9/22/2010

கிட்டப்பார்வை

எட்டத்தில்...
எதிர்த் திசையில் செல்லும்
தொடருந்தைக் கண்டதும்
ஆசை ஆசையாய்

கையசைத்து விட்டு
வாஞ்சையுற்றுச் சொன்னான்...
யாரோ நல்லவங்க
நல்லபடியா
போய்ச் சேரட்டும்!!

இதோ
இவனது தொடருந்து
இவனிருக்கும் திசையில்...
பரபரப்போ பரப்பு

அவசர அவசரமாய்
முண்டியடித்து ஏறி
அக்கடாவென அமர்ந்தபின்
அண்டி இருக்கும்
இவர்களைச் சொன்னான்
மனுசங்களா இவிங்க?
இவங்கெல்லாம்....
செத்துத் தொலைஞ்சா தேவலை!!


15 comments:

  1. அட சாமி , இப்படி கூட இருக்காங்களா ..?

    ReplyDelete
  2. மனித மனம் சில நேரங்களில் இப்படித்தான் போய் வேடமணியும்............

    ReplyDelete
  3. மன்னிக்கவும், எழுத்துப் பிழை, பொய் வேடமணியும்.

    ReplyDelete
  4. இடுகை யாருடைய கண்ணுக்கும் தெரியாம கீழே உட்கார்ந்துகிட்டுருக்குதாக்கும்:)

    ReplyDelete
  5. எப்பிடிங்க கண்டுபிடிச்சிங்க.

    ReplyDelete
  6. நீங்க தொடருந்துலையும் போறீங்களா..??

    ReplyDelete
  7. இந்த ரெண்டாவதா சொன்னத வச்சிப் பார்க்கிறப்ப முதல்ல சொன்ன ‘நல்லபடியா போய்ச்சேரட்டும்னு’ சொன்னதும் வில்லங்கமால்ல தோணுது.

    ReplyDelete
  8. @@வானம்பாடிகள்

    அஃகஃகா!!

    அண்ணனுக்கு நிகர் வேற யாரு? அவரேதான்!!

    எட்ட இருக்கும் போது, அகச்சூழல்ல அன்பு தவழும். கிட்ட இருக்கும் போது, புறச்சூழல்னால அதுல தடங்கல்... அதான் இதுல நடக்குது!! இஃகி!!!

    ReplyDelete
  9. எங்கயோ இடிக்குதே (கொஞ்சம் தள்ளி உட்காரலாம்ல) இஃகி இஃகி. இக்கரைக்கு அக்கரை பச்சை.

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு

    ReplyDelete
  11. ''எட்ட இருக்கும் போது, அகச்சூழல்ல அன்பு தவழும். கிட்ட இருக்கும் போது, புறச்சூழல்னால அதுல தடங்கல்... அதான் இதுல நடக்குது;''இதையும் இடுகையிலே சேர்த்திருக்கலாமோ .

    ReplyDelete
  12. மாப்பு

    எதுவும் அனுபவமோ!?

    ReplyDelete
  13. நல்லாயிருக்குங்க பழமைபேசியாரே!!!

    ReplyDelete
  14. தமிழ் அறிவு அதிகம் கிடையாது. இருந்தாலும் நேக்கு புரிந்த வரிக்கும் கவிதை ரொம்ப நன்னா இருந்தது.

    என்றும் எப்போதும் அன்புடன்,
    ஆட்டையாம்பட்டி அம்பட்டன்!
    அல்லது
    அமெரிக்கா அம்பட்டன்!

    ReplyDelete