9/26/2010

ச்சட்டனூகா

சட்டனூகா விமான நிலையத்தில்
வெளியேறி
பக்கவாட்டில் இருக்கும்
எழில்மிகு லுக்அவுட் மலையின்
அழகில் இலயித்து
வனப்பில் மூழ்கி
மெல்ல மெல்ல அதன்மீது
ஏறிக் கொண்டிருந்தேன்!

ஐயா,
கொஞ்சம் இறங்குறீங்களா?
விடுதி வந்தாச்சு!
சடுதியில்
நினைவுக்குத் திரும்பியவனாய்
மேரியாட் விடுதிக்குள்...

புன்னகை தவழ
பிஞ்சு மொழியில்
வரவேற்பு மங்கை!
அவள் கொடுத்த
கனிவுமுலாம் பூசிய
அந்த திறவு அட்டையுடன்
மின்தூக்கியில் ஏறி
உயரச் சென்று
அறையை அடைந்தேன்!

அமைதி தேவதை
அன்பாய் வரவேற்று
பக்குவமாய்க் காட்டினாள் 
பரிசினை!
ஆம், இருந்தது
அறை முழுக்கத் தனிமை!!

13 comments:

  1. ஊர்ல இருந்து வந்து சேர்ந்தாச்சா?

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தனிமையும் ஒரு சுகமே

    ReplyDelete
  3. ஆம், தனிமை சில நேரங்களில் பரிசு போலத்தான்.......அழகு கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //லுக்அவுட்//

    என்னாதிது?

    ReplyDelete
  5. //ராஜ நடராஜன் said...
    //லுக்அவுட்//

    என்னாதிது?//


    வணக்கமுங்க; அந்த மலையோட பேரே அதுதானுங்....

    லுக்அவுட் மலை

    ReplyDelete
  6. ஊர்ல பொண்டு புள்ளைவில உட்டுப்போட்டு

    வரவேற்பு மங்கைய உத்து உத்து பாக்குறது

    அப்புறம் தனிமை வரமா என்ன பண்ணும்

    ReplyDelete
  7. இன்னும் இலையெல்லாம் நிறம் மாறலையா அந்த ஊர்ல ?

    ReplyDelete
  8. அட! அருமையான பிரதேசமானா இருக்கு. அங்க ரயில் பயணம் போனீங்களா!

    கதிரும் நீங்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் விடும் பின்னூட்டம், எப்போதுமே ரசிச்சிட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  9. ஈரோடு கதிர் said...
    ஊர்ல பொண்டு புள்ளைவில உட்டுப்போட்டு

    வரவேற்பு மங்கைய உத்து உத்து பாக்குறது

    அப்புறம் தனிமை வரமா என்ன பண்ணும்//

    ஏனுங் மாப்பு. நசரேயன் வந்து போனாரா. மனுசன் தனிமைன்னு வருத்தமா எழுதினா வரமாம்ல. :))

    ReplyDelete
  10. மேரியட் விடிதியில் பிஞ்சு மொழியா? வியாழன் இரவு வீட்டிக்கு போங்க கோவை மொழியில் பிரிச்சி மேய சொல்லுகிறேன்.

    ReplyDelete
  11. உண்மைதான் ந்ண்பரே தனிமைக்கு நாம் மட்டுமே உற்வின்ர்கள் அதனால்தான் ந்ம்மை வரவேற்க் ந்மக்கு முன்பே அது காத்திருக்கிற்து

    ReplyDelete