஆளில்லா அரசமரத்தடி
    ஊர் உறங்குகிறது
    நகரம் ஆள்கிறது!***

    எனக்கென்னவோ "ஆண்லைன்" தான் ஆள்றமாரி இருக்கு, மணீயண்ணா! :)

    ReplyDelete
  12. //ஆனால் உறுத்தும் வரிகள்
    "குளுகுளு காரில்
    நகரத் தலைவர்
    "//

    சார்! நகராட்சி கமிஷனர்சார். ஏஸி கார் இல்லாமலா. அவ்வ்வ்

    ReplyDelete
  13. அதில்லை சார். உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    ஆனா, பழமையாரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் நச் நச்னு உரைக்கிறது சார். எல்லாம் இழந்து விட்ட கிராம வாழ்க்கையாக சித்தரித்து இருக்கிறார்.

    நான் எதிர் பார்த்தது அதே கிராம வாழ்க்கையை மேன்மையாக சித்தரித்து ஒரு எதிர் கவிதை எதிர்பார்த்தேன். உங்களது நகரத்து வாழ்வை ஒட்டி தான் அந்த comparison . நான் எதிர் பார்ப்பது ஒன்றை குறை சொல்லாமல், கிராமத்தின் நிறைவான தன்மையை, பழமையாரின் சொற்சித்திரம் போல் உரைக்கக் கூடிய ஒரு எதிர் கவிதை.

    ReplyDelete