9/23/2010

தொலைந்தவன்

தாயகம் சென்றிருந்தேன்;
நான் தொலைந்து போன
அயல்நாடுகளைப் பற்றி
அடுக்கடுக்காய்
அடுக்கிச் சொன்னேன்;
இரவு நீண்டு விடியல் வந்தது!
கிழக்குப்புறச் சுவர்க் கெளளி
சப்புக் கொட்டியது
ஊர் எல்லையில்
சேவல் கூவியது
வில்வ மரத்துக் காகம்
கரைந்து சொல்லிற்று வணக்கம்
முதலாளாய் எழுந்தாள் அம்மா
ஆரவாரம் எதுவுமின்றி
அமைதியாய்
அன்பொழுகக் காட்டினாள்
நான் தொலைத்து வந்த
தாய் மண்ணை!!

13 comments:

  1. தாய் மண்ணில் மகிமை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இதையெல்லாம் எழுதாதீங்க மாப்பு. ஏற்கனவே புண்ணாகியிருக்க மனசு இன்னும் புண்ணாவுது

    ReplyDelete
  3. NRI(Non Return Indian)'s எல்லாருக்கும் மனதின் ஒரு மூலையில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு நினைவு....
    நல்லா இருக்கு அண்ணே...

    ReplyDelete
  4. நானும் முதலாளி மாதிரி தளபதி மாதிரி எப்பதான் போடுறது..ம்ம்ம்

    ReplyDelete
  5. இங்க இருக்கப்ப இது தோணல பாருங்க...

    ReplyDelete
  6. kaduku siruththaalum karam kuraivathillai. chinna pathivaaka irunthaalun ungal thaniththuvam palichidukirathu.
    nantri nanbare. vaalga valamudan.

    ReplyDelete
  7. தாய் மண்ணே வணக்கம்..

    ReplyDelete
  8. தொலைவில் இருந்தாலும்
    தொலைபேசியில் தினமும் பேசு
    தொலைந்து போகாமல் இருப்போம் - தாய்

    அம்மா அருகில் இருப்பதாய்
    அடிக்கடி சொல்கிறால் அன்பாய்
    தொலைத்து நிற்கிறேன் - நான்(ம்)

    ReplyDelete
  9. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  10. ம்ம்ம் என்னையும் அந்த உணர்வுக்கு தள்ளிவிட்டீர்களே நண்பா

    ReplyDelete