7/12/2010

சார்ல்சுடனும் பனை நிலமும்!!

http://www.dailymotion.com/swf/video/xdztpb_charleston-fetna-2011-movie_travel

அடுத்த ஆண்டு தமிழர் திருவிழா நடக்கப் போற இடம் சார்ல்சுடன் அப்படின்னு சொன்னதும் நான் சொன்னேன், கூட்டம் கூட்டுறது கடினமாச்சேன்னு. ஏன் அப்படி சொன்னேன்னா, அந்த ஊரு ஒரு கோடியில இருக்கிறதுதான் காரணம். ஆனா மக்கா, இவங்க இருக்கிற சுறுசுறுப்பைப் பார்த்தா, அடுத்த ஆண்டு விழா வட அமெரிக்கத் தமிழர் வரலாற்றுல ஒரு மாபெரும் திருப்பு முனையா இருக்கும் போல இருக்கே??

ங்கொய்யால, பனை நிலமா? கொக்கா?? பொளந்து கட்டுங்க.... உங்க நாட்டுப்புறத்து வாத்தியத்துக்கே வருவாய்ங்கய்யா மக்கள்! வாழ்த்துகள்!!

20 comments:

  1. பட்டையக் கிளப்புறாங்க பங்காளி...

    ReplyDelete
  2. பழமை பேசி எனப் பெயர் நிறைந்த மணி,
    நேரில் சந்தித்து, பேச முடிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். சிற்றூர் மேளம் பயிற்சி செய்து பனை நிலத்தார் ஒலிப்பது பாராட்டப்படுகிறது. எனினும், அடிக்கும் மேள அமைப்பு சோக (மறைவுத் தருண) காலத்தில் ஒலிக்கும் மேள அடிப்பு இசையோ என எண்ண்ம் தோன்றியது. மேள அடிப்பு திருமணத்தின் தருணத்திற்கு என்றும் திருவிழாவுக்கு என்றும் உண்டு. மேளத்தை அடிக்கும் அன்பர் கவனித்து மகிழ்ச்சி முறை அடிப்புக்கு மாற அன்புடன் பணிவுடன் கேட்டு, ஏற்பாடு செய்யவும்.
    அன்புடன்
    ராதாகிருஷ்ணன், ஹூச்டன், ஜூலை 12, 2010

    ReplyDelete
  3. விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

    ஆனால், சார்ல்ஸ்டன் என்பதை சார்ல்சுடன் என்று எழுதியே ஆகவேண்டுமா?

    சார்ல்ஸ் அப்படின்னா ஒரு ஆண் பேரு...சார்ல்சுடனும் பனைநிலமும்...எனக்கு டைட்டில் புரியவே கொஞ்ச நேரம் ஆச்சு...

    வம்பிழுக்க கேக்கலை...ஆனா ஒரு ஊர் பேரை இப்படி திரிச்சி எழுதறது சரியா? வாஷிங்டன் டி.சியை வாசிங்டன் கொ.மான்னு எழுதினா யாருக்காவது புரியுமா? ஆஸ்டினை எப்படி எழுத? ஆசுடின்? நியூயார்க்? இப்படி திரிக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

    சரி, ஸ், ஷ் தமிழ் எழுத்து இல்லை....ஆனா,ஆதிகாலத் தமிழர்கள் இந்த ஒலியை ஏற்படுத்தவே இல்லையா? அதை எப்படி குறிச்சி வைச்சாங்க? எழுத்து இல்லைன்னா கடன் வாங்குறது தப்பே இல்லைன்னு தான் எனக்கு தோணுது...

    அந்த காலத்துல ஆஸ்டின், மைக்ரோசாஃப்ட், ராய்ட்டர்ஸ் எல்லாம் இருந்திருக்காது...அதுக்காக, இப்ப சிறிய மென்மையானதுன்னு எழுத முடியாதே...அது ஒரு நிறுவன பெயர்...அப்போ மைக்ரோசாஃப்ட்டை எப்படி எழுதலாம்? மைக்ரோசாப்ட்? ஒற்று மிகுமா? மைக்ரோசாப்டு?

    சார்ல்ஸ்டனை சார்ல்சுடன், பாஸ்டனை பாசுடன்ன்னு எழுதறதுனால தமிழ் வளரும்னு எனக்கு தோணலை...உங்களுக்கு?

    ReplyDelete
  4. @@அது சரி

    http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/5472950e5c94ec18

    Annae,

    Vanakkam!!

    ReplyDelete
  5. தொடுப்புக்கு நன்றி...
    ஆனா, நீங்க என்ன சொல்றீங்கன்னு சொல்லவே இல்லியே....அந்த தொடுப்பிலும் கூட நீங்க எதுவும் சொல்லலை...

    இன்னிக்கு நிலைமையில, எந்த நாடும், எந்த இனமும் தனித்தீவா இருக்க முடியாது.....இனமும் நாடுமே அப்படின்னா கண்டிப்பா மொழியும் தனித்தீவா இருக்க முடியாது...கண்டிப்பா கலக்கத் தான் செய்யும்...இல்லை, நாங்க தொல்காப்பியர் காலத்தை விட்டு தாண்டி வர மாட்டோம்னா, ஸாரி, அது மொழிக்கு எந்த விதத்திலும் உதவப் போறதில்லை....

    சரி...உங்க விருப்பம்...நீங்க எப்படி வேணும்னாலும் எழுதலாம்...நீங்க இப்படி பாஸ்டனை பாசுடன்னு எழுதுவீங்க...இன்னும் சிலர் உங்களை தாண்டி செல்லலாம்...மைக்ரோசாஃப்ட்டை நுண்ணியமென்மைன்னு கூட எழுதலாம்...அவங்கவங்க விருப்பம்...நான் என்ன சொல்ல முடியும்?

    ஆனா, இப்படி பாசுடன்னு படிச்சிட்டு ஒருத்தர் ஒண்ணும் பண்ண முடியாது...ஏன்னா பாசுடன்னு ஒரு நகரமே அமெரிக்காவுல இல்லை...அப்ப படிச்சி அது வீண் தான் இல்லியா?

    ReplyDelete
  6. கேள்வி கேட்டா பதில் சொல்லனும், பதிலுக்கு திரும்ப கேள்வி கேக்க கூடாது# அதுசரிக்கு ஆதரவு பின்னூட்டம் :-)

    ReplyDelete
  7. உங்க ஊர்ல தானே . கலக்குங்க

    ReplyDelete
  8. அதென்ன பனைநிலம் .

    ReplyDelete
  9. @@கபீஷ்

    இலண்டன்க்காரவுங்க எல்லாம் ஒன்னு கூடிட்டாய்ங்க....

    ReplyDelete
  10. //Mahi_Granny said...
    அதென்ன பனைநிலம் .//

    Palmtree stateல இருக்கிற தமிழ்ச் சங்கம்... பனைநிலத் தமிழ்ச் சங்கம்!!!

    ReplyDelete
  11. @@ராதாகிருஷ்ணன், ஹூச்டன்

    வணக்கமும் நன்றியும்ங்க ஐயா! நிச்சயமாங்க...

    ReplyDelete
  12. ஜமாயுங்க !!!

    அண்ணன் அதுசரியோட கேள்வியை ஒட்டி நானும் ஒரு கேள்வி...

    வாட்டர்பரியை ஏன் தமிழ்ல எழுதல?

    ஊர்பெயரையெல்லாம் திரிச்சு எழுதறது தேவையும் இல்லை... சரியும் இல்லை...என் கருத்து. பொதுவா வழக்குல இருக்கறதை சொல்லலைன்னா அது புரியாமப் போகறபோது என்ன பயன் இருக்க முடியும்?

    "நடிகன்" படத்துல வெ.ஆ.மூர்த்தி இஸ்லாண்ட் எஸ்டேட் தேடுன மாதிரி ஆயிடும்.

    ReplyDelete
  13. இப்பவே துண்டு போட்டு இடம் பிடிச்சிட வேண்டியதுதான்...

    ReplyDelete
  14. ஒலிப்பு வேறு... வரி வடிவம் வேறு... மொழியாக்கம் வேறு.....

    நீலகிரி, செங்கோட்டை, பூங்காநகர், மலைக்கோட்டை இன்னும் நிறைய... இவைகளை எல்லாம்,

    Blue Mountain
    Red Hills
    Red Fort
    Rock Fort
    Park Town
    ..............

    இப்படித்தான் ஆங்கிலத்துல சொல்றது. ஏன், Neelagiriன்னே சொல்லலாமேன்னு யாரும் கேட்கிறது இல்ல.... Malaikottaiனே சொல்லலாமேன்னு யாரும் கேட்கிறது இல்ல....

    ஏன்னா, அவையெல்லாம் ஆகுபெயர், பண்புப்பெயர், அடைமொழின்னு பல வகையில பெயர்ச்சொல்ங்றதுல இருந்து விலகி நிற்குது.

    அனாமதேய புண்ணூட்டங்களை நிராகரித்திருக்கிறேன். மன்னிக்கவும்!

    ReplyDelete
  15. தமிழில் இல்லாத சத்தங்களை பிற மொழி எழுத்தோடு உச்சரிப்பதில் என்ன தவறு.

    தமிழில் பெயர் வைப்பதும் , பிற மொழி சத்தங்களை தமிழ்ப்படுத்துவதும் வேறுவேறு என்று கருதுகிறேன், வேண்டுமென்றால் இந்த சத்தங்களுக்கு புதிய தமிழ் எழுத்துக்களை கண்டுபிடிக்கலாம்.

    ReplyDelete
  16. // குடுகுடுப்பை said...

    தமிழில் இல்லாத சத்தங்களை பிற மொழி எழுத்தோடு உச்சரிப்பதில் என்ன தவறு.//

    athe... nama ellaam tamil kaththukkumbothu... sh..S... ha... ellaam vadamozhila irunthu vanthichi nu kaththuk koduthanga... aanaa tamil la bayanpaduthurom... thevai nimiththam angirunthu edukkappattathu...

    sorgal mattumilla... niraiza vaarthaigalum...

    ReplyDelete
  17. மணியண்ணே..... blue mountain, red fort எல்லாம் ஆங்கிலேயர்கள் காலத்தில் வழக்கில் இருந்தவை. பிறகு தமிழ்படுத்தப்பட்டவை. ஒருவகையில் மொழிபெயர்க்கப்பட்டவை.

    நான் சொன்னது ஒலி/வரி வடிவங்களை. காஷ்மீர் / காசுமீரு - இதில் எது மக்களுக்கு எளிதில் புரியும்?

    அதுசரி அண்ணன் சொன்னது போல "சார்ல்சுடனும்" என்று படிக்கும்போது முதலில் புரியவே இல்லை.

    ReplyDelete
  18. @@Mahesh

    Mani

    மேணி, மாணி... இப்படி எப்படி வேணுன்னாலும் ஆங்கிலத்துல ஒலிக்கலாம்...ஒலிக்கிறாங்க... அதுக்காக என்னோட பேரை மாத்திக்கவா முடியும்??

    ReplyDelete


  19. ஏன் தமிங்கிலம்? ஏன் தமிலீசு?? ஏன் கிரந்தம்?? ஏன் திசைமொழி?? என்றெல்லாம் நான் கேள்வி கேட்பதுவும் இல்லை; தனித்தமிழ், தூயதமிழ் எனத் திணிப்பதுவும் இல்லை!!

    எனக்குத் தெரிந்ததும், பிடித்ததும் என்னளவில்!!

    இஃகிஃகி....

    ReplyDelete
  20. அனாமதேய புண்ணூட்டங்களை நிராகரித்திருக்கிறேன். மன்னிக்கவும்!


    நன்று.

    ராதகிருஷ்ணன் நலமா என்று கேட்டுச் சொல்லுங்கள்

    ReplyDelete