8/03/2010

நீலமலை ஓரம் ஒரு பயணம் - படங்கள்

நீலமலை ஓரம்
விழிகள் மயங்க
ஒரு வரம்
முகில்கள் படர
நீலமலை நாண
கலந்த கலவியின்
சிணுங்கல்ச் சிலுசிலுப்புச்
சாறலூசிகள் நம்மை
சாந்தமாய்க் குத்த
மயில்கள் தோகை விரிக்க
பச்சை! பச்சை!! பச்சை!!!

பசுங்காட்சிகள் எங்கெங்கும்
இவற்றின் உச்சத்தில்
களிறுக்கும் கலவி
கொள்ளை ஆசை
இளமஞ்சள் மினுமினுப்பில்
விரிந்து வழிந்த கேசம்
அடிநுனியின் சுருண்டிருந்த
ஒற்றை முடி
கொஞ்சு மொழிகள்
ஆ, ஆயாளேவென
ஏறெடுத்துப் பார்த்த
வஞ்சிமங்கையின்
ஒற்றைப் பார்வையில்
என்னவளின் ரெளத்திரம்
ஊடல் ஊற்றெடுக்க
தணித்த நீலமலை
வாழ்க எழில்வஞ்சி!!












47 comments:

  1. வீட்டிலே வாத்து பிரியாணியா ?

    ReplyDelete
  2. சிறுவாணி பக்கமா இந்த படமெல்லாம் எடுத்தீங்க

    ReplyDelete
  3. மேற்கு பக்கம் போய்விட்டு வந்த மாதிரி இருக்குது...

    ReplyDelete
  4. பசுமையான இடம்.. பாக்கறப்பவே குளு குளுன்னு காத்து அடிக்கற மாதிரி இருக்கு..

    ReplyDelete
  5. கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள். நன்றி

    ReplyDelete
  6. படங்கள் குளுமை.. கவிதை அருமை..

    ReplyDelete
  7. ங்கொய்யாலே.. குடும்பத்தோட போய் மல்லுப் பொண்ண சைட் அடிக்கிற மணிக்கு தில்லு ஜாஸ்திதாம்லே

    ReplyDelete
  8. ||சாறலூசிகள் நம்மை
    சாந்தமாய்க் குத்த||

    அட ஏனுங்க டி-சர்ட் போடலீங்ளா மாப்பு?

    ReplyDelete
  9. ||பச்சை! பச்சை!! பச்சை!!!||

    இதென்ன பச்சை பச்சையா பேசிட்டு

    ReplyDelete
  10. ||கலவி
    கொள்ளை ஆசை||

    ங்கொக்கா மக்கா... எட்டு வரியில ரெண்டு எடத்துல கலவி கலவினு அலையறாரே...

    ReplyDelete
  11. ||இளமஞ்சள் மினுமினுப்பில்||

    மினுமினுக்காது பின்ன!!!!

    ReplyDelete
  12. ||வழிந்த கேசம்||

    ஹ்ஹெ..ஹ்ஹே... வழியுதாம்ல

    ReplyDelete
  13. ||அடிநுனியின் சுருண்டிருந்த
    ஒற்றை முடி||

    எதாவது படிங்கன்னு சொன்னா சாலேஸ்வரம்னு முழிக்கிறது, இந்த ஒத்த முடி மட்டும் நல்லாத் தெரியுதாக்கும்

    ReplyDelete
  14. ||கொஞ்சு மொழிகள்||

    ஓஹோ.. கொஞ்சாது பின்ன

    அதென்ன கொங்குத் தமிழா இல்ல குழந்தைத் தமிழா

    ReplyDelete
  15. ||ஆ, ||

    அட... இதுதான் வாயத் தெறந்துக்கிட்டு பாக்குறதாக்கும்

    ReplyDelete
  16. ||வஞ்சிமங்கையின்
    ஒற்றைப் பார்வையில்||

    அதுக்கு மேலே பார்த்தா அவிங்க கண்ணு அவிஞ்சு போய்டும்ல

    ReplyDelete
  17. ||என்னவளின் ரெளத்திரம்
    ஊடல் ஊற்றெடுக்க||

    பின்ன கொஞ்சுவாங்களாக்கும், நாலு சாத்து சாத்தாம போனாங்களாக்கும்

    ReplyDelete
  18. ||நசரேயன் said...
    வீட்டிலே வாத்து பிரியாணியா ?||

    அலோ...நசரு
    எங்க மாப்புவ வாத்துனு சொல்றத வன்மையா கண்டிக்கிறேன்... ஒசரமா இருக்கிறதால கொக்குனு வேணா சொல்லுங்க

    ஏனுங் மாப்பு நேத்து கொக்கு பிரியாணிங்ளா

    ReplyDelete
  19. ||சின்ன அம்மிணி said...
    சிறுவாணி பக்கமா இந்த படமெல்லாம் எடுத்தீங்க||

    இல்லீங்கக்கா... இவுரு... கேரளா போயிருக்காரு ஒரு கவிதை எழுதுறதுக்காக

    ReplyDelete
  20. ||தாராபுரத்தான் said...
    மேற்கு பக்கம் போய்விட்டு வந்த மாதிரி இருக்குது...||

    அடடே.. யூத்து உங்கள கூட்டிக்காம போய்ட்டாரேங்ணா

    ReplyDelete
  21. ||நீலமலை ஓரம்
    விழிகள் மயங்க ||

    அட... அன்னிக்கு முகிலன் எழுதின கிசுகிசுக்கு இன்னும் மயக்கமா?

    ReplyDelete
  22. ||நீலமலை நாண||

    இதப்பார்ற மலையே மயங்குது எங்க மாப்புவ பார்த்து

    ReplyDelete
  23. //இளமஞ்சள் மினுமினுப்பில்
    விரிந்து வழிந்த கேசம்
    அடிநுனியின் சுருண்டிருந்த
    ஒற்றை முடி
    கொஞ்சு மொழிகள்
    ஆ, ஆயாளேவென
    ஏறெடுத்துப் பார்த்த
    வஞ்சிமங்கையின்
    ஒற்றைப் பார்வையில்//

    ஜேட்டா! ஆயாளு பார்வை ஒற்றைதன்னே. பக்‌ஷே நிங்கள் பார்வை ஒற்றன் பார்வையாயி:))

    ReplyDelete
  24. /களிறுக்கும் கலவிகொள்ளை ஆசை/

    ஆ! ஆனே! அது ஏது புல்லு கழிக்காம் கண்டுட்டு வரு ஜேட்டா. நமுக்கு ஒரு பாடு காசுண்டாக்காம். இனி அருகம்புல் ஜூஸ் இல்லா. ஆனைப்புல் ஜூஸ் பிஸினஸாணு.

    ReplyDelete
  25. ஈரோடு கதிர் said...
    ||வழிந்த கேசம்||

    ஹ்ஹெ..ஹ்ஹே... வழியுதாம்ல//

    அட இவரு வழிஞ்சத சொல்றாருங் மாப்பு.

    ReplyDelete
  26. ஈரோடு கதிர் said...
    ||அடிநுனியின் சுருண்டிருந்த
    ஒற்றை முடி||

    எதாவது படிங்கன்னு சொன்னா சாலேஸ்வரம்னு முழிக்கிறது, இந்த ஒத்த முடி மட்டும் நல்லாத் தெரியுதாக்கும்//

    அட! கத்தை முடி ஒத்தையா தெரிஞ்சிருக்குமுங்:))

    ReplyDelete
  27. ஈரோடு கதிர் said...

    //ங்கொய்யாலே.. குடும்பத்தோட போய் மல்லுப் பொண்ண சைட் அடிக்கிற மணிக்கு தில்லு ஜாஸ்திதாம்லே//

    ஆஹா! மாப்பு கோட்டை விட்டுட்டீங்களே. ச்சேரி. எப்பவும் எதிர்கவுஜ எதுக்கு. ஹைக்கூ போடுவம்

    மல்லு
    தில்லு
    ஜொல்லு!!

    எப்புடீஈஈஈஈ

    ReplyDelete
  28. //என்னவளின் ரெளத்திரம்ஊடல் ஊற்றெடுக்க//

    ஏனுங் மாப்பு! இத படிக்கிறப்ப வடிவேலு லைட்ட்ட்ட்ட்ட்ட்ட்டான்னு சொல்ற மாதறயே இல்ல?:))

    ReplyDelete
  29. கவிதையோட அர்த்தம் இப்போத் தான் புரியுது :)

    ReplyDelete
  30. !! ஜேட்டா! ஆயாளு பார்வை ஒற்றைதன்னே. பக்‌ஷே நிங்கள் பார்வை ஒற்றன் பார்வையாயி:))||

    சேட்டா ஆயாளு நோக்கில ப்ரஸ்னம் ஒன்னுமில்லா..பக்‌ஷே நிங்கள் நோகியால் கள்ளனாக்கும்

    ReplyDelete
  31. ஈரோடு கதிர் said...
    ||சாறலூசிகள் நம்மை
    சாந்தமாய்க் குத்த||

    அட ஏனுங்க டி-சர்ட் போடலீங்ளா மாப்பு?//

    அட! இல்லீங்! குளிர் விட்டுப்போச்சுன்னு சூசகமா சொல்றாராமா:))

    ReplyDelete
  32. ||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

    கவிதையோட அர்த்தம் இப்போத் தான் புரியுது :)||

    அட.. நாம எழுதுறதுக்கூட புரியுதா... அப்படிப்போடு

    ReplyDelete
  33. //நீலமலைவாழ்க எழில்வஞ்சி!!//

    அல்லாவ்! சின்னமாப்பு. என்னா அடி வாங்கினாலும் நம்மாளு சளைக்காதுடியோவ். நீலமலை போயும் நெனப்பப் பாரேன்.எழில் வஞ்சியாம்ல. (வஞ்சின்னா சேரநாடுதானே)

    ReplyDelete
  34. உங்களுதச் சொல்லல.. :)) நான் முதல்ல படிக்கறப்ப, நீலமலையத் தான் அப்படி வர்ணிச்சிருக்காருன்னு நினச்சிட்டேன் :)

    ReplyDelete
  35. ஈரோடு கதிர் said...
    ||நசரேயன் said...
    வீட்டிலே வாத்து பிரியாணியா ?||

    அலோ...நசரு
    எங்க மாப்புவ வாத்துனு சொல்றத வன்மையா கண்டிக்கிறேன்... ஒசரமா இருக்கிறதால கொக்குனு வேணா சொல்லுங்க

    ஏனுங் மாப்பு நேத்து கொக்கு பிரியாணிங்ளா//

    யாரப்பாத்தாலும் பின்னாடியே அலைவியான்னு கொக்கு கால ஒடச்சி வாத்தாக்கி உட்டாங்களா?

    ReplyDelete
  36. @@ சந்தனா

    யக்கோவ்...

    இப்பவாவது புரியுதா எங்க மாப்பு வில்லாதி வில்லன்னு...

    நீலமலையச் சொல்ற மாதிரி எம்புட்டு விவகாரத்த எழுதுறாருன்னு

    ReplyDelete
  37. :)

    கவிதைய விட கதிரின் பின்னூட்டங்கள் கலக்கல்.. ஹாஹா..

    ReplyDelete
  38. || ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
    கவிதைய விட கதிரின் பின்னூட்டங்கள் கலக்கல்..||

    ஹ்ஹெஹ்ஹே... எப்ப்பூடீ!!!

    டேங்ஜ் செந்தில்!!!

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. ஈரோடு கதிர் said...

    || ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
    கவிதைய விட கதிரின் பின்னூட்டங்கள் கலக்கல்..||

    ஹ்ஹெஹ்ஹே... எப்ப்பூடீ!!!

    டேங்ஜ் செந்தில்!!!//

    அடங்கொய்யால. பதிவுலகில இது புது ட்ரெண்டால்லா இருக்கு. இப்புடி வேற ஆரம்பிச்சிட்டாய்ங்களா? ஏ! பாலாசி! நீ எனக்கு சொல்லுப்பு. நானும் உனக்கு டேங்ஜ் சொல்லுறன்.

    ReplyDelete
  41. || அடங்கொய்யால. பதிவுலகில இது புது ட்ரெண்டால்லா இருக்கு. இப்புடி வேற ஆரம்பிச்சிட்டாய்ங்களா? ஏ! பாலாசி! நீ எனக்கு சொல்லுப்பு. நானும் உனக்கு டேங்ஜ் சொல்லுறன்.||

    இது தானா சேருகிற கூட்டம், காசுக்கு ஆள் புடிக்கிறதில்ல

    ReplyDelete
  42. ஈரோடு கதிர் said...

    //இது தானா சேருகிற கூட்டம், காசுக்கு ஆள் புடிக்கிறதில்ல//

    தானே வந்து சிக்குது பட்சி. இப்ப காசுன்னு நாங்க சொன்னமா? அடியே ஒத்த மரம் தோப்பாவாதுடி! நாங்க இடுகை போட்டவரையே எங்க பக்கம் இழுப்போம். எங்க தளபதி தூங்குற நேரம். எழும்பட்டும். அப்புறம் இருக்கு. சோடி போட்டுக்குறுவமா சோடி?

    ReplyDelete
  43. //.. வானம்பாடிகள் said...

    ஈரோடு கதிர் said...
    ||வழிந்த கேசம்||

    ஹ்ஹெ..ஹ்ஹே... வழியுதாம்ல//

    அட இவரு வழிஞ்சத சொல்றாருங் மாப்பு. ..//


    இந்த வரிய படிச்ச உடனே, உங்க ரண்டு பேருக்கும், குறுகுறுங்குது..

    ReplyDelete
  44. நல்ல செட்டு சேர்ந்து இருக்கீர்ரிங்க . சூப்பர்ரா இருக்கு

    ReplyDelete
  45. நல்ல பகிர்வுங்க. நன்றி

    ReplyDelete
  46. இத்த பாருங்க.. ஆள் இல்லாத வூட்ல பூந்து அழிச்சாட்டியம்?!

    ReplyDelete
  47. குறை கூறிப் பாடுவோர் முன்
    நிறை கூறும் சொல்லழகில் சுவையூட்டும் உற்றார் பார்த்து
    எழில் காட்டும் இயற்கை போற்றி இணையத்தை கரும்பாக்கி
    இதயத்தை இனிக்க வைத்தீர் !

    ReplyDelete