4/24/2010

நானும் இருக்கேன்!

இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
எதையாவது செய்!

பரபரப்புச் சூறாவளி ஈன்றி
கவனத்தைக் கொய்து
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

அடுத்தவன் நைந்துகொள்ள
நின்தாள் அவன் சிரம்மிதிக்க
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

அந்தரத்தை உடைத்து
கருவறைக்குள் அத்துமீறி
மாந்தநேயமது கொன்று
இருப்பை உணர்த்திக் கொள்ள
எதையாவது செய்!

இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
எதையாவது செய்!


அடைபட்ட நிலையில் மாந்தன்....


































21 comments:

  1. இருங்க..இருங்க...நல்லா இருங்க..

    ReplyDelete
  2. இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொல்ல (ள்ள)
    எதையாவது செய்!

    --

    தலைவரே,
    சுதந்திரமான மிருகங்களை கூண்டில் மனிதன் காணும் படங்கள் அருமை!
    :)

    ReplyDelete
  3. இதாஞ்சரி! மனுசப்பயலதான் அடைச்சி வைக்க வேண்டியிருக்கு:)

    ReplyDelete
  4. படங்கள் அருமை
    எதோ செய்றீங்க ....:)

    ReplyDelete
  5. படங்கள் அருமை
    எதோ செய்றீங்க ....:)

    ReplyDelete
  6. மொத போட்டால இருக்குறவங்க என்ன ஆனாங்களோ..

    ReplyDelete
  7. //இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
    எதையாவது செய்!//

    எல்லாரும் அதைத்தான் செய்யறோம் :)

    ReplyDelete
  8. //அடுத்தவன் நைந்துகொள்ள
    நின்தாள் அவன் சிரம்மிதிக்க
    இருப்பை உணர்த்திக் கொள்ள
    எதையாவது செய்!//

    அருமையான வரிகள் தோழரே...மனதை தூண்டும் வார்த்தைகள்...படங்களும் அருமை...

    ReplyDelete
  9. "இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
    எதையாவது செய்!"

    இந்த கமெண்டும் கூட அப்படிதான்....

    ReplyDelete
  10. இப்டி செஞ்சே அவணும்...

    ReplyDelete
  11. நாங்களும் இருக்கோம்ணே !!!

    ReplyDelete
  12. கவிதை இருப்பை உணர்த்துகிறது!

    ReplyDelete
  13. எதையாவது செய்வதற்கு நிறைய பேர்.காரோட்டியை மட்டும் காணவேயில்லை.

    ReplyDelete
  14. ஒருமுகப்படுத்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  15. "அடைபட்ட நிலையில் மாந்தன்"....
    விழிக்கின்றான்.

    ReplyDelete
  16. எங்கீண்ணா புடிச்சீங்க படங்களை அத்தனையும் சூப்பர். இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள
    எதையாவது செய்யதான் வேணுங்கண்ணா...

    ReplyDelete
  17. அடக்.....கண்கொள்ளா காட்சியாவுள்ள இருக்குது.

    ReplyDelete