4/28/2010

எல்லாமும் அவளே!

அவன் நடத்திக் கொண்டிருந்தான் நிகழ்ச்சி
அவனைக் கண்டவளுள் அன்பின் முகிழ்ச்சி
சூதன் அவன்மேல் கொண்டான் சூழ்ச்சி
அதுகண்டு அவன் தரித்தனன் தாழ்ச்சி
ஊரார் பூண்டனர் அவன்மேல் இகழ்ச்சி

அவனோ அடையவில்லை பிறழ்ச்சி
அவளோ ஆயினள் நம்பிக்கைத் திகழ்ச்சி
அதுகண்டு அவன் அடைந்தனன் நெகிழ்ச்சி
அவ்வூக்கத்தில் சூழ்ச்சிக்குப் பூண்டனன் அகழ்ச்சி
எழுச்சிகண்டதில் சூதனோ ஞெகிழ்ச்சி
ஆயினும் மாய சூதனுக்கோ வீழ்ச்சி
நாயகன் அவள்மேல் பொழிந்தனன் புகழ்ச்சி
வெட்கத்தில் அவள்முகம் கவிழ்ச்சி! நாணத்தில்
முறுகி முருகிய அவள்முகமோ கவிழ்ச்சி!!

மகிழ்ச்சி!

23 comments:

  1. மகிழ்ச்சி, மகிழ்ச்சி முடிஞ்சி இப்ப தமிழில இருக்கிற மத்த ச்சி எல்லாமா?

    ReplyDelete
  2. //முகிலன் said...
    இப்ப தமிழில இருக்கிற மத்த ச்சி எல்லாமா?//

    இஃகிஃகி

    ReplyDelete
  3. எனக்கு இல்லை பேச்சி.... உங்களுக்குதான் அடுத்த ஆச்சி...

    ReplyDelete
  4. எனக்குப் பேச்சு மூச்சு நின்னு போச்சி!

    ReplyDelete
  5. //முகிலன் said...
    இப்ப தமிழில இருக்கிற மத்த ச்சி எல்லாமா?//

    இஃகிஃகி

    //

    :)

    ReplyDelete
  6. இதை வாசித்து முடித்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சி

    ReplyDelete
  7. இத்தன ‘ச்சி’ வார்த்தைகளா? அடடா....

    அகழ்ச்சி = ?
    ஞெகிழ்ச்சி = ?

    ReplyDelete
  8. // க.பாலாசி said...
    இத்தன ‘ச்சி’ வார்த்தைகளா? அடடா....

    அகழ்ச்சி = ?
    ஞெகிழ்ச்சி = ?
    //

    'ச்சி’ சொற்கள் அல்ல இவை! ‘ழ்ச்சி’ சொற்கள்!!

    அகழ்ச்சி = நெருங்க விடாமல் தடுத்தல்
    ஞெகிழ்ச்சி = வீரியம் கொள்தல்

    ReplyDelete
  9. என்ன கவிச்சி யா? ஓ கவிழ்ச்சியா மிக்க மகிழ்ச்சி இஃகிஃகி.

    நீங்க சொன்னத தவிர எனக்கு வேற ழ்ச்சி ஏதும் தோனமாட்டிக்குது.
    ஞெகிழ்ச்சி இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

    ReplyDelete
  10. மகிழ்ச்சியாய் இருக்கு..

    ReplyDelete
  11. முறுகி முருகிய அவள்முகமோ கவிழ்ச்சி!!

    மகிழ்ச்சி!

    ReplyDelete
  12. போட்டுத் தாக்கு

    ReplyDelete
  13. அப்புறம் மகேஷ் கவிதை முன்பு உங்களுடயது நிற்பது கடினம்தான். :-)

    ReplyDelete
  14. அதென்ன ஞெகிழ்ச்சி? ன்னு கேட்கலாம்னு வந்தேன். பாலாசி கேட்டுட்டாரு.!

    ReplyDelete
  15. எங்க பதிவுலக டி.வி.ஆர். வாழ்க..

    வார்த்தை நீர்வீழ்ச்சி
    பெருமகிழ்ச்சி பெருமகிழ்ச்சி
    //எனக்கு இல்லை பேச்சி.... உங்களுக்குதான் அடுத்த ஆச்சி...///

    ReplyDelete
  16. கண் முன்னே வருது உங்கள் கவிதை காட்சி...படிப்பவரை மெய் மறக்க செய்யுதே உங்கள் வார்த்தை ஆட்சி...

    ReplyDelete
  17. மக்கள் அனைவருக்கும் நன்றி! பிறழ்ந்து போய் பிறழ்ச்சி விடுபட்டுப் போனதைச் சுட்டிக் காட்டிய வெகுமூத்த பதிவருக்கும் நன்றியோ நன்றி!!

    ReplyDelete
  18. அழகான கவிதை! எப்படிங்க முடியுது உங்களால?

    ReplyDelete
  19. //'ச்சி’ சொற்கள் அல்ல இவை! ‘ழ்ச்சி’ சொற்கள்!!

    அகழ்ச்சி = நெருங்க விடாமல் தடுத்தல்
    ஞெகிழ்ச்சி = வீரியம் கொள்தல்//

    ஓ... நன்றிங்க....

    ReplyDelete
  20. //யாரு அது ?//

    யாரது? ஒரு கவிதைக்கே வா:)

    ReplyDelete